search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Yagasalai"

    • 6 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு சிறப்பு வேள்விகளுடன் யாகசாலை பூஜைகள் நடைபெற்றது.
    • தை மாதத்தில் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை திருஇந்தளூரில் 108 வைணவ திவ்ய தேசங்களில் 22 -வது ஆலய மானபரிமள ரெங்கநாதர் ஆலயம் அமைந்துள்ளது.

    காவிரி வடக்கு பகுயில் பெருமாள் பள்ளிகொண்ட நிலையில் அமைந்துள்ள ஸ்ரீரங்கம் ,சாரங்கம் உள்ளிட்ட ஐந்து அரங்கங்க ளில், ஐந்தாவது ஆலயமாக இது போற்றப்படுகிறது.

    இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஆலயத்தின் கும்பாபிஷேகம் கடந்த 2009 -ம் ஆண்டு நடைபெற்றது.

    அதனைத் தொடர்ந்து 14 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேக திருப்பணிகள் துவங்கியுள்ளன.

    இதற்காக கோபுரங்க ளுக்கு பாலாலயம் செய்யும் நிகழ்ச்சி ஆலயத்தில் வெளிப்பிரகாரத்தில் நடை பெற்றது.

    6 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு சிறப்பு வேள்விகளுடன் யாகசாலை பூஜைகள் நடைபெற்றது.

    தொடர்ந்து மகாபூர்ணாகுதி யுடன் பாலாலயம் செய்யப்பட்டது.

    பின்னர் புனித கடங்கள் சுபமுகூர்த்த பந்தல்கால் மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு ஆலய முகப்பில் பந்தல்கால் நடப்பட்டது.

    இந்து அறநிலையத்துறையுடன் ராமானுஜ பக்த கைங்கரிய சபா இணைந்து நடைபெற்ற இந்த திருப்பணியில் தை மாதத்தில் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    மயிலாடுதுறை காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ராஜ்குமார், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன், நகர மன்ற துணைத் சிவகுமார், இந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் முத்துராமன், செயல் அலுவலர் ரம்மியா, மேலாளர் விக்கினேஷ்வரன், நகர கவுன்சிலர் ரிஷி, ஒன்றிய கவுன்சிலர் மோகன் உள்ளிட்ட நூற்றுக்க ணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

    • சிறப்பு ஆன்மீக சொற்பொழிவு நாட்டிய நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.
    • கங்கை நீர் வழிந்து ஓடுவது போல் பிரமாண்ட முறையில் அமைக்கப்பட்டுள்ளது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ஸ்ரீ சட்டைநாதர் கோவில் கும்பாபிஷேகம் வரும் 24-ம் தேதி நடைபெற உள்ளது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மேற்கு கோபுரவாயில் நந்தவனத் தோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட யாகசாலை பந்தலில், 82 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    எட்டு கால யாகசாலை பூஜைகள் நடைபெற்று வருகின்றன.

    சுமார் 120 சிவாச்சாரியார்களின் வேத மந்திரங்கள் ஒலிக்க பிரம்மாண்டமான அளவில் யாகசாலைக்கு முகப்பு கோபுரங்களுக்கு இணையாக கயிலாய மலையில் சிவன் பார்வதியுடன் காட்சி அளிக்கும் வண்ணம் ஒருபுறம் கங்கை நீர் வழிந்து ஓடுவது போலவும் பிரம்மாண்டமான முறையில் செட் அமைக்கப்பட்டுள்ளது.

    அது மட்டும் இன்றி ஆலயத்தின் அனைத்து பகுதிகளிலும் கோபுரங்கள் சுற்றுச்சுவர்கள் வண்ண மின் விளக்குகள் மற்றும் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

    சிறப்பு ஆன்மீக சொற்பொழிவு நாட்டிய நிகழ்ச்சி ஆகிய வையும் நடைபெறுகிறது.

    இவற்றைக் காண இரவு நேரங்களில் சீர்காழி மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சார்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் குடும்பத்துடன் வந்திருந்து செல்பி எடுத்து மகிழ்கின்றனர்.

    இந்நிலையில்2ம் கால யாகசாலை பூஜையில் தர்மபுரம் ஆதீனம் மடாதிபதி ஸ்ரீ ல ஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

    • 24-ந் தேதி காலை அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை உள்ளிட்ட சிறப்பு பூஜைகளுடன் விழா தொடங்குகிறது.
    • 27-ந் தேதி 4-ம் கால யாகசாலை பூஜைகளும் நடக்கிறது.

    கும்பகோணம்:

    கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் நடைபெறும் மகாமக விழா உலக அளவில் பிரசித்தி பெற்றது. பழமையான இந்த கோவிலில் குடமுழுக்கு விழா நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.

    அதன்படி கோவில் விமான பாலாலய விழா வருகிற 24-ந் தேதி (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது.

    இதனை முன்னிட்டு 24-ந் தேதி காலை அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, புன்யா யாகவாசனம், கணபதி ஹோமம் மகாலட்சுமி ஹோமம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகளுடன் விழா தொடங்குகிறது.

    தொடர்ந்து 25-ந் தேதி கோ பூஜை, கஜ பூஜை, அஸ்வ பூஜை உள்ளிட்ட பூஜைகளும் முதல் கால யாகசாலை பூஜைகள் நடக்கிறது.

    26-ந் ேததி 3-ம் கால யாகசாலை பூஜைகளும், 27-ந் தேதி நான்காம் கால யாகசாலை பூஜைகளும் நடக்கிறது.

    தொடர்ந்து கடங்கள் புறப்பாடு நடைபெறுகிறது.

    இதற்கான ஏற்பாடுகளை விமான பாலாலய விழா குழுவினர் மற்றும் மந்திரபீடேஸ்வரி பக்தர்கள் குழுவினர் செய்து வருகின்றனர்.

    • குண்டம் அமைக்கப்பட்டு யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.
    • தீபாராதனை காண்பிக்கப்பட்டு அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

    பூதலூர்:

    திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள திருக்கானூர் ஸ்ரீ கரும்பீஸ்வர சுவாமி திருக்கோவிலில் அமைந்துள்ள பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜை நடைபெற்றது.

    பால், தயிர், சந்தனம், இளநீர் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் நடைபெற்று மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    அதன் பின்னர் அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது. இதில் திராளாக பக்தர்கள் கலந்து கொண்டு பைரவரை வழிபட்டனர்.

    திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள கோவில்பத்து ஸ்ரீ வெற்றிவேல் முருகன் கோவிலில் அமைந்துள்ள ஸ்ரீ சொர்ண பைரவருக்கு தேய்பிறை அஷ்டமியை யொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

    ஸ்ரீ சொர்ண பைரவர் சன்னதியின் முன்பாக யாக குண்டம் அமைக்கப்பட்டு யாகசாலை பூஜைகள் நிறைவேற்றப்பட்டன.

    அதன் பின்னர் தீபாராதனை காண்பிக்கப்பட்டு அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

    • யாக பூஜைகளை தொடர்ந்து கடம் புறப்பாடு நடந்தது.
    • மூலவர் விமானத்திற்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் நெய்க்குப்பை ஊராட்சி வேலங்குடி கிராமத்தில் மகா கணபதி, தர்மசாஸ்தா, தில்லை மகாகாளியம்மன் கோவில் குடமுழுக்கு நடந்தது.

    முன்னதாக யாகசாலை அமைக்கப்பட்டு பல்வேறு பூஜைகள் நடந்தன. நேற்று காலை யாக பூஜைகளை தொடர்ந்து கடம் புறப்பாடு நடந்தது. இதைத்தொடர்ந்து சிவாச்சாரியார்கள் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் மேளதாளங்கள் முழங்க கோவில் வளாகத்தை சுற்றி வந்தனர்.

    பின்னர் மூலவர் விமானத்திற்கு கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து கோவில் கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. இதையடுத்து சாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    இதில் திருமருகல் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை ஊர் முக்கியஸ்தர்கள் செய்திருந்தனர்.

    • முன்னதாக விக்னேஸ்வர பூஜை கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜையில் தொடங்கியது.
    • கடம் புறப்பாடாகி கோவில் கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுகா தென்னடார் கிழக்கு ஆமைகுளத்து ஐயனார் கோவில் தனி சன்னதியில் ஆஞ்சநேயர் அருள் பாலித்து வருகிறார்.

    இந்த ஆஞ்சநேயர் கோவிலுக்கு குடமுழுக்கு நடைபெற்றது முன்னதாக விக்னேஸ்வர பூஜை கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜையில் தொடங்கியது இதைத்தொடர்ந்து கடம் புறப்பாடு ஆகி ஆஞ்சநேயர் கோயில் கோபுர கலசத்தில் புனிதரின் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றது பின்பு ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஆஞ்சநேயர் தரிசனம் செய்தனர்.

    ×