search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வரதட்சணை"

    • ரூ.15 லட்சம் கேட்டு இளம் பெண்ணை வரதட்சணை கொடுமை செய்துள்ளனர்
    • கணவர், மாமனார், மாமியார உட்பட 7 பேர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது

    அறந்தாங்கி,

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே இடையன்காடு பகுதியைச் சேர்ந்தவர் சாஹர்பான் (வயது 27) இவருக்கும் புதுக்கோட்டை டைமண்ட்நகர் பகுதியைச் சேர்ந்த நிஷ்க்அஹமெட் என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணம் முடிவுற்று 4 ஆண்டுகளில் குழந்தை ஏதும் இல்லாத சூழ்நிலையில் கணவன் மனைவியிடையே அடிக்சுடி சண்டை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த ஓராண்டிற்கு முன்பு கணவர் நிஷ்க்அகமெட், மாமியார் அக்பியாபர்வீன், மாமனார் ரபியுதீன் ஆகியோர் சாஹர்பானுவிடம் ரூ. 15 லட்சம் வரதட்சணைக் கேட்டு அடித்து துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது.

    இதனையடுத்து மனஉளைச்சலுக்கு ஆளான சாஹர்பான் அங்கிருந்து கிளம்பி தனது தந்தை வீட்டில் வாழ்ந்து வருகிறார். மேலும் இது தொடர்பாக புதுக்கோட்டை காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருந்த நிலையில் அதன் வழக்கு அறந்தாங்கி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. மேலும் வழக்கை விசாரித்த காவல் உதவி ஆய்வாளர் சாந்தி, ஆய்வாளர் சாந்தகுமாரி தலைமையில் கணவர், மாமியார், மாமனார் உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. 15 லட்சம் வரதட்சணைக் கேட்டு பெண்ணை அடித்து துன்புறுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    • திருமணத்தின் போது 40 சவரன் நகையை போட வில்லை என்று கூறி உள்ளார்.
    • காயமடைந்த அபிநயா விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    கடலூர்:

    விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டை அருகே கோ. பவழங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மனைவி அபிநயா (வயது 22). இருவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி, 9 மாதத்தில் ஆதித்யா என்கிற ஆண் குழந்தை உள்ளது. ஏழுமலை இலங்கையில் என்ஜினீ யராக வேலை செய்து வருகிறார்.

    இந்நிலையில், திரும ணத்தின் போது 40 சவரன் நகையை போட வில்லை என்று கூறி, வரதட்சணை கேட்டு, அபிநயாவின் கணவர் ஏழுமலை, மாமனார் வீராசாமி, மாமியார் தனக்கொடி, நாத்தனார் சுசிலா ஆகியோர் சேர்ந்து கொடுமைப்படுத்தியதுடன், இரும்பு பைப்பால் தாக்கி, மண்ணெண்ணையை ஊற்றி அபிநயாவை கொளுத்த முயற்சித்ததாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த அபிநயா விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இது குறித்து, அபிநயா கொடுத்த புகாரின் பேரில், மங்கலம்பேட்டை போலீசார் அபிநயா கண வர் ஏழுமலை உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • திருமணம் முடிந்ததும் மணப்பெண்ணை மணமகனுடன் அனுப்புவதற்கு பெண் வீட்டார் ஏற்பாடுகள் செய்கின்றனர்.
    • மணமகன், தன்னுடன் மணமகளை அழைத்து செல்ல வேண்டுமானால் வரதட்சணையாக புதிய மோட்டார் சைக்கிள் வாங்கி தர வேண்டும் என அடம் பிடிக்கிறார்.

    சமூக வலைதளங்களில் திருமண வீடுகளில் நடைபெறும் தகராறுகள் அடிக்கடி பகிரப்படுவதுண்டு. ஆனால் தற்போது இணையத்தில் பரவும் ஒரு வீடியோவில், வரதட்சணை கேட்ட மாப்பிள்ளையை மாமனார் செருப்பால் அடிப்பது போன்ற காட்சிகள் உள்ளது.

    அதில் திருமணம் முடிந்ததும் மணப்பெண்ணை மணமகனுடன் அனுப்புவதற்கு பெண் வீட்டார் ஏற்பாடுகள் செய்கின்றனர்.

    அப்போது மணமகன், தன்னுடன் மணமகளை அழைத்து செல்ல வேண்டுமானால் வரதட்சணையாக புதிய மோட்டார் சைக்கிள் வாங்கி தர வேண்டும் என அடம் பிடிக்கிறார்.

    அவரை உறவினர்கள் சமாதானப்படுத்த முயன்றும் அவர் மசியவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த மணப்பெண்ணின் தந்தை தனது செருப்பை கழற்றி மாப்பிள்ளையை சரமாரியாக அடிக்கிறார். இதை சற்றும் எதிர்பாராத மணமகன் தனது மாமனாரிடம் அடிப்பதை நிப்பாட்டுமாறு கெஞ்சுவது போன்று காட்சிகள் உள்ளது. டுவிட்டரில் பகிரப்பட்ட இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பல்வேறு கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

    அதில் ஒருவர், மாப்பிள்ளைக்கு பிடித்திருந்த வரதட்சணை என்னும் பேய் மாமனாரின் செருப்புஅடியால் விரட்டப்பட்டது என கூறி உள்ளார்.

    • ஜீயபுரத்தில் திருமணமாகி 8 ஆண்டுகளுக்கு பிறகு இளம் பெண்ணிடம் வரதட்சணை கேட்டு கொடுமை படுத்தினர்
    • போலீசார் கணவர், மாமியார் உள்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருச்சி:

    திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகேயுள்ள துடையூர் வடக்கு தெரு பகுதியை சேர்ந்தவர் பாலாஜி. இவருக்கும் நதியா (வயது 33) என்பவருக்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதியருக்கு ஒரு மகன்,ஒரு மகள் உள்ளனர். நதியாவின் திருமணத்தின் போது அவரது பெற்றோர் நகை, பணம் மற்றும் சீர்வரிசை பொருட்களை வரதட்சணையாக கொடுத்தனர்.இந்த நிலையில் சமீபகாலமாக மீண்டும் கூடுதலாக வரதட்சணை கேட்டு அவரை கணவர் பாலாஜி, மாமியார் லட்சுமி அம்மாள், கணவரின் சகோதரர் சசி என்கிற மருதமுத்து, அவரது மனைவி ரேவதி ஆகியோர் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.

    தனது பெற்றோர் மிகவும் சிரமத்தில் இருப்பதால் தன்னால் வரதட்சணை வாங்கி வரமுடியாது என்று நதியா திட்டவட்டாக கூறியுள்ளார்.ஆனாலும் கணவர் குடும்பத்தினர் நதியாவை தொடர்ந்து பல்வேறு துன்புறுத்தல்களுக்கு ஆளாக்கி வந்துள்ளனர். இதையடுத்து பாதிக்கப்பட்ட நதியா ஜீயபுரம்அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் கணவர், மாமியார் உள்பட 4 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


    • வரதட்சணையில் ரொக்கப்பணம் மட்டும் ரூ.2.21 கோடி வழங்கப்பட்டது.
    • ரூ.7 லட்சம் மதிப்பில் ஒரு டிராக்டர், ஸ்கூட்டர் மற்றும் குடும்பம் நடத்த தேவையான இதர பொருட்களும் சீதனமாக வழங்கப்பட்டுள்ளது.

    ராஜஸ்தான்:

    அண்ணன்-தங்கை, அக்காள்-தம்பி பாசத்துக்கு எல்லை என்பது கிடையாது. அதுவும் ஒரு பெண்ணுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட சகோதரர்கள் இருந்தால் அண்ணன்-தம்பிகள் தங்கள் சகோதரியின் மீது காட்டும் பாசம் அளப்பரியது.

    சகோதரியின் திருமணத்தின்போது அந்த பாச உணர்வை கண்கூடாக காணலாம்.

    ராஜஸ்தான் மாநிலத்தில் 4 சகோதரர்கள் ஒன்று சேர்ந்து தங்களின் சகோதரி திருமணத்துக்கு ரூ.8 கோடி வரதட்சணை கொடுத்து தங்களின் அன்பை வெளிப்படுத்தியுள்ளனர். அந்த சகோதரர்களின் பெயர் அர்ஜுன்ராம், பகிரத், உமைத்ஜி, பிரகலாத். ராஜஸ்தான் மாநிலம் நகார் மாவட்டத்தில் உள்ள திங்சாரா கிராமத்தை சேர்ந்தவர்கள். இவர்களின் சகோதரி பன்வாரிதேவி 4 சகோதரர்களும் சகோதரி பன்வாரிதேவியின் மீது பாசத்தை பொழிந்து வளர்த்து வந்தனர்.

    பன்வாரிதேவிக்கு கடந்த 26-ந்தேதி திருமணம் நடந்தது. அப்போது ஊரே மெச்சும்படியாக சகோதரர்கள் 4 பேரும் சேர்ந்து ரூ.8 கோடியே 31 லட்சம் மதிப்பில் வரதட்சணை வழங்கினர். இந்த கிராமத்தில் இந்த அளவுக்கு அதிக தொகையை யாரும் இதுவரை வரதட்சணையாக வழங்கியதில்லை.

    இந்த வரதட்சணையில் ரொக்கப்பணம் மட்டும் ரூ.2.21 கோடி வழங்கப்பட்டது. ரூ.4 கோடி மதிப்பில் 33 ஏக்கர் நிலம், ரூ.71 லட்சம் மதிப்பில் 1 கிலோவுக்கு மேல் தங்க நகைகள், ரூ.9.8 லட்சம் மதிப்பில் 14 கிலோ வெள்ளி பொருட்கள், ரூ.7 லட்சம் மதிப்பில் ஒரு டிராக்டர், ஸ்கூட்டர் மற்றும் குடும்பம் நடத்த தேவையான இதர பொருட்களும் சீதனமாக வழங்கப்பட்டுள்ளது.

    சீதனப் பொருட்கள் அனைத்தும் திங்சாரா கிராமத்தில் இருந்து மாப்பிள்ளை வீடு இருக்கும் ரய்தானு கிராமத்துக்கு நூற்றுக்கணக்கான மாட்டு வண்டிகள் மற்றும் ஒட்டக வண்டிகளில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன.

    இந்த திருமணத்தை பார்ப்பதற்கு கிராம மக்கள் அனைவருமே திருமணம் நடந்த இடத்தில் திரண்டிருந்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கூடுதல் வரதட்சணை கொடுத்தால் மட்டுமே திருமண மண்டபத்திற்கு வர முடியும் என பிடிவாதமாக மணமகள் தெரிவித்தார்.
    • மணமகன் வீட்டார் மணமகளிடம் கெஞ்சியும் அவர் மனம் இறங்கி வரவில்லை.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அடுத்த போச்சாரம் பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும், அஸ்வரா பேட்டை பழங்குடியினத்தைச் சேர்ந்த இளம்பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

    அதன்படி நேற்று முன்தினம் காலை மணமகன் வீட்டார் பத்ர்த்ரி குடேம் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் திருமணத்திற்கு ஏற்பாடு செய்து இருந்தனர்.

    பழங்குடியின வழக்கப்படி தங்கள் வீட்டிற்கு வரும் மருமகளுக்கு மணமகன் வீட்டார் வரதட்சணை கொடுக்க வேண்டும் என்பது வழக்கம். அதன்படி மணமகளுக்கு மாப்பிள்ளை வீட்டார் ரூ.2 லட்சம் வரதட்சணையாக கொடுத்தனர்.

    நேற்று முன்தினம் மாலை மணமகன் மற்றும் மணமகள் வீட்டார் திருமண மண்டபத்திற்கு வந்தனர்.

    திருமண வரவேற்பு ஏற்பாடுகள் தடபுடலாக நடந்தது. மணமகள் மற்றும் அவரது குடும்பத்தினர் அதே பகுதியில் உள்ள தனியார் ஓட்டலில் தங்கி இருந்தனர்.

    நேற்று காலை மணமகன் திருமண உடையில் மணமேடைக்கு வந்தார். ஆனால் மணமகள் வீட்டார் யாரும் திருமண மண்டபத்திற்கு வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த மணமகன் வீட்டார் மணமகள் தங்கி இருந்த ஓட்டலுக்கு சென்று திருமண மண்டபத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்தனர்.

    அப்போது மணப்பெண் மண்டபத்திற்கு வர மறுத்தார். கூடுதல் வரதட்சணை கொடுத்தால் மட்டுமே திருமண மண்டபத்திற்கு வர முடியும் என பிடிவாதமாக மணமகள் தெரிவித்தார்.

    மணமகன் வீட்டார் மணமகளிடம் கெஞ்சியும் அவர் மனம் இறங்கி வரவில்லை. மணமகளின் முடிவு குறித்து திருமண மண்டபத்தில் இருந்தவர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.

    இதனால் திருமணம் நின்றது. களைகட்டி இருந்த திருமண மண்டபம் சோகத்தில் மூழ்கியது. மணக்கோலத்தில் இருந்த மாப்பிள்ளை இது குறித்து அங்குள்ள போலீசில் புகார் செய்தார்.

    போலீசார் இரு தரப்பினரையும் அழைத்து சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் அவர்களது முயற்சி பலன் அளிக்கவில்லை. இதையடுத்து இரு தரப்பினரும் தாங்களாகவே பேச்சுவார்த்தை நடத்தி திருமணத்தை நிறுத்துவது என முடிவு செய்தனர்.

    பின்னர் மணமகளுக்கு வரதட்சணையாக கொடுத்திருந்த ரூ.2 லட்சத்தை மணமகன் வீட்டார் பெற்றுக்கொண்டு திரும்பிச் சென்றனர்.

    இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சேகர் மின்கம்பத்தில் ஏறிய போது அப்பகுதியில் மின் தடை ஏற்பட்டு இருந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியதாக போலீசார் தெரிவித்தனர்.
    • சேகர் மின் கம்பத்தில் ஏறி இருப்பதை கண்ட அப்பகுதி மக்கள் சீர்வரிசை பெறுவதற்காக இப்படியா மின்கம்பத்தில் ஏறி மாமியாரை மிரட்டுவது என கேலியாக பேசி சென்றனர்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம், மேதக் நகரை சேர்ந்தவர் சேகர். கூலி தொழிலாளி. இவர் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். மகள் காதல் திருமணம் செய்து கொண்டதால் அவரது தாய் சீர்வரிசை எதுவும் செய்யவில்லை என கூறப்படுகிறது.

    மாமியார் வீட்டிற்கு செல்லும் சேகர் தனக்கு சீர்வரிசையாக நகைகள் போட வேண்டுமென அடிக்கடி கேட்டு வந்தார். ஆனால் அவரது மாமியார் சேகரின் பேச்சை காதில் வாங்கிக் கொள்ளாமல் அமைதியாக இருந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த சேகர் நேற்று மீண்டும் மாமியார் வீட்டிற்கு சென்று நகைகள் போட வேண்டுமென வற்புறுத்தினார். இதற்கு சேகரின் மாமியார் மறுப்பு தெரிவித்தார்.

    இதனால் ஆத்திரமடைந்த சேகர் வீட்டை விட்டு வெளியே வந்து அங்குள்ள மின்கம்பத்தில் ஏறி உச்சிக்குச் சென்று உட்கார்ந்து கொண்டார்.

    இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக தீயணைப்பு துறை மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக மின்சார வாரியத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் மின்வாரிய அதிகாரிகள் சேகரிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் சேகர் தனது மாமியார் நகைகள் போடுவதாக உறுதி அளித்தால் மட்டுமே கீழே வருவேன் என அடம்பிடித்தார்.

    இதையடுத்து நீண்ட நேர போராட்டத்திற்குப் பிறகு சேகரை சமாதானப்படுத்தி கீழே கொண்டு வந்தனர். பின்னர் போலீசார் சேகருக்கு அறிவுரைகளை கூறி வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

    சேகர் மின்கம்பத்தில் ஏறிய போது அப்பகுதியில் மின் தடை ஏற்பட்டு இருந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியதாக போலீசார் தெரிவித்தனர்.

    சேகர் மின் கம்பத்தில் ஏறி இருப்பதை கண்ட அப்பகுதி மக்கள் சீர்வரிசை பெறுவதற்காக இப்படியா மின்கம்பத்தில் ஏறி மாமியாரை மிரட்டுவது என கேலியாக பேசி சென்றனர்.

    இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • வரதட்சணை கொடுமையால் கணவர் குடும்பத்தினர் மீது இளம்பெண் புகார் கொடுத்தார்.
    • திருமணத்தின்போது மணப்பெண் வீட்டார் 120 பவுன் நகைகள் மற்றும் சீர்வரிசைகள் கொடுத்துள்ளனர்.

    விருதுநகர்

    கோவில்பட்டி அம்பேத்கர் தெரு பகுதியை சேர்ந்தவர் பூஜா(24). இவருக்கும், விருதுநகர் என்.என்.ரோடு பகுதியை சேர்ந்த கோபிகுமார்(26) என்பவருக்கும் 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமானது. திருமணத்தின்போது மணப்பெண் வீட்டார் 120 பவுன் நகைகள் மற்றும் சீர்வரிசைகள் கொடுத்துள்ளனர்.

    இந்தநிலையில் 2022 -ம் ஆண்டு ஜூன் மாதத்தில் இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது. அதன் பின்னர் ஆகஸ்டு மாதத்தில் கோபிகுமார் திடீரென மாயமானார். இதுகுறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது. சென்னையில் காவியா என்ற பெண்ணுடன் வசித்து வந்த கோபிகுமாரை போலீசார் மீட்டு வந்து விசாரித்தனர்.

    அப்போது மனைவியு டன் சேர்ந்து வாழ விரும்புவதாக கூறியுள்ளார். ஆனால் கணவரும், அவரது குடும்பத்தினரும் சேர்ந்து மேலும் 60 பவுன் நகைகள், ரூ. 30 லட்சம் ரொக்கம் தர வேண்டும் என வற்புறுத்தி பூஜாவை கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து விருதுநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பூஜா புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கோபிகுமார், அவரது தந்தை சுந்தரகுமார், தாய் தனம், தங்கை தீபா ஆகியோரை விசாரித்து வருகின்றனர்.

    • அறிவழகன் இவரது மனைவி பவித்ரா (30) இவர்களுக்கு ஒரு பெண், ஆண் குழந்தை உள்ளது.
    • கணவர் அறிவழகன் உள்பட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து கணவர் அறிவழகனை போலீசார் கைது செய்தனர்

    கடலூர்:

    கடலூர் அருகே திருமாணிக்குழியை சேர்ந்தவர் அறிவழகன் (வயது 34).இவரது மனைவி பவித்ரா (30) இவர்களுக்கு ஒரு பெண், ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் அறிவழகன் மற்றும் பவித்ரா ஆகியோர் கடந்த சில மாதத்திற்கு முன்பு கடலூர் கே.என்.பேட்டையில் இரும்பு கடை நடத்தி வந்தனர். அப்போது அறிவழகனுக்கு ரீசார்ஜ் செய்யும் கடையில் பணிபுரிந்து வந்த ஒரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    இதனை அறிந்த பவித்ரா அதிர்ச்சியடைந்து தனது கணவன் அறிவழகனிடம் கேட்டார். அப்போது அறிவழகன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பவித்ராவை அடித்து வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. இது குறித்து பவித்ரா கடலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் கணவர் அறிவழகன் உள்பட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து கணவர் அறிவழகனை போலீசார் கைது செய்தனர்.

    • வரதட்சணையாக கார் கேட்டு இளம் ெபண்ணை சித்திரவதை செய்தனர்
    • கணவர் உட்பட 6 பேர் மீது வழக்கு

    திருச்சி:

    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி புது ஹவுசிங் யூனிட் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில். இவரது மனைவி பானு ரேகா (வயது 30). இவருக்கும் செந்திலுக்கும் கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் நடந்தது. ஒரு பெண் குழந்தை உள்ளது. திருமணத்தின் போது ரேகாவுக்கு 70 சவரன் தங்க நகைகள் மற்றும் வீட்டுக்கான இதர பொருட்கள் வரதட்சணையாக கொடுத்துள்ளனர்.இந்நிலையில் கணவர் வீட்டார் கடந்த ஓராண்டாக கார் கேட்டு துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் தனது தாய் வீட்டுக்குச் சென்ற பாணு ரேகா பொன்மலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் கார்த்திகா வழக்கு பதிவு செய்து பானு ரேகாவின் கணவர் செந்தில் உள்பட 6 பேர் மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.


    • கீழக்கரையில் வரதட்சணை கேட்டு மனைவியை கொடுமைப்படுத்திய கணவர் கைது செய்யப்பட்டார்.
    • இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வடக்கு தெருவை சேர்ந்தவர் முகம்மது உசேன். இவரது மகள் லுத்துபியா பேகம் (வயது40). இவருக்கும் கீழக்கரை சொக்கநாதர் தெருைவ சேர்ந்த முகமது அப்துல் காதர் என்பவருக்கும் கடந்த 2002-ம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது.

    திருமணத்தின்போது 41 பவுன் நகையும், ரூ.4 லட்சத்து 50 ஆயிரம் மற்றும் சீர் பொருட்களும் கொடுத்துள்ளனர். லுத்துபியா பேகம்-முகமது அப்துல் காதர் தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.

    இந்த நிலையில் முகமது அப்துல் காதர் மனைவியிடம் அடிக்கடி பணம் வாங்கி வர சொல்லி துன்புறுத்தி வந்துள்ளார். மேலும் திருமணத்தின்போது போட்ட நகையையும் வாங்கி விற்றுள்ளார்.

    இருந்தபோதிலும் லுத்துபியா பேகத்தின் தந்தை மருமகனுக்கு ஒரு கடை வைத்து கொடுத்து, அதனை நடத்த ரூ.10 லட்சம் கொடுத்துள்ளார். முகமது அப்துல் காதர் மனைவியிடம் இருந்து பறித்துக்கொண்டு மேலும் பணம் வாங்கி வர சொல்லி அடித்து துன்புறுத்தி உள்ளார்.

    கணவரின் சகோதரி களான ஜெசிமா என்ற தங்கராணி, மர்சூக்கா, கதிஜா பீவி ஆகியோர் கடந்த டிசம்பர் மாதம் ஒன்றாக சேர்ந்து வந்து லுத்துபியா பேகத்தை அடித்து மிரட்டி அவரது தந்தை கொடுத்த வீட்டை கணவருக்கு எழுதி வைக்கும்படி வற்புறுத்தி உள்ளனர்.

    இந்த நிலையில் லுத்துபியா பேகம் குடும்ப நலம் கருதி பொறுமையாக இருந்துள்ளார். அவருக்கு தந்தை கொடுத்த 11 சென்ட் நிலத்தை வற்புறுத்தி இனாம் செட்டில்மெண்ட் எழுதி வாங்கியுள்ளார். பின்பு அந்த இடத்தை மனைவிக்கு தெரியாமல் தனது சகோதரி ரகுமா பீவி என்பவருக்கு விற்றுள்ளார். இதுபற்றி அறிந்த லுத்துபியா பேகம் தட்டிக்கேட்டதால்அவரை உயிரோடு எரித்து விடுவதாக மிரட்டியுள்ளார்கள்.

    இது குறித்து கீழக்கரை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் லுத்துபியா பேகம் புகார் செய்தார். அதன்பேரில் கணவர் முகமது அப்துல் காதர், அவரது சகோதரிகள் ஜெஸிமா என்ற தங்கராணி, மர்சூக்கா, கதிஜா பீவி, ரகுமா பீவி மற்றும் சபீனா ஆகியோர் மீது சப்-இன்ஸ்பெக்டர் லட்சுமி வழக்குப்பதிவு செய்து முகமது அப்துல் காதரை கைது செய்தனர்.

    • மனைவிக்கு வரதட்சணை கொடுமை செய்த அரசு ஊழியர் மீது போலீசில் புகார் செய்தார்.
    • அருண்குமார் எனக்கு தொடர்ச்சியாக பாலியல் தொல்லை கொடுத்து வருகிறார்

    மதுரை

    மதுரை திருப்பாலை அய்யப்பன் நகர் தாமரை வீதியைச் சேர்ந்தவர் பவித்ரா (வயது 25). இவர் தல்லாகுளம் அனைத்து மகளிர் போலீசில் கொடுத்த புகார் மனுவில் கூறியிருப்ப தாவது:-

    எனக்கும் துருண் குமாருக்கும் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் திருமணம் நடந்தது. அப்போது எனக்கு பெற்றோர் 50 பவுன் நகை, ரூ.5 லட்சம் மதிப்பில் சீர்வரிசை பொருட்கள் கொடுத்தனர். மேலும் ரூ. 10 லட்சம் செலவில் திருமணம் செய்து வைத்தனர்.

    மதுரை பாலமேடு அரசு கால்நடை ஆஸ்பத்திரியில் துருண்குமார் ஆய்வாளராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் திருமண நாள் அன்று அவருக்கு ஆண்மை குறைபாடு உள்ளது என தெரியவந்தது. இருந்தபோதிலும் வேறு வழி யின்றி அவருடன் குடித்த னம் நடத்தி வந்தேன்.

    இந்த நிலையில் துருண் குமாரின் அண்ணன் அருண்குமார் எனக்கு தொடர்ச்சியாக பாலியல் தொல்லை கொடுத்து வருகிறார். இதற்கு அவரது மனைவி திவ்யா, அவரது தாய் தனலட்சுமி மற்றும் உறவினர் சரவணன் ஆகியோர் உடந்தையாக உள்ளனர்.

    எனவே நான் இது தொடர்பாக கணவரிடம் புகார் செய்தேன். அப்போது அவர் என் சகோதரரை அனுசரித்து நடந்து கொள் என்று தெரிவித்தார். இந்த நிலையில் துருண்குமார் குடும்பத்தினர் வரதட்சணையாக மேலும் ரூ.10 லட்சம் வாங்கி வரும்படி என்னை மிரட்டி னார்கள். இதற்கு நான் மறுத்தேன்.

    எனவே அவர்கள் என்னை பட்டினி போட்டு கொல்ல பார்க்கிறார்கள். எனவே போலீசார் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

    இந்த புகாரின்பேரில் மதுரை தல்லாகுளம் அனைத்து மகளிர் போலீ சார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×