சிங்க மகாகாளியம்மன் கோவில் குடமுழுக்கு

பூர்ணாஹூதி நடைபெற்று, யாகசாலை பூஜைகள் நிறைவடைந்தது.குடமுழுக்கை தொடர்ந்து 48 நாட்கள் மண்டல பூஜை நடைபெறுகிறது.
கோபுர கலசங்களில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.
கோபுர கலசங்களில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.
Published on

நாகப்பட்டினம்:

வேளாங்கண்ணி தலையாமழை கீராந்தியில் சிங்கமகா காளியம்மன் கோவிலில் திருப்பணிகள் செய்யப்பட்டு குடமுழுக்கு நேற்று நடைபெற்றது.

இதனை முன்னிட்டு அனுஞக்ஞை கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், வாஸ்து சாந்தி, கோபூஜை, தீர்த்தம் எடுத்து வரும் நிகழ்ச்சிகள் நடைப்பெற்றது.

அதனைத் தொடர்ந்து யாகசாலை பூஜைகளுடன் பூர்ணாஹூதி தீபாரத னைகள் நடைப்பெற்றது.

தொடர்ந்து நான்காம் கால யாகசாலை பூஜை முடிவுற்று மஹா பூர்ணாஹூதி நடைபெற்று யாகசாலை பூஜைகள் நிறைவடைந்து மங்கல வாத்தியங்களில் மல்லாரி ராகம் முழங்க கடம் புறப்பாடு நடைபெற்றது.

சிவாச்சாரியார் கடங்கங்களை சுமந்து வந்து வேத மந்திரங்கள் முழங்க ஆலய கலசத்தை கருட பகவான் சுற்றிவர சிங்கமகா காளியம்மன் ஆலய கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடைப்பெற்றது.

பின்னர் புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.

தொடர்ந்து பரிவார தெய்வங்களுக்கு கலச நீர் கொண்டு அபிஷேகம் மற்றும் மகா தீபாரதனை நடை பெற்றது.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

குடமுழுக்கை தொடர்ந்து 48 நாட்கள் மண்டல பூஜை நடைபெறுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com