search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொடைக்கானல்-மூணாறு சாலையை திறக்க விவசாயிகள் கோரிக்கை
    X

    கூட்டத்தில் கலந்து கொண்டவர்களை படத்தில் காணலாம்.

    கொடைக்கானல்-மூணாறு சாலையை திறக்க விவசாயிகள் கோரிக்கை

    • கொடைக்கானலில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க தாலுகா மாநாடு நடந்தது.
    • கொடைக்கானல் - மூணாறு சாலையை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கொடைக்கானல்:

    கொடைக்கானலில் நடந்த தமிழ்நாடு விவசாயிகள் சங்க தாலுகா மாநாட்டிற்கு மாவட்ட செயலாளர் பெருமாள் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் ராமசாமி, கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் ஜோசப், செந்தாமரை, சின்னு ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த தாலுகா மாநாட்டில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கொடைக்கானல் மலைப்பகுதியில் பழங்குடியின மக்கள் மற்றும் பாரம்பரிய வன விவசாயிகள் ஆகியோருக்கு 2006- ஆம் ஆண்டு வன உரிமை சட்டப்படி பட்டா வழங்க வேண்டும். கொடைக்கானல் மலைப்பகுதியில் பட்டா வழங்க தடையாக உள்ள தடையாணையை ரத்து செய்ய வேண்டும் என்றும், கொடைக்கானலில் விளையக்கூடிய காய்கறிகள் உள்ளிட்டவைகளுக்கு கட்டுப்படியான விலையை அரசு நிர்ணயம் செய்ய வேண்டும் என்றும், உரம் பூச்சி மருந்து விலையை கட்டுப்படுத்த வேண்டும் என்றும்,

    கொடைக்கானல் - மூணாறு சாலையை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த கூட்டத்தில் அஜய் கோர்ஸ் செல்லையா, பொன்னுச்சாமி, ஈஸ்வரன், பாண்டியராஜன், ராஜேஷ் கண்ணன், ராஜகோபால், தங்கவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×