search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரவீந்திர ஜடேஜா"

    • டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் ஜடேஜா இடம்பெறவில்லை.
    • ஜடேஜா இல்லாதது இந்திய அணிக்கு பெரிய இழப்பு என இலங்கை அணி முன்னாள் கேப்டன் ஜெயவர்தனே கூறினார்.

    புதுடெல்லி:

    இந்திய அணியின் ஆல்ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா முழங்கால் அறுவை சிகிச்சை செய்து கொண்டதால்ர, டி20 உலக கோப்பை அணியில் அவரது பெயர் இடம் பெறவில்லை.

    இந்நிலையில், டி 20 உலக கோப்பை அணியில் ஜடேஜா இல்லாதது குறித்து ஐ.சி.சி. ரிவ்யூ நிகழ்ச்சியில் இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் ஜெயவர்தனே கூறியதாவது:

    ஜடேஜா 5-வது இடத்தில் மிகச் சிறப்பாக செயல்பட்டு வந்தார். அவரும் பாண்டியாவும் சிறந்த ஆல் ரவுண்டர்கள். அவர்களால் இந்திய அணிக்கு வலுவான பேட்டிங் ஆர்டர் இருந்தது. அவர் இருந்தபோது அணியின் பேட்டிங் வரிசை மிகச்சிறப்பாக இருந்தது.

    ஜடேஜா காயத்தால் விலகியபின் அணியில் இடது கை ஆட்டக்காரர் வேண்டும் என்பதாலே தினேஷ் கார்த்திக்குக்கு பதிலாக ரிஷப் பண்டை அணி 4வது அல்லது 5வது வரிசையில் ஆட தேர்வு செய்தது. உலக கோப்பையில் இந்திய அணி 4 அல்லது 5-வது வரிசையில் யாரை ஆட வைக்கலாம் என தேர்வு செய்ய வேண்டும்.

    ஜடேஜா இல்லாதது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவு, அவர் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் நல்ல நிலையில் இருந்தார். அவர் இல்லாதது அணிக்கு பெரிய இழப்பு என தெரிவித்தார்.

    • முழங்கால் காயம் காரணமாக ஆசிய கோப்பையிலிருந்து ஜடேஜா விலகியுள்ளார்.
    • டி20 உலக கோப்பையிலும் ஜடேஜா விளையாட மாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.

    புதுடெல்லி:

    இந்திய அணியின் ஆல்ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா ஆசிய கோப்பையில் விளையாடி வந்தார். முழங்காலில் ஏற்பட்ட காயத்தால் அவர் ஆசிய கோப்பை தொடரில் இருந்து விலகியுள்ளார். அவருக்கு பதிலாக அக்சர் படேலை பிசிசிஐ அறிவித்துள்ளது.

    இந்நிலையில், ரவீந்திர ஜடேஜாவுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொண்டதில் காயத்தின் அளவு அதிகரித்திருப்பது தெரிய வந்துள்ளது. இதனால் அவர் முழங்கால் அறுவை சிகிச்சை மேற்கொள்ள உள்ளார். அறுவை சிகிச்சைக்கு பிறகு அவர் காயத்தில் இருந்து மீண்டு வர மூன்றிலிருந்து ஆறு மாதங்கள் ஆகும் என தெரியவந்துள்ளது.

    மேலும், சர்வதேச போட்டியில் விளையாடுவதற்கு முன்பு போதிய காலம் தேவைப்படும் என்பதால், அக்டோபரில் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலக கோப்பை தொடரில் விளையாடமாட்டார் என தெரிய வந்துள்ளது.

    ஜடேஜா டி20 உலக கோப்பையில் விளையாட முடியாதது இந்திய அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.

    • ஆசிய கோப்பையில் இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ஜடேஜா காயம் காரணமாக விலகினார்.
    • அவருக்கு பதிலாக அக்சர் படேல் அணியில் சேர்க்கப்பட்டு உள்ளார்.

    துபாய்:

    இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் உள்பட 6 நாடுகள் கலந்துகொள்ளும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி துபாயில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் மற்றும் ஹாங்காங் ஆகிய நாடுகள் மோதுகின்றன.

    இந்திய அணி தான் ஆடிய 2 போட்டிகளில் வென்று சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

    இந்நிலையில், இந்திய அணியின் ஆல் ரவுண்டர்களில் ஒருவரான ரவீந்திர ஜடேஜா முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஆசிய கோப்பையில் இருந்து விலகியுள்ளார்.

    ஜடேஜாவுக்கு பதிலாக அக்சர் படேல் சேர்க்கப்பட்டுள்ளார் என பி.சி.சி.ஐ. அறிக்கை வெளியிட்டுள்ளது.

    • ஆசிய கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் 4 சுழற்பந்து வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.
    • 20 ஓவர் போட்டியை பொறுத்தவரை சுழற்பந்து வீரர்களில் யசுவேந்திர சாஹல் தான் பொருத்தமானவர்.

    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட் அணியில் அஸ்வின், அக்‌ஷர் படேல், ஜடேஜா, யசுவேந்திர சாஹல், குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர், வருண் சக்கரவர்த்தி, ரவிபிஷ்னோய் ஆகியோர் சுழற்பந்து வீரர்களாக உள்ளனர்.

    தொடரை பொறுத்தும், திறமையை பார்த்தும் அவர்களது தேர்வு இருக்கிறது. இவர்களில் யாரெல்லாம் 20 ஓவர் உலக கோப்பை அணியில் இடம்பெற போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது.

    ஆசிய கோப்பை போட்டிக்கான அணியில் அஸ்வின், ஜடேஜா, யுசுவேந்திர சாஹல், ரவிபிஷ்னோய் ஆகிய 4 சுழற்பந்து வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.

    இந்த போட்டியின் அடிப்படையில் தான் ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் 20 ஓவர் உலக கோப்பைக்கான இந்திய அணி தேர்வு இருக்கும்.

    இந்த நிலையில் உலக கோப்பையில் ஜடேஜாவால் விக்கெட்டுகளை எடுக்க முடியாது என்று முன்னாள் தொடக்க வீரரும், டெலிவிஷன் வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    20 ஓவர் உலக கோப்பை அணியில் ஜடேஜா இடம் பெற்றாலும் அவரால் அதிக விக்கெட்டுகளை எடுக்க முடியாது. 2021 உலக கோப்பைக்கு பிறகு விளையாடிய 7 போட்டிகளில் அவர் 4 விக்கெட்டுகளை மட்டுமே எடுத்துள்ளார். அவருடைய பவுலிங் சராசரி 43க்கு மேல் உள்ளது. ஒரு ஓவருக்கான ரன்னும் அதிகமாக இருக்கிறது.

    அவர் மட்டுமின்றி அக்‌ஷர் படேல், அஸ்வினும் 20 ஓவர் போட்டிகளில் விக்கெட் கைப்பற்றும் பவுலர்களாக இல்லை. அக்‌ஷர் படேல் கடந்த உலக கோப்பைக்கு பிறகு 13 போட்டிகளில் 12 விக்கெட்களை கைப்பற்றினார்.

    ஜடேஜா, அஸ்வின், அக்‌ஷர் படேல் ஆகிய 3 பேரால் 2 போட்டிகளுக்கு ஒரு விக்கெட்டை தான் எடுக்க முடிகிறது. 20 ஓவர் போட்டியை பொறுத்தவரை சுழற்பந்து வீரர்களில் யசுவேந்திர சாஹல் தான் பொருத்தமானவர். 

    அவருக்கு அடுத்தபடியாக அணியின் பொருத்த மான சுழற்பந்து வீச்சாளர் யார் என்பதை தீர்மானிப்பது கடினமாக இருக்கும்.

    இவ்வாறு ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.

    • இந்தியா 2 விக்கெட்டுக்கு 53 ரன் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் சிறிது பாதிக்கப்பட்டது.
    • ரிஷப் பண்ட், ரவீந்திர ஜடேஜா ஜோடி 6-வது விக்கெட்டுக்கு 222 ரன்கள் சேர்த்து அசத்தியது.

    பர்மிங்காம்:

    இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி பர்மிங்காம் நகரில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

    அதன்படி இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக புஜாரா, ஷுப்மன் கில் ஜோடி களமிறங்கியது. கில் 17 ரன்னிலும், புஜாரா 13 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அப்போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் சிறிது பாதிக்கப்பட்டது. மழை நின்றதும் ஆட்டம் தொடர்ந்து நடைபெற்றது. விகாரி 20 ரன்னிலும், விராட் கோலி 11 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். ஸ்ரேயஸ் அய்யர் 15 ரன்னில் ஆண்டர்சன் பந்துச்சில் விக்கெட் கீப்பர் பில்லிங்சிடம் பிடிபட்டார். இதனால் இந்திய அணி 100 ரன்னுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.

    அடுத்து இறங்கிய ரிஷப் பண்ட், ரவீந்திர ஜடேஜா ஜோடி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இருவரும் இணைந்து ரன் சேகரிப்பில் ஈடுபட்டனர். தேநீர் இடைவேளையில் இந்தியா 5 விக்கெட்டுகளை இழந்து 174 ரன்களை எடுத்தது.

    தொடர்ந்து ஆடிய ரிஷப் பண்ட் அதிரடியாக ஆடி சதமடித்தார். ஜடேஜா அரை சதம் கடந்தார். அணியின் எண்ணிக்கை 320 ஆக இருந்தபோது ரிஷப் பண்ட் 146 ரன்னில் ஆட்டமிழந்தார். ஷர்துல் தாக்குர் ஒரு ரன்னில் அவுட்டானார்.

    முதல் நாள் முடிவில், இந்திய அணி 73 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 338 ரன்கள் குவித்தது. ஜடேஜா 83 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    இங்கிலாந்து சார்பில் ஆண்டர்சன் 3 விக்கெட், மேட்டி பாட்ஸ் 2 விக்கெட் வீழ்த்தினர்.

    ×