search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விக்கிரமராஜா"

    • மணலி சேக்காடு வணிகர் சங்கம் சார்பில் 40 - வது வணிகர் தினத்தை முன்னிட்டு வணிகர் சங்க கொடி ஏற்று விழா நடைபெற்றது.
    • மே 5-ந்தேதி நடைபெறும் மாநில மாநாட்டில் மணலியில் இருந்து 500-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் கலந்து கொள்ள வேண்டும் என்று கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    திருவொற்றியூர்:

    மணலியில், மணலி சேக்காடு வணிகர் சங்கம் சார்பில் 40 - வது வணிகர் தினத்தை முன்னிட்டு வணிகர் சங்க கொடி ஏற்று விழா நடைபெற்றது. மாநில தலைவர் ஏ. எம். விக்கிரம ராஜா கலந்து கொண்டு கொடி ஏற்றி சிறப்புரையாற்றினார். மாவட்டத் தலைவர் கொரட்டூர் த. ராமச்சந்திரன் கல்வெட்டினை திறந்து வைத்தார். மாநில பொருளாளர் ஏ.எம். சதக்கத்துல்லா, கூடுதல் செயலாளர் வி.பி. மணி, தென் சென்னை மாவட்ட தலைவர் ஒய் . எட்வர்ட் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர்.

    மணலி சங்க பொதுச் செயலாளர் என். மாரிமுத்து வரவேற்று பேசினார். விழாவுக்கு மணலி பேரமைப்பு தலைவர் எம்.பால்ராஜ் தலைமை தாங்கினார். நிதிக்குழு தலைவர் சந்தனா சேகர், சமுத்திர பாண்டி, எஸ். எஸ். காட்வின் ராஜ், இளைஞரணி செயலாளர் சோலை கணேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வடசென்னை வடக்கு மாவட்ட செயல் தலைவர் வி.பி. வில்லியம்ஸ், செயலாளர் சங்கர் ஆகியோர் இனிப்பு வழங்கினர்.

    கூட்டத்தில் மகளிர் அணி மாவட்ட தலைவி சுமித்ரா, செயலாளர் நிர்மலா, மணலி செயலாளர் கருணாமூர்த்தி, துணை செயலாளர் சரவணன், துணை தலைவர் முத்தையா கோதண்டம், செயலாளர் ராஜேஷ், இளைஞர் அணி நிர்வாகிகள் கோகுல், ஆரோக்கிய செல்வம், அன்பு, சரவணன், தேவேந்திரன் உட்பட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் ராஜா சங்கர் நன்றி கூறினார். முன்னதாக மாநில தலைவர் விக்கிரம ராஜாவுக்கு வடசென்னை வடக்கு மாவட்ட கிளைச் சங்கங்கள் மற்றும் இளைஞர் அணி சார்பில் மேளதாளத்தோடு வரவேற்பளிக்கப்பட்டது. மே 5-ந்தேதி நடைபெறும் மாநில மாநாட்டில் மணலியில் இருந்து 500-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் கலந்து கொள்ள வேண்டும் என்று கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    • வணிகர் உரிமை முழக்க மாநாடாக வருகிற மே 5-ந்தேதி ஈரோட்டில் நடைபெற உள்ளது.
    • தமிழகம் முழுவதும் இருந்து 5 லட்சத்திற்கும் மேற்பட்ட வணிகர்கள் கலந்து கொள்கிறார்கள்.

    சென்னை:

    தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் 40-வது வணிகர் தின மாநில மாநாடு வணிகர் உரிமை முழக்க மாநாடாக வருகிற மே 5-ந்தேதி ஈரோட்டில் நடைபெற உள்ளது. தமிழகம் முழுவதும் இருந்து 5 லட்சத்திற்கும் மேற்பட்ட வணிகர்கள் கலந்து கொள்கிறார்கள்.

    இதுதொடர்பாக சென்னை மண்டல ஆலோசனை கூட்டம், மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தலைமையில், சென்னை மண்டலத் தலைவர் கே.ஜோதி லிங்கம் முன்னிலையில் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 11 மணிக்கு சென்னை, நுங்கம்பாக்கம், வள்ளுவர் கோட்டம் நெடுஞ்சாலை ஓட்டல் ஜெய்டூணில் நடைபெற உள்ளது. இதில் சென்னை மண்டலத்திற்கு உட்பட்ட 7 மாவட்ட தலைவர், செயலாளர், பொருளாளர், மாநிலத் துணைத் தலைவர், மாநில இணைச் செயலாளர், பழைய பொருள் அணி நிர்வாகிகள், இளைஞர் அணி நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.

    • முப்பெரும் விழா திருவள்ளுவர் நகரில் வியாபாரிகள் சங்க தலைவர் ஏ.எம்.காமராஜ் தலைமையில் நடந்தது.
    • தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரம ராஜா கலந்து கொண்டு கொடியேற்றி நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

    திருவள்ளுவர் நகர் வியாபாரிகள் சங்கம் சார்பில் 30-வது ஆண்டு விழா மற்றும் முப்பெரும் விழா திருவள்ளுவர் நகரில் வியாபாரிகள் சங்க தலைவர் ஏ.எம்.காமராஜ் தலைமையில் நடந்தது. செயல் தலைவர் முருகன் முன்னிலை வகித்தார. செயலாளர் பெப்சி நாராயணன் வரவேற்புரையாற்றினார்.

    தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரம ராஜா கலந்து கொண்டு கொடியேற்றி நலத்திட்ட உதவிகள் வழங்கினார். என்.டி.மோகன், தேசிகன், சின்னவன், ராதா கிருஷ்ணன், மகேந்திரன், சுதர்சன், மீனாட்சி சுந்தரம், வேல்முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • புதுக்கோட்டை பழைய பாலம் அருகே புதிய பாலம் கட்ட மண்டல மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று விக்கிரமராஜா கூறினார்.
    • விழாவில் ஏழை எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி புதுக்கோட்டை அனைத்து வியாபாரிகள் முன்னேற்ற சங்கத்தின் 13-ம் ஆண்டு விழா தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

    சங்க தலைவர் பீட்டர் தலைமை தாங்கி சங்க வளர்ச்சி பணிகள் குறித்து பேசினார். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கன்னியாகுமரி மண்டல தலைவர் வைகுண்ட ராஜா,தூத்துக்குடி மத்திய மாவட்ட தலைவர் சோலையப்பராஜா, மண்டல தலைவர் ராதாகிருஷ்ணன், தெற்கு மாவட்ட தலைவர் காமராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசினார்.

    அப்போது அவர் பேசுகையில், புதுக்கோட்டை பழைய பாலம் அருகே புதிய பாலம் கட்ட மண்டல மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று தெரிவித்தார்.

    மாநிலத் துணைத் தலைவர் வெற்றிராஜன், தூத்துக்குடி மத்திய மாவட்ட கூடுதல் செயலாளர் செந்தில்குமார், மகளிர் அணி செயலாளர் ராஜம், தூத்துக்குடி 3-ம் மைல் வியாபாரி சங்க தலைவர் ஜெயபாலன், ஐக்கிய வியாபாரிகள் சங்கத் தலைவர் அன்புராஜ் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

    புதுக்கோட்டை வியாபாரிகள் சங்க பொருளாளர் ராபின்சன் ஆண்டறிக்கை வாசித்தார். தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி புதுக்கோட்டை கிளை மேலாளர் கணேச பாண்டியன்,குமாரகிரி பஞ்சாயத்து தலைவர் ஜாக்சன் துரைமணி, துணைத் தலைவர் முப்பிலி யன், தூத்துக்குடி மாவட்ட மருந்து வியாபாரி சங்கத் தலைவர் முனியசாமி, வியாபாரிகள் சங்கங்களின் முக்கிய நிர்வாகிகளான தர்மராஜ், தாமோதரன் உள்ளிட்டோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.

    விழாவில் ஏழை எளியவருக்கு தையல் எந்திரம், மாணவ -மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. துப்புரவு பணியாளர்களுக்கு சீருடை, பள்ளி குழந்தைகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டது.

    மேலும் புதுக்கோட்டை வியாபாரிகள் சங்கத்தைச் சேர்ந்த செந்தில் ஆறுமுகம்,பரத்,ராஜன் ஆகியோர் வழங்கிய கண்காணிப்பு காமி ராக்களை 3 முக்கிய சந்திப்புகளில் புதுக்கோட்டை மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ராமலட்சுமி பொருத்தி திறந்து வைத்தார்.

    நெல்லை- தூத்துக்குடி சாலையில் கட்டப்பட்டு வரும் புதிய மேம்பால பணி நிறைவு பெறும்போது கனரக வாகனங்கள் புதுக்கோட்டை ஊருக்குள் வர முடியாத நிலை ஏற்படும். எனவே பழைய பாலம் அருகே புதிய பாலம் அமைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து ஆண்டு விழாவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.சங்க துணை தலைவர் பெரியசாமி நன்றி கூறினார்.

    • காஞ்சிபுரம் மண்டல-மாவட்ட நிர்வாகிகள் கூட்டம், சென்னை பெரியமேட்டில் மாநிலத்தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தலைமையில் நடந்தது
    • கூட்டத்தில் வணிக வரித்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் ‘டெஸ்ட் பர்ச்சேஸ்' நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

    சென்னை:

    தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சென்னை, காஞ்சிபுரம் மண்டல-மாவட்ட நிர்வாகிகள் கூட்டம், சென்னை பெரியமேட்டில் மாநிலத்தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில் வணிக வரித்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் 'டெஸ்ட் பர்ச்சேஸ்' நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அதன்படி, உணவு பாதுகாப்புத்துறை சட்டங்கள் மற்றும் தொழிலாளர் நலத்துறை சட்டங்களில் வணிகர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை தவிர்த்திட கோரியும், இதுதொடர்பாக மத்திய-மாநில அரசுகளின் கவனத்தை ஈர்த்திடும் வகையில் 4 கட்ட போராட்டங்களை நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.

    அதன்படி முதல் கட்டமாக வருகிற 10-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) அனைத்து வணிகர்களும் தங்கள் கடைகள் முன்பு விழிப்புணர்வு பதாகைகள் வைப்பது என்றும், விழிப்புணர்வு 'பேட்ஜ்' அணிந்து போராட்டத்தில் ஈடுபடுவது என்றும் முடிவு செய்யப்பட்டது. 2-ம் கட்டமாக 24-ந்தேதி அனைத்து மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்தவும் முடிவெடுக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து 3-ம் கட்டமாக உண்ணாவிரதமும், 4-ம் கட்டமாக கடையடைப்பு போராட்டமும் நடைபெறும் என்று தீர்மானிக்கப்பட்டது. உண்ணாவிரதம் மற்றும் கடையடைப்பு போராட்டத்துக்கான தேதிகள் 24-ந்தேதி அறிவிக்கப்படும் என தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தெரிவித்தார்.

    • தமிழ்நாட்டில் சிறுகுறு தொழில் நிறுவனங்களுக்கு சலுகை விலையில் மின்சாரம் வழங்க வேண்டும்.
    • மின் கட்டணம், கட்டிட வரி உள்ளிட்டவற்றை தமிழக அரசு குறைக்கவேண்டும் என்றார் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர்.

    பொன்னேரி:

    பொன்னேரி அடுத்த தடப்பெரும்பாக்கம் வெள்ளகுளம்சாலையில் ஸ்ரீ செந்தூர் முருகன் டைல்ஸ் & டோர்ஸ் ஷோரூம் திறப்பு நிகழ்வில் பங்கேற்ற தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசியதாவது:

    இரண்டு ஆண்டுகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தற்போது வணிகர்கள் மெல்ல மீண்டு வருகின்றனர். அதிகாரிகள் குழுவினர் கடைகளில் பொருட்களை வாங்கி ஜிஎஸ்டி வரி நடைமுறைப்படுத்தப்படுகிறதா என்ற சோதனை முறையை கைவிட வேண்டும்.

    அறநிலையத் துறைக்குச் சொந்தமான இடங்களில் வீட்டின் உரிமையாளர்கள் வரி செலுத்தவில்லை என்பதால் அவர்களிடம் வாடகை செலுத்தி வரும் கடைக்கும் சேர்த்தே சீல் வைக்கும் நடவடிக்கையை தவிர்த்து கடை உரிமையாளரிடம் நேரடியாக வாடகையை வசூலித்துக் கொண்டு சீல் வைப்பதை தவிர்க்க வேண்டும்.

    14 வகையான தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக் கூடாது என்பதில் வணிகர்கள் உறுதியாக உள்ளனர்.

    திடீரென கடை சீல் வைப்பு நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது.

    குட்கா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்களை விற்கக்கூடாது என்பதில் வணிகர் சங்க பேரமைப்பினர் உறுதியாக உள்ளனர். அதனையும் மீறி விற்பனை செய்பவர்களுக்கு வணிகர் சங்க பேரமைப்பு ஆதரவு அளிப்பதில்லை.

    மின் கட்டணமும், கட்டிட வரியும் அதிகளவில் உயர்ந்துள்ளதால் மின் கட்டணத்தையும், கட்டிட வரியையும் தமிழக அரசு குறைக்க வேண்டும்.

    சிறுகுறு தொழில் பதிவு செய்துள்ள வணிகர்களுக்கு சலுகை விலையில் மின்சாரம் வழங்க வேண்டும்.

    ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பாட்டிலில் குளிர்பானங்களை அடைத்து விற்பனை செய்வதை தடை செய்ய வேண்டும்.

    நாடு முழுவதும் பொருட்களை பேக்கிங் செய்வது மற்றும் பிளாஸ்டிக் பயன்பாடு குறித்து ஒரே சட்டம் அமல்படுத்தி வணிகர்களிடையே ஏற்பட்டுள்ள குழப்பத்தை போக்கிட மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்திட வேண்டும்.

    தற்போது ஆன்லைன் ரம்மி விளையாட்டு தடை செய்யப்பட்டுள்ள நிலையில் அதிலும் பல நடிகர்கள் நடித்ததாகவும், அதனால் பல உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது.

    விளையாட்டு வீரர்கள் மற்றும் நடிகர்கள் என விளம்பரங்களில் நடிப்பவர்கள் வணிக நோக்காக பார்க்காமல் சுய பரிசோதனை செய்து பின்னர் விளம்பரத்தில் நடிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

    இதில் விஜய ராஜேந்திரன் நாடார், கனகராஜ் சோமசுந்தரம், குணசேகர் முத்துக்குமார், சென்னை மாவட்ட தலைவர் எட்வர்ட் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட நிர்வாகிகள், நடராஜன், நந்தன், முத்துப்பாண்டியன், முருகன், பால் பாண்டி, வேலு ஆசாரி, ஏகாம்பரநாதன், பாலகிருஷ்ணன், கர்ணா, யுவராஜ், அப்துல்காதர், வெல்டன் வாசகர் சந்தனகுமார், சுரேஷ்குமார், ஜிவிஎம் குமார், மீஞ்சூர் ரியாஸ், முகமது அலி, செல்லத்துரை, துரையரசன், பகிர்முகமது, மாதர்பாக்கம் பாலமுருகன், அஜிஸ் அகமது உள்பட பேரமைப்பு நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    முன்னதாக நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி என அனைத்து இடங்களில் உள்ள கடைகளுக்கு வாடகையை வரன்முறைப்படுத்தும் சீரமைப்பு குழுவில் தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பிற்கு பிரதிநித்துவம் அளித்ததற்கு தமிழ்நாடு முதலமைச்சருக்கு விக்கிரமராஜா நன்றி தெரிவித்து கொண்டார்.

    • கட்டுமானம் மற்றும் மனை தொழில் கூட்டமைப்பில் உழைப்பாளர்கள் அதிகம் உள்ளனர்.
    • குட்கா மற்றும் அது சம்பந்தமான போதை பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும்.

    பொன்னேரி:

    பொன்னேரி அடுத்த தச்சூரில் கட்டுமானம் மற்றும் மனை தொழில் கூட்டமைப்பு வாரிய தலைவர் பொன்குமார் தலைமையில் மாநாடு நடந்தது. நிகழ்ச்சியில் அமைச்சர் நாசர் கலந்து கொண்டு பேசினார். வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரம ராஜா பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கட்டுமானம் மற்றும் மனை தொழில் கூட்டமைப்பில் உழைப்பாளர்கள் அதிகம் உள்ளனர். வியாபாரிகளும் உழைப்பாளர்கள் தான் கூட்டமைப்பிற்கு வியாபாரிகள் எப்பொழுதும் துணை நிற்பார்கள். தமிழக அரசு போதை பொருள் தடுப்பு குறித்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்கு வியாபாரிகள் பேரமைப்பு துணை நிற்கும்.

    குட்கா மற்றும் அது சம்பந்தமான போதை பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும். மாறாக எத்தனை முறை நடவடிக்கை எடுத்தாலும் மீண்டும் அதே தவறை கடை உரிமையாளர்கள் செய்தால் பேரமைப்பு மற்றும் வணிகர் சங்கம் நடவடிக்கை எடுக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வணிகர்களுக்கு ஏற்படும் பல்வேறு இடர்பாடுகளை மாற்றி அமைக்கவும் முதல்வரை சந்தித்து கோரிக்கை வைக்கப்படும்.
    • வணிகர்களுக்கு மின் கட்டண சலுகை வழங்க வேண்டும்.

    பல்லடம் :

    பல்லடம் அனைத்து வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் சங்க கொடியேற்று விழா மற்றும் பொதுக்கூட்டம் கடைவீதியில் நடைபெற்றது கூட்டத்திற்கு பல்லடம் சங்க தலைவர் ராம்.கண்ணையன் தலைமை வகித்தார். செயலாளர் அண்ணாதுரை, பொருளாளர் தனசீலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விழாவில் சங்க கொடியை ஏற்றி வைத்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவர் விக்கிரமராஜா பேசுகையில், தமிழகத்தில் உள்ள வணிக நிறுவனங்கள், கடைகளில் பெரும்பாலானவை ஆங்கிலத்தில் பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது. தமிழ் மொழியில் பெயர் பலகை வைக்க வேண்டும் என்று அரசு சட்டம் இயற்றவும். வணிகர்களுக்கு ஏற்படும் பல்வேறு இடர்பாடுகளை மாற்றி அமைக்கவும் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து கோரிக்கை வைக்கப்படும். வணிகர்களுக்கு மின் கட்டண சலுகை வழங்க வேண்டும், மாதம் தோறும் மின் கட்டணம் செலுத்தும் முறையை அமலுக்கு கொண்டு வர வேண்டும் என்று மின் துறை அமைச்சர் செந்தில்பாலாஜியை சந்தித்து கோரிக்கை வைத்துள்ளோம்.

    பல்லடத்தில் நிலவும் கடுமையான போக்குவரத்து நெருக்கடிக்கு உடனடி தீர்வு காண வேண்டும். கிடப்பில் உள்ள புறவழிச்சாலை திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்று சம்பந்தப்பட்ட துறை அமைச்சரை நேரில் சந்தித்து வலியுறுத்தவுள்ளோம். பெதப்பம்பட்டியில் நிலவும் கால்வாய் பிரச்சனைக்கு அரசு அதிகாரிகள் தீர்வு காண வேண்டும். தவறினால் போராட்டம் விரைவில் நடத்தப்படும். ஜி.எஸ்.டி. வரி விதிப்பு, செஸ், சுங்கச்சாவடி கட்டண உயர்வு, மின் கட்டண உயர்வு, பெட்ரோல்,டீசல் விலை உயர்வு போன்றவையால் விலைவாசி உயர்வு அடைய காரணமாக அமைகிறது. அவற்றை நீக்க வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் தேதி விரைவில் அறிவிக்கப்படும்.

    தற்போது 20 சதவீதம் முதல் 25 சதவீதம் விலைவாசி உயர்வு ஏற்பட்டுள்ளது.இது மேலும் உயர்ந்து 35 சதவீதமாக உயரும் ஆபத்து உள்ளது. விலைவாசி உயர்விற்கும் வியாபாரிகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. செலவுகள் உட்பட அசல் விலையுடன் சேர்த்து லாபம் வைத்து பொருள் விற்பனை செய்வது மட்டுமே வியாபாரியின் வேலை. அந்த பொருட்களை விலை கொடுத்து வாங்குபவர்கள் மக்கள் தான். அதனால் அதன் விலையேற்ற சுமையை மக்கள் தான் ஏற்கிறார்கள். பொருட்களின் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டிய கடமை மத்திய,மாநில அரசுகளுக்கு தான் உள்ளது. அதனை செயல்படுத்த ஆட்சியாளர்களை கோரிக்கைகள் மூலம் வலியுறுத்துவோம் என்றார்.இதில் கோவை மண்டல தலைவர் டி.ஆர்.சந்திரசேகரன், மாநில செய்தி தொடர்பாளர் பாண்டியராஜன், மாவட்ட தலைவர் எம்.கோவிந்தசாமி, மாவட்ட செயலாளர் லாலா கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தமிழக அரசு பொது மக்களின் பாதுகாப்பையும், நலனையும் கருத்தில் கொண்டும், பட்டாசு விற்பனை செய்யும் வணிகர்களின் நலனை கருத்தில் கொண்டும், முன்னேற்பாடுகளுடன் பட்டாசு விற்பனையை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    • பட்டாசு விற்பனை உரிம அனுமதியை விரைவுப்படுத்தி மத்திய அரசின் சட்ட விதிகளுக்கு உட்பட்டு 5 ஆண்டுகளுக்கு உரிமம் என்பதை உறுதி செய்து முன்கூட்டி அனுமதி தந்து உதவ வேண்டும்.

    சென்னை:

    தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பட்டாசு உற்பத்தியிலும், பட்டாசு வணிகத்திலும் தமிழகத்தில் சிவகாசிக்கு தனி சிறப்பு உண்டு. கடந்த 5 ஆண்டுகளாகவே தனிப்பட்ட நபர்களின் விருப்பு வெறுப்புகளால் உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடுக்கப்பட்டு நடைபெற்று வரும் வழக்குகளாலும் பட்டாசு உற்பத்தியும், விற்பனையும் தமிழகத்தை பொறுத்தவரை 60 சதவீத வீழ்ச்சியை சந்தித்து இருக்கின்றது.

    உச்சநீதிமன்ற வழக்குகளும் விழாக்காலமான தீபாவளியை ஒட்டியே மீண்டும் விசாரணைக்கு கொண்டு வந்து, பட்டாசு வணிக விற்பனையை 70 சதவீதத்திற்கு மேல் சேதப்படுத்தி இருக்கிறார்கள். இதனால் தமிழகத்தில் பெரும் பாதிப்புக்கு உள்ளாவது பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனையை சார்ந்திருக்கும் வணிகர்கள் தான்.

    தமிழக அரசும் பட்டாசு விற்பனை அனுமதியை வெடி பொருட்கள் சட்டம் 2008-ன்படி 5 ஆண்டுகளுக்கு வழங்குவதற்கு சாத்தியம் இருந்தாலும், தமிழகத்தில் 17 மாவட்டங்களுக்கு 3 ஆண்டுகளுக்கான அனுமதியும், இதர மாவட்டங்களில் 1 ஆண்டிற்கான அனுமதி மட்டுமே வழங்கி இருக்கின்றது. உரிம அனுமதிக்கு மார்ச் மாதத்திலேயே விண்ணப்பம் செய்திருந்தாலும், விற்பனைக்கான உரிம அனுமதி தீபாவளி பண்டிகை நெருக்கத்தில் ஒரு சில தினங்களுக்கு முன்னரே வழங்கப்பட்டு வருகின்றது.

    இது பட்டாசு வணிகர்களை பெருமளவு பாதிப்பதோடு, விற்பனைக்கான முன்னேற்பாடுகளை செய்வதும், பொது மக்களுக்கு பாதுகாப்பாக விற்பனை செய்யப்படுவதும் மிகப்பெரிய கேள்விக்குறியாகவும், பிரச்சினையாகவும் உருவெடுத்துள்ளது.

    தமிழக அரசு பொது மக்களின் பாதுகாப்பையும், நலனையும் கருத்தில் கொண்டும், பட்டாசு விற்பனை செய்யும் வணிகர்களின் நலனை கருத்தில் கொண்டும், முன்னேற்பாடுகளுடன் பட்டாசு விற்பனையை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். பட்டாசு விற்பனை உரிம அனுமதியை விரைவுப்படுத்தி மத்திய அரசின் சட்ட விதிகளுக்கு உட்பட்டு 5 ஆண்டுகளுக்கு உரிமம் என்பதை உறுதி செய்து முன்கூட்டி அனுமதி தந்து உதவ வேண்டும். இதை வலியுறுத்தி அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ராமசந்திரனுக்கு கோரிக்கை சமர்ப்பித்து உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • இளம் தொழில் முனைவோர் அமைப்பு எம்.ஆனந்த் வரவேற்புரை நிகழ்த்தினார்.
    • தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மண்டல, மாநில, மாவட்ட நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

    சென்னை:

    தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில், திருச்சியில் நடைபெற்ற மே-5, 39-வது வணிகர் தின மாநில மாநாட்டில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினால் இளம் தொழில் முனைவோர் அமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டது.

    இதன் தொடக்க விழா சென்னை, கிண்டி, ஐ.டி.சி, கிராண்ட் சோழா ஓட்டலில் பேரமைப்பு மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரம ராஜா தலைமையில் நடை பெற்றது.

    பேரமைப்பின் மாநிலப் பொதுச்செயலாளர் வெ.கோவிந்தராஜுலு, மாநிலப் பொருளாளர் ஹாஜி.ஏ.எம்.சதக்கத்துல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இளம் தொழில் முனைவோர் அமைப்பு எம்.ஆனந்த் வரவேற்புரை நிகழ்த்தினார்.

    இளம் தொழில் முனைவோர் அமைப்பின் செயல்பாடுகள் பற்றி எஸ்.அலெக்ஸாண்டர் விளக்கவுரையாற்றினார். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மண்டல, மாநில, மாவட்ட நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ஆட்சியாளர்கள் காமராஜர் போன்று உழைத்தால் தமிழ்நாட்டில் வருடம் முழுவதும் தண்ணீர் இருக்கும் என்று வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா கூறியுள்ளார்.
    தர்மபுரி:

    தர்மபுரி மாவட்ட நாடார் சங்கம் சார்பில் காமராஜரின் 116-வது பிறந்த நாள் விழா, சங்கத்தின் 28-வது ஆண்டு விழா மற்றும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா ஆகிய முப்பெரும் விழா தர்மபுரி டி.என்.சி. விஜய் மஹாலில் நடைபெற்றது.

    விழாவில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா கலந்து கொண்டு எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பதக்கங்கள் மற்றும் பரிசுகளை வழங்கினார். மேலும் ஸ்கேட்டிங் போட்டியில் தேசிய அளவில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு அவர் பரிசு வழங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

    தமிழகத்தை ஆண்ட காமராஜர் மக்களின் மனதை அறிந்து பல்வேறு திட்டங்களை நிறைவேற்றினார். அவரது ஆட்சி காலத்தில் தான் கல்லூரிகளில் மாலை நேர வகுப்புகள் தொடங்கப்பட்டது. பெரும்பாலான அணைகள் கட்டப்பட்டது. ஊழல் இல்லாத ஆட்சியை நடத்திய காமராஜர் தற்போதும் அனைத்து தரப்பு மக்கள் மனதிலும் வாழ்ந்து வருகிறார்.

    பட்டதாரி இல்லாத வீடே இல்லை என்ற அளவுக்கு தமிழ்நாட்டு மக்களின் கல்வி அறிவை உயர்த்த காரணமாக இருந்தவர் கமராஜர். மேலும் இங்கு இருக்கக்கூடிய ஆட்சியாளர்கள் காமராஜர் போன்று உழைத்தால் தமிழ்நாட்டில் வருடம் முழுவதும் தண்ணீர் இருக்கும். இதனால் தமிழகமே விவசாய பூமியாக செழிக்கும். ஆனால் தற்போது உள்ள ஆட்சியாளர்கள் ஊழல் செய்து பணத்தை கொள்ளையடிப்பதையே குறிக்கோளாக கொண்டுள்ளனர். மக்களின் மன நிலையை அறிந்து ஆட்சியாளர்கள் திட்டங்களை நிறைவேற்ற வேண்டும்.

    இந்த காலத்து இளைஞர்களுக்கு செல்போன் மட்டுமே உறவாக உள்ளது. எனவே பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை கவனிக்க வேண்டும். இளைஞர்கள் தங்களின் உடலை ஆரோக்கியமாகவும், வலிமையாகவும் வைத்துக் கொள்ள வேண்டும்.

    தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. வணிகர்களுக்கு எந்த பிரச்சினை என்றாலும் முதலில் நாம் முன்வந்து உதவி செய்ய தயாராக இருக்கிறோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.
    ×