தூய வியாகுல அன்னை தேர்பவனி

தூய வியாகுல அன்னை தேர்பவனி நடந்தது. திரளானோர் கலந்துகொண்டு வழிபாடு செய்தனர்.
தூய வியாகுல அன்னை தேர்பவனி
Published on

திருச்சுழி

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள தும்மு சின்னம்பட்டி தூய வியாகுல அன்னை மாதா கோவில் ஆலயத்தின் சித்திரை மாத பெருவிழா நடந்து வருகிறது. இதையொட்டி அலங்கார தேர்பவனி நடந்தது.

தும்மு சின்னம்பட்டி கிராமத்தின் முக்கிய வீதிகளில் தேர்பவனி வந்தது. அனைத்து சமுதாய மக்களும் சாதி, மத பேதமின்றி திரளாக கலந்துகொண்டு வழிபாடு செய்தனர்.

இதில் விருதுநகர், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும், உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் என ஏராளமானோர் அலங்கார தேர் பவனி நிகழ்ச்சியில் திரளாக கலந்துகொண்டு வழிபாடு செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com