என் மலர்
நேபாளம்
- அமெரிக்க புவியியல் ஆய்வில் 7.1 ஆகவும் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
- இதில் 4,800 பேர் உயிரிழந்தனர்.
திபெத்தில் நேற்று [செவ்வாயன்று] எவரெஸ்ட் சிகரத்திற்கு அருகில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் குறைந்தது 126 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 180 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
டிங்ரி கவுண்டியில் காலை 6:35 மணிக்கு இமயமலைக்கு சுமார் 80 கி.மீ. வடக்கே ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் நேபாளம், பூடான் மற்றும் இந்தியாவின் சில பகுதிகளில் உணரப்பட்டது. நிலநடுக்கத்தின் ரிக்டர் அளவு சீன அதிகாரிகளால் 6.8 ஆகவும், அமெரிக்க புவியியல் ஆய்வில் 7.1 ஆகவும் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
நிலநடுக்கம் லாசா தொகுதியில் [Lhasa block] ஏற்பட்ட உடைவால் தூண்டப்பட்டது. இது குறிப்பிடத்தக்க டெக்டோனிக் அழுத்தத்தின் கீழ் உள்ள பகுதியாகும்.
கடந்த 60 மில்லியன் ஆண்டுகளாக இமயமலையின் வடிவத்தை தீர்மானித்து வரும் இந்திய மற்றும் யூரேசிய டெக்டோனிக் தகடுகளின் தொடர்ச்சியான மோதல் காரணமாக இந்த பகுதி அதிக நில அதிர்வு ஏற்படும் ஹாட்ஸ்பாட்டாக மாறியுள்ளது. கடந்த சில தசாப்தங்களில் திபெத் பல நிலநடுக்கங்களைக் கண்டுள்ளது. இங்கு 1950 இல் 8.6 ரிக்டர் அளவு நிலநடுக்கம் ஏற்பட்டது. அசாம் மற்றும் திபெத்தில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்திய இதில் 4,800 பேர் உயிரிழந்தனர்.
டெக்டானிக் தகடுகள் அல்லது நிலத் தட்டுகள் (tectonic plates) என்பன புவியின் மேலோட்டுப் பகுதியும் கடலின் அடிப்பகுதியும் பகுதியும் இணைந்த பாறைகளால் ஆனவை. புவியின் மேலோடு உடைந்த பாறைத் துண்டுகள் ஒன்று சேர்ந்தது போன்ற அமைப்பை கொண்டன. நிலத்தட்டுகள் ஏறக்குறைய 100கி.மீ அடர்த்தியினைக் கொண்டன.
- நேபாளத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
- நிலநடுக்கம் காரணமாக மக்கள் வீதிகளுக்கு வந்தனர்.
நேபாளத்தின் வடகிழக்கில் உள்ள லோபுச் பகுதியில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 7.1 ஆக பதிவாகி இருக்கிறது. நிலநடுக்கம் காலை 6.35 மணி அளவில் ஏற்பட்டுள்ளது.
நிலநடுக்கம் காரணமாக மக்கள் சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். தற்போது வரை நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.
#WATCH | Kathmandu | An earthquake with a magnitude of 7.1 on the Richter Scale hit 93 km North East of Lobuche, Nepal at 06:35:16 IST today: USGS Earthquakes pic.twitter.com/MnRKkH9wuR
— ANI (@ANI) January 7, 2025
- நேபாளத்தில் இன்று அதிகாலை 3.59 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது.
- இது 4.8 ரிக்டர் அளவில் பதிவானது என தேசிய புவியியல் மையம் தெரிவித்துள்ளது.
காத்மண்டு:
நேபாளத்தில் இன்று அதிகாலை 3.59 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 4.8 ரிக்டர் அளவில் பதிவானது என தேசிய புவியியல் மையம் தெரிவித்துள்ளது. இதனால் ஏற்பட்ட சேத விவரங்கள் வெளியாகவில்லை.
கடந்த 2015-ல் 7.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட தொடர் அதிர்வுகளால் சுமார் 9,000 பேர் உயிரிழந்தனர்.
அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும் நாடுகளில் 11-வது நாடாக நேபாளம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- ஆட்டத்தின் 70-வது நிமிடத்தில் இந்தியாவின் சங்கீதா ஒரு கோல் அடித்தார்.
- ஆட்டத்தின் 141-வது நிமிடத்தில் நேபாளத்தின் சபித்ரா ஒரு கோல் அடித்தார்.
காத்மண்டு:
நேபாளத்தில் பெண்களுக்கான தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் 7வது சீசன் நடைபெறுகிறது.
காத்மண்டுவில் நேற்று நடந்த அரையிறுதியில் இந்தியா, நேபாளம் அணிகள் மோதின. முதல் பாதியில் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை.
ஆட்டத்தின் 70-வது நிமிடத்தில் இந்தியாவின் சங்கீதா ஒரு கோல் அடித்தார். ஆட்டத்தின் 141-வது நிமிடத்தில் நேபாளத்தின் சபித்ரா ஒரு கோல் அடித்தார். இறுதியில், போட்டி 1-1 என சமனில் இருந்தது.
இதையடுத்து வெற்றியாளரை நிர்ணயிக்க பெனால்டி ஷூட் அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் நேபாளம் 4-2 என்ற கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இந்திய அணி தோல்வி அடைந்ததால் தொடரில் இருந்து வெளியேறியது.
- நிலச்சரிவால் பல பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது.
- நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
காத்மண்டு:
நேபாளத்தில் கடந்த வாரம் கனமழை பெய்தது. பல நகரங்கள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன.
தலைநகர் காத்மண்டுவில் 200-க்கு மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின. அங்கு பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் பலர் சிக்கிக் கொண்டனர்.
நேபாளம் முழுவதும் மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 150-ஐ நெருங்கியது.
பல நெடுஞ்சாலைகள் மற்றும் சாலைகள் சீர்குலைந்துள்ளன. நூற்றுக்கணக்கான வீடுகள் மற்றும் பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டன, இதனால் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் இடம் பெயர்ந்துள்ளன.
இந்நிலையில், நேபாளத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 217 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 29 பேரை காணவில்லை என மீட்புக்குழுவினர் தெரிவித்தனர்.
பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. மாயமானோரை தேடும் பணியும் நடந்து வருகிறது. மீட்புப் பணிகள் நடந்து வருகின்றன என அதிகாரிகள் தெரிவித்தனர்.
- கிழக்கு மற்றும் மத்திய பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின.
- நிலச்சரிவால் பல பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது.
காத்மண்டு:
நேபாளத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. பல நகரங்கள் வெள்ளக் காடாக காட்சியளிக்கின்றன. தலைநகர் காத்மண்டுவில் 200-க்கு மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின. அங்கு பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் பலர் சிக்கிக் கொண்டனர்.
நேபாளம் முழுவதும் மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 100-ஐ கடந்தது.
அதிகபட்சமாக காத்மண்டு பள்ளத்தாக்கில் 48 பேர் உயிரிழந்தனர். மேலும் 64 பேரை காணவில்லை. தொடர் மழையால் காத்மண்டுவின் முக்கிய நதியான பாக்மதியில் அபாய அளவை தாண்டி தண்ணீர் பாய்ந்து செல்கிறது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப்பணிகள் நடந்து வருகிறது.
பல நெடுஞ்சாலைகள் மற்றும் சாலைகள் சீர்குலைந்துள்ளன. நூற்றுக்கணக்கான வீடுகள் மற்றும் பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டன, இதனால் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் இடம் பெயர்ந்துள்ளன.
நேபாளம் பாதுகாப்பு படைகளைச் சேர்ந்த 3,000 வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுடன் உள்ளூர் மக்களும் இணைந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், நேபாளத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 148 ஆக உயர்ந்துள்ளது என மீட்புக் குழுவினர் தெரிவித்தனர்.
- கிழக்கு மற்றும் மத்திய பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
- வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் பல பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.
நேபாளத்தில் சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்கள் வெள்ளத்தில் மிதக்கிறது. பல நகரங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. தலைநகர் காத்மாண்டுவில் 226 வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின.
மேலும் அங்கு பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் ஏராளமானோர் சிக்கி கொண்டனர். இந்த நிலையில் நேபாளம் முழுவதும் மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 112-ஆக உயர்ந்துள்ளது.
அதிகபட்சமாக காத்மாண்டு பள்ளத்தாக்கில் 48 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 64 பேரை காணவில்லை. இடைவிடாது மழை பெய்ததால் காத்மாண்டுவின் முக்கிய நதியான பாக்மதியில் அபாய அளவை தாண்டி தண்ணீர் பாய்ந்து செல்கிறது.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப்பணிகள் நடந்து வருகிறது. நேபாளம் பாதுகாப்பு படைகளைச் சேர்ந்த 3,000 வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுடன் உள்ளூர் மக்களும் இணைந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கிழக்கு மற்றும் மத்திய பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. நாட்டின் சில பகுதிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் பல பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.
பல நெடுஞ்சாலைகள் மற்றும் சாலைகள் சீர்குலைந்துள்ளன. நூற்றுக்கணக்கான வீடுகள் மற்றும் பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டன, இதனால் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் இடம் பெயர்ந்துள்ளன. சாலை துண்டிக்கப்பட்டதால் போக்குவரத்து முடங்கியது.
- வெள்ளப் பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாக பேரிடர் அதிகாரிகள் எச்சரித்தளனர்.
- வெள்ளத்தில் சிக்கி 11 பேர் காணாமல் போயுள்ளதாகவும் கூறப்படுகிறது.
நேபாளத்தில் இடைவிடாத மழையினால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி இதுவரை 39 பேர் உயிரிழந்துள்ளனர்.
நேபாளத்தின் சில பகுதிகள் நேற்று பெய்த கனமழையால் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதனால் வெள்ளப் பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாக பேரிடர் அதிகாரிகள் எச்சரித்தளனர்.
இந்நிலையில், வெள்ளப்பெருக்கில் சிக்கி 39 பேர் இறந்துள்ளனர். இதில், காத்மாண்டுவில் 9 பேரும், லலித்பூரில் 16 பேரும், பக்தபூரில் 5 பேரும், கவ்ரேபாலன்சௌக்கில் 3 பேரும், பஞ்ச்தார் மற்றும் தன்குடாவில் தலா இரண்டு பேரும், ஜாபா மற்றும் தாடிங்கில் இருந்து தலா ஒருவரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வெள்ளத்தில் சிக்கி 11 பேர் காணாமல் போயுள்ளதாகவும் கூறப்படுகிறது.
காத்மாண்டுவில் 226 வீடுகள் நீரில் மூழ்கியுள்ளதாகவும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் நேபாள காவல்துறையில் இருந்து சுமார் 3,000 பாதுகாப்புப் பணியாளர்களைக் கொண்ட மீட்புக் குழு நிறுத்தப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
- பஸ் பொக்ராவில் இருந்து காத்மண்டு நோக்கி சென்றுகொண்டிருந்தது.
- இந்த விபத்தில் 14 பேர் பலியாகினர் என முதல் கட்ட தகவல் வெளியானது.
காத்மண்டு:
நேபாளத்தின் தனாஹுன் மாவட்டத்தில் இந்தியர்கள் 40 பேருடன் சென்ற பஸ் ஆற்றில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது.
இந்த பஸ் பொக்ராவில் இருந்து காத்மண்டு நோக்கி சென்றுகொண்டிருந்தபோது காலை 11.30 மணியளவில் மார்ஸ்யாங்டி ஆற்றில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.
தகவலறிந்து போலீசார் மற்றும் மீட்புக் குழுவினர் அங்கு விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 14 பேர் பலியாகினர் என முதல் கட்ட தகவல் வெளியானது.
இந்நிலையில், படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 11 பேர் சிகிச்சை பலனின்றி இறந்தனர். இதையடுத்து விபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 27 ஆக அதிகரித்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
- பஸ் பொக்ராவில் இருந்து காத்மாண்டு நோக்கி சென்றுகொண்டிருந்தது.
- மீட்பு பணிகளை மேற்கொள்வதற்காக சம்பவ இடத்திற்கு காவல் துறையினர் விரைந்துள்ளனர்.
நேபாளம்:
நேபாளத்தின் தனாஹுன் மாவட்டத்தில் 40 பேருடன் இந்திய பயணிகள் பஸ் ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த பஸ் பொக்ராவில் இருந்து காத்மாண்டு நோக்கி சென்றுகொண்டிருந்தபோது காலை 11.30 மணியளவில் மார்ஸ்யாங்டி ஆற்றில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதாக தெரிய வந்துள்ளது.
மீட்பு பணிகளை மேற்கொள்வதற்காக சம்பவ இடத்திற்கு காவல் துறையினர் விரைந்தனர்.
"UP FT 7623 என்ற எண் கொண்ட பஸ் ஆற்றில் விழுந்து ஆற்றின் கரையில் கிடக்கிறது என்று டிஎஸ்பி தீப்குமார் ராயா உறுதிபடுத்தினார்.
இந்நிலையில் ஆற்றில் கவிழ்ந்த பஸ்சில் பயணித்த 40 இந்தியர்களில் 14 பேர் பலியான நிலையில் இதுவரை 16 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
#WATCH | Nepal | An Indian passenger bus with 40 people onboard has plunged into the Marsyangdi river in Tanahun district, confirms Nepal Police. "The bus bearing number plate UP FT 7623 plunged into the river and is lying on the bank of the river," DSP Deepkumar Raya from the… pic.twitter.com/P8XwIA27qJ
— ANI (@ANI) August 23, 2024
- ஹெலிகாப்டர் இன்று பிற்பகலில் நுவாகோட்டின் ஷிவ்புரி பகுதியில் விபத்துக்குள்ளானது.
- ஹெலிகாப்டர் புறப்பட்ட மூன்று நிமிடங்களில் தொடர்பை இழந்து விபத்துக்குள்ளானது.
நேபாளம், காத்மாண்டுவில் இருந்து ரசுவா நோக்கி சென்று கொண்டிருந்த ஹெலிகாப்டர் திடீரென கட்டுப்பாட்டை இழந்து விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.
ஏர் பைனஸ்டி என்கிற ஹெலிகாப்டர் இன்று பிற்பகலில் நுவாகோட்டின் ஷிவ்புரி பகுதியில் விபத்துக்குள்ளானது.
இந்த ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் தீயில் கருகி உயிரிழந்துள்ளனர்.
இதுதொடர்பாக வெளியான அறிக்கையின்படி, ஹெலிகாப்டர் காத்மாண்டுவில் இருந்து ரசுவா நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, நுவாகோட் மாவட்டத்தில் உள்ள சூர்யா சவுர்-7 என்ற மலையில் மோதியுள்ளது.
விபத்து குறித்து தகவல் கிடைத்ததும், அதிகாரிகள் மீட்புக் குழுவை சம்பவ இடத்துக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், ஹெலிகாப்டர் காத்மாண்டுவில் இருந்து பிற்பகல் 1:54 மணிக்கு புறப்பட்டதாகக் கூறப்படுகிறது. சூர்யா சவுரை அடைந்த பிறகு, ஹெலிகாப்டர் அதிகாரிகளுடனான தொடர்பை இழந்தது. ஹெலிகாப்டர் புறப்பட்ட மூன்று நிமிடங்களில் தொடர்பை இழந்து விபத்துக்குள்ளானது குறிப்பிடத்தக்கது
இந்த விபத்து தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- விமானம் விபத்தில் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
- தீயணைப்பு துறையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேபாளம் நாட்டின் காத்மாண்டுவில் உள்ள திருபுவன் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து போக்கரா புறப்பட்ட விமானம் விபத்தில் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இன்று (ஜூலை 24) காலை 11 மணி அளவில் புறப்பட்ட சௌரியா ஏர்லைன்ஸ்-க்கு சொந்தமான விமானம் போக்கராவுக்கு செல்ல டேக் ஆஃப் ஆகும் போது விபத்தில் சிக்கியது. இந்த விமானத்தில் ஊழியர் குழு உள்பட 19 பேர் இருந்தனர்.
இந்த நிலையில் விமானத்தில் பயணம் செய்தவர்களில் 18 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. விமானத்தை இயக்கிய விமானி அருகாமையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்துக் களத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர், விமானத்தில் ஏற்பட்ட தீயை கட்டுப்படுத்தினர். தொடர்ந்து போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.