search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாப்பாரப்பட்டி அடுத்த பிக்கிலி கொல்லப்பட்டி மலை கிராமத்தில்   பயிர்களை நாசப்படுத்தும் காட்டு யானைகளை தடுக்க மின்வேலி   -கலெக்டரிடம் விவசாயிகள் கோரிக்கை
    X

    பாப்பாரப்பட்டி அடுத்த பிக்கிலி கொல்லப்பட்டி மலை கிராமத்தில் பயிர்களை நாசப்படுத்தும் காட்டு யானைகளை தடுக்க மின்வேலி -கலெக்டரிடம் விவசாயிகள் கோரிக்கை

    • குழிகளை யானைகள் மண்தள்ளி மூடி கடந்து இரவு நேரங்களில் தொடர்ந்து விவசாய பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன.
    • ஐந்து கிலோமீட்டருக்கு சோலார் மின் வேலி அமைத்துக் கொடுக்க வேண்டும்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அடுத்த பிக்கிலி கொல்லப்பட்டி மலை கிராமத்தில் வசிக்கும் விவசாயிகள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    பிக்கிலி ஊராட்சி கொல்லப்பட்டி கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் 2500-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறோம். இங்குள்ள மக்களின் பிரதான தொழில் விவசாயமாக உள்ளது.

    இரவு நேரத்தில் காட்டு யானைகள் விவசாய நிலத்திற்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன.மேலும் கிராமத்திற்குள்ளும் யானைகள் புகுவதால் இரவு நேரத்தில் வெளிவர முடியாமல் அச்சத்தில் இருந்து வருகிறோம். உயிர் சேதம் ஏற்படுவதற்குள் வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் சாவடிக்கல் முதல் சக்கிலி நத்தம் வரை 5 கிலோமீட்டருக்கு யானைகள் விளைநிலங்களுக்குள்ளும், கிராமத்திற்குள்ளும் வராமல் இருப்பதற்கு குழி வெட்டப்பட்டது. அந்த குழிகளை யானைகள் மண்தள்ளி மூடி கடந்து இரவு நேரங்களில் தொடர்ந்து விவசாய பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன.

    வனத்துறை கிராம மக்களின் பாதுகாப்பு கருதியும், விவசாய பயிர்களை சேதப்படுத்தாமல் இருப்பதற்கும் ஐந்து கிலோமீட்டருக்கு சோலார் மின் வேலி அமைத்துக் கொடுக்க வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×