search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராஜா எம்.எல்.ஏ."

    • மாணவி முவித்ரா 10 கிலோ மீட்டர் தூரத்தை 27 நிமிடம் 32 வினாடிகளில் கடந்து புதிய சாதனை படைத்தார்.
    • ராஜா எம்.எல்.ஏ., அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் மாணவி முவித்ராவை அழைத்துச் சென்று வாழ்த்து பெற வைத்தார்.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் அருகே உள்ள தலைவன்கோட்டை கிராமத்தை சேர்ந்த ஜெய்கணேசன், கோகிலா தம்பதியரின் மகள் முவித்ரா. 6 வயது மாணவியான இவர் யுனிவர்சல் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் புத்தகத்தில் ஸ்கேட்டிங்கில் முந்தைய சாதனையான சங்கரன்கோவிலை சேர்ந்த ஆதவன் என்ற 7 வயது மாணவன் 10 கிலோமீட்டர் தூரத்தை 32 நிமிடம் 48 வினாடிகளில் கடந்து படைத்த சாதனையை முறியடிக்கும் வகையில் மாணவி முவித்ரா சங்கரன்கோவில் கழுகுமலை சாலையிலிருந்து அழகனேரி வரை 10 கிலோ மீட்டர் தூரத்தை 27 நிமிடம் 32 வினாடிகளில் கடந்து புதிய சாதனை படைத்து யுனிவர்சல் புக் ஆப் ரெக்கார்ட்ல் இடம் பிடித்தார்.

    அதனை தொடர்ந்து தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க.செயலாளர் ராஜா எம்.எல்.ஏ., அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் மாணவி முவித்ராவை அழைத்துச் சென்று வாழ்த்து பெற வைத்தார். அப்போது விவேகானந்தா ஸ்கேட்டிங் மற்றும் யோகா பயிற்சி நிலைய நிறுவனர் சுரேஷ்குமார், ஸ்கேட்டிங் பயிற்சியாளர் பாக்கியராஜ், முவித்ராவின் தாயார் கோகிலா மற்றும் மாஸ்டர் சாந்தனு, கல்பனா ஆகியோர் உடன் இருந்தனர்.

    • குழந்தைகள் வளர்ச்சி திட்ட மருத்துவ அலுவலர் சூர்யா கர்ப்பிணிப் பெண்களுக்கான மருத்துவ ஆலோசனைகளை வழங்கினார்.
    • ராஜா எம்.எல்.ஏ. கலந்து கொண்டு 100 கர்ப்பிணி பெண்களுக்கு சீர்வரிசைகள் வழங்கி வாழ்த்தினார்.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவிலில் சமூகநலம் மற்றும் மகளிர் உரிமைதுறையின் கீழ் செயல்படும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தின் சார்பில் தமிழக அரசு அறிவித்துள்ளபடி கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு நடத்தி சீர்வரிசைகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    மாவட்ட திட்ட அலுவலர் ஜோஸ்பின் சகாய பிரமிளா தலைமை தாங்கினார். குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் சுமதி முன்னிலை வகித்தார். குழந்தைகள் வளர்ச்சி திட்ட மருத்துவ அலுவலர் சூர்யா கலந்து கொண்டு கர்ப்பிணிப் பெண்களுக்கான மருத்துவ ஆலோசனைகளை வழங்கினார்.

    நிகழ்ச்சியில் தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. கலந்து கொண்டு 100 கர்ப்பிணி பெண்களுக்கு சீர்வரிசைகள் வழங்கி வாழ்த்தினார். விழாவில் வார்டு செயலாளர்கள், வீராசாமி, சிவா, வக்கீல் செந்தில், தகவல் தொழில்நுட்ப பிரிவு கணேஷ், ஜெயக்குமார், சங்கரன்கோவில் தெற்கு ஒன்றிய இணைச் செயலாளர் மணிகண்ட பிரபு, ஒன்றிய இளைஞரணி முருகையா பாண்டியன் மற்றும் ஒன்றிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட மேற்பார்வையாளர்கள் மல்லிகா, செல்வம் மற்றும் முத்துப்பாண்டி மற்றும் அங்கன்வாடி பணி யாளர்கள், கர்ப்பிணி பெண்கள், அவர்களுடைய குடும்பத்தினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • நெடுஞ்சாலைத்துறை சாலையில் தண்ணீர் கசிவு ஏற்பட்டு சாலை சேதமாகி வருகின்றது.
    • பணிகளை பொதுமக்கள் பாதிக்காத வண்ணம் 20 நாட்களுக்குள் முடிக்க வேண்டும்.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் நகராட்சியில் அனைத்து வீடுகளுக்கும் தினமும் குடிநீர் வழங்கும் திட்டத்தின் கீழ் குடிநீர் வழங்குவதற்காக புதிய பைப்புகள் அமைக்கும் பணி நடைபெற்று முடியும் தருவாயில் உள்ளது.

    ராஜா எம்.எல்.ஏ. ஆலோசனை

    இந்நிலையில் குடிநீர் வடிகால் வாரியத்தினர் அந்த பணிகளை தாமதமாக செய்து வருவதால் தங்களுக்கு குடிநீர் முறையாக வர வில்லை என பொது மக்கள் புகார் தெரிவித்ததுடன் அதனை சரி செய்ய கோரிக்கை விடுத்தனர்.

    பொதுமக்கள் கோரிக்கையை தொடர்ந்து ராஜா எம்.எல்.ஏ., நகராட்சி அதிகாரிகள் மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள், நெடு ஞ்சாலைத்துறை அதிகாரி களை அழைத்து ஆலோ சனையில் ஈடுபட்டார்.

    ஆலோசனையின் போது குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளுடன் இணைந்து நகராட்சி அதிகாரிகள் மீதமுள்ள புதிய குடிநீர் இணைப்புகள் வழங்கும் பணிகளை இரண்டு துறைகளும் சேர்ந்து விரைந்து முடிக்க வேண்டும் எனவும், நெடுஞ்சாலைத்துறை சாலையில் தண்ணீர் கசிவு ஏற்பட்டு சாலை சேதமாகி வருகின்றது. இதையும் நெடு ஞ்சா லைத்துறை அதிகாரி களும் கலந்து பேசி அவர்கள் வழி காட்டுத லின்படி உடனடி யாக சரி செய்ய வேண்டும்.

    இந்த பணிகளை போர் கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கும் போது, பொதுமக்கள் பாதிக்காத வண்ணம் 20 நாட்க ளுக்குள் முடிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

    ஆலோசனையில் நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் உலக ம்மாள், குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறி யாளர் கனகராஜ், உதவி நிர்வாக பொறியாளர் பிரிய தர்ஷினி, சங்கரன்கோவில் நகராட்சி கமிஷனர் சபா நாயகம், நக ராட்சி மேற்பார் வையாளர் கோமதி நாயகம், நெடுஞ்சா லைத்துறை உதவி பொறி யாளர்கள் பல வேசம், முத்து மணி ஆகி யோர் கலந்து கொண்டனர்.

    • ஆதி திராவிடர் அணி அமைப்பாளர் மாரியப்பன் ஏற்பாட்டில் 100 தட்டுகள், டம்ளர்கள் வழங்கப்பட்டது.
    • தி.மு.க. அரசு பொறுப்பேற்றது முதல் இந்த மருத்துவ மனைக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு வருகின்றது.

    சங்கரன்கோவில்:

    தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு ராஜா எம்.எல்.ஏ. தனது சொந்த நிதியில் இருந்து 500 பெட்ஷீட் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மருத்துவமனை தலைமை மருத்துவர் செந்தில்சேகர் தலைமை தாங்கினார். மருத்துவர் மாரிராஜ், மாவட்ட ஆதி திராவிடர் அணி அமைப்பாளர் கே.எஸ்.எஸ். மாரி யப்பன் ஆகியோர் முன்னி லை வகித்தனர். இதில் தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. கலந்து கொண்டு தனது சொந்த நிதியில் இருந்து அரசு மருத்துவ மனைக்கு 500 பெட் சீட்டுகளை வழங்கினார். மேலும் மாவட்ட ஆதி திராவிடர் அணி அமைப்பாளர் மாரியப்பன் ஏற்பாட்டில் 100 தட்டுகள், டம்ளர்கள் வழங்கப்பட்டது.

    தொடர்ந்து பேசிய ராஜா எம்.எல்.ஏ, தி.மு.க. அரசு பொறுப்பேற்றது முதல் இந்த மருத்துவ மனைக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு வருகின்றது. இங்கு நோயாளிகளுக்கு அனைத்து உயர்தர சிகிச்சைகளும் செய்யப்படும் வகையில் பல்வேறு தேவை கள் நிறை வேற்றப் பட்டுள்ளன. இதனை கருத்தில் கொண்டு மருத்து வர்கள், செவிலி யர்கள், மருத்துவமனை பணி யாளர்கள் சிகிச்சைக்காக வரும் நோயாளிகளை குணப்படுத்தி அவர்களை நலமுடன் வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்றார். நிகழ்ச்சி யில் நகர துணை செய லாளர்கள் முத்துக்குமார், சுப்புத்தாய், வீரமணி, ஜெயக்குமார், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் உலக அளவிலான யோகா போட்டிக்கு தேர்வாகியுள்ளனர்.
    • மாணவ-மாணவிகளுக்கு, எம்.எல்.ஏ. ஏற்பாட்டில் உணவு வழங்கப்பட்டது.

    சங்கரன்கோவில்:

    ஸ்கூல் கேம் ஆக்டிவிட்டி டெவலப்மெண்ட் பவுண்டேஷன் சார்பில் தேசிய அளவிலான யோகா போட்டி கடந்த 17-ந் தேதி மதுரை பாத்திமா கல்லூரியில் நடைபெற்றது. இதில் வீ.கே.புதூர் பீனிக்ஸ் யோகா பயிற்சி மையத்தை சேர்ந்த அரசு, தனியார் பள்ளி மாணவ-மாணவிகள் 40 பேர் கலந்து கொண்டனர். அதில், 26 பேர் தங்கம், வெள்ளி, வெண்கல பதக்கங்களை பெற்று நவம்பர் மாதம் நடக்க உள்ள உலக அளவிலான யோகா போட்டிக்கு தேர்வாகியுள்ளனர்.

    தேர்வான மாணவ-மாணவிகள் தங்கள் பெற்ற பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களுடன் தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ.வை சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். தொடர்ந்து மாணவ-மாணவிகள் யோகாசனம் செய்து அசத்தினர். அவர்களுக்கு ராஜா எம்.எல்.ஏ. பதக்கங்களை அணிவித்து சான்றிதழ்கள் வழங்கி கல்வி உபகரணங்களை வழங்கினார். தொடர்ந்து மாணவ-மாணவிகளுக்கு, எம்.எல்.ஏ. ஏற்பாட்டில் உணவு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் யோகா பயிற்சியாளர்கள் மருதுபாண்டி, ரேவதி, மூர்த்தி, கணேஷ், ஜெயக்குமார், கார்த்தி, வக்கீல் செந்தில் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • புதுமண தம்பதிகளுக்கான கருத்தரங்கம் சங்கரன்கோவிலில் நடந்தது.
    • சத்தான உணவுகளை உட்கொண்டு ஆரோக்கியமாக இருக்க வேண்டும்.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் பொது வட்டார ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் சார்பில் புதுமண தம்பதிகளுக்கான கருத்தரங்கம் சங்கரன்கோவிலில் நடந்தது. குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் சுமதி தலைமை தாங்கினார்.

    குழந்தை பராமரிப்பு

    தொடர்ந்து மருத்துவ அலுவலர்கள் மகாலட்சுமி மற்றும் சூர்யா ஆகியோர் புதுமண தம்பதிகளுக்கு பாது காப்பான தாய்மை, கர்ப்பகால பராமரிப்பு, தாய்ப்பாலின் நன்மைகள், குழந்தை பராமரிப்பு, மகப்பேறு நலஉதவி திட்டங்கள் மற்றும் ஒரு குழந்தையின் முதல் 1,000 நாட்கள் வளர்ச்சி குறித்து ஆலோசனை வழங்கினர். இதில் தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசியதாவது:-

    இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் முதன்மையாக குழந்தைகளின் ஊட்டச்சத்து அதிகரிக்க வேண்டும் எனும் முனைப்பில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார். புதுமணத் தம்பதிகள், பெண்கள் கருவுற்று இருக்கும் நிலையில் இப்பொழுது இருந்தே தாய் ஆரோக்கியம் மற்றும் உங்கள் குழந்தையின் ஆரோக்கியத்தை பேணி பாதுகாக்க வேண்டும்.

    ஊட்டச்சத்து குறைபாடு

    குழந்தைகளை ஊட்டச்சத்து குறைபாடு இல்லாமல் வளர்க்க வேண்டும் இதற்கு ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்ட அதிகாரிகள், அலுவலர்கள் வழங்கும் ஆலோசனைகளை கேட்டு நல்ல சத்தான உணவுகளை உட்கொண்டு நீங்களும், உங்கள் குழந்தையும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் பேரூர் செயலாளர் மாரிமுத்து, மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு உறுப்பினர் சங்கர், மாணவரணி வீரமணி, வக்கீல் சதீஷ், ஜான் ஜெயக்குமார் மேற்பார்வை யாளர்கள் மல்லிகா, செல்வம், ராஜே ஸ்வரி, குழந்தை நல பணி யாளர்கள் மற்றும் புதுமண தம்பதிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • ராஜா எம்.எல்.ஏ. பொதுமக்களுக்கு மகளிர் உரிமை திட்டம் குறித்த விழிப்புணர்வு பிரசுரங்கள் வழங்கினார்.
    • தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் அண்ணா பிறந்தநாள் நிகழ்ச்சி நடந்தது.

    சங்கரன்கோவில்:

    தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் அறிஞர் அண்ணா பிறந்தநாள் நிகழ்ச்சியை முன்னிட்டு திராவிட மாடல் அரசின் சாதனைகள் குறித்த துண்டு பிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சி சங்கரன்கோவிலில் நடந்தது. மாவட்ட அவை தலைவர் பத்மநாதன் தலைமை தாங்கினார். இதில் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. கலந்துகொண்டு பொதுமக்களுக்கு மகளிர் உரிமை திட்டம் குறித்த விழிப்புணர்வு பிரசுரங்கள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் வீரா, வீர மணிகண்டன், கோமதிநாயகம், ஆறுமுகம், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    மேலும், தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் அண்ணா பிறந்தநாள் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட அவை தலைவர் பத்மநாதன் தலைமை தாங்கினார். தலைமை செயற்குழு உறுப்பினர் யூ.எஸ்.டி. சீனிவாசன், மாவட்ட துணை செயலாளர்கள் மனோகரன், ராஜதுரை, ஒன்றிய செயலாளர்கள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. கலந்துகொண்டு அண்ணா படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து பொதுமக்களுக்கு மகளிர் உரிமை திட்டம் குறித்த விழிப்புணர்வு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் முகேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • தேசிய தரச்சான்று வழங்குவதற்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் ஆய்வு நடக்க உள்ளது.
    • சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் பல்வேறு மருத்துவ அறுவை சிகிச்சைகளை மருத்துவ குழுவினர் செய்து வருகின்றனர்.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் தற்போது பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு வருகிறது. தி.மு.க. எம்.எல்.ஏ.வாக ராஜா வெற்றி பெற்றது முதல் சங்கரன்கோவில் மருத்துவ மனைக்கு தேவையான வசதி களை ஏற்படுத்தி தர வேண்டுமென அமைச்சர்கள், அதிகாரிகளிடம் வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. வைத்த கோரிக்கையின் அடிப்படையில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது.

    காசநோய் கண்டறியும் கருவி, ரூ. 9 கோடியில் மருத்துவ கட்டிடங்கள், தீவிர சிகிச்சை பிரிவு, சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து 500 படுக்கை வசதிகள் மற்றும் படுக்கை விரிப்புகள், நீர்த்தேக்கத் தொட்டி, ரூ. 25 லட்சம் மதிப்பீட்டில் சலவை கூடம், ரூ. 25 லட்சம் மதிப்பீட்டில் சலவை எந்திரம் மற்றும் சி.டி. ஸ்கேன் வசதி, அனைத்து வகையான நோய்களுக்கும் சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் வருகிற 21, 22, 23-ந் தேதிகளில் தேசிய தரச்சான்றுவழங்குவதற்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் ஆய்வு நடக்க உள்ளது. இந்த ஆய்வை முன்னிட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையை ராஜா எம்.எல்.ஏ. ஆய்வு செய்து மருத்துவர்கள் உடன் ஆலோசனை நடத்தினார்.

    தொடர்ந்து மருத்துவமனையின் அனைத்து பகுதிகளுக்கும் சென்று நடைபெற்று வரும் பணிகள், நடத்த முடிந்த பணிகள் உள்ளிட்டவைகளை ஆய்வு செய்தார். அதனை தொடர்ந்து ராஜா எம்.எல்.ஏ., பேசியதாவது:-

    சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சி.டி. ஸ்கேன் வசதி விரைவில் ஏற்படுத்தப்படும். அதற்கான பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. எனவே தனியார் மருத்துவமனைகளுக்கு இணையாக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் அனைத்து வகையான சிகிச்சைகளையும் பெறலாம்.

    தற்போது சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் தைராய்டு, குடலிறக்கம், கடுமையான எலும்பு முறிவு, மார்பக புற்றுநோய் கட்டி அகற்றல், ஹீமோதெரபி உள்ளிட்ட பல்வேறு மருத்துவ அறுவை சிகிச்சைகளை மருத்துவ குழுவினர் செய்து வருகின்றனர். டான்சில் அறுவை சிகிச்சை என்பது மாவட்ட தலைமை மருத்துவமனை அல்லது மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் செய்யப்பட்டுள்ள நிலையில் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் 2 நோயாளி களுக்கு வெற்றிகரமாக தைராய்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு பாதிக்கப்பட்ட நோயாளிகள் தற்போது முழு குணமடைந்து உள்ளனர். இந்த அறுவை சிகிச்சையை செய்து முடித்த சங்கரன்கோவில் மருத்து வமனை மருத்துவர்க ளுக்கு பாராட்டு தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ஆய்வின் போது தென்காசி மாவட்ட மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் ஜெஸ்லின், அரசு சங்கரன்கோ வில் மருத்துவமனை தலைமை குடிமை மருத்துவர் செந்தில் சேகர், தி.மு.க. மாணவரணி வீரமணி, மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு உறுப்பினர் சங்கர், வக்கீல் சதீஷ், ஜெயக்குமார், பிரகாஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • பொதுமக்களுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து ராஜா எம்.எல்.ஏ.கேட்டறிந்தார்.
    • முகாமில் பரிசோதனைகள் செய்யப்பட்டு பாதிப்புள்ள நபர்களுக்கு இலவசமாக மாத்திரைகள் வழங்கப்பட்டது.

    சங்கரன்கோவில்:

    தென்காசி தி.மு.க. வடக்கு மாவட்ட மருத்துவர் அணி சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சங்கரன் கோவிலில் உள்ள 36 கிராம சேனை தலைவர் பள்ளியில் இலவச மருத்துவ முகாம் நடந்தது.

    ராஜா எம்.எல்.ஏ.

    தென்காசி வடக்கு மாவட்ட மருத்துவர் அணி அமைப்பாளர் மணிகண்டன் தலைமை தாங்கினார். மருத்துவரணி தலைவர் சுமதி முன்னிலை வகித்தார்.

    இதில் தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பொதுமக்களுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார்.

    முகாமில் பொது மக்களுக்கு சர்க்கரை நோய், பொது மருத்துவம், நரம்பு சம்பந்தப்பட்ட நோய்கள், இருதய நோய்கள், முதுகு வலி, மூட்டு தேய்மானம், மகளிர் நல ஆலோசனை உள்ளிட்ட அனைத்து வகையான பரிசோதனைகள் செய்யப்பட்டு பாதிப்புள்ள நபர்களுக்கு இலவசமாக மாத்திரைகள் வழங்கப் பட்டது.

    கலந்து கொண்டவர்கள்

    நிகழ்ச்சியில் தலைமை செயற்குழு உறுப்பினர் தங்கவேலு, மாநில மருத்துவ அணி துணைச் செயலாளர் டாக்டர் செண்பக விநாயகம், , மாவட்ட விவசாய அணி தலைவர் வெள்ளைத்துரை, மாவட்ட ஆதிதிராவிடர் அணி அமைப்பாளர் கே.எஸ்.எஸ்.மாரியப்பன், மருத்துவரணி துணை தலைவர் பேச்சியம்மாள், துணை அமைப்பாளர் முத்துக்குமார், மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் வீமராஜ்,

    வக்கீல்கள் நேரு, ஜெயக்குமார், தகவல் தொழில்நுட்ப பிரிவு சிவாஜி, கணேஷ், மானூர் வடக்கு ஒன்றிய இளைஞரணி முத்தமிழ், ஜெயகுமார், ஜான் மருத்துவர்கள் மணிகண்டன், சுமதி, சத்தியபாலன், செல்வமாரி, பேச்சியம்மாள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மருத்துவ முகாமில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று பயனடைந்தனர்.

    • ஆய்வின்போது கட்டிடங்களின் தரம் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
    • பஸ் நிலையப் பணிகள் 9 மாதங்களுக்குள் முடிவடைந்து விடும்.

    சங்கரன்கோவில்:

    தமிழ்நாடு சட்டமன்ற பேரவை உறுதிமொழிக்குழு தலைவர் வேல்முருகன் தலைமையில், சங்கரன் கோவிலில் புதிதாக கட்டப்பட்டு வரும் பஸ் நிலையத்தை உறுதி மொழிக்குழு உறுப்பினர்கள் ஆய்வு செய்தனர்.

    இதில் தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன், தமிழ்நாடு சட்டமன்ற பேரவை செயலர் சீனிவாசன், தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ., டி.ஆர்.ஓ. பத்மாவதி, தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாம்சன், உறுதி மொழிக்குழு உறுப்பினர்கள் அண்ணாதுரை, அருள், மோகன், ராமலிங்கம், வில்வநாதன், ஜெயகுமார், சதன் திருமலை குமார், ஆகியோர் கலந்து கொண்டு ஆய்வு நடத்தினர்.

    தொடர்ந்து கட்டிடங்களின் தரம் உள்ளிட்ட வைகள் குறித்து ஆலோசனை நடத்தினர். அப்போது சட்டமன்ற உறுதிமொழி குழு தலைவர் வேல்முருகன் பேசுகையில், சங்கரன்கோவில் பஸ் நிலையப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. 9 மாதங்களுக்குள் பணிகள் முடிவடைந்து விடும் என்றார்.

    தொடர்ந்து நெல்லை நகராட்சி மண்டல இயக்குனர் விஜயலட்சுமி, சங்கரன்கோவில் ஆர்.டி.ஓ. சுப்புலட்சுமி, நகராட்சி கமிஷனர் சபாநாயகம், பொறியாளர் எட்வின், ஒப்பந்ததாரர் விக்னேஷ் ஆகியோர்களிடம் தரமான முறையில் எதிர்காலத்தில் எந்தவித பாதிப்பும் இல்லாத வகையில் கட்டிட பணிகளை முறையாக நடக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென வேல்முருகன் கேட்டுக்கொண்டார்.

    ஆய்வில் நகராட்சி சுகாதார அலுவலர் பாலச்சந்தர் மற்றும் அரசு துறை அதிகாரிகள்பலர் கலந்து கொண்டனர்.

    • நெல்லை போக்குவரத்து மண்டல மேலாளர் மகேந்திரகுமாரை ராஜா எம்.எல்.ஏ. சந்தித்து மனு அளித்தார்.
    • சங்கரன்கோவில்-நெல்லை இடையே குளிர்சாதன பஸ்கள் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    சங்கரன்கோவில்:

    தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. நெல்லை போக்குவரத்து மண்டல மேலாளர் மகேந்திரகுமாரை சந்தித்து மனு அளித்தார். அதில் கூறியுள்ளதாவது:-

    சங்கரன்கோவிலில் இருந்து சுரண்டை வழியாக கேரள மாநிலம் கொட்டாரக்கரை வரை புதிய பஸ்கள் மற்றும் சங்கரன்கோவிலில் இருந்து தென்காசிக்கு இடைநில்லா ஒன்-டு-ஒன் பஸ் மற்றும் சங்கரன்கோவில் - நெல்லை குளிர்சாதன பஸ்கள் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

    அப்போது தி.மு.க. ஒன்றிய செயலாளர் பெரியதுரை, நகர செயலாளர் பிரகாஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • உயர்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டும் பணிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி ஆட்கொண்டார்குளம் கிராமத்தில் நடந்தது.
    • நிகழ்ச்சியில் ராஜா எம்.எல்.ஏ. கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார்.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் அருகே உள்ள ஆட்கொண்டார்குளம் கிராமத்தில் ரூ. 21.6 லட்சம் மதிப்பீட்டில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட உயர்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டும் பணிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி நடந்தது. யூனியன் சேர்மன் லாலா சங்கரபாண்டியன் தலைமை தாங்கினார். பஞ்சாயத்து தலைவர் பாக்கியம் முன்னிலை வகித்தார்.

    இதில் தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் கிளை செயலாளர்கள் பழனிசாமி, ராசையா, ஒன்றிய இளைஞரணி துணை செயலாளர் பட்டறைச்சாமி, மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் சங்கரபாண்டி மற்றும் நாட்டாமைகள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×