search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விவசாயிகள் கோரிக்கை"

    • யானைகளை வனப்பகுதிகளுக்குள் விரட்டும் வரை கிராம மக்கள் யாரும் யானைகளின் அருகே செல்ல வேண்டாம்
    • யானை வேறு எங்கும் செல்லாமல் ஓரே இடத்தில் நிற்பதால் அப்பகுதியை சுற்றி உள்ள விவசாய தோட்டங்களில் மின்இணைப்பை மின்வாரிய அதிகாரிகள் துண்டித்தனர்.

    பாலக்கோடு,

    தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே உள்ள வனப்பகுதியில் இருந்து வெளியறேிய 2 காட்டு யானைகள் நேற்று தண்டுகாரன அள்ளி ஏரிக்கு வந்தன. பின்னர் மாலை அந்த யானைகள் ஏரியில் இருந்து சென்று மாதம்பட்டி கிராமத்தில் சுற்றிதிரிந்தது.

    இதனை கண்ட கிராம மக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இதுகுறித்து தகவலறிந்த பாலக்கோடு வனத்துறையினர் மாதம்பட்டி கிராமத்துக்கு விரைந்து சென்று யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் யானை வேறு எங்கும் செல்லாமல் ஓரே இடத்தில் நிற்பதால் அப்பகுதியை சுற்றி உள்ள விவசாய தோட்டங்களில் மின்இணைப்பை மின்வாரிய அதிகாரிகள் துண்டித்தனர்.

    மேலும் யானைகளை வனப்பகுதிகளுக்குள் விரட்டும் வரை கிராம மக்கள் யாரும் யானைகளின் அருகே செல்ல வேண்டாம் என வனத்துறையினர் கேட்டு கொண்டுள்ளனர். அடர்ந்த வனப்பகுதிக்குள் 2 காட்டுயாைனைகளையும் விரட்ட விவசாயிகள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

    • விருதுநகர் மாவட்டத்தில் கரும்பு சாகுபடி அழியும் நிலையில் உள்ளது.
    • மத்திய-மாநில அரசுகள் கவனம் செலுத்த விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள வத்திராயிருப்பு, கான்சாபுரம், மம்சாபுரம், ஸ்ரீவில்லி புத்தூர், ராஜபாளையம், தேவதானம், சேத்தூர் உள்பட பல்வேறு பகுதிகளில் கரும்பு சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

    30 ஆண்டுகளுக்கு முன்பு தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் பகுதியில் தனியார் சர்க்கரை ஆலை தனியார் நிறுவனம் தொடங்கப்பட்டது. இந்த பகுதியில் ஏராளமானோர் கரும்பு சாகுபடி செய்து வந்தனர். வீரிய ரகங்கள் உட்பட பல ரகங்கள் பயிரிடப்பட்டு அதிகமாக விளைச்சல் பெற்று கரும்பாலைக்கு கரும்பை அனுப்பி வைத்தனர்.

    கடைசி 3 வருடங்களுக்கு முன்பு அனுப்பிவைத்த கரும்புக்கு ஆலையில் இருந்து விவசாயிகளுக்கு பணம் வராத நிலை இருந்து வருகிறது. இதுகுறித்து விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கரும்பு விவசாயிகள் முறையிட்டும் எந்தவித பயனுமில்லாத நிலையில் பேச்சு வார்த்தை மட்டுமே நீடித்து வருகிறது.

    கரும்பு விவசாயிகளுக்கு பணம் கிடைத்த பாடில்லை. கடந்த 3 ஆண்டுகளாக தனியார் சர்க்கரை ஆலை மூடப்பட்டு கரும்பு பதிவும் நிறுத்தப்பட்டது. இந்த ஆலையை நம்பி கரும்பு பயிரிட்ட விவசாயிகள் சிவகங்கை, ஆண்டிபட்டி உள்பட பல்வேறு சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு அனுப்பி வைத்து வருகின்றனர்.

    25 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் கரும்பு சாகுபடி செய்து வந்தனர். தற்போது சர்க்கரை ஆலை குளறுபடி மற்றும் பணம் வராத நிலை போன்ற வற்றால் மனம் மாறிய கரும்பு விவசாயிகள் கரும்பு பயிரிடுவதற்கு பதிலாக நெல், வாழை, தென்னை போன்ற பயிர்களுக்கு மாறிவிட்டனர்.

    தற்போது இந்த பகுதியில் மொத்தத்தில் 5 ஆயிரம் ஏக்கர் கரும்பு மட்டுமே பயிரிடப்பட்டுள்ளது. அதுவும் பாதிக்கு மேல் சொந்த ஆலை அமைத்து வெல்லம் உற்பத்தி செய்து வருகின்றனர். இன்னும் சிலர் பக்கத்து கரும்பாலை களுக்கு அனுப்பி வைத்து குறைந்த லாபத்தை ஈட்டி வருகின்றனர்.

    மத்திய-மாநில அரசுகள் உடனடியாக இந்த சர்க்கரை ஆலை விஷயத்தில் தலையிட்டு உரிய தீர்வு காணப்பட்டால் மட்டுமே கரும்பு விவசாயம் இந்த பகுதியில் நடக்கும். இல்லாவிட்டால் கரும்பு விவசாயம் முற்றிலும் அழிந்து விடும் நிலைக்கு தள்ளப்பட்டு விடும் என விவசாயிகள் அஞ்சுகின்றனர்.

    • ஏரி முழுவதும் முட்செடிகள் வளர்ந்துள்ளதால் வலை வீசி மீன் பிடிக்க முடியாது என்பதால், ஏரியில் உள்ள தண்ணீரை வெளியேற்றி வருகின்றனர்.
    • ஏரியில் இருந்து 5 அடி வரை தண்ணீர் வீணாக வெளியேறி உள்ளது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி அடுத்த காட்டிநாயனப்பள்ளி பஞ்சாயத்தில், 109 எக்டேர் பரப்பளவில் அமைந்துள்ள படேதலாவ் ஏரிக்கு (பெரிய ஏரி) மார்க்கண்டேயன் நதியில் இருந்து கால்வாய் மூலம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

    இதன் மூலம் கிருஷ்ணகிரி ஒன்றியத்தில், 9 ஊராட்சிகளும், பர்கூர் ஒன்றியத்தில், 11 ஊராட்சிகளில் 50 ஆயிரம் ஹெக்டேர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வந்தன. ஆனால் மார்க்கண்டேய நதியில் நீர்வரத்து முற்றிலும் நின்றதால் படேதலாவ் ஏரியும் வறண்டது. கடந்த, 2019ல் ஆந்திராவில் பெய்த கன மழையால், மார்க்கண்டேயன் நதியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால், 12 ஆண்டுகளுக்கு பிறகு படேதலாவ் ஏரி நிரம்பியது.

    பின்னர் மழையின்றி ஏரி வறண்ட நிலையில், கடந்த ஆண்டு மார்க்கண்டேயன் நதியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் மீண்டும் அக்டோபரில் ஏரி நிரம்பி தண்ணீர் வெளியேறியது. நிலத்தடி நீர்மட்டமும் உயர்ந்தது. இதனால் நீண்ட காலத்திற்கு பிறகு இந்த ஏரி நீரை நம்பி ஏரியின் கீழ் பகுதியில் உள்ள விவசாயிகள் விவசாயத்தை துவங்கினர்.

    தற்போது 100 ஏக்கருக்கு மேல் நெல் நடவு செய்துள்ள விவசாயிகள் பாதி அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில், ஏரியில் மீன் பிடிக்க குத்தகை எடுத்தவர்கள் கடந்த ஒரு வாரமாக ஏரியில் இருந்து தண்ணீரை திறந்து விட்டுள்ளனர்.

    இது குறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது:-

    கடந்த 3 ஆண்டுகளுக்கு பிறகு ஏரி நிரம்பியதாலும், ஏரிக்கு தண்ணீர் தொடர்ந்து வந்து கொண்டிருந்ததாலும், இந்த நீரை நம்பி விவசாயப் பணியை துவக்கினோம். ஏரியில் மீன் பிடிக்க குத்தகை எடுத்துள்ளவர்கள், ஏரி முழுவதும் முட்செடிகள் வளர்ந்துள்ளதால் வலை வீசி மீன் பிடிக்க முடியாது என்பதால், ஏரியில் உள்ள தண்ணீரை வெளியேற்றி வருகின்றனர்.

    இந்த தண்ணீர் விவசாய நிலங்கள் வழியாக செல்வதால் நெல் அறுவடைக்கு தயாராக உள்ள வயல்களில் அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஏரியில் இருந்து 5 அடி வரை தண்ணீர் வீணாக வெளியேறி உள்ளது.

    எப்போதாவதுதான் இந்த ஏரி நிரம்பும் நிலையில், தற்போது நிரம்பியுள்ள தண்ணீரையும் மீன் குத்தகைதாரர்கள் திறந்துவிட்டுள்ளதால் தண்ணீர் வீணாகி வருவதோடு, விவசாயமும் கடுமையாக பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே பொதுப்பணித்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுத்து, ஏரியில் இருந்த வெளியேறும் தண்ணீரை நிறுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • ஏரி பாசன நீரை பயன்படுத்துவோர் சங்க தேர்தல் குறித்து வருவாய் மற்றும் பொதுப்பணி துறையினர் முறையான அறிவிப்பை வெளியிடவில்லை.
    • பத்து ஆண்டுகளுக்கு முன்னர் இறந்தவர்கள் பெயர்கள் பட்டியலில் உள்ளதால் தேர்தலை ரத்து செய்து மாற்று தேதியில் நடத்த வேண்டும்.

    பொன்னேரி:

    கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதிகளில் ஏரி நீரை பயன்படுத்துவோர் விவசாயிகள் சங்க தலைவர் மற்றும் ஆட்சி மண்டல தொகுதிகளின் உறுப்பினர் வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யும் பணி பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்றது.

    இந்நிலையில் வருகிற 19ஆம் தேதி சங்க தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அவுரிவாக்கம் கொளத்தூர் - குமரசிரலப்பாக்கம் இரண்டு ஏரிகளில் வருவாய் மற்றும் பொதுப்பணி துறையினர் மூலம் வெளியிடப்பட்டுள்ள ஆட்சி மண்டல தொகுதிகளின் உறுப்பினர் பட்டியலில் கடந்த 10 வருடங்களுக்கு முன்பாக உயிரிழந்த இருவரின் பெயர்கள் தற்போதும் இடம்பெற்றுள்ளதால் இரண்டு ஏரிகளுக்கும் வருகிற 19 ஆம் தேதி தேர்தலை நடத்தாமல் ரத்து செய்து மாற்றுத் தேதியில் தேர்தலை நடத்த வேண்டும் எனவும், தேர்தலை ஒத்தி வைக்க வேண்டும் எனவும், வேட்பு மனுக்களை பரிசீலனை செய்யக்கூடாது எனவும் கூறி மனு அளித்ததாகவும் அதனை அதிகாரிகள் ஏற்க மறுப்பதாகவும் தேர்தல் நடத்துவது குறித்து முறையாக அறிவிப்பை வருவாய் மற்றும் பொதுப்பணித்துறையினர் வெளியிடவில்லை எனவும் சார் ஆட்சியர் ஐஸ்வர்யா ராமநாதன் பொதுப்பணித்துறை அதிகாரிகள் முறையாக தேர்தலை நடத்த வேண்டும் எனவும் பாதிக்கப்பட்ட விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • தென்னங்கன்றுகள் அதிகளவில் உற்பத்தி செய்யப்படுகின்றன.
    • அரசம்பட்டியை மையமாக வைத்து, தென்னை ஆராய்ச்சி மையம் தொடங்க வேண்டும்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி, அரசம்பட்டி, இருமத்தூர், பண்ணந்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தென்னை மரங்கள் நிறைந்து காணப்படுகின்றன. இங்கு தென்னங்கன்றுகள் அதிகளவில் உற்பத்தி செய்யப்படுகின்றன.

    இங்கிருந்து ஒவ்வொரு ஆண்டு கர்நாடகா, ஆந்திரா, ஒடிசா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு 25 லட்சத்திற்கும் அதிகமான தென்னங்கன்றுகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    ஒரு தென்னங்கன்று தரத்தைப் பொறுத்து ரூ.30 முதல் ரூ.40 வரை விற்பனை செய்யப்படுகிறது. கடந்த ஆண்டு தேங்காய் உற்பத்தி அதிகரித்து விலை வீழ்ச்சியடைந்ததால், தென்னங்கன்றுகள் விலையும் சரிந்தது. இதனால் ஏற்றுமதியும் பாதிக்கப்பட்டது. கடந்த சில மாதங்களாக பெய்த தொடர் மழையால், மீண்டும் விவசாயிகள் பலர் தென்னங்கன்றுகள் நடவு செய்யும் பணியை மேற்கொண்டுள்ளனர்.

    இது குறித்து அரசம்பட்டியைச் சேர்ந்த தென்னை விவசாயிகள் கூறியதாவது: -

    அரசம்பட்டி பகுதிகளில் காணப்படும் சிறந்த மண்வளம் காரணமாக தரமான தென்னங்கன்றுகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு விளையும் காய்களும் சுவை நிறைந்து காணப்படும்.

    இதனால் வெளி மாவட்ட, மாநில விவசாயிகள் பலர் நேரடியாக வந்து கன்றுகளை கொள்முதல் செய்கின்றனர். கடந்த ஆண்டு தேங்காய் விலை வீழ்ச்சியால், தென்னங்கன்றுகள் விலை சரிந்தது. இருப்பினும் `தேங்காய் பூ' விற்பனையால் இழப்பை சமாளித்தோம். ஆனாலும், போதிய அளவுக்கு வருவாய் கிடைக்கவில்லை.

    தற்போது பெய்த மழையால் நீர்நிலைகள் நிரம்பியும், மண்ணில் ஈரத்தன்மை குறையாமலும் உள்ளதால் விவசாயிகள் பலர் தென்னங்கன்றுகள் நடவு செய்ய மீண்டும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    தற்போது உயரம், தரத்தை பொறுத்து ஒரு தென்னங்கன்று ரூ.30 முதல் ரூ.50 வரை விலைபோகிறது. நாள்தோறும் குறைந்தது 25 ஆயிரம் தென்னங்கன்றுகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    மேலும், தென்னையில் நோய் தாக்குதல் உள்ளிட்டவையால் விவசாயிகள் அடிக்கடி இழப்பினை சந்தித்து வருகின்றனர். எனவே, அரசம்பட்டியை மையமாக வைத்து, தென்னை ஆராய்ச்சி மையம் தொடங்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர். 

    • அபிராமம் பகுதியில் தண்ணீர் இல்லாததால் நெற்பயிர்கள் கருகும் நிலையில் உள்ளன.
    • இழப்பீடு கேட்டு அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    அபிராமம்

    ராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான கீழப்பச்சேரி, நீர்தாண்டதானம், அச்சங்குளம், விரதக்குளம், உடையநாதபுரம், போத்தநதி, ஏ.புதூர், புல்லந்தை நந்திசேரி, காடனேரி, நரியன், முத்தாதிபுரம் உள்பட 75-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 3,750 ஏக்கரில் மானாவாரியாக நெல் விவசாயம் செய்துவருகின்றனர்.

    75 நாட்களுக்கு முன்பு அவ்வப்போது மழை பெய்ததால் நெற்பயிர் ஒரளவு வளர தொடங்கியது. இதனால் விவசாயிகள் கூலி வேலைக்கு ஆட்களை வைத்து களை எடுத்தல், உரமிடுதல், பூச்சிக்கொல்லி மருந்து அடித்தல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வந்தனர். தற்போது பருவமழை போதிய அளவு பெய்யாததால் கண்மாய் ஊருணிகள் வறண்டு தண்ணீரின்றி நெற்பயிர்கள் கருகி வருகிறது.

    இது குறித்து அபிராமம் பகுதி விவசாயிகள் அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் கோரிக்கை மனு அளித்து வருகின்றனர். அபிராமம் பகுதிக்கு நீர் ஆதாரமாக விளங்கும் கிருதுமால் நதி மற்றும் கால்வாய்கள் தூர்வாரப்படாமலும் புதர்மண்டியும் கிடக்கிறது. இதனால் பலமுறை வைகையில் தண்ணீர் வந்தும் அபிராமம் பகுதிக்கு தண்ணீர் வரவில்லை.

    கிருதுமால் நதியை தூர்வார ேகாரியும், அக்கிரமிப்புகளை அகற்ற ேகாரியும் பலமுறை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. இதனால் அபிராமம் பகுதி விவசாயிகள் கருகிய நெற்பயிர்களை மாடுகளுக்கு எடுத்து செல்லும் நிலை உள்ளது

    இதுகுறித்து நீர் தாண்டதானம் விவசாயி தர்மமுனியாண்டி கூறுகையில், ஒவ்வொரு ஆண்டும் பருவமழை பொய்த்ததால் நெற்பயிர்கள் கருகும் நிலை உள்ளது. இந்த பகுதிக்கு நீர் ஆதாரமாக விளங்கும் கிருதுமால் நதி தூர்வாரப்படாமல் கருவேல மரங்களால் புதர்மண்டி கிடக்கிறது.

    அதிகாரிகளின் அலட்சியத்தால் தூர்வாரப்படாததால் கண்மாய்களுக்கு தண்ணீர் வரவில்லை. விவசாயம் செய்ய கடன் வாங்கி செலவு செய்தோம். மழை இல்லாததால் மேலும் கடனாளியாகும் நிலை உள்ளது. அரசும், மாவட்ட நிர்வாகமும் இதில் தலையிட்டு பயிர்கடனை தள்ளுபடி செய்வதுடன் ஒரு ஏக்கருக்கு சுமார் ரூ.26 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றார்.

    • பாலத்தின் அருகில் தற்போது பெய்த வடகிழக்கு பருவ மழையினால் அடியோடு தார் சாலையை பெயர்ந்து தண்ணீரில் கலந்து சென்றுவிட்டது.
    • இதனை சீரமைத்து தர வேண்டும என 10க்கும் மேற்பட்ட கிராமத்தில் உள்ள விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    விழுப்புரம்:

    மரக்காணம் அருகே காணி மேடு கிராமம் மண்டகப்பட்டு கிராமம் இடையே தரைப்பாலம் அமைந்துள்ளது. பாலத்தின் அருகில் தற்போது பெய்த வடகிழக்கு பருவ மழையினால் அடியோடு தார் சாலையை பெயர்ந்து தண்ணீரில் கலந்து சென்று விட்டது. இதனால் இரு சக்கர வாகனம் மற்றும் லாரிகள் டிராக்டர்கள் நடந்து செல்லும் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு கடும் அவதி அடைந்து வருகிறார்கள் எனவே இதனை சீரமைத்து தர வேண்டும என 10க்கும் மேற்பட்ட கிராமத்தில் உள்ள விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • குழிகளை யானைகள் மண்தள்ளி மூடி கடந்து இரவு நேரங்களில் தொடர்ந்து விவசாய பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன.
    • ஐந்து கிலோமீட்டருக்கு சோலார் மின் வேலி அமைத்துக் கொடுக்க வேண்டும்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அடுத்த பிக்கிலி கொல்லப்பட்டி மலை கிராமத்தில் வசிக்கும் விவசாயிகள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    பிக்கிலி ஊராட்சி கொல்லப்பட்டி கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் 2500-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறோம். இங்குள்ள மக்களின் பிரதான தொழில் விவசாயமாக உள்ளது.

    இரவு நேரத்தில் காட்டு யானைகள் விவசாய நிலத்திற்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன.மேலும் கிராமத்திற்குள்ளும் யானைகள் புகுவதால் இரவு நேரத்தில் வெளிவர முடியாமல் அச்சத்தில் இருந்து வருகிறோம். உயிர் சேதம் ஏற்படுவதற்குள் வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் சாவடிக்கல் முதல் சக்கிலி நத்தம் வரை 5 கிலோமீட்டருக்கு யானைகள் விளைநிலங்களுக்குள்ளும், கிராமத்திற்குள்ளும் வராமல் இருப்பதற்கு குழி வெட்டப்பட்டது. அந்த குழிகளை யானைகள் மண்தள்ளி மூடி கடந்து இரவு நேரங்களில் தொடர்ந்து விவசாய பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன.

    வனத்துறை கிராம மக்களின் பாதுகாப்பு கருதியும், விவசாய பயிர்களை சேதப்படுத்தாமல் இருப்பதற்கும் ஐந்து கிலோமீட்டருக்கு சோலார் மின் வேலி அமைத்துக் கொடுக்க வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

    • பல நூறு ஏக்கரில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
    • பருத்தி செடிகளில் நோய்தாக்குதல் காணப்படுகிறது.

    பாப்பிரெட்டிப்பட்டி,

    தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா உட்பட்ட மணியம்பாடி சிந்தல் பாடி. ராமியணஅள்ளி கேத்திரெட்டிப்பட்டி தாளநத்தம் குருபர அள்ளி, தென்கரை க்கோட்டை,உள்ளிட்டபல கிராமங்களில் இந்த ஆண்டு பல நூறு ஏக்கரில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

    நடவு செய்து 50 நாட்களில் இருந்து 60 நாட்கள் ஆகிறது.தற்போது பூ பூத்து காய்காய்க்கும் பருவத்தில் செடிகள் உள்ளன. கடந்த சில ஆண்டுகளுக்கு பிறகு பருத்தி சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    இந்நிலையில் கடந்த சில நாட்களாக பருவ நிலை மாற்றம் காணப்படுகிறது. குறிப்பாக அதிகாலையில் மூடுபனி, குளிர், பகலில் வெயில், மாலையில் சில்லென காற்று என உள்ளது. இதனால் பருத்தி செடிகளில் நோய்தாக்குதல் காணப்படுகிறது.

    கடத்தூர், தாளநத்தம்.கேத்து ரெட்டிபட்டி உட்பட சில கிராமங்களில் அசுவினி மற்றும் இலை சுருட்டல் நோய் தாக்கி செடிகள் இழைகள் காய்கின்றன.

    சில கடைகளில் மருந்து கம்பெனிக்காரர்கள் கொடுக்கும் மருந்தினை செடிகளுக்கு தெளிக்கும் நிலை உள்ளது.

    பாப்பிரெட்டி பட்டி,மொரப்பூர் பகுதிக்கு உட்பட்ட வேளாண்மை துறை அதிகாரிகள் பருத்தி வயல்வெளிகளில் ஆய்வு செய்து விவசாயிகளுக்கு தகுந்த ஆலோசனை வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • தென் பெண்ணை ஆற்றில் ஆர்ப்பரித்து வெள்ளத்தால் தென் பெண்ணை ஆறு கடல் போல் காட்சி அளிக்கிறது.
    • பல்வேறு கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் ஆவலுடன் பார்த்து செல்கின்றனர்.

    மொரப்பூர்,

    கர்நாடகா மற்றும் தமிழகத்தில் பல பகுதிகளில் சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தென் பெண்ணை ஆற்றில் ஆர்ப்பரித்து வெள்ளத்தால் தென் பெண்ணை ஆறு கடல் போல் காட்சி அளிக்கிறது.

    இந்த கண் கொள்ளா காட்சியை இருமத்தூர், திப்பம்பட்டி, கம்பைநல்லூர், கொங்கரபட்டி, கெலவள்ளி, மஞ்சமேடு, அரசம்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் ஆவலுடன் பார்த்து செல்கின்றனர்.

    இது போன்று தண்ணீர் பல ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தற்போது வருவதால் அப்பகுதியை சேர்ந்த சுற்றுவட்டார கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    அதே சமயம் இது போன்ற மழைக்கால உபரி நீரை அருகாமையில் உள்ள கிராம ஏரிகளுக்கு கொண்டு சென்றால் விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

    எனவே தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

    • நீர்வரத்து குறையாமல் ஆண்டுதோறும் பருவ மழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகிறது.
    • இப்பகுதியில் கூடுதலாக தடுப்பணைகள் கட்டினால் ஆண்டு முழுவதும் ஆற்றில் நீர்வரத்து அதிகரிக்கும் எனவும் இதனால் இப்பகுதியில் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும் எனவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

    வேப்பனபள்ளி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள மார்க்கண்டேய நதியானது கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு வந்து கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி வழியாக தென்பெண்ணை ஆற்றில் கலக்கிறது.

    இந்தநிலையில் மார்க்கண்டேயன் ஆற்றில் குறுக்கே கர்நாடக அரசு பிரம்மாண்ட தடுப்பணை கட்டி உள்ளது. தடுப்பணை கட்டிய பிறகும் மார்க்கண்டேயன் நதியில் நீர்வரத்து குறையாமல் ஆண்டுதோறும் பருவ மழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகிறது.

    இந்தநிலையில் ஆற்றில் போதுமான தடுப்பணைகள் இல்லாததால் ஆற்றில் அவ்வப்போது ஏற்படும் வெள்ளப்பெருக்கு ஆனது சில மாதங்களிலேயே நீர் வடிந்து மீண்டும் ஆற்றில் நீர் இல்லாமல் வற்றி காணப்படுகிறது.

    இதனால் ஆண்டுதோறும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஆற்றில் வீணாக சென்று நீர் கடலில் கலக்கிறது. இதை தடுக்கும் வகையில் மார்க்கண்ட நதியின் குறுக்கே தற்போது இருக்கும் தடுப்பணைகளை விட கூடுதலாக பெரிய தடுப்பணைகள் கட்ட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

    இப்பகுதியில் கூடுதலாக தடுப்பணைகள் கட்டினால் ஆண்டு முழுவதும் ஆற்றில் நீர்வரத்து அதிகரிக்கும் எனவும் இதனால் இப்பகுதியில் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும் எனவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர.

    மேலும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட தடுப்பணைகள் அனைத்தும் தற்போது சேதமடைந்துள்ளதால் போதுமான நீர் நதியில் இருப்பதில்லை எனவும் பொதுமக்கள், விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். கூடுதலாக தடுப்பணைகள் கட்டி ஆற்றில் நீர்வரத்து அதிரிக்க வேண்டும் என நீண்ட நாட்களாக விவசாயிகளும், பொதுமக்களும் கோரிக்கை வைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

    • கொடைக்கானலில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க தாலுகா மாநாடு நடந்தது.
    • கொடைக்கானல் - மூணாறு சாலையை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கொடைக்கானல்:

    கொடைக்கானலில் நடந்த தமிழ்நாடு விவசாயிகள் சங்க தாலுகா மாநாட்டிற்கு மாவட்ட செயலாளர் பெருமாள் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் ராமசாமி, கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் ஜோசப், செந்தாமரை, சின்னு ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த தாலுகா மாநாட்டில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கொடைக்கானல் மலைப்பகுதியில் பழங்குடியின மக்கள் மற்றும் பாரம்பரிய வன விவசாயிகள் ஆகியோருக்கு 2006- ஆம் ஆண்டு வன உரிமை சட்டப்படி பட்டா வழங்க வேண்டும். கொடைக்கானல் மலைப்பகுதியில் பட்டா வழங்க தடையாக உள்ள தடையாணையை ரத்து செய்ய வேண்டும் என்றும், கொடைக்கானலில் விளையக்கூடிய காய்கறிகள் உள்ளிட்டவைகளுக்கு கட்டுப்படியான விலையை அரசு நிர்ணயம் செய்ய வேண்டும் என்றும், உரம் பூச்சி மருந்து விலையை கட்டுப்படுத்த வேண்டும் என்றும்,

    கொடைக்கானல் - மூணாறு சாலையை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த கூட்டத்தில் அஜய் கோர்ஸ் செல்லையா, பொன்னுச்சாமி, ஈஸ்வரன், பாண்டியராஜன், ராஜேஷ் கண்ணன், ராஜகோபால், தங்கவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ×