search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விமான விபத்து"

    • விமானத்தில் இருந்த ஆறு பயணிகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
    • விமானம் விபத்துக்குள்ளாகி ஒரு வயலில் விழுந்ததை அடுத்து, ஒரு ஏக்கர் தாவரங்கள் தீயால் கருகியது.

    கலிபோர்னியாவின் முரியேட்டாவில் நேற்று அதிகாலை பிரெஞ்சு பள்ளத்தாக்கு விமான நிலையத்திற்கு அருகில் செஸ்னா வணிக ஜெட் விபத்துக்குள்ளானது.

    இந்த விபத்தில், விமானத்தில் இருந்த ஆறு பயணிகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

    கூட்டாட்சி விமான நிர்வாகத்தின் அறிக்கையின்படி, நேற்று அதிகாலை 4.15 மணியளவில் (உள்ளூர் நேரம்), லாஸ் வேகாஸில் உள்ள ஹாரி ரீட் சர்வதேச விமான நிலையத்திலிருந்து சான் டியாகோவிற்கு வடக்கே 65 மைல் தொலைவில் விமானம் விபத்துக்குள்ளானது.

    விமானம் விபத்துக்குள்ளாகி ஒரு வயலில் விழுந்ததை அடுத்து, ஒரு ஏக்கர் தாவரங்கள் தீயால் கருகியது. மேலும், விபத்தில் உயிரிழந்தர்களின் விவரம் குறித்து உடனடியாக தெரியவில்லை.

    தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் மற்றும் கூட்டாட்சி விமான நிர்வாகம் விபத்து குறித்து விசாரணை நடத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பாதுகாப்புப் படையினர் மற்றும் அவசரகால சேவைகள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டன.
    • விமானம் விபத்தில் சிக்கியதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    பிரான்சின் கிழக்கு ஹவுட்- ரின் பகுதியில் ஒரு சிறிய சுற்றுலா விமானம் விபத்துக்குள்ளானதில் இரண்டு பேர் இறந்தனர் என்று பிராந்திய அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ஜெர்மனியில் உள்ள கார்ல்ஸ்ரூஹே நகரிலிருந்து பயணித்த விமானம் காணாமல் போனதால், பாதுகாப்புப் படையினர் மற்றும் அவசரகால சேவைகள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டன.

    விமானத்தில் பயணித்த விமானியும் அவரது பயணியும் துரதிர்ஷ்டவசமாக விபத்தில் உயிர் பிழைக்கவில்லை. இருவரையும் சடலமாக மீட்டனர்.

    விமானம் விபத்தில் சிக்கியதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • ஹெலிகாப்டர்களின் உதவியுடன் விபத்துக்குள்ளான விமானத்தை கண்டுபிடித்தனர்.
    • பலியான இரண்டு ராணுவ வீரர்களும் அருகில் உள்ள பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்றவர்கள்.

    பிரான்ஸ் நாட்டின் மலைப்பிரதேசமான வேர் பிராந்தியத்தில் உள்ள கோன்பரோன் கிராமத்தில் நேற்று இலகுரக விமானம் விழுந்து நொறுங்கியது. இதுபற்றி தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விமானம் விழுந்த பகுதியை தேடினர். ஹெலிகாப்டர்களின் உதவியுடன் விபத்துக்குள்ளான விமானத்தை கண்டுபிடித்த, தீயணைப்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

    விமானத்தில் பயணித்த இரண்டு ராணுவ வீரர்கள் உள்பட 3 பேர் பலியாகினர். இரண்டு ராணுவ வீரர்களும் அருகில் உள்ள ஹெலிகாப்டர் படைப்பிரிவு பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்றுவந்த வீரர்கள் என ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விமான விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்படுகிறது.

    • விமானம் விபத்தில் சிக்க இருப்பதை உணர்ந்த விமானிகள் உடனே வெளியே குதித்து சிறு காயங்களுடன் உயிர் தப்பினர்.
    • விபத்துக்கான காரணம் குறித்து விமானப்படை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கர்நாடகா மாநிலம் சமராஜாநகர் மாவட்டத்தில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான சூரிய கிரண் பயிற்சி விமானம் இன்று காலை வழக்கம் போல் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தது.

    விமானத்தில் பெண் விமானி உள்பட இரண்டு விமானிகளும் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, போகாபூர் கிராமம் அருகே திடீரென கட்டுப்பாட்டை இழந்த விமானம் கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.

    விமானம் விபத்தில் சிக்க இருப்பதை உணர்ந்த விமானிகள் உடனே வெளியே குதித்து சிறு காயங்களுடன் உயிர் தப்பினர்.

    இந்நிலையில், விபத்துக்கான காரணம் குறித்து விமானப்படை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பயணம் செய்த இரண்டு பயணிகள் மற்றும் விமானி என மூன்று பேரும் உயிரிழந்தனர்.
    • விபத்துக்கான காரணத்தை கண்டறிய அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

    மேற்கு சுவிட்சர்லாந்தில் உள்ள நியூசாடெல் அடர்ந்த மரங்கள் மற்றும் மலைப் பகுதியில் நேற்று சுற்றுலா விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது. இதில், பயணம் செய்த மூன்று பேரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

    சுவிட்சர்லாந்தில் பதிவு செய்யப்பட்ட சிறிய ரக விமானம் ஒன்று அருகிலுள்ள சாக்ஸ்-டி-ஃபாண்ட்ஸ் விமான நிலையத்திலிருந்து சுற்றுலா விமானமாக புறப்பட்டது. இந்நிலையில் நியூசாடெல் மலைப் பகுதியில் விமானம் சென்றுக் கொண்டிருந்தபோது திடீரென விபத்துக்குள்ளானது. இதில் பயணம் செய்த இரண்டு பயணிகள் மற்றும் விமானி என மூன்று பேரும் உயிரிழந்தனர்.

    நியூசாடெல் மலைகளின் சவாலான மற்றும் கரடுமுரடான நிலப்பரப்பு காரணமாக, மீட்பு நடவடிக்கைகள் மிகவும் கடினமாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    விபத்துக்கான காரணத்தை கண்டறிய அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

    • இவரது குற்றத்திற்கு சிறையில் அதிகபட்சம் 20 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க முடியும்.
    • விமானம் விபத்தில் சிக்கும் வீடியோவை இதுவரை சுமார் 30 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.

    யூடியூப் வியூசை அதிகப்படுத்த தனது விமானத்தை வேண்டுமென்றே வெடிக்கச் செய்த யூடியூபருக்கு 20 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட இருப்பதாக அமெரிக்க அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

    இதுகுறித்து தனியார் செய்தி நிறுவனம் வெளியிட்டு இருக்கும் தகவல்களில் டிரெவர் ஜேக்கப் என்ற நபர் வேண்டுமென்றே விபத்தை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்ட காரணத்தால் விசாரணைக்கு உட்பட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். இவர் செய்த குற்றத்திற்கு சிறையில் அதிகபட்சம் 20 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க முடியும்.

    இவர் படமாக்கிய விமானம் விபத்தில் சிக்கும் வீடியோவை இதுவரை சுமார் 30 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். 29 வயதான டிரெவர் செய்த செயலுக்காக அவருக்கு வழங்கப்பட்டு இருந்த தனியார் விமானத்தை இயக்கும் உரிமத்தை அமெரிக்க விமான போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

     

    டிசம்பர் 2021 ஆண்டு கலிஃபோர்னியாவில் உள்ள லாஸ் பட்ரெஸ் காட்டுப்பகுதியில் இவர் சிறிய என்ஜின் கொண்ட விமானத்தை வேண்டுமென்றே வெடிக்க செய்திருக்கிறார் என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இது குறித்து, 'நான் எனது விமானத்தை வெடிக்கச் செய்தேன்' எனும் தலைப்பில் யூடியூபில் வீடியோ வெளியிட்டு இருந்தார் டிரெவர் ஜேக்கப். அந்த வீடியோவில் விமானம் விபத்தில் சிக்கும் காட்சிகள் மற்றும் அதில் இருந்து பாராஷூட் அணிந்தபடி டிரெவர் தப்பிக்கும் காட்சிகளும் இடம்பெற்று இருந்தது. இந்த வீடியோ அதிக பார்வையாளர்களை ஈர்த்ததோடு, சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இந்த விவகாரம் தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும் டிரெவர் ஜேக்கப் தன்பக்க விளக்கத்தை நீதிமன்றத்தில் சமர்பிக்க இருக்கிறார். வரும் வாரங்களில் வழக்கு விசாரணை நிறைவு பெற்று விடும். அதன்பின் இவருக்கு சிறை தண்டனை விதிக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன.

    • 2 இலகுரக விமானங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டன.
    • ஒரு விமானம் விமான நிலையத்தின் அருகே மரங்கள் நிறைந்த பகுதியில் விழுந்து தீப்பற்றியது.

    மாட்ரிட்:

    வடகிழக்கு ஸ்பெயினில் பார்சிலோனா நகரின் வடக்கே அமைந்துள்ள மோயா நகர விமான நிலையம் அருகே 2 இலகுரக விமானங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டன. இதில் ஒரு விமானம் விமான நிலையத்தின் அருகே மரங்கள் நிறைந்த பகுதியில் விழுந்து தீப்பற்றியது. அந்த விமானத்தை முதலில் மீட்புக் குழுவினர் கண்டுபிடித்து தீயை அணைத்தனர். அந்த விமானத்தில் பயணித்த இருவரும் சடலமாக மீட்கப்பட்டனர்.

    அதன்பின்னர் நீண்ட தேடுதல் பணிக்கு பிறகு இரண்டாவது விமானத்தை கண்டுபிடித்தனர். அதில் பயணித்த 2 நபர்களும் உயிரிழந்தனர்.

    2 விமானங்களும் நடுவானில் மோதிக் கொண்டதாக அதிகாரிகள் கூறுகின்றனர். இதுதொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • உடனடியாக ஒரு விமானத்தை மேலும் கீழே இறங்கச் செய்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
    • இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

    காத்மாண்டு:

    நேபாளத்தில் ஏர் இந்தியா மற்றும் நேபாள ஏர்லைன்ஸ் விமானங்கள் நடுவானில் மோதிக்கொள்வது போன்று நெருங்கி வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    கடந்த வெள்ளிக்கிழமை காலையில் நேபாள ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் ஏர்பஸ் ஏ-320 விமானம் கோலாலம்பூரில் இருந்து நேபாளத்தின் காத்மாண்டு நோக்கி வந்துகொண்டிருந்தது. அதேசமயம், ஏர் இந்தியா விமானம் டெல்லியில் இருந்து காத்மாண்டு நோக்கி வந்தது. காத்மாண்டை நெருங்கியதும் கீழே இறங்கும்போது இரு விமானங்களும் மிகவும் நெருங்கியதால் பதற்றம் ஏற்பட்டது. பின்னர் ரேடாரில் இதனை கவனித்து, ஒரு விமானத்தை மேலும் கீழே இறங்கச் செய்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதுகுறித்து துறைரீதியான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    இதுதொடர்பாக நேபாள சிவில் விமான போக்குவரத்து ஆணைய (சிஏஏஎன்) செய்தித் தொடர்பாளர் ஜெகநாத் நிரோலா கூறியதாவது:-

    தரையிறங்குவதற்கு முன்னதாக ஏர் இந்தியா விமானம் 19,000 அடி உயரத்தில் இருந்து கீழே இறங்கிக் கொண்டிருந்தது. அதே பாதையில் நேபாள ஏர்லைன்ஸ் விமானம் 15,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தது. இரண்டு விமானங்களும் அருகாமையில் இருப்பது ரேடாரில் தெரிந்ததையடுத்து, நேபாள ஏர்லைன்ஸ் விமானம் உடனடியாக 7,000 அடிக்கு கீழே இறங்கியது.

    இந்த கவனக்குறைவு தொடர்பாக விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறையில் பணியாற்றிய 3 ஊழியர்களை நேபாள சிவில் விமான போக்குவரத்து ஆணையம் சஸ்பெண்ட் செய்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • புறப்பட்ட இடத்தில் இருந்து 500 மீட்டர் தொலைவில் இந்த விபத்து ஏற்பட்டது.
    • விமானம் மோதியபோது வீட்டில் இருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக தப்பினார்கள்.

    பாட்னா:

    ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத் மாவட்டத்தில் கிளைடர் விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் ஒரு வீட்டில் மோதியது. இந்த விபத்தில் விமானி மற்றும் ஒரு பயணி காயம் அடைந்தனர்.

    விமானம் புறப்பட்ட இடத்தில் இருந்து 500 மீட்டர் தொலைவில் இந்த விபத்து ஏற்பட்டது. இது நகரை சுற்றிப் பார்க்க பயன்படும் விமானம் என்பதால் அதில் விமானியும், ஒரு பயணியும் மட்டுமே அனுமதிக்கப்பட்டி ருந்தனர்.

    விமானம் மோதியபோது வீட்டில் இருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக தப்பினார்கள்.

    • மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
    • இந்த விமானம் மகாராஷ்டிராவின் கோண்டியா மாவட்டம் பிர்சி விமான நிலையத்தில் இருந்து வந்துள்ளது

    பாலகாட்:

    மத்திய பிரதேச மாநிலம் பாலகாட் மாவட்டத்தில் சிறிய ரக விமானம் ஒன்று மலைப்பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது. விழுந்த வேகத்தில் விமானம் தீப்பற்றியது. இந்த விபத்தில் பைலட் மற்றும் பெண் பயிற்சி விமானி ஆகியோர் பலியாகினர். விபத்து பற்றி தகவல் அறிந்த மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்த விமானம் மகாராஷ்டிராவின் கோண்டியா மாவட்டம் பிர்சி விமான நிலையத்தில் இருந்து வந்துள்ளது. விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்படுகிறது.

    • உடனடியாக விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.
    • ஜனவரி மாதம் நிகழ்ந்த பயங்கர விமான விபத்துக்குப் பிறகு அதிகாரிகள் அதிக எச்சரிக்கையுடன் உள்ளனர்.

    காத்மாண்டு:

    நேபாளத்தின் காத்மாண்டுவில் இருந்து பைரஹவா நோக்கி ஸ்ரீ ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட்டுச் சென்றது. அதில் விமான பணியாளர்கள், பயணிகள் என மொத்தம் 78 பேர் பயணித்தனர். விமானம் புறப்பட்டு சென்ற சிறிது நேரத்தில் என்ஜினில் தீப்பற்றியதற்கான அறிகுறி தென்பட்டதையடுத்து இதுபற்றி தரைக்கட்டுப்பாட்டு நிலையத்திற்கு விமானி தகவல் தெரிவித்தார். உடனடியாக விமானம் காத்மாண்டு விமான நிலையத்திற்கு திருப்பிவிடப்பட்டது.

    காத்மாண்டு விமான நிலையத்தில் அவசரமாக விமானம் தரையிறக்கப்பட்டது. உடனடியாக விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். ஆனால் தரையிறங்கியபோது தீப்பிடித்ததற்கான அறிகுறி எதுவும் இல்லை.

    நேபாளத்தில் ஜனவரி மாதம் நிகழ்ந்த பயங்கர விமான விபத்துக்குப் பிறகு விமானப் பாதுகாப்பு குறித்து அதிகாரிகள் அதிக எச்சரிக்கையுடன் உள்ளனர். அந்த விமானத்தில் பயணித்த 72 பேரில் 71 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டன. ஒருவரை காணவில்லை. அவரும் உயிரிழந்துவிட்டதாக கருதப்படுகிறது.

    • ரோந்து பணியின்போது திடீரென விபத்துக்குள்ளானதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
    • விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்த கடற்படை உத்தரவிட்டுள்ளது.

    மும்பை கடற்பகுதியில் இந்திய கடற்படைக்கு சொந்தமான துருவ் என்கிற மேம்பட்ட இலகுரக ஹெலிகாப்டர் இன்று விபத்தில் சிக்கியது.

    இது இன்று காலை வழக்கமான ரோந்து பணியின்போது திடீரென விபத்துக்குள்ளானதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

    விபத்து குறித்து தகவல் அறிந்து, உடனடியாக விரைந்த மீட்புக்குழுவினர் கடற்படை ரோந்து கப்பல் மூலம் விபத்தில் சிக்கிய மூன்று பணியாளர்களை பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.

    மேலும், விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்த கடற்படை உத்தரவிட்டுள்ளது.

    ×