search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "12 killed"

    உத்தரகாண்டில் சாலை வளைவில் இருந்த பள்ளத்தாக்கில் தனியார் பேருந்து கவிழ்ந்து விழுந்த விபத்தில் 12 பேர் பரிதாபமாக பலியாகினர். #BusAccident
    டேராடூன்:

    உத்தரகாண்ட் மாநிலத்தின் உத்தரகாசியில் உள்ள ஜான்கிசாட்டி பகுதியில் இருந்து விகாஸ் நகர் பகுதியை நோக்கி தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது.

    தம்டா பகுதியில் வந்தபோது, அருகில் உள்ள பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து விழுந்தது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 12 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். மேலும் 13 பேர் படுகாயம் அடைந்தனர்.



    தகவலறிந்து மீட்புக் குழுவினர் அங்கு விரைந்து சென்றனர். டேராடூனில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
     
    விபத்து குறித்து அறிந்த மாநில முதல் மந்திரி திரிவேந்திர சிங் ராவத், மீட்புப் பணிகளை முடுக்கி விடும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். #BusAccident
    மும்பையில் ரெயில் தண்டவாளங்களை கடந்தபோதும், கவனக்குறைவாக பயணித்தபோதும் ரெயில்களில் அடிபட்டு ஒரே நாளில் 12 பேர் உயிரிழந்தனர். #RailTracksDeaths #RailwayPolice #Mumbai
    மும்பை:

    ரெயில்வே கிராசிங்கை கடக்கும்போது கவனமாக கடந்து செல்ல வேண்டும், ரெயில் நிலையங்களில் தண்டவாளத்தை கடக்கக்கூடாது என தொடர்ந்து அறிவுறுத்தியபோதிலும் பயணிகளின் கவனக்குறைவால் உயிர்ப்பலி அதிகரித்து வருகிறது. மக்கள் தொகை அதிகம் உள்ள மும்பை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் நேற்று மட்டும் 12 பேர் உயிரிழந்துள்ளனர். 5 பேர் காயமடைந்துள்ளனர்.

    தண்டவாளத்தை கடந்தபோதும், அதிக கூட்ட நெரிசலின்போது ரெயிலில் இருந்து தவறி விழுந்தும், தற்கொலை செய்தும் உயிரிழந்துள்ளனர்.



    தானே மாவட்டம் மற்றும் கல்யாண் நகரில் தலா 3 பேர் உயிரிழந்துள்ளனர். மும்பை வடாலா பகுதியில் 2 பேரும், குர்லா, மத்திய மும்பை, பாந்த்ரா, டோம்பிவிலி பகுதியில் தலா ஒருவரும் ரெயிலில் அடிபட்டு இறந்துள்ளதாக அரசு ரெயில்வே காவல்துறை தெரிவித்துள்ளது.

    கடந்த ஆண்டு மும்பை மற்றும் புறநகர்ப் பகுதியில் மொத்தம் 3014 பேர் ரெயில்களில் அடிபட்டு இறந்ததாக, தகவல் அறியும் உரிமைச் சட்ட மனுவிற்கு ரெயில்வே காவல்துறை பதில் அளித்தது குறிப்பிடத்தக்கது. #RailTracksDeaths #RailwayPolice #Mumbai
    ஆப்கானிஸ்தானின் பால்க் பகுதியில் ஹெலிகாப்டர் ஒன்று கீழே விழுந்து நொறுங்கியதில் பாதுகாப்பு படைவீரர்கள் உள்பட 12 பேர் பலியாகினர். #Accident
    காபுல்:

    ஆப்கானிஸ்தான் நாட்டின் வடபகுதியில் அமைந்துள்ளது பால்க் மாகாணம். இந்த பகுதியில் தனியார் நிறுவனத்தை சேர்ந்த ஹெலிகாப்டர் ஒன்று சென்று கொண்டிருந்தது. அதில் ஆப்கன் பாதுகாப்பு படைவீரர்கள் மற்றும் உக்ரேனிய நாடுகளை சேர்ந்த விமான நிறுவன ஊழியர்கள் உள்பட 14 பேர் பயணித்தனர். 

    பால்க் பகுதியில் பறந்து கொண்டிருந்தபோது ஹெலிகாப்டர் திடீரென கீழே விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் அதில் பயணித்த 12 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர்.

    விசாரணையில், ஹெலிகாப்டரில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக விபத்து ஏற்பட்டது என ஆப்கன் அதிகாரிகள் தெரிவித்தனர். #Accident
    பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் தற்கொலைப்படை பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 14 பேர் உடல் சிதறி பலியாகினர். #Pakistan #SuicideAttack
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானின் ஆளும் கட்சியின் ஆட்சிக்காலம் மே 31-ம் தேதியுடன் முடிவடைந்தது. இதையடுத்து, ஜூலை 25-ம் தேதி பொதுத் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. தேர்தலில் வெற்றி பெற அனைத்து கட்சிகளும் ஏற்பாடுகளை செய்து வருகின்றன.

    இந்நிலையில், பாகிஸ்தான் நாட்டின் பெஷாவர் பகுதியில் நேற்று தேர்தல் பிரசார கூட்டம் நடைபெற்றது. இதில் தேசிய அவாமி கட்சியின் வேட்பாளர் ஹாரூன் பிலார் கலந்து கொண்டு பேசினார். அவரது பேச்சைக் கேட்க ஏராளமானோர் திரண்டிருந்தனர்.

    அப்போது கூட்டத்தில் புகுந்த தற்கொலைப்படை பயங்கரவாதிகள் தாங்கள் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தனர்.

    இந்த திடீர் தாக்குதலில் தேசிய அவாமி கட்சியின் வேட்பாளர் ஹாரூன் பிலார் உள்பட 14 பேர் உடல் சிதறி பரிதாபமாக பலியாகினர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர்.
     
    அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் காயம் அடைந்தவர்களை மிட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த தற்கொலைப்படை தாக்குதலுக்கு பாகிஸ்தானில் உள்ள அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். #Pakistan #SuicideAttack
    வங்கதேசத்தில் பெய்து வரும் அடை மழை பெய்து வரும் நிலையில், மழை தொடர்பான விபத்துக்களில் ரோகிங்கியா அகதிகள் உள்பட 12 பேர் உயிரிழந்துள்ளனர். #BangladeshRain
    டாக்கா:

    வங்கதேசத்தில் இந்த ஆண்டின் முதல் பருவமழை தொடங்கி உள்ளது. கடந்த மூன்று தினங்களாக அடைமழை பெய்து வருவதால் தாழ்வான பகுதிகள் தண்ணீரில் தத்தளிக்கின்றன. பல்வேறு பகுதிகளில் கடும் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

    ரோகிங்கியா அகதிகளும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். ரோகிங்கியா அகதிகள் வசிக்கும் காக்ஸ் பஜார் மாவட்டத்தில் பேரழிவு ஏற்பட்டுள்ளது. அகதிகளின் கூடாரங்கள் மழையால் சேதமடைந்துள்ளன. எனவே, பாதிக்கப்பட்ட சுமார் 1 லட்சம் பேரை வேறு இடத்திற்கு மாற்றும் நடவடிக்கைகள் விரைவாக நடைபெற்று வருகின்றன.



    இந்நிலையில், நிலச்சரிவு மற்றும் மழை தொடர்பான விபத்துக்களில் ரோகிங்கியா அகதிகள் 2 பேர் உள்பட 12 பேர் உயிரிழந்ததாக  அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 10 ஆயிரம் மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

    இதற்கிடையே அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை நீடிக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது. இதனால் ரங்கமதி மற்றும் காக்ஸ் பஜார் மாவட்டங்களில் மேலும் நிலச்சரிவு ஏற்படலாம் என அஞ்சப்படுகிறது.  #BangladeshRain
    ×