search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kudamukku"

    • பூர்ணாஹூதி நடைபெற்று, யாகசாலை பூஜைகள் நிறைவடைந்தது.
    • குடமுழுக்கை தொடர்ந்து 48 நாட்கள் மண்டல பூஜை நடைபெறுகிறது.

    நாகப்பட்டினம்:

    வேளாங்கண்ணி தலையாமழை கீராந்தியில் சிங்கமகா காளியம்மன் கோவிலில் திருப்பணிகள் செய்யப்பட்டு குடமுழுக்கு நேற்று நடைபெற்றது.

    இதனை முன்னிட்டு அனுஞக்ஞை கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், வாஸ்து சாந்தி, கோபூஜை, தீர்த்தம் எடுத்து வரும் நிகழ்ச்சிகள் நடைப்பெற்றது.

    அதனைத் தொடர்ந்து யாகசாலை பூஜைகளுடன் பூர்ணாஹூதி தீபாரத னைகள் நடைப்பெற்றது.

    தொடர்ந்து நான்காம் கால யாகசாலை பூஜை முடிவுற்று மஹா பூர்ணாஹூதி நடைபெற்று யாகசாலை பூஜைகள் நிறைவடைந்து மங்கல வாத்தியங்களில் மல்லாரி ராகம் முழங்க கடம் புறப்பாடு நடைபெற்றது.

    சிவாச்சாரியார் கடங்கங்களை சுமந்து வந்து வேத மந்திரங்கள் முழங்க ஆலய கலசத்தை கருட பகவான் சுற்றிவர சிங்கமகா காளியம்மன் ஆலய கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடைப்பெற்றது.

    பின்னர் புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.

    தொடர்ந்து பரிவார தெய்வங்களுக்கு கலச நீர் கொண்டு அபிஷேகம் மற்றும் மகா தீபாரதனை நடை பெற்றது.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    குடமுழுக்கை தொடர்ந்து 48 நாட்கள் மண்டல பூஜை நடைபெறுகிறது.

    • இன்று காலை 6 மணிக்கு 6-ம் கால யாகசாலைகள் நடைபெற்றன.
    • பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் பூக்கார தெருவில் உள்ள சுப்பிரமணியசாமி கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இக்கோவிலில் குடமுழுக்கு நடத்த முடிவு செய்யப்பட்டு திருப்பணிகள் தொடங்கின. பணிகள் அனைத்தும் முடிவடைந்ததை முன்னிட்டு இன்று காலை குடமுழுக்கு நடைபெற்றது.

    இதனை முன்னிட்டு கடந்த 30-ந்தேதி சிவகங்கை பூங்காவில் இருந்து புனிதநீர் ஊர்வலமாக கோவிலுக்கு கொண்டு வரப்பட்டன. அன்றைய தினம் முதல் கால யாகசாலை பூஜை தொடங்கின. தொடர்ந்து, 1-ந்தேதி 2 மற்றும் 3-ம் கால யாகசாலை பூஜையும், நேற்று 4 மற்றும் 5-ம் கால யாகசாலை பூஜையும் நடைபெற்றன.

    இன்று காலை 6 மணிக்கு 6-ம் கால யாகசாலைகள் நடைபெற்றன. அதனை தொடர்ந்து ஸ்பருஷாஹூதி, திரவ்யாஹூதி, பின்னர் பூர்ணாஹூதி தீபாராதனை நடைபெற்றது.

    காலை 9 மணிக்கு சாவடி காமாட்சி அம்மன், விநாயகர் சன்னதி கலசங்களுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டன. அதன்பின்னர் யாகசாலையில் இருந்து கடங்கள் புறப்பட்டு மேள வாத்தியங்களுடன் ராஜகோபுர விமானத்திற்கு சிவாச்சாரியார்கள் தலையில் பின்னர் ராஜகோபுரத்தில் புனிதநீர் அடங்கிய கடங்கள் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. பின்னர் சுப்பிரமணியர் மற்றும் அனைத்து விமானங்களுக்கும் புனிதநீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றது. பின்னர் மூலஸ்தானம், பரிவார தெய்வங்களுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டன. அப்போது கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டன.

    இதையடுத்து மகா அபிஷேகம் செய்யப்பட்டன. விழாவில் இந்து சமய அறநிலையத்துறை இணைஆணையர் கவிதா, துணை ஆணையர் சூரியநாராயணன், செயல் அலுவலர் அய்யம்மாள், தக்கார் உமாமகேஸ்வரி, எம்.எல்.ஏ.க்கள் துரை. சந்திரசேகரன், டி.கே.ஜி. நிலமேகம், மேயர் சண்.ராமநாதன், கீழவாசல் தி.மு.க. பகுதி செயலாளர் நீலகண்டன், விளார் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் தம்பி (எ) சோமரத்தின சுந்தரம் கவுன்சிலர் கண்ணுக்குஇனியாள்,

    தேசிய திருக்கோவில் கூட்டமைப்பு துணை தலைவர் கோவிந்தராஜ், அ.ம.மு.க. பூக்கார பகுதி செயலாளர் செந்தில்குமார், தஞ்சை தொகுதி தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்க தலைவர் எம்.எஸ். வசந்த், அ.தி.மு.க. மகளிரணி செயலாளர் அமுதா ரவிச்சந்திரன், கோட்டை பகுதி செயலாளர் சாமிநாதன், பொதுக்குழு உறுப்பினர் ராஜா, முன்னாள் கவுன்சிலர் ஹேமா, மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரா, போக்குவத்து இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். கோவில் அமைந்துள்ள பகுதிகளில் ஆங்காங்கே தன்னார்வலர்கள் பக்தர்களுக்கு நீர்மோர், குளிர்பானம், உணவு பொட்டலங்கள் வழங்கினர்.

    தொடர்ந்து, இரவு 7 மணிக்கு மயில் வாகனத்தில் சுவாமி திருவீதி உலா நடைபெற உள்ளது.

    • விக்னேஷ்வரர் பூஜை, வாஸ்து சாந்தி, அங்குரார்பணம், பூர்ணாஹூதி, முதல் கால யாகபூஜை நடந்தது.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை எம்.ஆர். நகர், பாரத் கல்லூரி பின்புறம் அமைந்துள்ளது. வேங்காச்சி முனியாண்டவர் கோவில். இக்கோயிலில் திருப்பணிகள் நடந்து முடிந்த இன்று குடமுழுக்கு விழா நடைபெற்றது.

    விழாவை முன்னிட்டு நேற்று மாலை அனுக்ஞை, விக்னேஷ்வரர் பூஜை, வாஸ்து சாந்தி, அங்குரார்பணம், பூர்ணாஹூதி, முதல் கால யாகபூஜை நடந்தது.

    தொடர்ந்து இன்று காலை 2-ம் கால யாகபூஜை, திரவ்யஹூதியும், பூர்ணாஹீதியும் நடந்தது. பின்னர் கடம்புறப்பாடு நடந்து 11 மணிக்கு கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடத்தபட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    விழா ஏற்பாடுகளை பிள்ளையார்பட்டி ஊராட்சி மன்ற துணைத்தலைவர் ஜெயந்தி சதானந்தம் செய்திருந்தார்.

    ஊராட்சி மன்றத் தலைவர் உதயகுமார், ஒன்றிய கவுன்சிலர் சவுமியா ஜனார்த்தனன், சச்சிதானந்தம், கார்த்திக் பூஜாரி, ராஜேந்திரன், ஜவஹர், முரளி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • முன்னதாக விக்னேஸ்வர பூஜை கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜையில் தொடங்கியது.
    • கடம் புறப்பாடாகி கோவில் கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுகா தென்னடார் கிழக்கு ஆமைகுளத்து ஐயனார் கோவில் தனி சன்னதியில் ஆஞ்சநேயர் அருள் பாலித்து வருகிறார்.

    இந்த ஆஞ்சநேயர் கோவிலுக்கு குடமுழுக்கு நடைபெற்றது முன்னதாக விக்னேஸ்வர பூஜை கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜையில் தொடங்கியது இதைத்தொடர்ந்து கடம் புறப்பாடு ஆகி ஆஞ்சநேயர் கோயில் கோபுர கலசத்தில் புனிதரின் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றது பின்பு ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஆஞ்சநேயர் தரிசனம் செய்தனர்.

    ×