search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராபின்சன்"

    • இந்த டெஸ்டின் மூலம் கிடைக்கும் புள்ளி இரு அணிகளுக்கும் முக்கியமானதாகும்.
    • இங்கிலாந்து அணியில் ஒரே ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    தர்மசாலா:

    இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் 4 போட்டிகள் முடிவடைந்த நிலையில் 3-1 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை கைப்பற்றி உள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கும் இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நாளை தர்மசாலாவில் தொடங்க உள்ளது.

    இந்தியா ஏற்கனவே தொடரை கைப்பற்றி விட்டாலும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு இந்த டெஸ்டின் மூலம் கிடைக்கும் புள்ளி இரு அணிகளுக்கும் முக்கியமானதாகும். எனவே இந்த போட்டியில் வெற்றி பெற இரு அணிகளும் கடுமையாக போராடும் என்பதால் ரசிகர்கள் மத்தியில் இது எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்நிலையில் இந்த போட்டிக்கான ஆடும் லெவனை இங்கிலாந்து அறிவித்துள்ளது. அதில் ஒரே ஒரு மாற்றமாக கடந்த போட்டியில் விளையாடிய ஒல்லி ராபின்சன் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக மார்க் வுட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

    ஜாக் கிராலி, பென் டக்கெட், ஒல்லி போப், ஜோ ரூட், ஜானி பேர்ஸ்டோவ், பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), பென் போக்ஸ், டாம் ஹார்ட்லி, மார்க் வுட், ஜேம்ஸ் ஆண்டர்சன், சோயிப் பஷீர்.

    • முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 353 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
    • நிதானமாக விளையாடிய ஜெய்ஸ்வால் அரைசதம் அடித்துள்ளார்.

    இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நேற்று ராஞ்சியில் தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 353 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக ஜோ ரூட் 122 ரன்கள் அடித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இந்திய அணி தரப்பில் அறிமுக வீரர் ஆகாஷ் தீப் 3 விக்கெட்டுகளும், ஜடேஜா 4 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

    பின்னர் களமிறங்கிய இந்திய அணியில், தொடர்ச்சியாக விக்கெட்டுகள் விழுந்த நிலையில், நிதானமாக விளையாடிய ஜெய்ஸ்வால் அரைசதம் அடித்து ஆட்டமிழந்தார். இதுவரை இந்திய அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 161 ரன்கள் சேர்த்துள்ளது. இங்கிலாந்து அணி தரப்பில் பஷீர் 4 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.

    • இங்கிலாந்தின் 9-வது பேட்ஸ்மேன் ராபின்சன் அரைசதம் அடித்தார்.
    • ஜடேஜா கடைசி 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.

    இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நேற்று ராஞ்சியில் தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    அறிமுக வீரர் ஆகாஷ் தீப் அபாரமாக பந்து வீச இங்கிலாந்து 57 ரன்னுக்குள் மூன்று விக்கெட்டுகளை இழந்து திணறியது.

    அதன்பின் ஜோ ரூட்- போர்ஸ்டோவ் ஜோடி தாக்குப்பிடித்து 57 ரன்கள் சேர்த்தது. பின்னர் ஜோ ரூட் உடன் பென் போக்ஸ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியும் சிறப்பாக விளையாடி 113 ரன்கள் சேர்த்தது. இதனால் இங்கிலாந்து சரிவில் இருந்து மீண்டது.

    ஜோ ரூட் அபாரமாக விளையாடி சதம் விளாசினார். இதனால் நேற்றைய முதல் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து 7 விக்கெட் இழப்பிற்கு 302 ரன்கள் சேர்த்தது. ஜோ ரூட் 106 ரன்களுடனும், ராபின்சன் 31 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

    இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. ஜோ ரூட் நிதானமாக விளையாட ராபின்சன் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அரைசதம் அடித்த ராபின்சன் 58 ரன்னில் ஆட்டமிழந்தார். அப்போது இங்கிலாந்து 347 ரன்கள் எடுத்திருந்தது. ராபின்சனை ஜடேஜா வீழ்த்தினார்.

    இதே ஓவரில் பஷீரையும் வீழ்த்தினார் ஜடேஜா. அடுத்த ஓவரில் ஆண்டர்சனை வீழ்த்த இங்கிலாந்து 104.5 ஓவரில் 353 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. ஜோ ரூட் 122 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இந்திய அணி சார்பில் ஜடேஜா 4 விக்கெட்டும், ஆகாஷ் தீப் 3 விக்கெட்டும், சிராஜ் 2 விக்கெட்டும், அஸ்வின் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    • இரு அணிகளுக்கும் இடையேயான 4-டெஸ்ட் போட்டி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நாளை தொடங்குகிறது.
    • 3 டெஸ்ட் முடிவில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

    ராஞ்சி:

    பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 5 டெஸ்ட் கொண்ட தொடரில் ஐதராபாத்தில் நடந்த முதல் போட்டியில் இந்திய அணி 28 ரன் வித்தியாசத்தில் அதிர்ச்சிகரமாக தோற்றது. இதற்கு விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் 106 ரன் வித்தியாசத்தில் வென்று பதிலடி கொடுத்தது. ராஜ்கோட்டில் நடந்த 3-வது போட்டியிலும் 434 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 3 டெஸ்ட் முடிவில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

    இரு அணிகளுக்கும் இடையேயான 4-டெஸ்ட் போட்டி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நாளை தொடங்குகிறது. இதற்கான 11 பேர் கொண்ட ஆடும் லெவன் அணியை இங்கிலாந்து அணி அறிவித்துள்ளது.

     

    இங்கிலாந்து அணியில் இரு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. சுழற்பந்து வீச்சாளர் ரேகன் அகமதுக்கு பதில் பஷிர் இடம் பெற்றுள்ளார். வேகப்பந்து வீச்சாளர் மார்க் வுட்டுக்கு பதிலாக ராபின்சன் அணியில் இடம் பிடித்துள்ளார்.

    இந்தியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியின் ஆடும் லெவன்:-

    பென் டக்கெட், சாக் கிராலி, ஒல்லி போப், ஜோ ரூட், ஜானி பேர்ஸ்டோவ், பென் ஸ்டோக்ஸ், பென் ஃபோக்ஸ், ஒல்லி ராபின்சன், ஜேம்ஸ் ஆண்டர்சன், ஷோயப் பஷீர், டாம் ஹார்ட்லி

    • எப்போதும் நீங்கள் சிறந்த வீரர்களுக்கு எதிராக விளையாட விரும்புவீர்கள்.
    • கோலி மிகப்பெரிய ஈகோவை கொண்டுள்ளார்.

    இந்தியா- இங்கிலாந்து அணிகள் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடரின் முதல் டெஸ்ட் வருகிற 25-ம் தேதி தொடங்க உள்ளது. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெற உள்ள அந்த தொடரில் இந்தியாவை அதனுடைய சொந்த மண்ணில் 12 வருடங்கள் கழித்து தோற்கடித்து சாதனை படைக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் இங்கிலாந்து களமிறங்க உள்ளது.

    இந்நிலையில் விராட் கோலியை அவுட்டாக்க ஆர்வமாக இருப்பதாக இங்கிலாந்து வீரர் ராபின்சன் சவால் விடுத்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    எப்போதும் நீங்கள் சிறந்த வீரர்களுக்கு எதிராக விளையாட விரும்புவீர்கள் அல்லவா? நீங்கள் எப்போதுமே சிறந்த வீரர்களை அவுட் செய்ய விரும்புவீர்கள். விராட் கோலி அது போன்ற ஒரு வீரர். அவர் மிகப்பெரிய ஈகோவை கொண்டுள்ளார். குறிப்பாக இந்தியாவில் எதிரணி பவுலர்களை நம்முடைய சொந்த மண்ணில் அதிரடியாக எதிர்கொண்டு பெரிய ரன்கள் குவிக்கலாம் என்று அவர் நினைப்பார்.

    இதற்கு முந்தைய தொடர்களிலும் நாங்கள் மோதியுள்ளோம். எனவே இம்முறையும் அதற்கு ஆவலுடன் காத்திருக்கிறேன். அடுத்த சில வருடங்களில் எங்களுடைய அணியின் வேகப்பந்து வீச்சு கூட்டணிக்கு நான் தலைவராக இருப்பேன் என்பதை உணர்ந்து அதற்கேற்றார் போல் பயிற்சிகளை செய்து வருகிறேன். தற்போது நல்ல முதிர்ச்சியடைந்துள்ள நான் இத்தொடரை மற்றுமொரு சாதாரண தொடராக நினைத்து பயிற்சி எடுக்கிறேன்.

    இவ்வாறு ராபின்சன் கூறினார். 

    ×