search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஈரோடு ரெயில்வே காலனியில் இன்று மர்ம ‘பேக்’ ஏற்படுத்திய பரபரப்பு
    X

    ஈரோடு ரெயில்வே காலனியில் இன்று மர்ம ‘பேக்’ ஏற்படுத்திய பரபரப்பு

    ஈரோடு ரெயில்வே காலனியில் இன்று காலை மர்ம ‘பேக்’ ஒன்று கிடந்ததால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    ஈரோடு:

    ஈரோடு ரெயில்வே காலனியில் இன்று காலை அப்பகுதியை சேர்ந்த மக்கள் சிலர் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது ரெயில்வே மிஸ்ட் ஸ்கூல் அருகே கருப்பு கலர் டிராவல் ’பேக்’ ஒன்று நீண்ட நேரமாக கேட்பாரற்று கிடந்தது. இதை பார்த்து அச்சம் அடைந்த அப்பகுதி மக்கள் அதில் ஏதாவது மர்ம பொருட்கள் இருக்குமோ என பயந்தனர்.

    இது குறித்து ஈரோடு ரெயில்வே போலீசாருக்கும் சூரம்பட்டி போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ‘பேக்’கை திறந்து அதில் உள்ள பொருட்களை சோதனையிட்டனர்.

    அப்போது அந்தப் ‘பேக்’குக்குள் தினேஷ் குமார் ராமமூர்த்தி நகர், ஈரோடு என்று எழுதப்பட்ட அடையாள அட்டை இருந்தது. மேலும் கணேஷ் ஈரோடு என்ற பெயரும் இருந்தது. இதையடுத்து அந்த அடையாள அட்டையில் இருந்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு போலீசார் பேசினர்.

    அப்போது அந்த பேக் ஈரோடு ஜோசியர் கணேஷ் உடையது என்பது தெரியவந்தது. கணேஷ் சென்னைக்கு கூரியர் பார்சல் அனுப்புவதற்காக தினேஷ்குமார் என்பவரிடம் இந்த பேக்கை கொடுத்துள்ளார்.

    அவர் பார்சல் அனுப்பு வதற்காக ஈரோடு ரெயில் நிலையத்துக்கு வந்த போது அந்த பேக்கை மர்ம நபர் யாரோ திருடிச் சென்று விட்டனர். இது குறித்து அவர் ஈரோடு ரெயில்வே நிலையபோலீசில் புகார் கொடுத்து சென்று விட்டார்.

    இந்நிலையில்தான் அந்த பேக் இன்று காலை ஈரோடு ரெயில்வே காலனியில் உள்ள ரெயில்வே மிஸ்டு ஸ்கூல் அருகே கிடந்துள்ளது.

    இதையடுத்து போலீசார் அந்த ‘பேக்’கை கணேஷிடம் ஒப்படைத்தனர், இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

    Next Story
    ×