search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேளாங்கண்ணி மற்றும் ஐதராபாத் ரெயிலை கன்னியாகுமரி வரை நீட்டிக்க வேண்டும்
    X

    கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் மனு அளித்தபோது எடுத்த படம் 

    வேளாங்கண்ணி மற்றும் ஐதராபாத் ரெயிலை கன்னியாகுமரி வரை நீட்டிக்க வேண்டும்

    • சென்னை-கன்னியாகுமரி வழித்தடத்தில் அதிக ரெயில்களை இயக்க வேண்டும்.
    • விஜய் வசந்த் எம்.பி. வலியுறுத்தல்

    நாகர்கோவில்:

    தென்னக ரெயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங், கூடுதல் மேலாளர் மல்லையா, முதன்மை ரெயில்வே இயக்குநர் நீனு ஆகியோரை கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் சந்தித்து மனு அளித்தார்.

    குமரி, நெல்லை, விருது நகர், மதுரை போன்ற தென்மாவட்ட மக்கள் கல்வி, வேலை, வியாபாரம், மருத்துவம், உறவுகளை சந்திப்பது மற்றும் சுற்றுலா சம்மந்தமாக அதிக அளவில் மக்கள் சென்னை, கன்னியாகுமரி வழித்தடத்தில் பயணிப்ப தால், போதிய ரெயில்கள் இல்லா ததால் மக்கள் கார்களி லும், பேருந்துகளிலும் சென்று பெரும் சிரமம் அடைவதோடும் சாலை விபத்துகள், உயிரிழப்புகள் மற்றும் அதிக பண விரயம் ஏற்படும். எனவே சென்னை-கன்னியாகுமரி வழித்தடத்தில் அதிக ரெயில் களை இயக்க வேண்டும்.

    ஐதராபாத்-தாம்பரம் சார்மினார் ரெயிலை கன்னி யாகுமரி வரை நீட்டிப்பு செய்ய வேண்டும். இதனால் தென் மாவட்டங்களில் வசித்து வரும் ஆந்திரா, தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த மக்களுக்காகவும் தமிழக தென் மாவட் டங்களில் வசிக்கும் மக்களுக்கும் ஐதராபாத் சென்று வர நேரடி ரெயில் சேவை முக்கியமானது எனவே ஐதராபாத்-தாம்பரம் ரெயிலை கன்னி யாகுமரி வரை நீட்டிக்க வலியுறுத்தினார்.

    தஞ்சை பெரிய கோவில், நாகூர் தர்கா, வேளாங்கண்ணி பேராலயம் போன்ற மும்மத சுற்றுலாத் தலங்கள் செல்வதற்கு திண்டுக்கல், மதுரை, நெல்லை, தூத்துக் குடி, கன்னியாகுமரி வழித்த டத்தில் வாரந்தோறும் சனிக்கிழமை மாலை திருவனந்தபுரம்-வேளாங் கண்ணி மறுமார்க்கமாக ஞாயிற்றுக்கிழமை மாலை ஐந்து மணியளவில் வேளாங்கண்ணியில் இருந்து புறப்பட்டு திங்கள் காலை திருவனந்தபுரம் வந்து சேரும்படி இயக்க வலியுறுத்தினார். அதற்கு ஏதுவாக சென்னை சென்ட்ரல் நாகர்கோவில் ரெயிலை, திருவனந்தபுரம் வரை நீட்டிக்க வேண்டும். வாரத்தில் மூன்று நாள் இயக்கப்படும் தாம்பரம்-நாகர்கோவில் இரவு நேர இரயிலை தினசரி ரெயிலாக இயக்க வேண்டும்.

    கொரோனா காலத்திற்கு முன்பாக பயணிகள் ரெயிலாக இயக்கப்பட்ட மதுரை - புனலூர் ரெயில் தற்போது விரைவு ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. கொரோனா காலத்திற்கு முன்பாக பள்ளியாடி, குழித்துறை மேற்கு, ஆரல்வாய்மொழி ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று சென்றதை சுட்டிக் காட்டி மக்கள் பயன்பெறும் வகையில் மீண்டும் இந்த ரெயில் நிலையங்களில் மதுரை-புனலூர் விரைவு வண்டி நின்று செல்ல வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறி இருந்தார்.

    இதனை கேட்ட தென்னக ரெயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் மேற்குறிப்பிட்ட ரெயில் நிலையங்களில் மதுரை - புனலூர் விரைவு ரெயில் நின்று செல்ல வழிவகை செய்யப்படும் என உறுதியளித்தார். மேலும் அனந்தபுரி மற்றும் நாகர்கோவில்- மும்பை விரைவு ரெயில்களின் நிறுத்தங்களை குறைக்கா மல் அதிவிரைவு ரெயிலாக மாற்றி இயக்கவும் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கோரிக்கை விடுத்தார்.

    கன்னியாகுமரி மாவட்டத் தில் உள்ள அனைத்து ரெயில் நிலையங்களையும் மேம்படுத்தி, அடிப்படை வசதிகளை விரைந்து செய்து தர வேண்டுமென்றும் கூறி னார்.

    கன்னியாகுமரி மாவட் டத்தில் மக்கள் ரெயில் தண்ட வாளங்களை கடந்து செல்ல ஏதுவாக மேம்பாலங்கள் அமைத்து தர வேண்டுமென வலியுறுத்தினார். குறிப்பாக கப்பியறை பஞ்சாயத்து, பள்ளியாடி அருகில் இணைப்பு பாலம் குழித்துறை மேம்பாலம், நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலையத்தின் அருகில் ஊட்டால் மொடு ரெயில்வே கிராஸிங்கில் மேம்பாலம் மற்றும் குழித்துறை மேற்கு கடந்தான் கோடு இணைப்பு பாலமும் உடனடியாக அமைக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறி இருந்தார்.

    கோரிக்கையின் மீது தேவையான நடவடிக்கைகள் விரைந்து எடுக்கப்படும் என ரெயில்வே அதிகாரிகள் உறுதி அளித்தனர்.

    Next Story
    ×