search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வேன்"

    • 2 டிரைவர்கள் படுகாயம் அடைந்தனர்
    • பள்ளி வாகனத்தில் மாணவர்கள் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரிக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் தினமும் ஏராளமானோர் சுற்றுலா வருகின்றனர்.

    அவர்கள் வேன், கார், பஸ் என பல வாகனங்களில் வருவதால் கன்னியாகுமரி மட்டுமின்றி குமரி மாவட்டம் முழுவதுமே போக்குவரத்து நெரிசல் காணப்படும். இந்த நிலையில் கன்னியாகுமரி அருகே உள்ள சுவாமிநாத புரத்தில் சுற்றுலா பயணி களை ஏற்றிக் கொண்டு மினி பஸ் புறப்பட்டது.

    இந்த பஸ் நாகர்கோவில் நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே பள்ளி வேன் வந்தது. எதிர்பாராதவிதமாக அந்த வேன், சுற்றுலா பஸ் மீது பயங்கரமாக மோதியது.

    இதில்2வாகனங்களும் பலத்த சேதமடைந்தது. பள்ளி வாகன டிரைவர் பாக்கியராஜ் மற்றும் சுற்றுலா பஸ் டிரைவர் பலத்த காயமடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    அதிர்ஷ்டவசமாக பள்ளி வாகனத்தில் மாணவர்கள் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    • சம்பவ இடத்திலேயே குமார் பலியானார்.

    காங்கேயம்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூரை சேர்ந்தவர் குமார்( வயது 35). கிணறு வெட்டும் தொழிலாளி. இவர் தனது உறவினர்களுடன் சேர்ந்து கிணறு வெட்டும் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் உறவினர்களான வெள்ளியங்கிரி(40), மணி (36) ஆகியோருடன் சொந்த ஊரில் இருந்து மோட்டார் சைக்கிளில் சென்னிமலை வழியாக காங்கேயத்தை நோக்கி சென்று கொண்டிருந்தார்.

    சாவடி பகுதியில் செல்லும் போது அந்த வழியாக வந்த லோடு வேன் மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் சம்பவ இடத்திலேயே குமார் பலியானார். மற்ற 2 பேரும் பலத்த காயம் அடைந்தனர். அவர்களை மீட்ட அந்த பகுதியை சேர்ந்தவர்கள் திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்த புகாரின் பேரில் காங்கேயம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • தனியாா் கல்லூரியில் முதலாம் ஆண்டு பயின்று வந்தாா்.
    • வேன் ஓட்டுனர் தினேஷ்குமாா் என்பவரை கைது செய்தனா்.

    திருப்பூா்:

    திருப்பூர் 15.வேலம்பாளையம் செட்டியாா் வீதியைச் சோ்ந்த கமலநாதன் மகன் மணிகண்டன் (வயது 19). இவா் அன்னூரில் உள்ள தனியாா் கல்லூரியில் முதலாம் ஆண்டு பயின்று வந்தாா்.

    இந்நிலையில், இவா் தனது நண்பா்களான விவேக், சஞ்சய் ஆகியோருடன் அன்னூரில் இருந்து திருப்பூா் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா். அவிநாசி வெள்ளியம்பாளையம் அருகே சென்றபோது, அவிநாசியில் இருந்து கருவலூா் நோக்கி சென்ற வேன், இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்த மணிகண்டன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

    இது குறித்து அவிநாசி போலீசார் வழக்குப் பதிவு செய்து, வேன் ஓட்டுநரான கோவை வெள்ளாக்கிணறு அண்ணா வீதியை சோ்ந்த தினேஷ்குமாா் (30) என்பவரை கைது செய்தனா்.

    • திருவட்டார் போலீசார் சோதனை நடத்தினர்.
    • டிரைவர் சாலின் என்பவரை கைது செய்தனர்.

    கன்னியாகுமரி:

    திருவட்டார் அருகே அனுமதி இல்லாமல் செம்மண் கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் திருவட்டார் போலீசார் அதிரடியாக அங்கு சென்று சோதனை நடத்தினர்.

    அப்போது 2 மினி வேன்களில் சிலர் செம்மன் ஏற்றிக் கொண்டு இருந்தனர். போலீசார் 2 வேன்களையும் பறிமுதல் செய்ததோடு அதே பகுதியை சேர்ந்த டிரைவர் சாலின் என்பவரையும் கைது செய்தனர்.

    • வேன் மோதியதில் வாலிபர் பலி, 2 பேர் படுகாயத்துடன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    • விபத்தை ஏற்படுத்திய வேன் டிரைவர் அன்பழகன் என்பவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பவானி:

    ஈரோடு மாவட்டம் பவானி அடுத்த தாட்டர் பாளையம் பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார் (25). இவர் தனது நண்பர்களான கவுந்தபாடியை சேர்ந்த வேதமூர்த்தி (15), பெருந்தலையூரை சேர்ந்த பிரதீப் (16) ஆகியோருடன் கேட்டரிங் வேலை விஷயமாக அந்தியூர் நோக்கி மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.

    பிரதீப் மோட்டார் சைக்கிளை ஓட்ட நடுவில் வேதமூர்த்தியும், அவருக்கு பின்னால் சதீஷ்குமாரும் உட்கார்ந்து வந்து கொண்டிருந்தனர். மோட்டார்சைக்கிள் பவானி-அந்தியூர் ரோட்டில் சென்று கொண்டிருந்தபோது நல்லிபாளையம் பிரிவு அருகே வந்த போது எதிரே வந்து கொண்டிருந்த வேன் ஒன்று எதிர்பாராத விதமாக பிரதீப் மோட்டார்சைக்கிள் மீது மோதியது.

    இந்த விபத்தில் தேவமூர்த்தி, சதீஷ்குமார் இருவருக்கும் கால் முட்டியில் பலத்த காயம் ஏற்பட்டது. பிரதீப் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அந்த வழியாக சென்றவர்கள் விபத்து குறித்து பவானி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த பிரதீப்பை 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு சிகிச்சைக்காக பவானி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் பிரதீப் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    மேலும் விபத்தில் படுகாயமடைந்த தேவமூர்த்தி, சதீஷ்குமார் 2 பேரும் பவனில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த விபத்து குறித்து பவானி போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய வேன் டிரைவர் அன்பழகன் என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×