search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "லிவர்பூல்"

    சர்வதேச சாம்பியன்ஸ் கோப்பை கால்பந்து போட்டியின் பல்வேறு ஆட்டங்களில் பார்சிலோனா செல்சி, லிவர்பூல், அணிகள் வெற்றி பெற்றன. #Barcelona #chelsea
    சர்வதேச சாம்பியன்ஸ் கோப்பை கால்பந்து தொடர் உலகின் பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகின்றன. பிரான்ஸின் நைஸ் நகரில் நடந்த ஒரு ஆட்டத்தில் செல்சி அணி 5-4 என பெனால்டி ஷூட் அவுட் முறையில் இன்டர் மிலான் அணியை வீழ்த்தியது. முன்னதாக ஆட்டம் 1-1 என்ற புள்ளி கணக்கில் சமனில் முடிந்திருந்தது. செல்சி அணியின் கோல் கீப்பர் வில்லி கேபலரோ மிலன் அணியின் கிர்னியார் பெனால்டி வாய்ப்பில் அடித்த பந்து அற்புதமாக தடுத்து அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

    அமெரிக்காவின் மிச்சிகன் நகரில் லிவர்வூர் - மான்செஸ்டர் யுனைடெட் அணிகள் இடையிலான ஆட்டத்தில் லிவர்பூல் அணி 4-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது. அந்த அணியின் சாடியோ மேன், டேனியல் ஸ்டரிட்ஜ், ஷை ஓஜோ, ஹெர்டன் ஷக்ரி ஆகியோர் கோலடித்தனர். மான்செஸ்டர் யுனைடெட் அணி சார்பில் மிட் பீல்டர் ஆன்ட்ரெஸ் பெரைரா ஒரு கோல் அடித்தார்.

    அமெரிக்காவின் பஸடேனா நகரில் நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் டாட்டன்ஹாம் அணியை 5-3 என பெனால்டி ஷூட் வாய்ப்பில் பார்சிலோனா அணி வீழ்த்தியது. பார்சிலோனா அணியின் சார்பில் முனிர் இ ஹட்டாடி, ஆர்தர் ஆகியோர் தலா 1 கோல் அடித்தனர். இதேபோல் டாட்டன்ஹாம் அணியின் சார்பில் சான், ஜார்ஜ் கெவின் தலா 1 கோல் அடித்தனர். இதன்மூலம் இரு அணிகளும் ஆட்ட நேர முடிவில் 2-2 என சமநிலையில் இருந்ததால் பெனால்டி வாய்ப்பு வழங்கப்பட்டது. இதில் 5-3 என்ற கோல் கணக்கில் பார்சிலோனா அபார வெற்றி பெற்றது.



    அமெரிக்காவில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் அர்செனல், பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணிகள் மோதின. இதில் அர்செனல் அணி  சார்பில் மெசுட் ஒசில் 13-வது நிமிடத்தில் கோல் அடித்தார். அவரைத் தொடர்ந்து அலெக்சாண்டர் 67-வது நிமிடத்திலும், 71-வது நிமிடத்திலும் கோல் அடித்தார். பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணியின் சார்பில் 60-வது நிமிடத்தில் கிறிஸ்டோபர் ஒரு கோல் அடித்தார். அதன்பின் அர்செனல் அணியின் ராப் ஹோல்டிங் 87-வது நிமிடத்திலும், எட்டி 90+4 நிமிடத்தில் கோல் அடிக்க அர்செனல் 5-1 என அபார வெற்றி பெற்றது.
    சர்வதேச சாம்பியன்ஸ் கோப்பை கால்பந்து தொடரில் முகமது சாலா, மானே ஆட்டத்தால் 2-1 என மான்செஸ்டர் சிட்டியை வீழ்த்தியது லிவர்பூல். #ICC #ManCity #Liverpool
    ஐரோப்பிய நாடுகளில் ஆண்டுதோறும் நடைபெறும் கால்பந்து லீக் தொடருக்கு முன் சர்வதேச சாம்பியன்ஸ் கோப்பை கால்பந்து தொடர் நடைபெறும். இதில் பெரும்பாலான ஆட்டங்கள் மற்ற ஐரோப்பா கண்டத்திற்கு வெளியில் நடக்கும். நேற்று நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் மான்செஸ்டர் சிட்டி - லிவர்பூல் அணிகள் மோதின. இந்த ஆட்டம் அமெரிக்காவில் உள்ள கிழக்கு ரூதர்போர்டில் நடைபெற்றது.

    இந்த ஆட்டத்தில் முதன் பாதி நேரத்தில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. 2-வது பாதி நேரத்தில் ஆட்டத்தின் 57-வது நிமிடத்தில் மான்செஸ்டர் சிட்டி அணியின் லெரோய் சானே முதல் கோலை பதிவு செய்தார்.



    63-வது நிமிடத்தில் லிவர்பூல் அணியின் முன்னணி வீரரான முகமது சாலா பதில் கோல் அடித்தார். இதனால் ஸ்கோர் 1-1 என சமநிலையில் இருந்தது. அதன்பின் 90 நிமிடங்கள் வரை இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை.

    காயத்திற்கான கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டது. இதில் 94-வது நிமிடத்தில் லிவபர்பூல் அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இதைப் பயன்படுத்தி சாடியோ மானே கோல் அடித்தார். இதனால் லிவர்பூல் 2-1 என வெற்றி பெற்றது.
    எகிப்து கால்பந்து அணியின் முன்னணி வீரரான முகமது சாலா லிவர்பூல் அணி உடனான ஒப்பந்தத்தை 2023 வரை நீட்டித்துள்ளார். #Salah #Liverpool
    எகிப்து கால்பந்து அணியின் முன்னணி வீரரான முகமது சாலா 2016-17 சீசனில் இத்தாலி கிளப்பான ரோமாவிற்காக விளையாடி வந்தார். அந்த அணிக்காக 31 போட்டிகளில் பங்கேற்று 15 கோல்கள் அடித்திருந்தார்.

    அவரை விற்க ரோமா முடிவு செய்தது இங்கிலீஷ் பிரீமியர் லீக் அணியான லிவர்பூல் சுமார் 42 மில்லியன் யூரோ கொடுத்து 5 வருடத்திற்கு ஒப்பந்தம் செய்தது. ரோமாவில் சரியாக விளையாடாத முகமது சாலா, லிவர்பூல் அணிக்காக நம்பமுடியாத வகையில் தனது ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 2017-2018 சீசனில் இங்கிலீஷ் பிரீமியர் லீக்கில் 32 கோல்கள் அடித்து சாதனைப் படைத்துள்ளார். ஒட்டு மொத்தமாக 44 கோல்கள் அடித்துள்ளார்.



    சிறப்பான ஆட்டத்தால் சிறந்த ஆப்பிரிக்கா வீரர், கால்பந்து எழுத்தாளர்கள் சங்கங்களின் சிறந்த வீரர் விருது ஆகியவற்றை தட்டிச் சென்றார். 26 வயதான முகமது சாலாவின் துடிப்பான ஆட்டத்தை பார்த்து அசந்துபோன ரியல் மாட்ரிட் உள்ளிட்ட முன்னணி கிளப்புகள் இவரை ஒப்பந்தம் செய்ய விரும்பின. அதேவேளையில் லிவர்பூல் அணி அவரை வெளியிட விரும்பவில்லை.

    இந்நிலையில் சாலா உடனான ஒப்பந்ததை லிவர்பூல் அணி ஐந்தாண்டிற்கு நீட்டித்துள்ளது. இதன்மூலம் 2024 வரை அவர் இதே அணியில் தொடர்வார். இவருக்கான டிரான்ஸ்பர் தொகை எவ்வளவு என்று குறிப்பிடப்படவில்லை. ஆனால், வாரத்திற்கு 2 மில்லியன் பவுண்டு சம்பளம் கொடுக்கப்படும் எனத் தெரிகிறது.
    சாம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டியில் முகமது சாலா காயத்திற்கு காரணமான செர்ஜியோ ரமோஸ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என 3 லட்சம் பேர் கையெழுத்திட்டுள்ளனர்.
    யூரோப்பா சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் இறுதிப் போட்டி கடந்த சனிக்கிழமை நள்ளிரவு உக்ரைனில் நடைபெற்றது. இதில் ரியல் மாட்ரிட் - லிவர்பூல் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. காரேத் பேலே இரண்டு கோலும், பென்சிமா ஒரு கோலும் அடித்தனர். லிவர்பூல் ஒரு கோல் அடிக்க ரியல் மாட்ரிட் 3-1 என வெற்றி பெற்று தொடர்ச்சியாக 3-வது முறை கோப்பையை கைப்பற்றியது.

    போட்டியின் முதல் பாதி நேரத்தில் லிவர்பூல் அணியின் முன்னணி வீரரான முகமது சாலா பந்தை கோல் நோக்கி கடத்திச் சென்றார். அப்போது ரியல் மாட்ரிட் கேப்டனும், பின்கள வீரரும் ஆன செர்ஜியோ ரமோஸ் சாலாவின் கோல் முயற்சியை தடுக்க அவருடன் மோதிக்கொண்டே பந்தை தடுக்கச் சென்றார்.



    அப்போது ரமோஸ் கைக்குள் சாலா கை மாட்டியது. அப்போது சாலாவை ரமோஸ் தள்ளியதால் சாலா கீழே விழுந்தார். இதில் சாலாவின் வலது கை தோள்பட்டை பலமாக தரையில் சென்று தாக்கியது. இதனால் சாலா வலியால் துடித்தார். பின்னர் சிறிது நேரம் விளையாடிய பின்னர் வலி தாங்க முடியாமல் வெளியேறினார். ஆனால் ரமோஸிற்கு நடுவர் எந்த தண்டனையும் வழங்கவில்லை.

    இதனால் லிவர்பூல் ரசிகர்கள் கடும் கோபம் அடைந்தனர். அத்துடன் அமெரிக்காவில் பாதிப்படைந்த மக்களுக்காக உதவும் சேஞ்ச்.ஓர்ஜி (Change.org) என்ற இணைய தளத்தில் பிபா மற்றும் யூஈஎஃப்ஏ செர்ஜியோ ரமோஸ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று 3 லட்சம் பேர் கையெழுத்திட்டுள்ளனர்.
    ஐரோப்பிய கிளப் அணிகளுக்கான கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ரியல் மாட்ரிட் அணி லிவர்பூல் அணியை 3-1 என்ற கணக்கில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. #2018UEFAChampionsLeague
    ஐரோப்பிய கிளப் அணிகளுக்கான கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி ஆட்டம் கீவ் நகரில் நடைபெற்றது. இதில் நடப்பு சாம்பியனான ரியல் மாட்ரிட் (ஸ்பெயின்) அணியும், லிவர்பூல் (இங்கிலாந்து) அணியும் மோதின.

    போட்டியின் தொடக்கத்தில் இருந்தே இரு அணிகளும் அபாரமாக ஆடின. இதனால் போட்டியின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை.



    இரண்டாவது பாதியில் ஆட்டத்தின் 50-வது நிமிடத்தில் ரியல் மாட்ரிட் அணியின் கரிம் பென்சிமா முதல் கோல் அடித்தார். இதற்கு  பதிலடி கொடுக்கும் வகையில் லிவர்பூல் அணியின் சாடியோ மேன் 54-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். இதனால் இரு அணிகளும் 1-1 என சமநிலை வகித்தன.

    தொடர்ந்து ரியல் மாட்ரிட் அணி சிறப்பாக ஆடியது. அந்த அணியின் கரேத் பாலே 63 மற்றும் 82 வது நிமிடங்களில் தலா ஒரு கோல் அடித்தார். இதனால் ரியல் மாட்ரிட் அணி 3-1 என்ற கணக்கில் லிவர்பூல் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தொடர்ந்து மூன்றாவது முறையாக கைப்பற்றி அசத்தியது. #2018UEFAChampionsLeague
    ×