search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sugarcane Cultivation"

    • பரமத்தி வட்டாரத்தில் விவசாயிகளுக்கு நீடித்த நிலையான கரும்பு சாகுபடி குறித்த பயிற்சி முகாம் வழங்கப்பட்டது.
    • ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகள் மற்றும் மத்திய, மாநில அரசு மூலம் வழங்கப்படும் மானிய விவரங்கள் பற்றி எடுத்துக்கூறப்பட்டது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பரமத்தி வட்டாரத்தில் விவசாயிகளுக்கு நீடித்த நிலையான கரும்பு சாகுபடி குறித்த பயிற்சி முகாம் வழங்கப்பட்டது. இப்பயிற்சியில் கரும்பு பயிரில் ஒரு பரு கரணை நாற்று உற்பத்தி தொழில்நுட்பம், சொட்டு நீர் பாசனம் அமைத்தல், ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகள் மற்றும் மத்திய, மாநில அரசு மூலம் வழங்கப்படும் மானிய விவரங்கள் பற்றி எடுத்துக்கூறப்பட்டது. இப்பயிற்சியில் பொன்னி சர்க்கரை ஆலை கரும்பு மேலாளர் பழனிச்சாமி, கரும்பு ஆய்வாளர்கள் அல்லிமுத்து மற்றும் மயில்சாமி ஆகியோர் கலந்து கொண்டு தொழில்நுட்ப உரை வழங்கினார்கள். இதில் 40 விவசாயிகள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வட்டார தொழில்நுட்ப மேலாளர் பன்னீர்செல்வம், உதவி தொழில்நுட்ப மேலாளர் ரவினா மற்றும் உதவி வேளாண்மை அலுவலர் கவுசல்யா ஆகியோர் செய்திருந்தனர்.

    • விருதுநகர் மாவட்டத்தில் கரும்பு சாகுபடி அழியும் நிலையில் உள்ளது.
    • மத்திய-மாநில அரசுகள் கவனம் செலுத்த விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள வத்திராயிருப்பு, கான்சாபுரம், மம்சாபுரம், ஸ்ரீவில்லி புத்தூர், ராஜபாளையம், தேவதானம், சேத்தூர் உள்பட பல்வேறு பகுதிகளில் கரும்பு சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

    30 ஆண்டுகளுக்கு முன்பு தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் பகுதியில் தனியார் சர்க்கரை ஆலை தனியார் நிறுவனம் தொடங்கப்பட்டது. இந்த பகுதியில் ஏராளமானோர் கரும்பு சாகுபடி செய்து வந்தனர். வீரிய ரகங்கள் உட்பட பல ரகங்கள் பயிரிடப்பட்டு அதிகமாக விளைச்சல் பெற்று கரும்பாலைக்கு கரும்பை அனுப்பி வைத்தனர்.

    கடைசி 3 வருடங்களுக்கு முன்பு அனுப்பிவைத்த கரும்புக்கு ஆலையில் இருந்து விவசாயிகளுக்கு பணம் வராத நிலை இருந்து வருகிறது. இதுகுறித்து விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கரும்பு விவசாயிகள் முறையிட்டும் எந்தவித பயனுமில்லாத நிலையில் பேச்சு வார்த்தை மட்டுமே நீடித்து வருகிறது.

    கரும்பு விவசாயிகளுக்கு பணம் கிடைத்த பாடில்லை. கடந்த 3 ஆண்டுகளாக தனியார் சர்க்கரை ஆலை மூடப்பட்டு கரும்பு பதிவும் நிறுத்தப்பட்டது. இந்த ஆலையை நம்பி கரும்பு பயிரிட்ட விவசாயிகள் சிவகங்கை, ஆண்டிபட்டி உள்பட பல்வேறு சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு அனுப்பி வைத்து வருகின்றனர்.

    25 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் கரும்பு சாகுபடி செய்து வந்தனர். தற்போது சர்க்கரை ஆலை குளறுபடி மற்றும் பணம் வராத நிலை போன்ற வற்றால் மனம் மாறிய கரும்பு விவசாயிகள் கரும்பு பயிரிடுவதற்கு பதிலாக நெல், வாழை, தென்னை போன்ற பயிர்களுக்கு மாறிவிட்டனர்.

    தற்போது இந்த பகுதியில் மொத்தத்தில் 5 ஆயிரம் ஏக்கர் கரும்பு மட்டுமே பயிரிடப்பட்டுள்ளது. அதுவும் பாதிக்கு மேல் சொந்த ஆலை அமைத்து வெல்லம் உற்பத்தி செய்து வருகின்றனர். இன்னும் சிலர் பக்கத்து கரும்பாலை களுக்கு அனுப்பி வைத்து குறைந்த லாபத்தை ஈட்டி வருகின்றனர்.

    மத்திய-மாநில அரசுகள் உடனடியாக இந்த சர்க்கரை ஆலை விஷயத்தில் தலையிட்டு உரிய தீர்வு காணப்பட்டால் மட்டுமே கரும்பு விவசாயம் இந்த பகுதியில் நடக்கும். இல்லாவிட்டால் கரும்பு விவசாயம் முற்றிலும் அழிந்து விடும் நிலைக்கு தள்ளப்பட்டு விடும் என விவசாயிகள் அஞ்சுகின்றனர்.

    ×