என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி பரிகார யாகம்-திருவாசகம் முற்றோதுதல்
    X

    யாகம் நடைபெற்றபோது எடுத்த படம்

    செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி பரிகார யாகம்-திருவாசகம் முற்றோதுதல்

    • உலக நன்மை வேண்டி கணபதி ஹோமம் உள்பட பல்வேறு ஹோமங்கள் நடத்தப்பட்டது.
    • நிகழ்ச்சியில் பரிவார தேவதைகளுக்கு சிறப்பு அபிஷேகமும் நடைபெற்றது.

    செங்கோட்டை:

    செங்கோட்டை கீழத்தெரு வீரகேரள விநாயகா் கோவிலில் தேசிய இந்து திருக்கோவில் கூட்டமைப்பின் சார்பில் உலக நன்மை வேண்டி பரிகார ஹோமம் திருவாசகம் முற்றோதுதல் நிகழ்ச்சி நடந்தது. தேசிய இந்து திருக்கோவில் கூட்டமைப்பின் தென்காசி மாவட்டச்செயலாளா் ராமநாத் தலைமை தாங்கினார். திருவாசக கமிட்டி கவுரவத்தலைவா் இசக்கி, செயலாளா் முத்துசிவா ஆகியோர் முன்னிலை வகித்தனா். செயற்குழு உறுப்பினா் குருசாமி வரவேற்று பேசினார்.

    நிகழ்ச்சியில் காலை 3 மணிக்கு இலஞ்சி சிவசுப்பிரமணியன் தலைமையில் உலக நன்மை வேண்டி கணபதி ஹோமம், பரிகார ஹோமம் உள்பட பல்வேறு ஹோமங்கள் நடத்தப்பட்டது. பின்னா் வீரகேரளவிநாயகா், வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர் மற்றும் பரிவார தேவதைகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் தீபராதனை நடத்தப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. சிவா பஞ்சவாத்திய குழுவினரின் பஞ்சவாத்திய ஊர்வலம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக வந்து கோவிலை வந்தடைந்தது. அதனைதொடா்ந்து திருவாசகி சிவபகவதி தலைமையிலான குழுவினரின் திருவாசகம் முற்றோதுதல் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் விழா கமிட்டி நிர்வாகிகள் ஆடிட்டர்சங்கரநாராயணன், பிரபு, மாரியப்பன், வேல்முருகன், வேலு, சிவன், சேகர், அருண்குமார் மற்றும் ஏராளமான பக்தா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

    Next Story
    ×