search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முழு அடைப்பு"

    • மாநிலத்தின் பல்வேறு இடங்களில் இன்று கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.
    • நீதிமன்ற உத்தரவை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் உத்தரவு

    திருவனந்தபுரம்:

    பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு ஆதரவு அளிப்பது, பண உதவி செய்தல் மற்றும் பயிற்சி முகாம்களுக்கு ஏற்பாடு செய்தது தொடர்பான புகாரில், நாடு முழுவதும் எஸ்.டி.பி.ஐ மற்றும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினருக்கு சொந்தமான இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். 100க்கும் மேற்பட்ட இடங்களில் நடத்தப்பட்ட இந்த சோதனையின்போது பல்வேறு ஆவணங்களை கைப்பற்றி உள்ளனர். பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பைச் சேர்ந்த பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    என்ஐஏ சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

    இந்நிலையில், என்ஐஏ சோதனைக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் கேரளாவில் இன்று ஒருநாள் முழு அடைப்பு போராட்டத்திற்கு பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு அழைப்பு விடுத்திருந்தது. அதன்படி மாநிலத்தின் பல்வேறு இடங்களில் இன்று கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. பல்வேறு இடங்களில் போராட்டம் வன்முறையாக மாறியது. சாலையில் சென்ற பேருந்துகள் மற்றும் வாகனங்கள் மீது கற்கள் வீசி தாக்கப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. கல்வீசி தாக்கியதில் போலீஸ்காரர்கள் காயமடைந்துள்ளனர்.

    இதையடுத்து கேரள உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து இந்த வன்முறை குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகிறது. அப்போது பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது.

    கடையடைப்பு போராட்டத்திற்க முன்பே தடை விதிக்கப்பட்டதாகவும், பொதுச் சொத்துகளை சேதப்படுத்துவது கண்டிக்கத்தக்கது, அதை ஏற்க முடியாது என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது. பந்த் போராட்டத்தற்கு தடை விதித்த நீதிமன்ற உத்தரவை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும், வன்முறையை தடுக்க அனைத்து வழிகளையும் பயன்படுத்தலாம் என்றும் மாநில அரசை நீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது. 

    • திருவனந்தபுரம், கோழிக்கோடு, கொல்லம், ஆலப்புழா, எர்ணாகுளம், வயநாடு மாவட்டங்களில் பாப்புலர் பிரண்ட் அமைப்பினர் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
    • குமரி மாவட்டத்தில் இருந்து கேரளா செல்லும் அரசு பஸ்கள் மாநில எல்லையான களியக்காவிளையுடன் நிறுத்தப்பட்டது.

    திருவனந்தபுரம்:

    இந்தியா முழுவதும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினரின் அலுவலகம் மற்றும் வீடுகளில் தேசிய புலனாய்வு அமைப்பினர் நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.

    இதையடுத்து இந்த அமைப்பை சேர்ந்த சுமார் 106 பேர் கைது செய்யப்பட்டனர். கேரளாவின் மலப்புரம், கோழிக்கோடு மற்றும் திருவனந்தபுரம் பகுதிகளில் மட்டும் 22 பேர் கைதானார்கள்.

    இதனை கண்டித்தும், கைதானவர்களை விடுதலை செய்யக்கோரியும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் போராட்டம் நடத்தினர். மேலும் கேரளாவில் இன்று முழு அடைப்பு போராட்டமும் நடந்தது.

    கேரளா முழுவதும் இன்று காலை 6 மணிக்கு முழு அடைப்பு போராட்டம் தொடங்கியது. திடீரென போராட்டம் நடத்தப்பட்டதால் வெளியூர்களில் இருந்து ஊர் திரும்பியவர்கள், வீடு திரும்ப முடியாமல் அவதிபட்டனர்.

    இதற்கிடையே அரசு பஸ்கள் போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்பட்டன. சில பகுதிகளில் பஸ்கள் மீது மர்ம நபர்கள் கல்வீசினர். இதனால் பஸ்சின் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கியது.

    திருவனந்தபுரம், கோழிக்கோடு, கொல்லம், ஆலப்புழா, எர்ணாகுளம், வயநாடு மாவட்டங்களில் பாப்புலர் பிரண்ட் அமைப்பினர் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

    இதனால் அங்கு பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. வர்த்தக நிறுவனங்களும் மூடப்பட்டிருந்தது. அத்தியாவசிய தேவைகளுக்கான கடைகள் மட்டும் திறந்திருந்தன. முழு அடைப்பு காரணமாக இன்று நடக்க இருந்த பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன.

    கேரளாவில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடந்ததால் தமிழகத்தில் இருந்து கேரளா செல்லும் அரசு பஸ்கள் அனைத்தும் மாநில எல்லையுடன் நிறுத்தப்பட்டது.

    குமரி மாவட்டத்தில் இருந்து கேரளா செல்லும் அரசு பஸ்கள் மாநில எல்லையான களியக்காவிளையுடன் நிறுத்தப்பட்டது. இதுபோல கோவையில் இருந்து கேரளா செல்லும் பஸ்களும் பாலக்காடு எல்லையுடன் நிறுத்தப்பட்டது.

    • குஜராத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது.
    • வேலைவாய்ப்பின்மையை கண்டித்து காங்கிரஸ் சார்பில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற உள்ளது.

    அகமதாபாத்:

    கடந்த 27 ஆண்டுகளாக குஜராத் மாநிலத்தில் பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், பா.ஜ.க. ஆட்சியில் குஜராத்தில் விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், ஊழல் அதிகரித்துள்ளதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. மேலும், பா.ஜ.க. ஆட்சியில் குஜராத்தில் விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், ஊழல் அதிகரித்து வருவதை கண்டித்து காங்கிரஸ் சார்பில் மாநிலம் முழுவதும் இன்று முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    இன்று காலை 8 மணி முதல் 12 மணி வரை முழு அடைப்புக்கு காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது. வணிகர்கள், ஆட்டோ சங்கங்கள் உள்பட அனைத்துத் தரப்பினரும் முழு அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு தரும்படி காங்கிரஸ் மாநில தலைவர் அழைப்பு விடுத்துள்ளார்.

    • போராட்டக்காரர்கள் மறைத்து வைத்திருந்த முட்டையை எடுத்து கம்பெனிக்குள் வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது
    • மறியல் போராட்டத்தால் திருச்சிற்றம்பலம் மயிலம் சேதராப்பட்டு பத்துகண்ணு சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    சேதராப்பட்டு:

    உள்ளூர் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சேதராப்பட்டு தொழிற்பேட்டை அனைத்து தொழிலாளர்கள், தொழிற்சங்கங்களின் ஒருங்கிணைப்பு சார்பில் இன்று சேதராப்பட்டு தொழிற்பேட்டையில் பந்த் போராட்டம் நடந்தது. பந்த் போராட்டத்திற்கு ஏற்கனவே அழைப்பு விடுத்திருந்த நிலையில் அனைத்து கடைகளும் தொழிற்சாலைகளும் சேதராப்பட்டு பகுதிகளில் காலை முதலே மூடப்பட்டிருந்தன.

    இந்நிலையில் சேதராப்பட்டு முத்தமிழ் நகரில் சர்வதேச நிறுவனம் ஒன்று 6:00 மணிக்கு தொழிற்சாலைக்குள் தொழிலாளர்களை அனுமதித்ததை கேள்விப்பட்ட நாம் தமிழர் கட்சியின் தொழிற்சங்க தலைவர் ரமேஷ், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொழிற்சங்க தலைவர் முருகையன் தலைமையில் போராட்டக்காரர்கள் 50க்கும் மேற்பட்டோர் அங்கு குவிந்து கம்பெனியின் நுழைவாயில் கேட்டருகே கண்டன கோஷங்களை எழுப்பி முற்றுகை போராட்டம் நடத்தினர்.


    போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது

    போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது

    அப்போது ஏற்கனவே அங்கு குவிக்கப்பட்டிருந்த போலீசாருக்கும் அவர்களுக்கும் வாக்குவாதம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போராட்டக்காரர்களை வேனில் ஏற்ற முற்பட்டபோது போராட்டக்காரர்கள் மறைத்து வைத்திருந்த முட்டையை எடுத்து கம்பெனிக்குள் வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு பின்னர் அனைவரையும் குண்டுகட்டாக போலீசார் வேனில் ஏற்றி கோரிமேடு காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.

    பின்னர் சிபிஐஎம்எல் மாநில தலைவர் மோதிலால் தலைமையில் சேதராப்பட்டு முனை சந்திப்பில் சுமார் 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக திருச்சிற்றம்பலம் மயிலம் சேதராப்பட்டு பத்துகண்ணு சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    அப்போது சேதராப்பட்டு தொழிற்பேட்டையில் இந்த பகுதியை சுற்றியுள்ள இளைஞர்களுக்கு 90 சதவிகித வேலை வாய்ப்பை வழங்க வேண்டும், புதுச்சேரி மின்துறை தனியார்மயம் ஆவதை தடுக்க வேண்டும், இரும்பு தொழிற்சாலைகள் பணிநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களை மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும், காலியாக உள்ள தொழிலாளர் துறை ஆணையர் காலி பணியிடத்தை நிரப்ப வேண்டும், தொழிலாளர் துறை உத்தரவை மீறி செயல்படும் தனியார் தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், சேதராப்பட்டு பேருந்து நிலையத்தில் தொழிலாளர்களின் நலன் கருதி குடிநீர் மற்றும் கழிவறை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும், சேதராப்பட்டு பிப்டிக் வளாகத்தில் சாலையை சீரமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை மறியலில் ஈடுபட்டவர்கள் எழுப்பினர்.

    மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சேதராப்பட்டு தொழிற்பேட்டையில் இயங்கும் ஒரு தனியார் நிறுவனத்தின் வேனில் ஏற்றினர். அப்போது ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள் அவர்களுக்கு எதிராக நாங்கள் போராடுகிறோம். அந்த கம்பெனியின் வேனில் ஏற மாட்டோம். இல்லை என்றால் இங்கே இருப்போம் என வேனில் ஏற மறுத்ததை அடுத்து அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் எஸ்.பி பக்தவச்சலம் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் சப் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி வேறு ஒரு வாகனத்தில் அவர்களை கைதுசெய்து கோரிமேடு காவல் நிலையம் அழைத்து சென்றனர். போராட்டக்காரர்களின் ஒருபகுதியினர் சேதராப்பட்டு திருமண மண்டபத்திலும் ஒருபகுதியினர் கோரிமேடு காவல் நிலையத்திலும் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

    ×