search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரெயில்வே போலீசார் விசாரணை"

    மணப்பாறையில் இன்று காலை 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ரெயிலில் அடிப்பட்டு பிணமாக கிடந்தார். அவர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    மணப்பாறை:

    திருச்சி மாவட்டம் மணப்பாறை திண்டுக்கல் சாலை ரெயில்வே மேம்பாலம் கீழ்பகுதியில் தண்டவாளத்தில் இன்று காலை 35 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் கிடந்தது. இது குறித்த தகவல் அறிந்ததும் திருச்சி ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர்.  

    பின்னர் அரை கி.மீ. தூரத்திற்கு சிதறி கிடந்த உடல் பாகங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை.ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்தாரா? அல்லது ரெயிலில் இருந்து தவறி விழுந்து இறந்தாரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.          
    நடையனூர் அருகே ரெயில் முன்பு பாய்ந்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார். அவர் எதற்காக தற்கொலை செய்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    வேலாயுதம்பாளையம்:

    கரூர் மாவட்டம் நடையனூர் அருகே ஆலமரத்து மேட்டை சேர்ந்தவர் மருதமுத்து (34). இவர் புகளுர் காகித ஆலையில் ஒப்பந்த தொழிலாளராக பணியாற்றி வந்தார். இவர் சம்பவதன்று புகளுர் அருகே ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். 

    இது குறித்து கரூர் ரெயில்வே போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். அவர் எதற்காக தற்கொலை செய்து  கொண்டார் என்பது தெரியவில்லை. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
    அரக்கோணம் ஓடும் ரெயிலில் நெஞ்சு வலி ஏற்பட்டு கேண்டீன் ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    அரக்கோணம்:

    ஜோலார்பேட்டையை சேர்ந்தவர் முருகன் (வயது 36). இவர் ரெயில்வே கேண்டீன் சமையல்காரராக வேலை பார்த்து வந்தார். முருகன் இன்று காலை சென்னையில் இருந்து கோவை சென்று கொண்டிருந்த ரெயிலில் சமையல் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது.

    வலியால் துடித்து கொண்டிருந்தவரை கண்ட சக ஊழியர்கள் ரெயில் டிக்கட் பரிசோதகரிடம் தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து அவர் ஏ.சி. பெட்டியில் பயணம் செய்து கொண்டிருந்தவர்களில் யாரேனும் டாக்டர்கள் உள்ளனரா? என்று விசாரித்தார்.

    அப்போது ஒருவர் தான் டாக்டர்தான் என்று கூறி முருகனுக்கு சிகிச்சையளிக்க முன் வந்தார். அவர் முருகனை பரிசோதித்த போது ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக கூறினார்.

    அதற்குள்ரெயில் அரக்கோணத்திற்கு வந்தடைந்தது. டிக்கட் பரிசோதகர் ரெயில்வே போலீசாரிடம் முருகனின் உடலை ஒப்படைத்து விட்டு ரெயில் புறப்பட்டது.

    இது குறித்து ரெயில்வே போலீசார் உடலை கைபற்றி வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு ரெயில்வே காலனியில் இன்று காலை மர்ம ‘பேக்’ ஒன்று கிடந்ததால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    ஈரோடு:

    ஈரோடு ரெயில்வே காலனியில் இன்று காலை அப்பகுதியை சேர்ந்த மக்கள் சிலர் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது ரெயில்வே மிஸ்ட் ஸ்கூல் அருகே கருப்பு கலர் டிராவல் ’பேக்’ ஒன்று நீண்ட நேரமாக கேட்பாரற்று கிடந்தது. இதை பார்த்து அச்சம் அடைந்த அப்பகுதி மக்கள் அதில் ஏதாவது மர்ம பொருட்கள் இருக்குமோ என பயந்தனர்.

    இது குறித்து ஈரோடு ரெயில்வே போலீசாருக்கும் சூரம்பட்டி போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ‘பேக்’கை திறந்து அதில் உள்ள பொருட்களை சோதனையிட்டனர்.

    அப்போது அந்தப் ‘பேக்’குக்குள் தினேஷ் குமார் ராமமூர்த்தி நகர், ஈரோடு என்று எழுதப்பட்ட அடையாள அட்டை இருந்தது. மேலும் கணேஷ் ஈரோடு என்ற பெயரும் இருந்தது. இதையடுத்து அந்த அடையாள அட்டையில் இருந்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு போலீசார் பேசினர்.

    அப்போது அந்த பேக் ஈரோடு ஜோசியர் கணேஷ் உடையது என்பது தெரியவந்தது. கணேஷ் சென்னைக்கு கூரியர் பார்சல் அனுப்புவதற்காக தினேஷ்குமார் என்பவரிடம் இந்த பேக்கை கொடுத்துள்ளார்.

    அவர் பார்சல் அனுப்பு வதற்காக ஈரோடு ரெயில் நிலையத்துக்கு வந்த போது அந்த பேக்கை மர்ம நபர் யாரோ திருடிச் சென்று விட்டனர். இது குறித்து அவர் ஈரோடு ரெயில்வே நிலையபோலீசில் புகார் கொடுத்து சென்று விட்டார்.

    இந்நிலையில்தான் அந்த பேக் இன்று காலை ஈரோடு ரெயில்வே காலனியில் உள்ள ரெயில்வே மிஸ்டு ஸ்கூல் அருகே கிடந்துள்ளது.

    இதையடுத்து போலீசார் அந்த ‘பேக்’கை கணேஷிடம் ஒப்படைத்தனர், இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

    ஓடும் ரெயிலில் பயணிகளிடம் திருடிய மர்ம நபர் குறித்து போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஈரோடு:

    ஈரோடு ரெயில் நிலையத்தில் தொடர்ந்து பயணிகளிடம் திருட்டு சம்பவங்கள் நடந்து வருகிறது.

    ரெயில் நிலைய பிளாட் பாரத்தில் படுத்திருக்கும் பயணிகளிடம் சக பயணிகள் போல் படுத்து அவர்களின் பை மற்றும் செல்போன் போன்றவற்றை திருடிக் கொண்டு சென்று விடுகின்றனர். இதேபோல் ஓடும் ரெயிலிலும் இரவில் அயர்ந்து தூங்கும் பயணிகளிடம் கொள்ளையர்கள் கைவரிசை காட்டி வருகிறார்கள்.

    கோவை வரதராஜபுரம் இந்திரா கார்டன் விவேகானந்தா நகரைச் சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 63). இவர் மனைவி, மகனுடன் தஞ்சை சென்று இருந்தார்.

    பின்னர் நேற்று இரவு தஞ்சாவூரிலிருந்து கோவை எக்ஸ்பிரஸ் ரெயிலில் முன் பதிவு பெட்டியில் பயணம் செய்தனர். ஈரோடு அருகே நள்ளிரவில் ரெயில் வரும் போது அயர்ந்து தூங்கினார்கள்.

    அப்போது சீனிவாசனின் பையை ஒரு மர்ம நபர் நைசாக திருடி சென்று விட்டார். அதில் ரூ 7 ஆயிரம் மதிப்புள்ள செல்போன், ரூ 28 ஆயிரம் மதிப்புள்ள ஐ பேடு, ரூ 8 ஆயிரம் மதிப்புள்ள கேமராவும் இருந்தது. இவை அனைத்தும் திருடு போய் விட்டன.

    இந்த ரெயிலின் அடுத்த பெட்டியில் கோவை காந்திபுரம் 100 அடி ரோடு ராஜா நாயுடு பகுதியை சேர்ந்த ரவிச்சந்திரன் மகள் அம்சப் ரியா (வயது 24) பயணம் செய்தார்.

    இவரும் தூங்கி சமயத்தில் அவரிடம் இருந்த ரூ 17 ஆயிரம் மதிப்புள்ள விலை உயர்ந்த ஒரு செல்போன் மற்றும் ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள மற்றொரு செல்போனையும் மர்ம நபர் திருடி சென்று விட்டார்.

    இந்த இரண்டு சம்பவத்திலும் ஒரே நபர்தான் கைவரிசை காட்டி இருக்கக்கூடும் எனத் தெரியவருகிறது. ரெயில் ஈரோடு வந்ததும் இருவரும் ஈரோடு ரெயில் நிலைய போலீசில் 2 பேரும் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தஞ்சை அருகே உடல் துண்டாகி தண்டவாளத்தில் பிணமாக கிடந்தவர் யார் என்பது குறித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தஞ்சாவூர்:

    தஞ்சையை அடுத்த குடிகாடு என்ற பகுதியில் உள்ள ரெயில்வே தண்டவாளத்தில் இன்று காலை ஒரு வாலிபர், தலை துண்டாக உடல் துண்டாக கிடந்தார். இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனே இந்த சம்பவம் குறித்து தஞ்சை ரெயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். அப்போது 20 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் தான் இறந்து கிடப்பது தெரியவந்தது.

    மேலும் போலீசார் இது குறித்து விசாரணை நடத்தினர். அப்போது அந்த வாலிபரின் சட்ட பையில் தஞ்சை - பூண்டிவரையிலும் செல்வதற்கான ரெயில் டிக்கெட் ஒன்று இருந்தது. எனவே இவர் பூண்டிக்கு ரெயிலில் சென்ற போது தான் இறந்திருக்கிறார். மேலும் தலை தனியாக, உடல் தனியாக கிடந்தது. இதனால் ரெயிலில் அடிப்பட்டு அந்த வாலிபர் இறந்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

    இறந்த வாலிபர் யார்? எந்த பகுதியைச் சேர்ந்தவர்? என்பது உடனடியாக தெரியவில்லை. இறந்தவர் பேண்ட் பாக்கெட்டில் ஒரு மெமரிகார்டு இருந்தது. அதில் சில புகைப்படங்கள் இருந்தன. அந்த புகைப்படங்களில் உள்ளவர் தான் தற்போது இறந்தவரா? என்பதும் தெரியவில்லை. எனவே ரெயில்வே போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இறந்த வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×