search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "THER BHAVANI"

    • ஈஷாவின் நுழைவு வாயிலான மலைவாசலில் இருந்து தியானலிங்கம் வரை கைலாய வாத்தியங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
    • சென்னையில் இருந்து புறப்பட்ட எங்கள் குழு 29 நாட்களில் நூற்றுக்கணக்கான கிராமங்கள் வழியாக பயணித்து வந்துள்ளது.

    மஹாசிவராத்திரியை முன்னிட்டு தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து நூற்றுக்கணக்கான சிவ பக்தர்கள் கோவை ஈஷா யோக மையத்திற்கு நேற்று (மார்ச் 6) பாத யாத்திரையாக வருகை தந்தனர்.

    சென்னை, பெங்களூரு, நாகர்கோவில், பட்டுக்கோட்டை, பொள்ளாச்சி, கோவை ஆகிய 6 இடங்களில் இருந்து வெவ்வேறு தேதிகளில் புறப்பட்ட குழுவினர் ஆதியோகி திருமேனியுடன் கூடிய தேர்களை வடம் பிடித்து இழுத்து வந்தனர்.

    அனைத்து குழுவினரும் ஆலாந்துறை பகுதிக்கு நேற்று மதியம் வந்து சேர்ந்தனர். அங்கிருந்து 63 நாயன்மார்களை தனி தனி பல்லக்குகளில் ஏந்தி ஆதியோகி தேர்களுடன் ஈஷாவுக்கு ஊர்வலமாக வந்தனர். அவர்களுக்கு ஈஷாவின் நுழைவு வாயிலான மலைவாசலில் இருந்து தியானலிங்கம் வரை கைலாய வாத்தியங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.ஈஷாவின் நுழைவு வாயிலான மலைவாசலில் இருந்து தியானலிங்கம் வரை கைலாய வாத்தியங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இதில் ஹரியானாவைச் சேர்ந்த மதுராந்தா என்ற இளைஞர் உத்தரபிரதேசம் மாநிலம் வாராணாசியில் தொடங்கி 41 நாட்கள் 2,300 கி.மீ பாத யாத்திரையாக பயணித்து ஆதியோகியை தரிசனம் செய்தார். இந்த யாத்திரை தொடர்பாக அவர் கூறுகையில், "சிவ பக்தியில் என்னை கரைத்து கொள்வதற்காக நான் இந்த பாத யாத்திரையை மேற்கொண்டேன். காசி முதல் கோவை வரையிலான இந்த யாத்திரை என்னுடைய நண்பர் ஒருவரும் என்னுடன் சேர்ந்து வருவதாக திட்டமிட்டு இருந்தோம். ஆனால், எதிர்பாராத விதமாக யாத்திரை தொடங்குவதற்கு முன்பு அவர் விபத்தில் சிக்கி ஐ.சி.யூவில் அனுமதிக்கப்படும் சூழல் உருவானது. இருந்தபோதும், நான் என்னுடைய யாத்திரையை திட்டமிட்டப்படி தொடர்ந்தேன். ஆதியோகி சிவனின் அருளால் ஐ.சி.யூவில் இருந்து மீண்டு வந்த அந்த நண்பர் என்னுடைய யாத்திரையில் இடையில் வந்து சேர்ந்து கொண்டார். இது எனக்கு மிகப்பெரிய ஆச்சரியமாக இருந்த்து" என கூறினார்.

    சென்னை குழுவினருடன் பாத யாத்திரை மேற்கொண்ட ஜனனி அவர்கள் கூறுகையில், "சென்னையில் இருந்து புறப்பட்ட எங்கள் குழு 29 நாட்களில் நூற்றுக்கணக்கான கிராமங்கள் வழியாக பயணித்து வந்துள்ளது. பல கிராமங்களில் அங்குள்ள மக்கள் ஆதியோகியை தங்கள் வீட்டிற்கு அருகிலேயே தரிசனம் செய்ததை பெரும் பாக்கியமாக கூறினர். உடல் அளவில் இந்த யாத்திரை எனக்கு சவாலாக இருந்தாலும், மனதளவில் பெரும் நிறைவை தருகிறது" என்றார்.

    இந்த யாத்திரையில் கலந்து கொண்ட அனைவரும் மஹாசிவராத்திரிக்காக 40 நாட்கள் சிவாங்கா விரதம் இருந்து வருகின்றனர். தினமும் 2 வேளை மட்டுமே உணவு உட்கொள்ளும் அவர்கள் வெள்ளியங்கிரி மலைக்கு சென்று வந்த பிறகு தியானலிங்கத்தில் தங்கள் விரதத்தை நிறைவு செய்து கொள்வார்கள்.

    • கோத்தகிரி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளை சேர்ந்த கிராம மக்கள் பங்கேற்று சாமிதரிசனம் செய்தனர்
    • அதிகாலை முதல் மாலை 4 மணி வரை விநாயகருக்கு சிறப்பு பூஜைகளும் அன்னதானமும் நடைபெற்றது

    அரவேணு,

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி டானிக்டன் பகுதியில் உள்ள சக்தி விநாயகர் கோவிலில் சதுர்த்தி விழா நடைபெற்றது. இதில் கோத்தகிரி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளை சேர்ந்த கிராம மக்கள் பங்கேற்று சாமிதரிசனம் செய்தனர்.

    முன்னதாக கோவிலில் அதிகாலை முதல் மாலை 4 மணி வரை விநாயகருக்கு சிறப்பு பூஜைகளும் அன்னதான நிகழ்வுகளும் நடைபெற்றது. மாலை 5 மணிக்கு விநாயகர் தேர் பவனி நடந்தது. இது கேர்பட்டா, காமராஜர்சதுக்கம், ராம்சண்ட் வழியாக சென்று மீண்டும் கோவிலை வந்தடைந்தது.

    நிகழ்ச்சியில் இடக்கல் போஜராஜ் அன்பரசு ராமச்சந்திராரெட்டி, ஜெயக்குமார், தங்கராசு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • வேளாங்கண்ணியில் ஆண்டு பெருவிழா கடந்த 29ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகின்றது.
    • பக்தர்கள் மாநிலத்தின் பல்வேறு பகுதியில் வேளாங்கன்னியில் இருந்து குவிந்துள்ளனர்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கன்னியில் அமைந்துள்ள புனித ஆரோக்கிய அன்னை பேராலயம், கீழ்த்திசை நாடுகளின் புனித லூர்து நகரம் என்று அழைக்கப்படும் பெருமைக்கு உரியது.

    இதன் ஆண்டு நவநாள் பெருவிழா கடந்த 29ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகின்றது.

    விழாவின் முக்கிய பெருவிழாவான அன்னையின் பிறந்தநாள் நடைபெறுவதை முன்னிட்டு, இன்று இரவு பெரிய சப்பர பவனி எனப்படும், பெரியதேர்த்திருவிழா நடைபெறுகின்றது.

    இதற்காக பல்லாயி ரக்கணக்கான பக்தர்கள் மாநிலத்தின் பல்வேறு பகுதியில் வேளாங்கன்னியில் இருந்து குவிந்துள்ளனர்.

    வேளாங்கண்ணியில் பல்வேறு மொழிபேசும் பக்தர்கள் வருகை புரிந்துள்ளதால் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி, உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் சிறப்பு பிரார்த்தனைகள், மற்றும் நவநாள் திருப்பலிகள், மாதா மன்றாட்டு, தினமும் சிறிய சப்பர பவனி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

    பல்லாயிரக்கணக்கான மக்கள் குவிந்துள்ளதால் ஆயிரக்கணக்கான போலீசார் வந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் பேராலயம் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு தேவையான குடிநீர், போக்குவரத்து, சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன நாளை மாதாவின் பிறந்தநாள் என்பதால் நாகை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்ப ட்டுள்ளது.

    நாளை காலை 6 மணிக்கு மாதாவின் பிறந்தநாளை முன்னிட்டு விண்மீன் ஆலயத்தில் தஞ்சை மறைமாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் மற்றும் பரிபாலகர் சகாயராஜ்தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெறுகிறது.

    அதனை தொடர்ந்து மாலை கொடி இறக்கத்துடன் திருவிழா முடிவடைகிறது என வேளாங்கண்ணி உதவி பங்கு தந்தை டேவிட் தன்ராஜ் தெரிவித்தார்.

    • புனித கித்தேரியம்மாள் ஆலய தேர் பவனி நடைபெற்றது.
    • ஆலயம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலித்தது

    புதுக்கோட்டை:

    கறம்பக்குடி அருகே உள்ள கே.கே.பட்டி கிராமத்தில் புனித கித்தேரியம்மாள் ஆலயம் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் மே மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து தினமும் நவநாள் திருப்பலி நிகழ்ச்சிகள் நடந்தன. அதனை தொடர்ந்து கே.கே.பட்டி பங்குத்தந்தை ஆரோ சேசுராஜ் தலைமையில் சிறப்பு ஜெப வழிபாடு மற்றும் கூட்டு பாடல் திருப்பலி நடந்தது.

    விழாவை முன்னிட்டு ஆலயம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலித்தது. இரவு அலங்கார தேர்பவனி நடந்தது. மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட 3 தேர்களில், புனித கித்தேரியம்மாள் மற்றும் தெய்வங்கள் ஒன்றன்பின் ஒன்றாக பவனி வந்தன. இதில் சாதி, மத, இன பாகுபாடின்றி ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர். தொடர்ந்து கண் கவர் வாணவேடிக்கை மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    • தூய வியாகுல அன்னை தேர்பவனி நடந்தது.
    • திரளானோர் கலந்துகொண்டு வழிபாடு செய்தனர்.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள தும்மு சின்னம்பட்டி தூய வியாகுல அன்னை மாதா கோவில் ஆலயத்தின் சித்திரை மாத பெருவிழா நடந்து வருகிறது. இதையொட்டி அலங்கார தேர்பவனி நடந்தது.

    தும்மு சின்னம்பட்டி கிராமத்தின் முக்கிய வீதிகளில் தேர்பவனி வந்தது. அனைத்து சமுதாய மக்களும் சாதி, மத பேதமின்றி திரளாக கலந்துகொண்டு வழிபாடு செய்தனர்.

    இதில் விருதுநகர், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும், உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் என ஏராளமானோர் அலங்கார தேர் பவனி நிகழ்ச்சியில் திரளாக கலந்துகொண்டு வழிபாடு செய்தனர்.

    • வள்ளியூர் அருகே உள்ள முத்துலாபுரம் புனித செபஸ்தியார் திருத்தல திருவிழா கடந்த 29-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • அதனைத்தொடர்ந்து வாண வேடிக்கையும், இரவு 11.30 மணிக்கு புனித செபஸ்தியாரின் அலங்கார தேர்ப்பவனியும் நடைபெற்றது.

    வள்ளியூர்:

    வள்ளியூர் அருகே உள்ள முத்துலாபுரம் புனித செபஸ்தியார் திருத்தல திருவிழா கடந்த 29-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    சிறப்பு நிகழ்ச்சியாக நேற்று இரவு தேர்பவனி நடைபெற்றது. இதில் தூத்துக்குடி மறைமாவட்டமுன்னாள் ஆயர் இவான் அம்புரோஸ் தலைமையில் சிறப்பு ஆடம்பர மாலை ஆராதனை நடைபெற்றது.

    அதனைத்தொடர்ந்து வாண வேடிக்கையும், இரவு 11.30மணிக்கு புனித செபஸ்தியாரின் அலங்கார தேர்ப்பவனியும் நடைபெற்றது. இப்பவனியில் திரளான பக்தர்கள் பங்கேற்று உப்பு, மிளகுகாணிக்கை செலுத்திவழிபடுட்டனர். 10-ம் திருவிழாவான இன்று காலை 6.30 மணிக்கு பெருவிழா கூட்டுத் திருப்பலி தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் மேதகு ஸ்டீபன் அந்தோணி தலைமையில் நடைபெற்றது. மதியம் 12மணிக்கு சிறப்பு திருப்பலி நடைபெற்றது. மாலை 6 மணிக்கு நற்கருணை ஆசீர் மற்றும் கொடியிறக்கம் நடைபெறுகிறது. நாளை மாலை 6.30 மணிக்கு வடக்கூர் புனித அந்தோணியார் கெபில் ஜெபமாலை, திருப்பலி மற்றும் அசன விருந்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

    விழாவிற்கான ஏற்பாடு களை கோவில் தர்மகர்த்தா அருள்செபஸ்தியான், பொருளாளர் மகான் அந்தோணி, செயலாளர் லியோ ஜெப நீலன், பங்கு தந்தை டென்ஸில் ராஜா, நிர்வாக பொறுப்புத் தந்தை அருள்மணி, பங்கின் அருட் சகோதரிகள், முத்துலாபுரம் தூய செபஸ்தியார் திருத்தல நிர்வாகக்குழு இறை மக்கள் செய்துவருகின்றனர்.

    • அல்லித்துறை புனித சவேரியார் ஆலய தேர்பவனி நடைபெற்றது
    • கூட்டு திருப்பலியும் மாலை கொடி இறக்கும் நிகழ்ச்சி

    திருச்சி:

    திருச்சி அருகே உள்ள அல்லித்துறையில் 299 ஆண்டுகளுக்கு முன்பு வீரமாமுனிவரால் கட்டப்பட்ட புனித சவேரியார் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் வருடாந்திர தேர்பவனி, கடந்த மாதம் 25-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து தினமும் கோவிலில் பங்குத்தந்தைகளால் திருப்பலி பூஜைகள் நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்வான தேர் பவனி நேற்று இரவு சோமரசம்பேட்டை பங்குத்தந்தை அருட்திரு எட்வர்ட் ராஜா திருப்பலியுடன் தொடங்கியது. மாதா, செபஸ்தியார், அருளானந்தர், சூசையப்பர், அந்தோனியார், மைக்கேல்சம்மனசு ஆகிய தெய்வங்கள் தனித்தனி சப்பரத்தில் எழுந்தருளி முக்கிய வீதிகளின் வழியாக திருவீதி உலா நடைபெற்று இறுதியாக கோவிலை வந்தடைந்தது.

    இவ்விழாவில் சுற்றுப்புற கிராமத்தை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். இன்று காலை கூட்டு திருப்பலியும் மாலை கொடி இறக்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர் 

    • வாடிப்பட்டி ஆரோக்கிய தேவாலயத்தில் அன்னை தேர் பவனி நடந்தது
    • மதுரை-திண்டுக்கல் நகர்புறசாலை வழியாக பழையநீதிமன்றம் வரை சென்று திரும்பியது.

    வாடிப்பட்டி

    தென்னகத்து வேளாங்கண்ணி என்று போற்றப்படும் மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஆரோக்கிய அன்னை திருத்தலத்தின் திருவிழா கடந்தமாதம் 29-ந்தேதி மதுரை மறை மாவட்ட பேராயர் அந்தோணிபாப்புசாமி தலைமையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    நேற்று (வியாழக்கிழமை) ஆரோக்கிய அன்னையின் பிறப்புப்பெருவிழா, இறைவார்த்தை சபை 147-வது எஸ்.வி.டி. பிறப்பு விழா, அற்புத ஜீவஊற்று இயேசுவின் அருமருந்து 22-வதுஆண்டு பிறப்பு விழா ஆகியவை நடந்தது.

    முப்பெரும் விழா கூட்டுத் திருப்பலியை சேலம் மறைமாவட்ட ஆயர் அருள்செல்வம் ராயப்பன் நடத்தினார். குழந்தைஏசுவை கையில் ஏந்தியபடி ஆரோக்கியஅன்னை தேர்பவனி புறப்பட்டது.

    மதுரை-திண்டுக்கல் நகர்புறசாலை வழியாக பழையநீதிமன்றம் வரை சென்று திரும்பியது. இதில் மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, நாகர்கோவில், கேரளா உள்ளிட்ட பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

    இன்று காலை ஆரோக்கிய அன்னையின் திருக்கொடி பங்குதந்தை வளன் தலைமையில் இறக்கப்பட்டு நன்றிதிருப்பலியுடன் விழா நிறைவுபெற்றது. திருவிழா ஏற்பாடுகளை எஸ்.வி.டி.அதிபர் அந்தோணி ஜோசப் அடிகளார், பங்குத்தந்தை வளன், உதவி பங்குதந்தை குழந்தையேசுதாஸ் அடிகளார் மற்றும் இருபால் துறவியர் அன்பியங்கள் பங்கு மக்கள் செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை இன்ஸ்பெக்டர் கனக சபாபதி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் செய்திருந்தனர்.

    • சாயல்குடியில் வேளாங்கண்ணி ஆலய தேர் பவனி விழா நடந்தது.
    • ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தேர்பவனியில் பங்கேற்றனர்.

    சாயல்குடி

    ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அன்னை வேளாங்கண்ணி மாதா ஆலயத்தின் 10 நாள் திருவிழா கடந்த 25-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    தினமும் மாலையில் ஆலய வளாகத்தில் ஜெபமாலை ஜெபித்து பவனியை வழிநடத்தி திருப்பலியில்பங்கேற்றனர்.

    திருப்பலிக்கு முன் ஒப்புரவு அருள் சாதனம் வழங்கப்பட்டது. திருப்பணியை தொடர்ந்து 2 ஆண்டுகளுக்கு பிறகு மின் ஒளி அலங்காரத்தில் அன்னை ஆரோக்கிய மாதா சாயல்குடி வீதிகளில் நகர்வலம் வந்தது.

    இந்த நிகழ்ச்சிக்கு சாயல்குடி பங்குத்தந்தை பாஸ்கர் டேவிட் தலைமை தாங்கினார்.தொன் போஸ்கோ சி.பி.எஸ்.இ. பள்ளி தாளாளர் ஆரோக்கியம், முதல்வர் ஆல்பிரட், பங்கு தந்தைகள் சார்லஸ், பிரபு முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடு களை மாதா கோவில் நிர்வாக தலைவர்- செயலாளர் ஜெயராஜ், பொருளாளர் காமராஜ் தொம்மை செபஸ்டியன் ஆகியோர் செய்து இருந்தனர். சாயல்குடி சுற்றுவட்டார பகுதிகள் ராமநாதபுரம், தூத்துக்குடி, சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தேர்பவனியில் பங்கேற்றனர்.

    • புனித ஆரோக்கியமாதா ஆலய தேர்பவனி நடந்தது.
    • 25 ஆம் ஆண்டு திருவிழா

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே பி.குளவாய்ப்பட்டி கிராமத்தில் உள்ள புனித ஆரோக்கிய மாதா கோவிலில் 25 ஆம் ஆண்டு திருவிழா, கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து கோவிலில் நவநாள் ஜெபமும், பாடல் திருப்பலியும் நடைபெற்று வந்தது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்பவனி பங்குதந்தை அருட்திரு ஆர்கே அடிகளார் தலைமையில், அருட்தந்தை கித்தரிமுத்து, பங்கு குருக்கள், அருட்தந்தையர்கள், ்அருட்சகோதரிகள் ஆகியோர் கூட்டுப்பாடல் திருப்பலியுடன் அலங்கார தேர் பவனி நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதி மக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

    • புனித பனிமய மாதா ஆலய தேர்பவனி நடைபெற்றது
    • எம்.எல்.ஏ. பங்கேற்றார்

    பெரம்பலூர்:

    பெரம்பலூரில் புனித பனிமய மாதா ஆலய பெருவிழாவையொட்டி தேர்பவனி நடந்தது.

    பெரம்பலூர் புனித பனிமய மாதா ஆலயத்தின் பெருவிழாவையொட்டி பெரம்பலூர் வட்டார முதன்மை பங்குகுரு ராஜமாணிக்கம் முன்னிலையில், கும்பகோணம் மறை மாவட்ட முதன்மை குரு அமிர்தசாமி கடந்த 27-ந் தேதி கொடி ஏற்றி வைத்தார். அதனை தொடர்ந்து அமிர்தசாமி தலைமையில் கூட்டு பாடல் சிறப்பு திருப்பலி நடந்தது. தேர் பவனியாக செல்லக்கூடிய முக்கிய வீதிகளில் கொடி ஊர்வலம் நடந்தது.

    விழா நாட்களில் தினமும் மாலையில் பல்வேறு திருத்தலங்களின் பங்கு குருக்களால் சிறப்பு பிரார்த்தனைகளும், திருப்பலிகளும் நடந்தது. பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்பவனி நேற்று (4ம் தேதி) இரவு நடைபெற்றது.

    இதில் பெரம்பலூர் வட்டார முதன்மை பங்குகுரு ராஜமாணிக்கம் முன்னிலையில், கும்பகோணம் மறை மாவட்ட முதன்மை குரு அமிர்தசாமி தேர்பவனியை தொடங்கிவைத்தார். முக்கிய வீதிகளில் தேர்பவனி வந்தது. இதில் எம்.எல்.ஏ. பிரபாகரன் உட்பட கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் பலர் கலந்து கொண்டனர். இன்று (5ம்தேதி) பெருவிழா முடிகிறது.புனித பனிமய மாதா ஆலய தேர்பவனி நடைபெற்ற போது எடுத்தப்படம்.

    ×