search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    வன்முறையாக மாறிய கேரளா பந்த்... தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்த ஐகோர்ட்
    X

    கல்வீச்சில் சேதமடைந்த பேருந்து

    வன்முறையாக மாறிய கேரளா பந்த்... தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்த ஐகோர்ட்

    • மாநிலத்தின் பல்வேறு இடங்களில் இன்று கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.
    • நீதிமன்ற உத்தரவை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் உத்தரவு

    திருவனந்தபுரம்:

    பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு ஆதரவு அளிப்பது, பண உதவி செய்தல் மற்றும் பயிற்சி முகாம்களுக்கு ஏற்பாடு செய்தது தொடர்பான புகாரில், நாடு முழுவதும் எஸ்.டி.பி.ஐ மற்றும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினருக்கு சொந்தமான இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். 100க்கும் மேற்பட்ட இடங்களில் நடத்தப்பட்ட இந்த சோதனையின்போது பல்வேறு ஆவணங்களை கைப்பற்றி உள்ளனர். பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பைச் சேர்ந்த பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    என்ஐஏ சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

    இந்நிலையில், என்ஐஏ சோதனைக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் கேரளாவில் இன்று ஒருநாள் முழு அடைப்பு போராட்டத்திற்கு பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு அழைப்பு விடுத்திருந்தது. அதன்படி மாநிலத்தின் பல்வேறு இடங்களில் இன்று கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. பல்வேறு இடங்களில் போராட்டம் வன்முறையாக மாறியது. சாலையில் சென்ற பேருந்துகள் மற்றும் வாகனங்கள் மீது கற்கள் வீசி தாக்கப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. கல்வீசி தாக்கியதில் போலீஸ்காரர்கள் காயமடைந்துள்ளனர்.

    இதையடுத்து கேரள உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து இந்த வன்முறை குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகிறது. அப்போது பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது.

    கடையடைப்பு போராட்டத்திற்க முன்பே தடை விதிக்கப்பட்டதாகவும், பொதுச் சொத்துகளை சேதப்படுத்துவது கண்டிக்கத்தக்கது, அதை ஏற்க முடியாது என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது. பந்த் போராட்டத்தற்கு தடை விதித்த நீதிமன்ற உத்தரவை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும், வன்முறையை தடுக்க அனைத்து வழிகளையும் பயன்படுத்தலாம் என்றும் மாநில அரசை நீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது.

    Next Story
    ×