search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விநாயகர் கோவில்"

    • மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு சனிப்பெயர்ச்சியானதை யொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது.
    • பக்தர்களுக்கு சிறப்பு பரிகார பூஜை செய்யப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது.

    உடுமலை :

    உடுமலை சித்தி புத்தி விநாயகர் கோவிலில் சனி பெயர்ச்சியையொட்டி சிறப்பு யாகசாலை பூஜை நடைபெற்றது.மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு சனிப்பெயர்ச்சியானதை யொட்டி உடுமலை திருப்பதி கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.சித்தி புத்தி விநாயகர் கோவிலில் அதிகாலையில் கோ பூஜை மற்றும் ப்ரீதி யாகசாலை ஹோமமும் நடந்தது. தொடர்ந்து சனி பகவானுக்கு 108 பால்குடம் அபி ஷேகம், தீபாராதனை நடந்தது பக்தர்களுக்கு சிறப்பு பரிகார பூஜை செய்யப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது.

    பிரசன்ன விநாயகர் கோவிலில் சனிப்பெயர்ச்சியை ஒட்டி சுவாமிக்கு பால், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட பலவி தமான திரவியங்களால் சிறப்பு அபிஷேக பூஜை நடந்தது. சனி பகவானுக்கு சிறப்பு அலங்காரத்துடன் தீபாராதனை காட்டப்ப ட்டது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சனிபக வானை வழிபட்ட னர்.

    • விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
    • சார்பு ஆய்வாளர் அய்யனார் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா கொன்னத்தான்பட்டி கிராமத்தில் முத்து விநாயகர் கோவில் புனர் நிர்மானம் செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. முன்னதாக 3 நாட்கள் நான்கு கால கணபதி, லட்சுமி ஹோமம் என பல்வேறு ஹோமங்கள் நடந்தன.

    பரிவார தெய்வங்களுக்கு மகா பூர்ணாகுதி, தீபாராதனை நடந்தது. சிவாச்சாரியார்கள் யாக வேள்வியில் இருந்து கடம் புறப்பாடாகி வேத மந்திரங்கள் முழங்க கும்பத்தில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தினர்.

    விழாவிற்கான ஏற்பாடுகளை பழனியப்ப தேவர், சோலை மணி தேசிகர் மற்றும் கிராம இளைஞர்கள், பொதுமக்கள், செய்திருந்தனர்.

    இதில் மகிபாலன்பட்டி, நெற்குப்பை உள்ளிட்ட 24½ கிராமத்தைச் சேர்ந்த நாட்டார்கள், பொதுமக்கள் பங்கேற்றனர். அனைவருக்கும் கோவில் நிர்வாகத்தின் சார்பில் அன்னதானம்-பிரசாதம் வழங்கப்பட்டது.

    நெற்குப்பை காவல் ஆய்வாளர் ரவீந்திரன், சார்பு ஆய்வாளர் அய்யனார் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • கோவிலை கடக்கும் போது வாகன ஓட்டிகள் விநாயகரை தங்கள் வாகனத்தில் இருந்தே கும்பிட்டு சென்று கொண்டிருந்தனர்.
    • வாகன ஓட்டிகளுக்கு காவல்தெய்வமாக இருந்த விநாயகர் சிலையை திருடியவர்கள் யார் என்று கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்து திம்பம் மலைப்பாதை உள்ளது. தமிழக-கர்நாடக இடையே முக்கிய சாலையாக இது உள்ளது. மலைப்பாதையில் 27 அபாய கொண்டை ஊசி வளைவுகள் உள்ளது. இந்த பகுதியில் அடிக்கடி கனரக வாகனங்கள் பழுதாகி நிற்பதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது.

    திம்பம் மலைப்பாதை தொடங்கும் இடத்தில் நூற்றாண்டு பழமையான விநாயகர் கோவில் உள்ளது. வாகன ஓட்டிகள் இந்த கோவில் அருகே வாகனங்களை நிறுத்தி விநாயகரை வழிபட்டு அதன் பின்னர் செல்வது வழக்கம். வாகன ஓட்டிகளின் காவல் தெய்வமாக இந்த விநாயகர் கோவில் இருந்து வந்தது. சிறுத்தை மற்றும் புலிகள் நடமாட்டத்தால் இரவு மலைப்பாதையில் கனரக வாகன போக்குவரத்துக்கு தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.

    மேலும் மலைப்பாதையில் தொடங்கும் இடத்தில் உள்ள விநாயகர் கோவில் முன்பு வாகனங்களை நிறுத்தவும், வழிபடவும் வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். ஆனாலும் கோவிலை கடக்கும் போது வாகன ஓட்டிகள் விநாயகரை தங்கள் வாகனத்தில் இருந்தே கும்பிட்டு சென்று கொண்டிருந்தனர்.

    இந்நிலையில் திம்பம் மலைப்பாதை வாகன ஓட்டிகளின் காவல் தெய்வமாக விளங்கிய விநாயகர் கோவிலில் இருந்த விநாயகர் சிலை திடீரென திருட்டு போய்விட்டது. இதனை கண்டு வாகன ஓட்டுகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது குறித்து அவர்கள் கூறும் போது, வாகன ஓட்டிகளுக்கு காவல்தெய்வமாக இருந்த விநாயகர் சிலையை திருடியவர்கள் யார் என்று கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    • திருப்பத்தூர் மாவட்ட மக்களை என்றும் நினைவில் வைத்திருப்பேன்
    • பிரிவு உபசார விழாவில் கலெக்டருக்கு பரிசு வழங்கினர்

    திருப்பத்தூர்:

    வேலூரில் இருந்து திருப்பத்தூர் மாவட்டம் புதிதாக உருவாக்கப்பட்டு 2-வது மாவட்ட கலெக்டராக அமர்குஷ்வாஹா (15.06.21) திருப்பத்தூர் மாவட்ட கலெக்டராக பொறுப்பேற்றார்.

    பின்னர் தமிழக அரசு புதிய கலெக்டராக ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் நியமித்தது உத்தரவிட்டதை தொடர்ந்து திருப்பத்தூர் கலெக்டர் அமர்குஷ்வாஹா தனது மனைவியுடன் திருப்பத்தூர் மாய விநாயகர் கோவிலில் சாமி தரிசனம் செய்து சென்னைக்கு சென்றார்.

    கோவிலுக்கு வந்த கலெக்டரை என்விஎஸ் சங்க தலைவர் என்.பி..எஸ். ராஜா வரவேற்றார், முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் டாக்டர் லீலா சுப்ரமணியம் அறங்காவலர் குழு உறுப்பினர் பக்தவச்சலம் வரவேற்றனர். மாய விநாயகர் கோவிலுக்கு கலெக்டர் மனைவியுடன் வந்து சாமி தரிசனம் செய்தார்.

    அப்போது அவருக்கு கோயில் சார்பாக மரியாதை செலுத்தப்பட்டது. அப்போது அவர் பேசியதாவது:-

    திருப்பத்தூர் பொதுமக்கள் மிகவும் அன்பாக நடந்து கொண்டார்கள். திருப்பத்தூர் மாவட்ட பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்களை மறக்க முடியாது என்றும் நினைவில் கொள்வேன் திருப்பத்தூர் மாவட்டத்தில் 20 மாத காலம் பல்வேறு பணிகள் மாவட்ட முழுவதும் நடைபெற்று உள்ளது.

    பல்வேறு துறைகளில் மாவட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளோம் விடைபெறுகிறேன் மீண்டும் சமூக நலன் துறை சார்பில் திருப்பத்தூர் மாவட்டத்திற்கு ஆய்வு மேற்கொள்ள வரும்போது தங்களை சந்திப்பேன் என தெரிவித்தார்.

    அவருடன் என்.வி.எஸ் சங்க நிர்வாகிகள் ஐயப்பன் ரமேஷ் குமார் ஹரி பிரபாகர், கமலக்கண்ணன் உட்பட பல கலந்து கொண்டனர். பின்னர் திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற பிரிவு உபசார விழாவில் அனைத்து துறை சார்பில் கலெக்டருக்கு பாராட்டி பரிசு வழங்கினார்கள்.

    • உலக நன்மை வேண்டி கணபதி ஹோமம் உள்பட பல்வேறு ஹோமங்கள் நடத்தப்பட்டது.
    • நிகழ்ச்சியில் பரிவார தேவதைகளுக்கு சிறப்பு அபிஷேகமும் நடைபெற்றது.

    செங்கோட்டை:

    செங்கோட்டை கீழத்தெரு வீரகேரள விநாயகா் கோவிலில் தேசிய இந்து திருக்கோவில் கூட்டமைப்பின் சார்பில் உலக நன்மை வேண்டி பரிகார ஹோமம் திருவாசகம் முற்றோதுதல் நிகழ்ச்சி நடந்தது. தேசிய இந்து திருக்கோவில் கூட்டமைப்பின் தென்காசி மாவட்டச்செயலாளா் ராமநாத் தலைமை தாங்கினார். திருவாசக கமிட்டி கவுரவத்தலைவா் இசக்கி, செயலாளா் முத்துசிவா ஆகியோர் முன்னிலை வகித்தனா். செயற்குழு உறுப்பினா் குருசாமி வரவேற்று பேசினார்.

    நிகழ்ச்சியில் காலை 3 மணிக்கு இலஞ்சி சிவசுப்பிரமணியன் தலைமையில் உலக நன்மை வேண்டி கணபதி ஹோமம், பரிகார ஹோமம் உள்பட பல்வேறு ஹோமங்கள் நடத்தப்பட்டது. பின்னா் வீரகேரளவிநாயகா், வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர் மற்றும் பரிவார தேவதைகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் தீபராதனை நடத்தப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. சிவா பஞ்சவாத்திய குழுவினரின் பஞ்சவாத்திய ஊர்வலம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக வந்து கோவிலை வந்தடைந்தது. அதனைதொடா்ந்து திருவாசகி சிவபகவதி தலைமையிலான குழுவினரின் திருவாசகம் முற்றோதுதல் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் விழா கமிட்டி நிர்வாகிகள் ஆடிட்டர்சங்கரநாராயணன், பிரபு, மாரியப்பன், வேல்முருகன், வேலு, சிவன், சேகர், அருண்குமார் மற்றும் ஏராளமான பக்தா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

    • முள்ளக்காடு ஸ்ரீ நூதன விநாயகர் ஆலயம் வருஷாபிஷேகவிழா நடைபெற்றது.
    • விழாவையொட்டி கோவில் விமானகோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் உள்ள முள்ளக்காடு ஸ்ரீ நூதன விநாயகர் ஆலயம் வருஷாபி ஷேகவிழா நடைபெற்றது. இதனை முன்னிட்டு காலை 8 மணிக்கு விநாயகர் பூஜை, மகாசங்கல்பம், மகாகணபதி ஹோமம், நவகிரகஹோமம், துர்காஹோமம்,லட்சுமி பூஜைகள் நடைபெற்று தீபாராதனையும், சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

    தொடர்ந்து கோவில் விமானகோபுர கலசங்க ளுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு வருஷாபிஷேக விழா நடைபெற்றது. இதனை யடுத்து அலங்காரம் தீபாராதனை நடத்தப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    இதற்கான ஏற்பாடுகளை நிர்வாக குழு தலைவர் வக்கீல் சொக்கலிங்கம், செயலாளர்கள் சேகர் என்ற சந்திரசேகர், சின்னராஜ் என்ற ரகுபதி மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர். விழாவில் மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் வக்கீல் செல்வகுமார், முள்ளக்காடு ஊராட்சி மன்ற தலைவர் கோபிநாத் நிர்மல், ஆறுமுகம் ஜூவல்லர்ஸ் அதிபர் பலவேச கார்த்திகேயன், முள்ளக்காடு வியாபாரிகள் சங்கத் தலைவர் முனியத்தங்கம் நாடார், செயலாளர் முத்துராஜ், உப்பு உற்பத்தியாளர்கள் தங்கராஜ் நாடார், சிவாகர், முகேஷ் சண்முகவேல், ஞானவேலன், தி.மு.க. நிர்வாகிகள் பக்கிள்துரை, சில்வர்சிவா, ஒன்றிய பா.ஜ.க. பொதுச் செயலாளர் பிரபாகர், செந்தில்குமார் ஜெய பாண்டியன்,அழகேசன் அருணாசல பாண்டியன், விஜய் கேபிள்பொன்ராஜ், அஜித் குமார் ரசிகர் மன்ற நிர்வாகிகள் சோலை குமார் உட்பட ஊர் பொதுமக்கள் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • சிறப்பு அலங்காரம், அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது.
    • அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில் வீரக்குமாரசாமி கோவில் வளாக விநாயகர் கோவில், எல். கே. சி. நகர் புற்றுக்கண்ஆனந்த விநாயகர் கோவில்.திருவள்ளுவர் நகர் விநாயகர் கோவில், சக்தி நகர் விநாயகர் கோவில், குமார வலசு விநாயகர் கோவில்களில் நேற்று சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு அலங்காரம், தேன், பன்னீர், பஞ்சாமிரம், கனி, விபூதி, மஞ்சள், சந்தனம்,பூ அபிஷேகம்,தீபாராதனை நடைபெற்றது.

    அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது, இதற்கான ஏற்பாடுகளை அந்த பகுதி பொதுமக்கள் செய்திருந்தனர்.

    • புஷ்பாஞ்சலி நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
    • விநாயகருக்கு பல்வேறு வண்ணமயமான நறுமண பூக்களால் சிறப்பு புஷ்பாஞ்சலி நடைபெற்றது.

    செங்கோட்டை:

    நாடெங்கிலும் விநாயகர் சதுர்த்தி விழா மேளதாளங்களுடன் சிறப்பாக கொண்டாடப்பட்டது.தமிழகத்தில் பல இடங்களில் விநாயகர் திரு உருவ சிலைகள் வைக்கப்பட்டு சிறப்பு யோகங்கள் ஹோமங்களுடன் சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடத்தப்பட்டது. செங்கோட்டை செக்கடி விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா முன்னிட்டு நடைபெற்ற புஷ்பாஞ்சலி நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இதன் முக்கிய நிகழ்ச்சியான விநாயகர் சதுர்த்தி விழா காலை 7.00 மணிக்கு கும்பபூஜை ஜபம், ஹோமத்துடன் 25 பொருட்களை கொண்டு நறுமண சிறப்பு அபிஷேகமும் தீபாராதனையும் நடைபெற்றது. மாலை 6 மணிக்கு செக்கடி விநாயகர் பல்வேறு வண்ணமயமான நறுமண பூக்களால் சிறப்பு புஷ்பாஞ்சலி நடைபெற்றது. தர்மஸம்வர்த்தினி பஜனை மண்டலி சார்பில் பக்தி பாடல்கள் நிகழ்த்தபட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். முடிவில் பக்தர்களுக்கு அருள்பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை மீனாட்சி சுந்தர் பட்டர் செய்திருந்தார்.

    • செந்தில் விநாயகா் கோவில் கட்டுவதற்கான திருப்பணிகள் நடைபெற்று வந்தன.
    • காலை 6 மணி முதல் 7 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

    திருப்பூர் :

    திருப்பூரை அடுத்த இடுவாய் பாரதிபுரம் பிரிவில் உள்ள செந்தில் விநாயகா் கோவில் கட்டுவதற்கான திருப்பணிகள் நடைபெற்று வந்தன.இந்தப் பணிகள் அனைத்து நிறைவடைந்ததைத் தொடா்ந்து கோவில் கும்பாபிஷேக விழா வருகிற 5-ந் தேதி காலை 6 மணி முதல் 7 மணிக்குள் நடைபெற உள்ளது.

    முன்னதாக 4-ந்தேதிஅதிகாலை 5 மணிக்கு திருவிளக்கு ஏற்றுதலும், காலை 9 மணி முதல் 10 மணிக்குள் தீா்த்தக்குடம் எடுத்தலும், இரவு 9 மணிக்கு விமான கோபுர கலசம் நிறுவுதலும் நடைபெறுகிறது. இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் திருப்பணிக் குழுவினா் மற்றும் ஊா் பொதுமக்கள் செய்து வருகின்றனா்.

    • விழாவில் சிறுவர், சிறுமிகள் பால்குடம் எடுத்தும், பெரியவர்கள் முக்கூடல் தீர்த்த நீர் எடுத்தும் ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர்.
    • அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி பிரையன்ட்நகர் கீழ்பகுதியில் பிரசித்திபெற்ற செல்வ விநாயகர், சுப்பிரமணியர் கோவில் 47-வது ஆண்டு வருஷாபிஷேக விழாவை யொட்டி கணபதி ஹோமத்து டன் நடை பெற்றது.

    விழாவில் சிறுவர், சிறுமிகள் பால்குடம் எடுத்தும், பெரியவர்கள் முக்கூடல் தீர்த்த நீர் எடுத்தும் ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர்.

    சிறப்பு விருந்தினராக வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளரும், அமைச்ச ருமான கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகி யோர் கலந்து கொண்டனர்.

    இதில் மாநகர தி.மு.க. செயலாளர் ஆனந்தசேகரன், பிரையண்ட்நகர் பகுதி தி.மு.க. செயலாளரும் மாநகராட்சி நகர் நல குழு தலைவருமான ராமகிருஷ்ணன், வட்டச்செயலாளர்கள் சிங்கராஜ், சுப்பையா, முன்னாள் வட்டச்செய லாளர் சாரதி, மாநகர இலக்கிய அணி துணை அமைப்பாளர் பிக் அப் தனபாலன், பிரையண்ட்நகர் பகுதி இளைஞர் அணி செயலாளர் ரவி, வட்ட பிரதிநிதிகள் ரஜினிமுருகன், பாஸ்கர், சரவணன், வட்ட துணைச்செயலாளர் சத்தியபாலன், இளைஞர் அணி கோபால், கோவில் நிர்வாகி மணி, போல்பேட்டை பகுதி இளைஞர் அணி துணை அமைப்பாளர் அல்பட், கருணா, போல்பேட்டை பகுதி பிரதிநிதி பிரபாகர், மேயர் நேர்முக உதவியாளர் ரமேஷ், முன்னாள் கவுன்சிலர்கள் நவநீதன், செந்தில்குமார், உள்பட பலர் கலந்து கொண்டனர். விழாவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    • அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
    • சிறப்பு ஏற்பாடுகளை அந்த பகுதி பொதுமக்கள் செய்திருந்தனர்.

    வெள்ளகோவில்:

    வெள்ளகோவில் வீரக்குமாரசாமி கோவில் வளாக விநாயகர் கோவில், எல். கே. சி. நகர் புற்றுக்கண்ஆனந்த விநாயகர் கோவில்.திருவள்ளுவர் நகர் விநாயகர் கோவில், சக்தி நகர் விநாயகர் கோவில், குமார வலசு விநாயகர் கோவில்களில் நேற்று சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு அலங்காரம், தேன், பன்னீர், பஞ்சாமிர்தம், கனி, விபூதி, மஞ்சள், சந்தனம்,பூ அபிஷேகம்,தீபாராதனை நடைபெற்றது.அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது, இதற்கான ஏற்பாடுகளை அந்த பகுதி பொதுமக்கள் செய்திருந்தனர்.

    • ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி ஊராட்சி வெட்டமனை நாடார் உறவின்முறை சார்பில் காமராஜர் பிறந்த நாள் விழா நடந்தது.
    • இதையொட்டி ஏர்வாடி செல்வ விநாயகர் கோவிலில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி ஊராட்சி வெட்டமனை நாடார் உறவின்முறை சார்பில் காமராஜர் பிறந்த நாள் விழா நடந்தது. இதையொட்டி ஏர்வாடி செல்வ விநாயகர் கோவிலில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. கோவில் அருகே மலர்களால் அலங்கரிக்கப்பட்ட காமராஜர் படத்திற்கு பொதுமக்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பள்ளி மாணவ- மாணவிகளுக்கு பேனா, பென்சில் வழங்கப்பட்டது.

    அன்னதானமும் நடந்தது. விழாவில் லட்சுமணன், கார்த்திகேயன், சுரேஷ்குமார், சக்தி குமார், ஜெகன், ஜெகதீஷ், சரவணன், வீரக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதே போல் ஏர்வாடி ஊராட்சியில் காமராஜர் பிறந்த நாள் விழா நடந்தது. ராமநாதபுரம் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியினர் மண்டபம் ஒன்றிய செயலாளர் வெங்கடேசன் தலைமையில் ராமநாதபுரம் நகர செயலாளர் சதீஷ் நாடார் முன்னிலையில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலாளர் அக்கீம் கலந்து கொண்டு இரட்டையூரணி கிராமத்தில் அமைந்துள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

    இதில் மாவட்ட இளைஞர் சங்க செயலாளர் துல்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர். கீழக்கரையில் தமிழ்நாடு பனை வாரிய மாநில தலைவர் பாலசிங்கம் காமராஜரின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. கீழக்கரை இளைஞர் இளம் பெண்கள் பாசறை தலைவர் செல்வகணேஷ்பிரபு, நகர் தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் பிரதீபன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×