search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "monsoon rains"

    • செந்தில்குமார் எம்.எல்.ஏ. தலைமையில் நடந்தது
    • பாகூர் சட்ட மன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடந்தது.

    புதுச்சேரி:

    பாகூர் பகுதியில் பெய்த கனமழை காரணமாக வயல்வெளி மற்றும் குடியிருப்பு பகுதிகளில் பகுதிகளில் மழை நீர் தேங்கி பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் விவசாயிகளும், பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

    இந்தநிலையில், மழை வெள்ள பாதிப்பு நிலவரம், முன்னெச்சரிக்கை மற்றும் பணிகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் பாகூர் சட்ட மன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடந்தது.

    இதில் செந்தில்குமார் எம்.எல்.ஏ, மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    அப்போது, மழை வெள்ள பாதிப்புகளை உடனடியாக சரி செய்வது, மின்தடை நேரங்களிலும் தடை இன்றி குடிநீர் வழங்குவது, மழை வெள்ள பாதிப்புகளை சரி செய்திட ஜே.சி.பி. இயந்திரங்கள் தயார் நிலையில் வைத்திருப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

    கூட்டத்தில்,பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் கார்த்திகேயன், பாகூர் துணை தாசில்தார் விமலன், மின் துறை இளநிலை பொறியாளர்கள் ஸ்டாலின், பிரபுராம், வேளாண் அதிகாரி பரமநாதன், பொதுப் பணித்துறை உதவி பொறியளர் ராஜன், தீயணைப்பு துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • பாலத்தின் அருகில் தற்போது பெய்த வடகிழக்கு பருவ மழையினால் அடியோடு தார் சாலையை பெயர்ந்து தண்ணீரில் கலந்து சென்றுவிட்டது.
    • இதனை சீரமைத்து தர வேண்டும என 10க்கும் மேற்பட்ட கிராமத்தில் உள்ள விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    விழுப்புரம்:

    மரக்காணம் அருகே காணி மேடு கிராமம் மண்டகப்பட்டு கிராமம் இடையே தரைப்பாலம் அமைந்துள்ளது. பாலத்தின் அருகில் தற்போது பெய்த வடகிழக்கு பருவ மழையினால் அடியோடு தார் சாலையை பெயர்ந்து தண்ணீரில் கலந்து சென்று விட்டது. இதனால் இரு சக்கர வாகனம் மற்றும் லாரிகள் டிராக்டர்கள் நடந்து செல்லும் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு கடும் அவதி அடைந்து வருகிறார்கள் எனவே இதனை சீரமைத்து தர வேண்டும என 10க்கும் மேற்பட்ட கிராமத்தில் உள்ள விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக சாரலுடன் கூடிய மழை நீடித்து வருகிறது.
    • பருவமழை துவங்கியதால் வனப்பகுதிகளில் பசுமை திரும்பி உள்ளது.

    உடுமலை :

    திருப்பூர் மாவட்டம் உடுமலை வட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக சாரலுடன் கூடிய மழை நீடித்து வருகிறது.

    மேற்கு தொடர்ச்சி மலை கிராமங்களான தளி, தளிஞ்சிவயல் உள்ளிட்ட செட்டில்மெண்ட் பகுதிகளில் மழை நீடிப்பதால், இரவு நேரங்களில் குளிர் அதிகமாக உள்ளது. பருவமழை துவங்கியதால் வனப்பகுதிகளில் மீண்டும் பசுமை திரும்பி உள்ளது. கேரள மாநிலத்தில் பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் வனப்பகுதியில் உள்ள நீரோடைகள் ,குட்டைகள் , தடுப்பணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    திருமூர்த்தி மலையில் சாரல் மழை தொடர்ந்து பெய்து வருவதால் அமணலிங்கேஸ்வரர் கோவில் ,பஞ்சலிங்க அருவி பகுதிகளை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

    வங்கதேசத்தில் பெய்து வரும் அடை மழை பெய்து வரும் நிலையில், மழை தொடர்பான விபத்துக்களில் ரோகிங்கியா அகதிகள் உள்பட 12 பேர் உயிரிழந்துள்ளனர். #BangladeshRain
    டாக்கா:

    வங்கதேசத்தில் இந்த ஆண்டின் முதல் பருவமழை தொடங்கி உள்ளது. கடந்த மூன்று தினங்களாக அடைமழை பெய்து வருவதால் தாழ்வான பகுதிகள் தண்ணீரில் தத்தளிக்கின்றன. பல்வேறு பகுதிகளில் கடும் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

    ரோகிங்கியா அகதிகளும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். ரோகிங்கியா அகதிகள் வசிக்கும் காக்ஸ் பஜார் மாவட்டத்தில் பேரழிவு ஏற்பட்டுள்ளது. அகதிகளின் கூடாரங்கள் மழையால் சேதமடைந்துள்ளன. எனவே, பாதிக்கப்பட்ட சுமார் 1 லட்சம் பேரை வேறு இடத்திற்கு மாற்றும் நடவடிக்கைகள் விரைவாக நடைபெற்று வருகின்றன.



    இந்நிலையில், நிலச்சரிவு மற்றும் மழை தொடர்பான விபத்துக்களில் ரோகிங்கியா அகதிகள் 2 பேர் உள்பட 12 பேர் உயிரிழந்ததாக  அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 10 ஆயிரம் மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

    இதற்கிடையே அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை நீடிக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது. இதனால் ரங்கமதி மற்றும் காக்ஸ் பஜார் மாவட்டங்களில் மேலும் நிலச்சரிவு ஏற்படலாம் என அஞ்சப்படுகிறது.  #BangladeshRain
    ×