என் மலர்

  செய்திகள்

  சர்வதேச சாம்பியன்ஸ் கோப்பை- மான்செஸ்டர் சிட்டியை 2-1 என வீழ்த்தியது லிவர்பூல்
  X

  சர்வதேச சாம்பியன்ஸ் கோப்பை- மான்செஸ்டர் சிட்டியை 2-1 என வீழ்த்தியது லிவர்பூல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சர்வதேச சாம்பியன்ஸ் கோப்பை கால்பந்து தொடரில் முகமது சாலா, மானே ஆட்டத்தால் 2-1 என மான்செஸ்டர் சிட்டியை வீழ்த்தியது லிவர்பூல். #ICC #ManCity #Liverpool
  ஐரோப்பிய நாடுகளில் ஆண்டுதோறும் நடைபெறும் கால்பந்து லீக் தொடருக்கு முன் சர்வதேச சாம்பியன்ஸ் கோப்பை கால்பந்து தொடர் நடைபெறும். இதில் பெரும்பாலான ஆட்டங்கள் மற்ற ஐரோப்பா கண்டத்திற்கு வெளியில் நடக்கும். நேற்று நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் மான்செஸ்டர் சிட்டி - லிவர்பூல் அணிகள் மோதின. இந்த ஆட்டம் அமெரிக்காவில் உள்ள கிழக்கு ரூதர்போர்டில் நடைபெற்றது.

  இந்த ஆட்டத்தில் முதன் பாதி நேரத்தில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. 2-வது பாதி நேரத்தில் ஆட்டத்தின் 57-வது நிமிடத்தில் மான்செஸ்டர் சிட்டி அணியின் லெரோய் சானே முதல் கோலை பதிவு செய்தார்.  63-வது நிமிடத்தில் லிவர்பூல் அணியின் முன்னணி வீரரான முகமது சாலா பதில் கோல் அடித்தார். இதனால் ஸ்கோர் 1-1 என சமநிலையில் இருந்தது. அதன்பின் 90 நிமிடங்கள் வரை இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை.

  காயத்திற்கான கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டது. இதில் 94-வது நிமிடத்தில் லிவபர்பூல் அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இதைப் பயன்படுத்தி சாடியோ மானே கோல் அடித்தார். இதனால் லிவர்பூல் 2-1 என வெற்றி பெற்றது.
  Next Story
  ×