search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "suicide blast"

  • மக்கள் மிலாடி நபி கொண்டாட்டத்திற்காக ஊர்வலமாக செல்ல கூடியிருந்தனர்
  • குண்டு வெடிப்பில் காவல்துறை துணை கண்காணிப்பாளர் பலியானார்

  இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தானின் தென்மேற்கில் உள்ளது பலுசிஸ்தான் பிராந்தியம். இதற்கு வடமேற்கே உள்ளது மஸ்டங் மாவட்டம்.

  இன்று, உலகெங்கும் இஸ்லாமியர்கள் கொண்டாடும் மிலாது நபி பண்டிகை என்பதால் இங்குள்ள மதினா மசூதிக்கு அருகே இப்பண்டிகையை கொண்டாடவும், பிறகு ஒரு ஊர்வலமாக செல்லவும் மக்கள் திட்டமிட்டிருந்தனர். அப்போது யாரும் எதிர்பாராதவிதமாக திடீரென ஒரு சக்திவாய்ந்த குண்டு வெடித்தது.

  இதில் 52 பேர் கொல்லப்பட்டனர்; 130 பேருக்கும் மேல் காயமடைந்துள்ளனர். இது ஒரு தற்கொலைப்படை தாக்குதல் என தெரிய வந்துள்ளது.

  இந்த குண்டு வெடிப்பில் அங்கு காவல்துறை பணியின் காரணமாக வந்திருந்த மஸ்டங் மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் நவாஸ் கஷ்கோரியும் பலியானார். கஷ்கோரியின் காருக்கு அருகே அந்த தற்கொலை படை தாக்குதல் நடைபெற்றதாக நகர காவல்துறை அதிகாரி மொஹம்மத் ஜாவெத் லெஹ்ரி தெரிவித்துள்ளார்.

  காயமடைந்தவரகள் அனைவரும் அருகிலுள்ள மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். அதில் ஒரு சிலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. பலத்த காயமடைந்துள்ளவர்கள் க்வெட்டா (Quetta) பகுதி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

  பலுசிஸ்தான் மாநிலத்தின் இடைக்கால செய்தித்துறை அமைச்சர ஜன் அசக்சாய், "மத சகிப்புதன்மையையும் அமைதியையும் அன்னிய நாட்டு சக்திகளின் உதவியுடன் அழிக்க எதிரிகள் நினைக்கின்றனர். தாக்குதலுக்கு பின்னணியில் உள்ள அனைவரும் கைது செய்யப்படுவார்கள்" என தெரிவித்துள்ளார்.

  இந்த தற்கொலைப்படை தாக்குதலுக்கு பாகிஸ்தானில் முக்கிய அரசியல் தலைவர்கள் பரவலாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

  • கரடுமுரடான எல்லைப் பகுதி நீண்டகாலமாக பயங்கரவாத நடவடிக்கைகளின் கூடாரமாக இருந்து வருகிறது.
  • இந்த சம்பவத்தை "கோழைத்தனமான பயங்கரவாத செயல்" என்றார் பாகிஸ்தான் பிரதமர்.

  பாகிஸ்தானின் மேற்குப் பகுதியில் நேற்று தற்கொலைப் படை வீரர் தனது மோட்டார் சைக்கிளை ராணுவ வாகனத்தின் மீது மோதி வெடிக்கச் செய்ததில் ஒன்பது வீரர்கள் உயிரிழந்ததாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.

  இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அண்டை நாடான ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்ததில் இருந்து, எல்லைப் பகுதிகளில் தாக்குதல்கள் அதிகரித்துள்ள நிலையில், பாகிஸ்தான் போர்க்குணத்தில் வியத்தகு வளர்ச்சியைக் கண்டுள்ளது.

  எல்லையில் இருந்து 61 கிலோமீட்டர் (38 மைல்) தொலைவில் உள்ள பாக்கிஸ்தானின் பன்னு மாவட்டத்தில் "மோட்டார் சைக்கிளில் வந்த தற்கொலை படையை சேர்ந்த நபர் தன்னைத்தானே வெடிக்கச் செய்துகொண்டார்" என்று ராணுவத்தின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

  கரடுமுரடான எல்லைப் பகுதி நீண்டகாலமாக பயங்கரவாத நடவடிக்கைகளின் கூடாரமாக இருந்து வருகிறது. பாகிஸ்தானின் உள்நாட்டில் வளர்ந்த தலிபான் குழுவான தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் போன்ற கடும்போக்கு அமைப்புக்கள், பெரும்பாலும் காவல்துறை இல்லாத எல்லையைக் கண்டறிந்து தாக்குதல்களை நடத்துவதைத் தவிர்க்கப் பயன்படுத்துகின்றன.

  இந்த தாக்குதலில் மேலும் ஐந்து வீரர்கள் காயமடைந்ததாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது.

  காபந்து பிரதமர் அன்வார்-உல்-ஹக் கக்கர், இந்த சம்பவத்தை "கோழைத்தனமான பயங்கரவாத செயல்" என்று கூறினார்.

  • ஆப்கானிஸ்தான் மாகாண ஆளுநர் அகமது அஹ்மதி கொலைக்கு ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்பு.
  • குண்டு வெடிப்பில் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்கிற அச்சம் இருப்பதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

  வடக்கு ஆப்கானிஸ்தான் பைசாபாத்தில் உள்ள நபாவி மசூதி அருகே தலிபான் மாகாண துணை ஆளுநரின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சி நேற்று நடந்துக் கொண்டிருந்தது. இந்நிகழ்ச்சியில் காவல்துறை அதிகாரிகள் உள்பட முக்கிய தலைவர்கள் பலர் பங்கேற்றனர்.

  இந்நிலையில், அங்கு திடீரென குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தது. இதில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாக அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

  கடந்த செவ்வாய்க்கிழமை அன்று ஆப்கானிஸ்தான் மாகாண ஆளுநர் அகமது அஹ்மதி தற்கொலை படை தாக்குதலால் படுகொலை செய்யப்பட்டார். இவரது கொலைக்கு ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இதில் அகமது உள்பட அவரது கார் ஓட்டுனரும் கொல்லப்பட்டார். மேலும் 6 பேர் படுகாயமடைந்தனர்

  இவரது இறுதிச்சடங்கு நிகழ்ச்சி நேற்று நடைபெற்ற நிலையில் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

  இந்த சம்பவத்தில் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்கிற அச்சம் இருப்பதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

  ஆப்கானிஸ்தானில் சிறைச்சாலை அருகே ஊழியர்களை குறிவைத்து நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 7 பேர் கொல்லப்பட்டனர். #AfghanistanBlast #PulECharkhiPrison
  காபூல்:

  ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசாரை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்துவது அதிகரித்து வருகிறது.  இந்நிலையில், காபூல் நகரில் உள்ள புல்-இ-சார்க்கி சிறைச்சாலை ஊழியர்கள் இன்று காலை பணிக்கு வாகனத்தில் வந்துகொண்டிருந்தனர். அவர்கள் வந்த வாகனம் காலை 7.30 மணியளவில் சிறைச்சாலையின் பிரதான வாயிலை நெருங்கியபோது, திடீரென அந்த வாகனத்தை நோக்கி வந்த ஒரு பயங்கரவாதி, தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தான்.  இதில், சிறைச்சாலை வாகனம் கடுமையாக சேதம் அடைந்தது. வாகனத்தினுள் இருந்த 7 ஊழியர்கள் உடல்சிதறி உயிரிழந்தனர். 5 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

  சிறைச்சாலை வாகனத்தை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதல் காரணமாக அப்பகுதியில் திடீர் பதற்றம் ஏற்பட்டது. ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. #AfghanistanBlast #PulECharkhiPrison
  பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் தற்கொலைப்படை பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 14 பேர் உடல் சிதறி பலியாகினர். #Pakistan #SuicideAttack
  இஸ்லாமாபாத்:

  பாகிஸ்தானின் ஆளும் கட்சியின் ஆட்சிக்காலம் மே 31-ம் தேதியுடன் முடிவடைந்தது. இதையடுத்து, ஜூலை 25-ம் தேதி பொதுத் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. தேர்தலில் வெற்றி பெற அனைத்து கட்சிகளும் ஏற்பாடுகளை செய்து வருகின்றன.

  இந்நிலையில், பாகிஸ்தான் நாட்டின் பெஷாவர் பகுதியில் நேற்று தேர்தல் பிரசார கூட்டம் நடைபெற்றது. இதில் தேசிய அவாமி கட்சியின் வேட்பாளர் ஹாரூன் பிலார் கலந்து கொண்டு பேசினார். அவரது பேச்சைக் கேட்க ஏராளமானோர் திரண்டிருந்தனர்.

  அப்போது கூட்டத்தில் புகுந்த தற்கொலைப்படை பயங்கரவாதிகள் தாங்கள் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தனர்.

  இந்த திடீர் தாக்குதலில் தேசிய அவாமி கட்சியின் வேட்பாளர் ஹாரூன் பிலார் உள்பட 14 பேர் உடல் சிதறி பரிதாபமாக பலியாகினர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர்.
   
  அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் காயம் அடைந்தவர்களை மிட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.

  இந்த தற்கொலைப்படை தாக்குதலுக்கு பாகிஸ்தானில் உள்ள அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். #Pakistan #SuicideAttack
  ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் நேற்று ஐ.எஸ். பயங்கரவாதிகள் நடத்திய மனித குண்டு தாக்குதலில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது. #Kabulsuicideblast

  காபுல்:

  ஆப்கானிஸ்தான் நாட்டில் தொடர்ந்து நடைபெற்றுவரும் பயங்கரவாத தாக்குதல்கள் மற்றும் வன்முறை சம்பவங்களுக்கு அந்நாட்டின் முக்கிய தலைவர்கள் சமீபத்தில் முதன்முறையாக கண்டனம் தெரிவித்திருந்தனர்.

  தலைநகர் காபுலில் உள்ள லோயா ஜிர்கா கூடாரத்தில் சுமார் 3 ஆயிரம் உலமாக்கள் (மதத் தலைவர்கள்) பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டம் முடிந்து அனைவரும் வெளியேறும் வேளையில் (உள்ளூர் நேரப்படி) சுமார் 11.30 மணியளவில் அங்கு வந்த ஒருவன் தனது உடலில் கட்டிவைத்திருந்த குண்டுகளை வெடிக்க வைத்தான்.  இந்த தாக்குதலில் 7 பேர் உடல் சிதறி உயிரிழந்ததாகவும், சுமார் 10 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் முதல்கட்ட தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்ட செய்தியில் 70 பேர் வரை கொல்லப்பட்டதாக கூறியுள்ளது. சிகிச்சை பெற்று வருபவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. #Kabulsuicideblast
  ×