search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "யாகசாலை"

    • கோவில் அருகில் குண்டங்கள் அமைக்கப்பட்டு 4 கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது.
    • விநாயகருக்கு அபிஷேகம் நடைபெற்று, தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    மெலட்டூர்:

    பாபநாசம் அடுத்த மெலட்டூர் அடிச்சேரி தெருவில் மாணிக்க விநாயகர் கோவில் உள்ளது.

    இக்கோ விலில் கும்பாபி ஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு பரம்பரை அறங்காவலர் பாலசுப்ரமணியன் குடும்பத்தினர் மற்றும் கிராமமக்கள் உதவியால் திருப்பணிகள் நடைபெற்றது.

    பணிகள் முடிவடைந்த நிலையில் நேற்று கும்பாபி ஷேக விழா நடைபெற்றது.

    முன்னதாக கோவில் அருகில் குண்டங்கள் அமைக்க ப்பட்டு 4 கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது.

    அதனை தொடர்ந்து, கடம் புறப்பாடு நடைபெற்று, கோவிலை சுற்றி ஊர்வலமாக வந்து மூலவர் மாணிக்க விநாயகர் கோபுர கலசத்திற்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.

    பின், விநாயகருக்கு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்று, தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    கும்பாபிஷேக ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் பாலசுப்ர மணியன் குடும்பத்தினர் மற்றும் அடிச்சேரி தெரு கிராமமக்கள் செய்திருந்தனர்.

    • கடந்த 18-ந் தேதி யாகசாலை பூஜைகள் தொடங்கி நடைபெற்றன.
    • கடங்கள் புறப்பாடு செய்யப்பட்டு கோவிலை வலம் வந்து விமான கலசத்தை வந்தடைந்தன.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம் பாண்டூர் கிராமத்தில் பாலாம்பிகா சமேத ஆதி வைத்தியநாத சுவாமி கோவில் உள்ளது.

    பஞ்ச வைத்தியநாத ஸ்தலங்களில் 2-வது தளமான கோவிலில் பஞ்சபாண்டவர்கள் சுவாமியை பூஜித்து வேண்டிய வரங்களை பெற்றுள்ளனர்.

    மாணிக்க வாசகரால் போற்றி பாடல் பெற்ற இக்கோவிலின் திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டு நேற்று காலை கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    கும்பாபி ஷேகத்தை முன்னிட்டு கடந்த 14ஆம் தேதி பூர்வாங்க பூஜைகளும் 18 ஆம் தேதி யாக கால பூஜைகளும் தொடங்கி நடைபெற்றன.

    நேற்று காலை நான்காம் கால யாகசாலை பூஜைகள் நிறைவடைந்து. மகாபூர்ணாஹூதி மற்றும் தீபாராதனை நடைபெற்றது.

    தொடர்ந்து யாகசாலையில் இருந்து கடங்கள் புறப்பாடு செய்யப்பட்டு கோவிலை வளம் வந்து விமானங்களை அடைந்தன.

    இதனை அடுத்து வேத மந்திரங்கள் ஓத மங்கள வாத்தியங்கள் இசைக்க சிவாச்சாரியார்கள் விமான கலசங்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர்.

    இதனை தொடர்ந்து சுவாமி, அம்பாளுக்கு மகா கும்பா பிஷேகம் நடைபெற்றது.

    பின்னர் அபிஷேக ஆராத னைகள் நடை பெற்றன.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    கும்பா பிஷேகத்தை மயிலாடுதுறை சிவபுரம் வேத சிவ ஆகம பாடசாலை முதல்வர் சுவாமிநாத சிவாச்சாரியார் தலைமையிலானோர் நடத்தி வைத்தனர்.

    முன்னதாக சித்தி விநாயகர் கோவில் கும்பா பிஷேகம் நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில் விழா குழுவினர் கிராம மக்கள் ஆகியோர் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • முதற்கால யாகசால பூஜையுடன் தொடங்கி பூர்ணாஹூதி நடைபெற்றது.
    • பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம், கீழ்வேளூர் அடுத்த பெருங் கடம்பனூரில் காத்தவராயன் சாமி கோவில் உள்ளது.

    இக்கோவிலில் கும்பாபி ஷேக விழா கடந்த 19-ந் தேதி கணபதி பூஜையுடன் தொடங்கியது.

    தொடர்ந்து, பாலினக பூஜை, வாஸ்து சாந்தி பூஜை, முதற்கால யாகசால பூஜையுடன் பூர்ணாஹூதி நடைபெற்றது.

    அதனைத் தொடர்ந்து, நேற்று 2-ம் கால யாகசால பூஜைகள் முடிவடைந்தவுடன், மகா பூர்ணாஹூதி நடைபெற்று, மங்கல வாத்தியங்கள் முழங்க கடம் புறப்பாடு நடைபெற்றது.

    பின், சிவாச்சாரியர்கள் கடத்தை சுமந்து கோவிலை சுற்றி வந்து வேதமந்திரங்கள் முழங்க கோபுர கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    பின்னர், புனிதநீர் பக்த்கள் மீது தெளிக்கப்பட்டது.

    அதனைத் தொடர்ந்து சுந்தர விநாயகர், காத்தவராயன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று, மகா தீபாராதணை காண்பிக்கப்பட்டது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    கலந்து கொண்ட பக்தர்களுக்கு நாகப்பட்டினம் தமிழ் சேவா சங்கம் சார்பில் அன்ன தானம் வழங்கப்பட்டது.

    • கடந்த 11-ந் தேதி கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜைகள் தொடங்கியது.
    • விமான கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    கும்பகோணம்:

    கும்பகோணம் அருகே கல்லூர் கிராமத்தில் கிபி 9ஆம் நூற்றாண்டில், சோழர் சாம்ராஜ்யத்தின் தலைநகராக இருந்து கும்பகோணத்திலிருந்து எட்டு கிலோமீட்டர் தொலைவில் வடக்கு திசையில் அமைந்துள்ள ஒரு அழகான கிராமமாகும்.

    பண்டைய காலங்களில் சிவலோகபுரம் என்று அழைக்கப்பட்ட இந்த கிராமத்தின் தெற்கு புறத்தில் புண்ணிய நிதியான காவிரி நதியும், வடக்கு புறத்தில் கொள்ளிடமும் அமைய பெற்றுள்ளது.

    மூர்த்தி, தலம், தீர்த்தம், ஆகிய மூன்றிலும் பிரசித்திமான இந்தக் கல்லூர் கிராமத்தில் மிகவும் பழமை வாய்ந்த ஸ்ரீ சிவலோகநாயகி, சமேத ஶ்ரீ சிவலோகநாதர், ஸ்ரீ லட்சுமி நாராயண பெருமாள், ஸ்ரீ இரட்டை பிள்ளையார், ஆகிய 3 கோவில்களில் பல மாதங்களாக நடைபெற்று

    வந்த, கும்பாபிஷேக திருப்பணிகள் நிறைவு பெற்றதை தொடர்ந்து.

    ஸ்ரீ சிவலோகநாதருக்கு நவகுண்ட பக்ஷமும், ஸ்ரீ சிவலோக நாயகிக்கு பஞ்சகுண்ட பக்ஷமும், பரிவார மூர்த்திகளுக்கு 13 ஏககுண்ட பக்ஷமும், வேத சிவ ஆகம முறைப்படி யாகசாலைகள் அமைக்கப்பட்டு, கடந்த 11ஆம் தேதி கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், லட்சுமி ஹோமம், வாஸ்து சாந்தி, புனிதநீர் கொண்டு வருதலுடன் யாகசாலை பூஜைகள் தொடங்கியது.

    நேற்று நான்காம் கால யாகசாலை பூஜைகள் நிறைவில், மகா பூர்ணாஹதியும், அதனை தொடர்ந்து நாதஸ்வர மேள தாள மங்கல வாத்தியங்கள், நந்தி வாத்தியங்கள் முழங்க கடங்கள் புறப்பாடு நடைபெற்றது பின்னர், கோபுர கலசங்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட பின்னர், புனித நீர் நிரப்பிய கடங்களில் இருந்த ஓரே சமயத்தில் விமான கலசங்களுக்கு புனிதநீர் ஊற்ற, மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது,

    இதில் ஏராளமான பெண்கள் உட்பட பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஊராட்சி மன்ற தலைவர் சங்கர் தேவர், கல்லூர் ராமர், மற்றும் ஊராட்சி உறுப்பினர்கள் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் அறங்காவலர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

    • கடந்த 29- ந்தேதி விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமத்துடன் குடமுழுக்கு விழா தொடங்கியது.
    • 108 சிவாச்சாரியார்கள் யாகசாலை பூஜைகளை தொடங்கினர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் சிக்கலில் சிங்காரவேலவர் கோவில் அமைந்துள்ளது.

    பல்வேறு சிறப்புகளைப் பெற்ற சிக்கல் சிங்காரவேலவர் கோவிலுக்கு குடமுழுக்கு நடத்த முடிவு செய்யப்பட்டு அதற்கான திருப்பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தன.

    அதன்படி கடந்த வரும் 29- ந்தேதி விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமத்துடன் குடமுழுக்கு விழா தொடங்கியது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான முதல் கால யாகசாலை பூஜை நேற்று முன்தினம் இரவு தொடங்கியது.

    இதற்காக 52 யாக குண்டங்கள் அமைக்கப்படு, 108 சிவாச்சாரியார்கள் யாகசாலை பூஜைகளை தொடங்கினர்.

    இதற்காக கோவிலின் மேற்கு பகுதியில் உள்ள பால் குளத்தில் இருந்து புனித நீர் யானை மீது எடுத்து வந்து யாாகசாலையில் வைக்கப்பட்டது.

    இதைத் தொடர்ந்து நேற்று 2-ம் கால யாகசாலை பூஜை பூர்ண பகுதி பூஜை உள்ளிட்டவைகள் நடத்தப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது.

    தொடர்ந்து நாளை (புதன்கிழமை 05.07.2023) காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் கோவில் விமான கலசத்துக்கு புனித நீர் ஊற்றப்பட உள்ளது நடக்கிறது.

    குடமுழுக்கு விழாவையொட்டி 400- க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட உள்ளனர்.

    • தொடர்ந்து, 8 கால யாகசாலை பூஜைகள் நடக்கிறது.
    • பெண்கள் முலைப்பாரி எடுத்து கோவிலின் 4 வீதிகளிலும் ஊர்வலமாக வந்தனர்.

    கும்பகோணம்:

    கும்பகோணம் அருகே திருப்பனந்தாளில் தருமபுர ஆதீனத்திற்கு சொந்தமான பிரஹன்நாயகி அம்பிகை சமேத அருணஜடேஸ்வரர் கோவில் உள்ளது.

    இக்கோவிலில் திருப்பணி கள் முடிவடைந்த நிலையில் வருகிற 7-ந் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது.

    இதற்காக கோவிலின் அருகே 59 யாகம் குண்டங்களுடன் கூடிய பிரமாண்ட யாகசாலை மண்டபம் அமைக்கப்பட்டு, இன்று (3-ந் தேதி) முதல்கால யாகசாலை பூஜைகள் தொடங்கியது.

    தொடர்ந்து, 8 கால யாகசாலை பூஜைகள் நடக்கிறது.

    விழாவை முன்னிட்டு யாகசாலை மண்டபத்தில் புனிதநீர் கலசங்கள் வைக்கும் நிகழ்வு நடந்தது. திருப்ப னந்தாள் மன்னியாற்றில் இருந்து புனிதநீர் கொண்ட கலசங்களுக்கு திருக்கயிலாய பரம்பரை தருமபுர ஆதீனம் 27-வது நட்சத்திர குருமணிகள் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் முன்னிலையில் சிறப்பு பூஜைகள் நடந்தது.

    தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க பூஜிக்கப்பட்ட புனிதநீர் கலசங்கள் யானையின் மீது வைத்து, மேளதாளங்கள் முழங்க, பெண்கள் முலைப்பாரி எடுத்து கோவிலின் 4 வீதிகளிலும் ஊர்வலமாக வந்தனர்.

    அதனைத் தொடர்ந்து, கோவிலின் அருகே அமைக்கப்பட்டிருந்த பிரம்மாண்ட யாகசாலையில் புனிதநீர் கலசங்கள் வைக்க ப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.

    நிகழ்ச்சியில் தருமபுரம் ஆதீனம் கட்டளை தம்பிரான் சுவாமிகள், காசித்திருமட அதிபர் எஜமான் சுவாமிகள், இளவரசு தம்பிரான் சுவாமிகள் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.

    • நாளை 3-ந் தேதி முதல்கால யாகசாலை பூஜைகள் தொடங்குகிறது.
    • சிறப்பு பூஜைகள் நடந்து, தொடர்ந்து, பூர்ணாஹூதி, தீபாராதனை நடந்தது.

    கும்பகோணம்:

    தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அருகே திருப்பனந்தாள் புகழ்பெற்ற ஸ்ரீ பிரஹன்னநாயகி அம்பிகை சமேத அருண ஜடேஸ்வரர் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். திருக்கயிலாய பரம்பரை தருமபுர ஆதீனத்திற்கு சொந்தமானதாக விளங்கும் இக்கோயில் கும்பாபிஷேகம் வருகிற ஜூலை 7-ம் தேதி நடக்கிறது.

    வருகிற 3-ம் தேதி முதல் கால யாக பூஜைகளுடன் தொடங்கி தொடர்ந்து எட்டு காலை யாக பூஜைகள் நடக்கிறது. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு கோயிலில் கணபதி ஹோமம் மற்றும் நவகிரக ஹோமம் நடந்தது.

    தருமபுரம் ஆதீனம் 27 வது நட்சத்திர குருமணிகள் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிய ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் திருமுன்னர் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்களுடன் சிறப்பு பூஜைகள் நடந்தது தொடர்ந்து மகாபூர்ணாஹூதியும் தீபாராதனையும் நடந்தது.

    வருகிற 5ந் தேதி திருவீதி விநாயகர், தேரடி விநாயகர் உள்ளிட்ட பரிவார தெய்வங்கள் மகா கும்பாபிஷேகமும், 6ஆம் தேதி தருமை ஆதீனம் ஊருடையப்பர் கோயில், காசி திருமடம் ஸ்ரீ வீரியம்மன், ஸ்ரீ விஸ்வநாதர் கோயில் உள்ளிட்ட கோயில்களின் கும்பாபிஷேகமும் வருகிற 7ந் தேதி பிரஹன் நாயகி அம்பிகை சமேத அருண ஜடேஸ்வரர் கோயில் மகா கும்பாபிஷேக பெருவிழாவும் வெகு விமரிசையாக நடக்கிறது.

    • யாகசாலை பூஜைகள் கடந்த 27-ந் தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கியது.
    • கும்பாபிஷேகத்தை தொடர்ந்து மூலவருக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது.

    குத்தாலம்:

    மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா அரிவேளூர் கிராமத்தில் ஆனந்தவள்ளி சமேத சுயம்புநாத சுவாமி கோயில் அமைந்துள்ளது.

    மகாவிஷ்ணு இந்த ஊரில் தங்கியிருந்து சிவபெருமானை பூஜித்ததால், ஹரிவாசநல்லூர் என்னும் புராதான பெயரை பெற்றுள்ளது.

    அந்தப் பெயர் காலப்போக்கில் மருவி அரிவேளூர் என்று அழைக்கப்படுகிறது.

    பழமை வாய்ந்த இக்கோயில் புனரமைக்கப்பட்டு 85 ஆண்டுகளுக்குப் பிறகு, திருப்பணிகள் செய்யப்பெற்று மகா கும்பாபிஷேக யாகசாலை பூஜைகள் 27 ஆம் தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கியது.

    நேற்று முன்தினம் இரண்டாம் கால யாகசாலை பூஜையில் தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினார்.

    இந்நிலையில், நான்காம் காலை யாகசாலை பூஜை நடைபெற்று, மகா பூர்ணாகுதி மற்றும் தீபாராதனை செய்யப்பட்டது.

    தொடர்ந்து, சிவாச்சாரியார்கள் புனிதநீர் அடங்கிய கடங்களை தலையில் சுமந்து கோயிலை சுற்றி வந்து, விமான கும்பத்தை அடைந்து அங்கு வேத விற்பன்னர்கள் வேதங்கள் ஓத, மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    தொடர்ந்து மூலவருக்கு மகாபிஷேகம் நடைபெற்றது. யாகசாலை பூஜைகளை ஆலய அர்ச்சகர் பாலசுப்பிரமணிய சிவாச்சாரியார் தலை மையில் சிவாச்சாரியார்கள் செய்தனர்.

    நிகழ்ச்சியில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் குத்தாலம் க.அன்பழகன், அதிமுக முன்னாள் மாவட்ட செயலாளர் வி.ஜி.கே.செந்தில்நாதன், கோயில் செயல் அலுவலர் அன்பரசன் மற்றும் கிராம பிரமுகர்கள், கிராம மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • இன்று காலை 2-ம் கால யாகசாலை பூஜைகள் நடந்தது.
    • வருகிற 29-ந் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது.

    திருநாகேஸ்வரம்:

    கும்பகோணம் அருகே திருநாகேஸ்வரம் ஒப்பிலியப்பன் கோவில் வெங்கடாசலபதி கோவில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும். வருகிற 29-ந் தேதி வெங்கடாசலபதி கோவில், வடக்கு வீதியில் உள்ள ஜெயவீர ஆஞ்சநேயர் கோவிலில் கும்பாபிஷேகம் நடக்கிறது.

    விழாவை முன்னிட்டு நேற்று மாலை கோவில் வளாகத்தில் 28 வேதிகைகள், 34 ஹோம குண்டங்கள் என பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள யாகசாலையில் முதல்கால யாகசாலை பூஜைகள் தொடங்கியது.

    இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 150 வேத விற்பன்னர்கள் வருகை தந்து நான்கு வேதங்களும் படித்தனர்.

    பின்னர், இரவு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    முதல்கால யாகசாலை பூஜையில் பேரூராட்சி தலைவர் ஜோதி தாமரைச்செல்வன், அரசு குரூப்ஸ் தலைவர் திருநாவுக்கரசு, இ.பி. சில்க்ஸ் இ.பி. சேதுராமன், பேரூராட்சி கவுன்சிலர்கள் சங்கீதா வீரகுமார், அபிராமி கார்த்திகேயன், பாலச்சந்திரன், முன்னாள் பேரூராட்சி துணை தலைவர் மகேஸ்வரி துரைராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு வழிபட்டனர்.

    அதனைத் தொடர்ந்து, இன்று காலை 2-ம் கால யாகசாலை பூஜைகள் நடந்தது, பின்னர், மாலை 3-ம் கால யாகசாலை பூஜைகள் நடக்கிறது.

    கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு நேற்று அன்னதானம் வழங்கப்பட்டது.

    விழா ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் கூடுதல் பொறுப்பு சாந்தா, கண்காணிப்பாளர் சக்திவேல் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    • சிறப்பு ஆன்மீக சொற்பொழிவு நாட்டிய நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.
    • கங்கை நீர் வழிந்து ஓடுவது போல் பிரமாண்ட முறையில் அமைக்கப்பட்டுள்ளது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ஸ்ரீ சட்டைநாதர் கோவில் கும்பாபிஷேகம் வரும் 24-ம் தேதி நடைபெற உள்ளது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மேற்கு கோபுரவாயில் நந்தவனத் தோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட யாகசாலை பந்தலில், 82 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    எட்டு கால யாகசாலை பூஜைகள் நடைபெற்று வருகின்றன.

    சுமார் 120 சிவாச்சாரியார்களின் வேத மந்திரங்கள் ஒலிக்க பிரம்மாண்டமான அளவில் யாகசாலைக்கு முகப்பு கோபுரங்களுக்கு இணையாக கயிலாய மலையில் சிவன் பார்வதியுடன் காட்சி அளிக்கும் வண்ணம் ஒருபுறம் கங்கை நீர் வழிந்து ஓடுவது போலவும் பிரம்மாண்டமான முறையில் செட் அமைக்கப்பட்டுள்ளது.

    அது மட்டும் இன்றி ஆலயத்தின் அனைத்து பகுதிகளிலும் கோபுரங்கள் சுற்றுச்சுவர்கள் வண்ண மின் விளக்குகள் மற்றும் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

    சிறப்பு ஆன்மீக சொற்பொழிவு நாட்டிய நிகழ்ச்சி ஆகிய வையும் நடைபெறுகிறது.

    இவற்றைக் காண இரவு நேரங்களில் சீர்காழி மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சார்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் குடும்பத்துடன் வந்திருந்து செல்பி எடுத்து மகிழ்கின்றனர்.

    இந்நிலையில்2ம் கால யாகசாலை பூஜையில் தர்மபுரம் ஆதீனம் மடாதிபதி ஸ்ரீ ல ஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

    • முதல்கால யாகசாலை பூஜைகள் தொடங்கியது.
    • ஜபம், ஹோமம் நடைபெற்று, பின்னர் பூர்ணாஹூதி, மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    சீர்காழி:

    சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட சட்டைநாதர்சுவாமி கோயில் உள்ளது.

    திருநிலை நாயகிஅம்பாள் உடனாகிய பிரம்மபுரீஸ்வ ரர்சுவாமி அருள்பாலி க்கிறார்.

    இங்கு சிவபெருமான் மூன்று நிலைகளில் காட்சித ருகிறார்.

    பிரசித்திப்பெற்ற இக்கோயிலில் வரும் 24ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.

    இதனையடுத்து 8கால யாகசாலை பூஜைகள் சனிக்கிழமை தொடங்கியது.

    சுவாமி, அம்பாள்,தோணியப்பர்,சட்டைநாதர்,முத்துச்சட்டைநாதர் ஆகிய தெய்வங்களுக்கு நவாக்கினியும், பரிவாரங்கள் சேர்த்து 82 யாக குண்டங்கள் அமைக்க ப்பெற்று,120 வேதவி ற்பன்னர்கள் மந்திரங்கள் முழங்கிட யாகசாலை பூஜைகள் தொடங்கியது.முன்னதாக கலாகர்ஷணம், யாத்ராஹோமம், யாகசாலை பிரவேசம் நடந்தது.

    பின்னர் முதல்கால யாகசாலை பூஜைகள் தொடங்கியது. ஜபம், ஹோமம் செய்து பின்னர் பூர்ணாஹூதி, மகாதீபாரா தனை நடந்தது.

    இதில் தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் பங்கேற்று தரிசனம் செய்தார்.

    திருஞானசம்பந்த தம்பிரான் சுவாமிகள், சொக்கலிங்க தம்பிரான் சுவாமிகள், மாணிக்கவாசகர்தம்பிரான் சுவாமிகள், தமிழ் சங்கத்த லைவர் இ.மார்கோனி, காசாளர் செந்தில், மகாலெட்சுமி அம்மாள், உள்ளிட்ட திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

    • 4-ம் கால யாகசாலை பூஜையுடன் தொடங்கி யாகசாலையில் இருந்து கடங்கள் புறப்பட்டது.
    • அத்திமரத்தில் வரையப்பட்ட 27 விமான சித்ர படத்துக்கு கலசாபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    சுவாமிமலை:

    கும்பகோணத்தில் உள்ள பிரசித்தி பெற்ற மங்களாம்பிகை அம்பாள் சமேத ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்துவதற்காக அரசு மற்றும் உபயதாரர்கள் மூலம் ரூ. 8 கோடி மதிப்பில் திருப்பணிகள் தொடங்க முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி, கடந்த 24-ந்தேதி காலை மகா கணபதி, மகாலட்சுமி, நவக்கிரக ஹோமங்கள், அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது. தொடர்ந்து, 25-ந்தேதி தன, கஜ, கோ, அஸ்வ பூஜைகளுடன் முதல் கால யாகசாலை பூஜை நடைபெற்றது.

    அதனைத் தொடர்ந்து, நேற்று 2, 3-ம் கால யாகசாலை பூஜைகளும், மகா பூர்ணாஹுதியும் நடைபெற்றது.

    முக்கிய நிகழ்வான பாலாலய விழா இன்று அதிகாலை 4 மணிக்கு 4-ம் கால யாகசாலை பூஜையுடன் தொடங்கி யாகசாலையில் இருந்து கடங்கள் புறப்பட்டு, அத்திமரத்தில் வரையப்பட்ட 27 விமான சித்ர படத்துக்கு கலசாபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.நிகழ்ச்சி ஏற்பாடுகளை உதவி ஆணையர் சாந்தா, செயல் அலுவலர்கிருஷ்ண குமார் மற்றும் கோவில் பணியாளர்கள், உபயதா ரர்கள் செய்திருந்தனர்.

    ×