பிரான்சில் விமான விபத்து: 2 ராணுவ வீரர்கள் உள்பட 3 பேர் பலி

ஹெலிகாப்டர்களின் உதவியுடன் விபத்துக்குள்ளான விமானத்தை கண்டுபிடித்தனர்.பலியான இரண்டு ராணுவ வீரர்களும் அருகில் உள்ள பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்றவர்கள்.
பிரான்சில் விமான விபத்து: 2 ராணுவ வீரர்கள் உள்பட 3 பேர் பலி
Published on

பிரான்ஸ் நாட்டின் மலைப்பிரதேசமான வேர் பிராந்தியத்தில் உள்ள கோன்பரோன் கிராமத்தில் நேற்று இலகுரக விமானம் விழுந்து நொறுங்கியது. இதுபற்றி தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விமானம் விழுந்த பகுதியை தேடினர். ஹெலிகாப்டர்களின் உதவியுடன் விபத்துக்குள்ளான விமானத்தை கண்டுபிடித்த, தீயணைப்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

விமானத்தில் பயணித்த இரண்டு ராணுவ வீரர்கள் உள்பட 3 பேர் பலியாகினர். இரண்டு ராணுவ வீரர்களும் அருகில் உள்ள ஹெலிகாப்டர் படைப்பிரிவு பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்றுவந்த வீரர்கள் என ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விமான விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்படுகிறது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com