search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மார்க்கண்டேயன் நதியின் குறுக்கே   கூடுதலாக தடுப்பணைகள் கட்ட வேண்டும்-   விவசாயிகள் கோரிக்கை
    X

    மார்க்கண்டேயன் நதியின் குறுக்கே கூடுதலாக தடுப்பணைகள் கட்ட வேண்டும்- விவசாயிகள் கோரிக்கை

    • நீர்வரத்து குறையாமல் ஆண்டுதோறும் பருவ மழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகிறது.
    • இப்பகுதியில் கூடுதலாக தடுப்பணைகள் கட்டினால் ஆண்டு முழுவதும் ஆற்றில் நீர்வரத்து அதிகரிக்கும் எனவும் இதனால் இப்பகுதியில் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும் எனவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

    வேப்பனபள்ளி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள மார்க்கண்டேய நதியானது கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு வந்து கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி வழியாக தென்பெண்ணை ஆற்றில் கலக்கிறது.

    இந்தநிலையில் மார்க்கண்டேயன் ஆற்றில் குறுக்கே கர்நாடக அரசு பிரம்மாண்ட தடுப்பணை கட்டி உள்ளது. தடுப்பணை கட்டிய பிறகும் மார்க்கண்டேயன் நதியில் நீர்வரத்து குறையாமல் ஆண்டுதோறும் பருவ மழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகிறது.

    இந்தநிலையில் ஆற்றில் போதுமான தடுப்பணைகள் இல்லாததால் ஆற்றில் அவ்வப்போது ஏற்படும் வெள்ளப்பெருக்கு ஆனது சில மாதங்களிலேயே நீர் வடிந்து மீண்டும் ஆற்றில் நீர் இல்லாமல் வற்றி காணப்படுகிறது.

    இதனால் ஆண்டுதோறும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஆற்றில் வீணாக சென்று நீர் கடலில் கலக்கிறது. இதை தடுக்கும் வகையில் மார்க்கண்ட நதியின் குறுக்கே தற்போது இருக்கும் தடுப்பணைகளை விட கூடுதலாக பெரிய தடுப்பணைகள் கட்ட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

    இப்பகுதியில் கூடுதலாக தடுப்பணைகள் கட்டினால் ஆண்டு முழுவதும் ஆற்றில் நீர்வரத்து அதிகரிக்கும் எனவும் இதனால் இப்பகுதியில் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும் எனவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர.

    மேலும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட தடுப்பணைகள் அனைத்தும் தற்போது சேதமடைந்துள்ளதால் போதுமான நீர் நதியில் இருப்பதில்லை எனவும் பொதுமக்கள், விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். கூடுதலாக தடுப்பணைகள் கட்டி ஆற்றில் நீர்வரத்து அதிரிக்க வேண்டும் என நீண்ட நாட்களாக விவசாயிகளும், பொதுமக்களும் கோரிக்கை வைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×