search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மின்சார வாரியம்"

    • பணிக்கான அட்டவணை தயார் செய்து அதனை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
    • அனைத்து நாட்களிலும் சென்னைக்கு சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.

    சென்னை:

    அமைச்சர்கள் மற்றும் மிக முக்கிய பிரமுகர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் தடையற்ற வகையில் மின்சாரம் விநியோகிக்கப்பட வேண்டும் என மின்வாரியம் கண்டிப்பான உத்தரவை பிறப்பித்துள்ளது.

    இதுகுறித்து அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    தமிழகத்தில் அமைச்சர்கள் மற்றும் மிக முக்கிய பிரமுகர்கள் (வி.வி.ஐ.பி.) வருகை தரும் இடங்களில் பராமரிப்புக்காக மின்தடை செய்யக் கூடாது என்றும், தடையற்ற வகையில் மின்சாரம் விநியோகிக்கப்பட வேண்டும் என்றும் பலமுறை தலைமையகத்தில் இருந்து அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது.

    எனினும், இதனை சில மின் பகிர்மான வட்டங்களில் பின்பற்றுவதில்லை.

    இதுபோன்ற நிகழ்வுகளைத் தடுக்கும் வகையில் மீண்டும் சில அறிவுறுத்தல்கள் வழங்கப்படுவதாகவும், அதன்படி, அமைச்சர்கள் மற்றும் மிக முக்கிய பிரமுகர்கள் பங்குபெறும் நிகழ்ச்சிகள் நடைபெறும் பகுதிகளில் (அவசர காலங்களைத் தவிர) பராமரிப்பு மின்தடை செய்யக் கூடாது, நிகழ்ச்சி முடியும் வரை உதவி பொறியாளர் நிலைக்கு குறையாத அதிகாரி மின் விநியோகத்தை கண்காணிக்க வேண்டும்.

    மேலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு, அமைச்சர்கள் நிகழ்வு குறித்த விவரங்களை சம்பந்தப்பட்ட மேற்பார்வை பொறியாளர்கள் அறிந்து கொள்ள வேண்டும், துணை மின் நிலையங்களில் போதிய பணியாளர்கள் இருப்பதையும், அவசர கால மின் தடையை சரி செய்வதற்கான நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டு இருப்பதையும் உதவி பொறியாளர் மற்றும் உதவி செயற்பொறியாளர் ஆகியோருடன் ஒருங்கிணைந்து செயற் பொறியாளர்கள் உறுதி செய்ய வேண்டும்.

    அதுமட்டுமின்றி, பணிக்கான அட்டவணை தயார் செய்து அதனை கட்டாயம் பின்பற்ற வேண்டும், அனைத்து நாட்களிலும் சென்னைக்கு சிறப்பு கவனம் செலுத்த வேண்டும், இதனை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அனைத்துத் தலைமைப் பொறியாளர்களுக்கு, மின்பகிர்மானப் பிரிவு இயக்குநர் சுற்றறிக்கை மூலம் வலியுறுத்தியுள்ளார்.

    • டிஜிட்டல் பணபரிமாற்றம் (மொபைல் டிரேன்ஸ்லேசன்) செய்யுமாறு கூறப்படும் போலியான தகவல்கள் சமூக வலைத்தளத்தில் பரவுவதை கண்டு மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்–டும்.
    • தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் இணையதளம் www.tnebltd.gov.in வழியாக மின்கட்டணம் செலுத்தி மக்கள் பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    திருப்பூர்:

    திருப்பூர் மின்சார வாரிய மேற்பார்வை பொறியாளர் சா.முத்துவேல் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    திருப்பூர் மின் பகிர்மான வட்டத்தில் மின் கட்டணம் செலுத்தாததால் மின் துண்டிப்பு செய்யப்படும் என குறுஞ்செய்தி மூலம் தகவல் கொடுத்து அதன் மூலம் டிஜிட்டல் பணபரிமாற்றம் (மொபைல் டிரேன்ஸ்லேசன்) செய்யுமாறு கூறப்படும் போலியான தகவல்கள் சமூக வலைத்தளத்தில் பரவுவதை கண்டு மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.

    அவ்வாறான போலியான தகவல்கள் தங்களது செல்போனுக்கு கிடைக்கப்பெற்றால் தங்களது 10 இலக்க மின் இணைப்பு எண் மற்றும் நிலுவையில் உள்ள மின் கட்டணம் போன்ற தகவல்கள் அருகில் உள்ள மின்சார வாரிய அலுவலகத்தை தொடர்பு கொண்டு உறுதி செய்துகொள்ள வேண்டும்.

    மேலும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் இணையதளம் www.tnebltd.gov.in வழியாக மின்கட்டணம் செலுத்தி மக்கள் பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அத்தியாவசிய சேவை வழங்கும் அரசுத்துறைகள் தவிர மின்சார கட்டணத்தில் நிலுவை வைத்திருக்கும் இதர அரசுத் துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் மின் இணைப்பை துண்டிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
    • தெருவிளக்கு, குடிநீர் மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசிய சேவை வழங்கும் துறைகளுக்கு 7 நாட்களுக்குள் மின்கட்டணம் செலுத்துமாறு நோட்டீசு அனுப்ப வேண்டும்.

    சென்னை:

    சென்னையில் மின் வாரிய உயர் அதிகாரிகளின் ஆய்வுக்கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது. இதில் மின்வாரிய செயல்பாடுகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

    இந்த கூட்டத்தில் மின்வாரிய தலைவர் வழங்கிய அறிவுறுத்தல்படி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள மின்வாரியம் முடிவெடுத்துள்ளது.

    இதன்படி அத்தியாவசிய சேவை வழங்கும் அரசுத்துறைகள் தவிர மின்சார கட்டணத்தில் நிலுவை வைத்திருக்கும் இதர அரசுத் துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் மின் இணைப்பை துண்டிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    தெருவிளக்கு, குடிநீர் மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசிய சேவை வழங்கும் துறைகளுக்கு 7 நாட்களுக்குள் மின்கட்டணம் செலுத்துமாறு நோட்டீசு அனுப்ப வேண்டும் என்றும் இந்த பணிகளை இன்றைய தேதிக்குள் முடித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

    இந்த அறிவுறுத்தல்கள் மின்வாரிய துணை நிதி கட்டுப்பாட்டாளர் அனுப்பிய சுற்றறிக்கையில் விரிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பொதுமக்களிடம் இருந்து மின் வாரியத்தில் மீட்டருக்கு மட்டும் தான் டெபாசிட் என்ற பெயரில் கூடுதல் தொகை வசூலிக்கப்படுகிறது.
    • 3 மாத மின்சார கட்டணம் டெபாசிட் தொகையாக மின் வாரியத்தில் இருக்கும்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் 2 மாதத்துக்கு ஒருமுறை மின் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

    2 மாதத்துக்கு ஒருமுறை மின்சார ரீடிங் எடுக்கப்படுவதால் கட்டணம் அதிகமாக வருவதால் இதை மாதந்தோறும் கணக்கெடுத்து கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்த வண்ணம் உள்ளனர்.

    தி.மு.க. தேர்தல் அறிக்கையிலும் மாதந்தோறும் மின்சார ரீடிங் எடுத்து கட்டணம் வசூலிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் அது இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை.

    இந்த நிலையில் மத்திய அரசு புதிய மின்சார திருத்த சட்டத்தை கொண்டு வந்து உள்ளது. அதன்படி புதிதாக அறிமுப்படுத்தப்பட்டுள்ள மின்சார திருத்த சட்ட விதி 14ன் படி, மின் வாரியத்துக்கு ஏற்படும் கூடுதல் செலவினங்களுக்கு ஏற்ப ஒவ்வொரு மாதமும் அதை பொதுமக்களிடம் இருந்து கட்டணத்துடன் வசூலித்துக் கொள்ளலாம் என்று அதிகாரம் அளித்து உள்ளது. இந்த விதி அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    அதாவது வெளி மாநிலங்களில் இருந்து மின்சாரம் வழங்கும் போது ஏற்படும் கூடுதல் செலவினங்களையும், மின்சாரம் தயாரிப்பதற்கு நிலக்கரி வாங்கும் போது ஏற்படும் கூடுதல் செலவினங்களை சரி கட்டவும் பொதுமக்களிடம் இருந்து வசூலிக்கலாம் என்று பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.

    மாதந்தோறும் வசூலிக்க முடியாத சூழல் ஏற்படுமானால் ஆண்டுக்கு ஒரு முறை என்று கணக்கிட்டு அதை நுகர்வோரிடம் மின் வாரியம் வசூலிக்கவும் விதிகளில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    ஏற்கனவே மின்கட்டணம் அதிகமாக உள்ளது என்று மக்கள் புலம்பும் நேரத்தில் மின் வாரியத்தின் கூடுதல் செலவுகளையும் பொது மக்களிடம் இருந்து வசூலிக்கலாம் என்று இப்போது கூறப்பட்டு உள்ளதால் மக்களுக்கு இது மேலும் அதிக சுமையாக அமையும் என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    பொதுமக்களிடம் இருந்து மின் வாரியத்தில் மீட்டருக்கு மட்டும் தான் டெபாசிட் என்ற பெயரில் கூடுதல் தொகை வசூலிக்கப்படுகிறது. அதாவது 3 மாத மின்சார கட்டணம் டெபாசிட் தொகையாக மின் வாரியத்தில் இருக்கும்.

    இந்த தொகை கூடும் போதும், குறையும் போதும் அதற்கேற்ப மின்வாரியத்தில் இருந்து நமக்கு தகவல் சொல்லி பணம் கட்ட சொல்வார்கள். ஆனால் இப்போது மின்வாரிய கூடுதல் செலவுகளையும் பொதுமக்களிடம் இருந்து வசூலித்துக் கொள்ளலாம் என்று அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

    இது பற்றி மின்வாரிய நிர்வாக இயக்குனர் ராஜேஷ் லக்கானியிடம் கேட்டதற்கு மின்சார திருத்த விதிகளில் அவ்வாறு கூறப்பட்டுள்ளது உண்மை தான். கூடுதல் செலவுகளை மக்களிடம் இருந்து பெறலாம் என அதில் கூறப்பட்டிருந்தாலும் அது கட்டாயம் கிடையாது.

    தமிழ்நாட்டை பொறுத்தவரை அந்த விதி இப்போதைக்கு பொருந்தாது. ஒவ்வொரு ஆண்டும் கமிஷன் ஒப்புதல் அளித்தபடி பணவீக்கத்தின் அடிப்படையில் கட்டணம் உயரும். எனவே மின்வாரிய கூடுதல் செலவுகளை மக்களிடம் வசூலிக்கும் நிலை தமிழ்நாட்டில் கட்டாயமில்லை என்றார்.

    இதுபற்றி மின்வாரிய தொழிற்சங்க அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    மின்சார வினியோகத்தை டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை, பெங்களூரு உள்ளிட்ட பெரு நகரங்களில் தனியாரிடம் கொடுக்க விரைவில் முடிவெடுப்பார்கள் என தெரிகிறது.

    அவ்வாறு தனியாரிடம் செல்லும் போது அவர்கள் செலவினங்களை வசூலிப்பதற்கு ஏற்ப இந்த சட்ட திருத்தம் செய்யப்பட்டு உள்ளதாக தெரிகிறது. மாதந்தோறும் செலவினங்களை வசூலிப்பதை இப்போது நடைமுறைப்படுத்தாவிட்டாலும் விரைவில் இது அமல்படுத்தப்படும் என்றே தெரிகிறது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • ஆதார் எண்ணை இணைப்பதற்கு வசதியாக அதற்கான கால அவகாசம் இந்த மாதம் 31- ந் தேதி வரை நீடிக்கப்பட்டு உள்ளது.
    • மின் நுகர்வோர்கள் மின் வாரிய இணையதளத்தை பயன்படுத்தியும் ஆதார் எண்ணை இணைக்கலாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழ்நாட்டில் விவசாயம், குடிசை வீடுகள், விசைத்தறிகள் மற்றும் வீடுகளுக்கு மின் வாரியம் சார்பில் இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது. மானியம் விலையிலும் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.

    பொதுமக்களுக்கு தனிப்பிரிவில் மின்சார வினியோகம் செய்யப்படுகிறது. இவற்றை ஒழுங்குப்படுத்தி சீரமைப்பதற்காக மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு முடிவு செய்யப்பட்டது.

    தமிழ்நாட்டில் 2.67 கோடி இணைப்புகள் மூலம் மின் நுகர்வோர் பயனடைந்து வருகிறார்கள். இவர்கள் அனைவரும் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. இதற்கான பணிகள் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கியது.

    முதலில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு பெரும்பாலானவர்கள் தயங்கினார்கள். இதையடுத்து தமிழக அரசு உரிய விளக்கங்கள் அளித்தது அதோடு ஆதார் எண்ணை இணைப்பதற்காக சிறப்பு முகாம்களும் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டன.

    தமிழகம் முழுவதும் 2811 மின் அலுவலகங்களில் ஆதார் எண்ணை இணைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் சிறப்பு முகாம்கள் மேற்கொள்ளப்பட்டன. என்றாலும் டிசம்பர் 31-ந்தேதி வரை சுமார் 50 சதவீதம் பேர்தான் ஆதார் எண்ணை இணைத்து இருந்தனர்.

    இதையடுத்து ஆதார் எண்ணை இணைப்பதற்கு வசதியாக அதற்கான கால அவகாசம் இந்த மாதம் 31- ந் தேதி வரை நீடிக்கப்பட்டு உள்ளது. மின் நுகர்வோர்கள் மின் வாரிய இணையதளத்தை பயன்படுத்தியும் ஆதார் எண்ணை இணைக்கலாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

    தமிழக அரசு வழங்கிய கால அவகாசம் நீட்டிப்பு நிறைவு பெறுவதற்கு இன்னும் 2 வாரங்கள் அவகாசம் உள்ளன. நேற்று வரை மின் இணைப்பு எண்ணுடன் 1.96 கோடி பேர் தங்களது ஆதார் எண்ணை இணைத்து உள்ளனர். இன்னும் சுமார் 70 லட்சம் பேர் ஆதார் எண்ணை இணைக்க வேண்டி உள்ளது.

    அவர்களையும் பட்டியலில் கொண்டு வருவதற்காக அவர்களது செல்போன் எண்ணுக்கு மின் வாரிய ஊழியர்கள் குறுஞ்செய்தி அனுப்பி வருகிறார்கள். இதை தவிர மின் நுகர்வோர்களை தொலைபேசி மூலமாகவும் தொடர்பு கொண்டு ஆதார் எண்ணை இணைக்குமாறு வலியுறுத்தி வருகிறார்கள்.

    இந்தநிலையில் ஆதார் எண் இணைத்தவர்களில் சிலரது தகவல்கள் அழிந்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று கடந்த நவம்பர் மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டதும் பலரும் ஆன்லைன் மூலமாக ஆதார் எண்ணை இணைத்தனர்.

    கடந்த டிசம்பர் மாதம் 4-ந் தேதி முதல் 12-ந் தேதி வரை ஆயிரக்கணக்கானவர்கள் ஆன்லைன் மூலம் ஆதார் எண்ணை இணைத்து இருந்தனர். இந்த இடைப்பட்ட தேதிகளில் ஆதார் எண்ணை இணைத்து இருந்தவர்களின் தகவல்கள் தொழில்நுட்ப கோளாறு காரணமாக அழிந்து விட்டதாக கூறப்படுகிறது.

    நுகர்வோர்களின் தகவல்கள் தொழில்நுட்ப கோளாறால் மாயமாகி விட்டன. மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்த பிறகு அதை மின் வாரிய தகவல் சேமிப்புடன் இணைக்கும் போது மின் நுகர்வோர்களின் தகவல்கள் சேமிக்கப்படாமல் போய்விட்டதாக கூறப்படுகிறது.

    இதை மின் வாரியத்தின் மூத்த அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தினார். அவர் கூறுகையில், "மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் போது முகவரியில் குறிப்பிடப்பட்ட சில தகவல்கள் சேமிப்பாகவில்லை. அவர்களுக்கு ஆதார் எண் இணைக்கப்பட்டதாக குறுஞ்செய்தி வந்திருந்தாலும் தகவல்கள் சர்வரில் இடம்பெறாமல் போய்விட்டது" என்றார்.

    இதையடுத்து விடுபட்ட தகவல்களை மீண்டும் இணைப்பதற்கு மின்வாரிய ஊழியர்கள் தீவிர முயற்சி செய்தனர். ஆனால் அதில் வெற்றி கிடைக்கவில்லை. எத்தனை பேரின் ஆதார் எண் இணைப்பு முழுமையாக சேமிக்கப்படவில்லை என்பது தெரியவில்லை.

    இத்தகைய சூழ்நிலையில் விடுபட்டோர்களின் ஆதார் எண்ணை மீண்டும் இணைப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தொழில்நுட்ப கோளாறு காரணமாக விடுபட்ட ஆதார் இணைப்பு எண்களுக்கு உரியவர்களுக்கு எஸ்.எம்.எஸ். மூலம் தகவல் அனுப்பப்பட்டு வருகிறது.

    அத்தகைய மின் நுகர்வோர்கள் மீண்டும் மின் அலுவலகத்துக்கு நேரடியாக சென்று ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 2-வது தடவை ஆதார் எண்ணை இணைக்கும் போது ஓ.டி.பி. எதுவும் தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    ஆதார் எண் இணைப்பு விடுபட்டு இருப்பது மிக மிக சிலருக்கு மட்டுமே என்று மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். இது குறித்து மின் வாரிய மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை அலுவலகங்களுக்கு நேரில் வந்து இணைத்தவர்களுக்கு எந்த சிக்கலும் வரவில்லை. நுகர்வோரின் தகவல்கள் மையங்களில் உடனுக்குடன் சேர்க்கப்பட்டு பதிவு செய்யப்பட்டு வருகிறது. ஆனால் ஆன்லைன் மூலம் பதிவு செய்தவர்களுக்குத் தான் இத்தகைய சிக்கல்கள் உருவாகி உள்ளது.

    அதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. மின் இணைப்பு ஒருவரது பெயரிலும், ஆதார் எண்ணை இணைத்து வருபவர் வேறொரு பெயரிலும் இருக்கும் பட்சத்தில் அதை மின் வாரிய செயலி ஏற்காது. சிலர் தங்களது பெயரை எம்.கே.சாமி என்று முகவரியில் எழுதி இருப்பார்கள். ஆனால் மின் இணைப்பில் அவர்களது பெயர் முத்துக்குமார சாமி என்று இருக்கும். இத்தகைய நுகர்வோர் பெயர் குழப்பம் காரணமாகவும் குளறுபடி ஏற்பட்டு வருகிறது. பெரும்பாலும் தந்தையின் பெயரில் இருக்கும் மின் இணைப்பை மகன் பயன்படுத்தி வருவார். அவரது ஆதார் எண்ணை பெயர் மாற்றம் செய்யாமல் இணைக்கவே இயலாது. இப்படி தமிழகம் முழுவதும் பல இடங்களில் சிக்கல் நிலவுகிறது. அவை கொஞ்சம் கொஞ்சமாக சரி செய்யப்பட்டு வருகின்றன.

    இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.

    மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டு விட்டதா என்பதை பொதுமக்கள் மிக எளிதாக உறுதி செய்யலாம். மின் இணைப்பு எண்ணுடன் மீண்டும் ஆதாரை இணைத்து பார்த்தால் அது இணைப்பு நடந்துள்ளதா இல்லையா என்பதை தெளிவாக காட்டி விடும்.

    • தூத்துக்குடி சிப்காட் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை மேற்கொள்ளப்பட உள்ளது.
    • புஷ்பா நகர் உள்ளிட்ட பகுதிகளில் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

    தூத்துக்குடி சிப்காட் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (வியாழக்கிழமை) மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே அங்கிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளான மடத்தூர், மடத்துர் மெயின் ரோடு, முருகேச நகர், கதிர்வேல் நகர், தேவகி நகர், சிப்காட் வளாகம், திரவிய ரத்தின நகர், அசோக் நகர், ஆசிரியர் காலனி, ராஜிவ் நகர், சின்னமணி நகர், 3 வது மைல், புதுக்குடி,

    டைமண்ட் காலனி, இ.பி. காலனி, ஏழுமலையான் நகர் , மில்லர்புரம் , ஹவுசிங் போர்டு பகுதிகள், அஞ்சல் மற்றும் தொலை தொடர்பு குடியிருப்புகள், ராஜகோபால் நகர், பத்தி நாதபுரம், சங்கர் காலனி, எப்.சி.ஏ. குடோன் பகுதிகள், நிகிலேசன் நகர், சோரிஸ் புரம், மதுரை பைபாஸ் ரோடு, ஆசீர்வாத நகர், சில்வர்புரம், சுப்புரமணிய புரம், கங்கா பரமேஸ்வரி காலனி, லாசர் நகர், ராஜ ரத்தின நகர், பாலையாபுரம் ஆகிய பகுதிகளில் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை ஏற்படும்.

    அதேபோல் வி. எம்.எஸ் நகர், முத்தம்மாள் காலனி, நேதாஜி நகர், லூசியா காலனி, மகிழ்ச்சிபுரம், ஜோதி நகர், பால்பாண்டி நகர், முத்து நகர், கந்தன் காலனி, காமராஜ் நகர், என்.ஜி.ஓ. காலனி, அன்னை தெரசா நகர், பர்மா காலனி, டி.எம்.பி. காலனி, அண்ணா நகர் 2- வது மற்றும் 3 -வதுதெரு, கோக்கூர், சின்னக்கண்ணுபுரம், பாரதி நகர், புதூர் பாண்டியாபுரம் மெயின் ரோடு, கிருபை நகர்,அகில இந்திய வானொலி நிலையம், ஹரி ராம் நகர், கணேஷ் நகர், புஷ்பா நகர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 8 மணியில் இருந்து மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என தமிழ்நாடு மின்வாரியம் அறிவித்தது.
    • மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பது தொடர்பான வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் 3 கோடிக்கு மேல் மின் இணைப்புகள் உள்ளன. 2 மாதத்துக்கு ஒருமுறை மின் பயன்பாடு கணக்கிடப்பட்டு அதற்கான கட்டணத்தைச் செலுத்த அறிவுறுத்தப்படுகிறது. மின்வாரிய இணையதளம், மின்வாரிய செயலி, கூகுள் பே, போன் பே செயலிகள் மூலம் ஏராளமானோர் மின் கட்டணத்தை செலுத்தி வருகின்றனர்.

    இதற்கிடையே, மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என தமிழ்நாடு மின்வாரியம் அறிவித்தது. இதற்காக தமிழகம் முழுவதும் உள்ள 2,811 மின் வாரிய அலுவலகங்களில் கடந்த மாதம் 28-ம் தேதி முதல் ஆதார் எண் இணைப்பு சிறப்பு முகாம் தொடங்கி நடைபெற்று வருகிறது

    இந்தச் சூழலில் இந்த அரசாணையை ரத்துசெய்யக் கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

    இந்நிலையில், மின்சார மானியம் பெற மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும்படி வற்புறுத்தக் கூடாது என்று உத்தரவிடக் கோரிய வழக்கில் இன்று சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்க உள்ளது.

    • மாமல்லபுரம் அருகே நள்ளிரவு புயல் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
    • புயல் தாக்கும் மாவட்டங்களில் மின் ஊழியர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

    சென்னை:

    தென்மேற்கு வங்க கடலில் நிலை கொண்டிருந்த மாண்டஸ் தீவிர புயலிலிருந்து புயலாக வலுவிழந்து, வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிறது. இன்று நள்ளிரவு புதுச்சேரி மற்றும் ஸ்ரீஹரிகோட்டா இடையே மாமல்லபுரம் அருகே நள்ளிரவு கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இன்று மாலை நிலவரப்படி சென்னையில் இருந்து தெற்கு, தென்கிழக்கு திசையில் 170 கி.மீ தொலைவில் மாண்டஸ் புயல் நிலைக்கொண்டுள்ளது. மாமல்லபுரத்தில் இருந்து தென் கிழக்கே 135 கி.மீ தொலைவில் நிலைகொண்டுள்ளது. புயலின் வேகம் 13 கிலோ மீட்டரிலிருந்து 14 கி.மீ. ஆக அதிகரித்துள்ளது. புயல் கரையை கடக்கும்போது பலத்த சூறைக்காற்று வீசும் என்பதால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வராமல் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படும்.

    இதுதொடர்பாக தமிழக மின்சார வாரிய தலைவர் ராஜேஷ் லக்கானி செய்தியாளர் கூறியதாவது:-

    மாண்டஸ் புயல் கரையை கடக்கும் போது சம்மந்தப்பட்ட மாவட்டங்களில் மின் தடை செய்யப்படும். மின் கம்பங்கள், ஜேசிபி இயந்திரம் உள்ளிட்ட உபகரணங்கள் தேவைக்கு ஏற்ப வைக்கப்பட்டுள்ளன. தேவையான இடங்களில் மட்டும் மின் தடை செய்ய வேண்டும். செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மின் ஊழியர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார். 

    • மின்சார வாரியத்திற்கு சொந்தமான சொத்துக்களை சேதப்படுத்தியவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
    • சப்-இன்ஸ்பெக்டர் பிரபு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

    விழுப்புரம்:

    திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள பாவந்தூர் ஊராட்சி ஆக்கனூர் கிராமத்தில் பாவந்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அருள்சாமி(வயது 21). இவர் மின் வாரியத்திற்கு சொந்தமான 3 மின் கம்பம், மின் வயர் ஸ்டே கம்பி உள்ளிட்ட பொருட்களை அறுத்து அடித்து நொறுக்கி சேதப்படுத்தியதாக திருவெண்ணைநல்லூர் உதவி மின் பொறியாளர் கிராமப்புறம் விவேக் திருவெண்ணெய்நல்லூர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பிரபு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

    • மின்சார உற்பத்தி நிறுவனங்கள் மூலம், மாநிலங்களில் உள்ள மின் வினியோக நிறுவனங்களுக்கு மின்சாரம் வழங்கப்படுகிறது.
    • தமிழக அரசை பொறுத்தவரை, ரூ.926.16 கோடி பாக்கி வைத்துள்ளதாக தெரிகிறது.

    சென்னை:

    தமிழகம் உள்பட பல மாநிலங்கள், அந்தந்த மாநிலத்தின் மின்சார தேவைக்கு ஏற்ப வெளிச்சந்தையில் மின்சாரத்தை கொள்முதல் செய்து வருகின்றன. தமிழகத்தில் தற்போது ஒரு நாளைக்கு 15 ஆயிரத்து 954 மெகாவாட் மின்சாரம் தேவைப்படுகிறது.

    இதில், அரசின் அனல் மின் நிலையங்களில் இருந்து உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தையும்விட, கூடுதலாக 2 ஆயிரத்து 115 மெகாவாட் மின்சாரம் வெளிச்சந்தையில் இருந்து வாங்கப்படுகிறது. வெளிச்சந்தையில் வாங்கும் மின்சாரத்துக்கு அவ்வப்போது, அதற்கான பணம் வழங்கப்பட்டு வருகிறது.

    மத்திய மின்துறை அமைச்சகத்தின் கீழ் மின் முறைகள் இயக்கக கழகம் (போசோகோ) செயல்பட்டு வருகிறது. இதன் கீழ் செயல்படும் மின்சார உற்பத்தி நிறுவனங்கள் மூலம், மாநிலங்களில் உள்ள மின் வினியோக நிறுவனங்களுக்கு மின்சாரம் வழங்கப்படுகிறது.

    அவ்வாறு, மின்சாரம் வாங்கப்படும்போது, அதற்கான கட்டணம், தாமதமாக செலுத்தும் பட்சத்தில், ஒவ்வொரு மாதமும் 0.5 சதவீதம் கூடுதல் வட்டி வசூலிக்கப்படும் என்றும், கட்டணம் செலுத்துவதில் மேலும் தாமதம் ஏற்பட்டால், முதலில் குறுகிய கால தேவைக்கு பெறப்படும் மின்சாரம் வழங்கப்படாது என்றும், அதையும் மீறினால் நீண்டகால தேவைக்கான மின்சாரம் வழங்குவது தடை விதிக்கப்படும் என்றும் கடந்த ஜூன் மாதம் முதல் புதிய விதிகள் கொண்டுவரப்பட்டன.

    இந்த நிலையில், தமிழகம், தெலுங்கானா, மத்திய பிரதேசம், மணிப்பூர், மிசோரம், ஜார்கண்ட், பீகார், ஜம்மு காஷ்மீர், ராஜஸ்தான், ஆந்திரா, மகாராஷ்டிரா, கர்நாடகா, சத்தீஸ்கர் ஆகிய 13 மாநிலங்களை சேர்ந்த மின் வினியோக நிறுவனங்கள் சேர்ந்து, மின் உற்பத்தி நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய ரூ.5,085 கோடி தொகையை செலுத்தாமல் பாக்கி வைத்துள்ளது.

    தமிழக அரசை பொறுத்தவரை, ரூ.926.16 கோடி பாக்கி வைத்துள்ளதாக தெரிகிறது. அதிகபட்சமாக, தெலுங்கானா ரூ.1,380 கோடி கடன் வைத்துள்ளது. குறைவாக, மிசோரம் ரூ.17 கோடி பாக்கி வைத்துள்ளது. இந்த நிலையில், கடன் பாக்கி வைத்துள்ள 13 மாநிலங்கள், பிற மாநிலங்களில் இருந்து மின்சாரம் கொள்முதல் செய்யவும், வழங்கவும், மத்திய மின் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பவர் சிஸ்டம் ஆபரேசன் கார்ப்பரேசன் எனப்படும் நிறுவனம் தடை விதித்துள்ளது.

    இதுகுறித்து, அகில இந்திய மின் என்ஜினீயர்கள் கூட்டமைப்பின் தலைவர் சைலேந்திர துபே கூறும்போது, "மின்சார சட்டத்திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் இன்னும் ஒப்புதல் பெறவில்லை. நிலைக்குழுவிடம் உள்ளது. ஆனாலும், அந்த மசோதாவில் உள்ள பரிந்துரைகளை மின் முறைகள் இயக்கக கழகம் அமல்படுத்தியுள்ளது" என்று குற்றம்சாட்டியுள்ளார்.

    தமிழக அரசும் ரூ.926.16 கோடி பாக்கி வைத்துள்ளதாக கூறப்படும் நிலையில், தமிழகத்தில் கடுமையான மின் வெட்டு ஏற்பட்டு விடுமோ? என்ற அச்சம் பொதுமக்கள் இடையே ஏற்பட்டுள்ளது.

    இதுகுறித்து, தமிழக மின்வாரிய உயர் அதிகாரியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    தமிழக மின் வாரியம் வெளிச்சந்தையில் வாங்கிய மின்சாரத்துக்காக செலுத்த வேண்டிய ரூ.926.16 கோடியில், ரூ.850 கோடியை செலுத்திவிட்டது. ஆனால், இது கணக்கில் சேர்க்கப்படாமல் விடுபட்டுள்ளது. மீதமுள்ள தொகையை ஓரிரு நாட்களில் செலுத்தி விடுவோம். தமிழகத்தை பொறுத்தமட்டில், மின் உற்பத்தி உபரியாக இருப்பதால், வெளிச்சந்தையில் இருந்து மின்சாரம் வாங்க வேண்டிய அவசியம் இல்லை.

    காற்றாலை, அனல் மின் நிலையம் உள்பட அனைத்து மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து முழு அளவில் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இதனால் தமிழகத்தில் மின் வெட்டு ஏற்படாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மின்சார வாரியத்திற்கு ரூ.1 லட்சத்து 59 ஆயிரம் கோடி கடன் சுமை உயர்ந்தது.
    • தமிழகத்தில் 20 ஆண்டுகளாக 4 லட்சத்து 50 ஆயிரம் விவசாயிகள் மின் இணைப்புக்காக காத்திருந்தனர்.

    கோவை:

    மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, கோவையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் மின்சார வாரிய நிதிநிலை மிகவும் மோசமாக உள்ளது. கடந்த அ.தி.மு.க. ஆட்சியினால் ஏற்படுத்தப்பட்ட நிர்வாக சீர்கேடே இதற்கு காரணம். இதன் காரணமாக மின்சார வாரியத்திற்கு ரூ.1 லட்சத்து 59 ஆயிரம் கோடி கடன் சுமை உயர்ந்தது.

    ஆண்டுக்கு 16 ஆயிரத்து 500 கோடி வட்டி செலுத்தும் நிலைமைக்கு தமிழக மின்சார வாரியம் தள்ளப்பட்டது. அப்போது மொத்த மின் தேவையில் மூன்றில் ஒரு பங்கை மட்டும் மின்சார வாரியம் உற்பத்தி செய்தது.

    மீதி 2 பங்கு மின்சாரத்தை வெளியில் தனியாரிடம் அதிக விலை கொடுத்து வாங்கி விட்டு தமிழகம் மின்மிகை மாநிலம் என்று கடந்த அ.தி.மு.க ஆட்சியில் தவறான பிரசாரம் மக்கள் மத்தியில் வைக்கப்பட்டது.

    தமிழகத்தில் 20 ஆண்டுகளாக 4 லட்சத்து 50 ஆயிரம் விவசாயிகள் மின் இணைப்புக்காக காத்திருந்தனர். தமிழகம் மின்மிகை மாநிலம் என்றால் பதிவு செய்திருந்த அனைத்து விவசாயிகளுக்கும் மின் இணைப்பை வழங்கி இருக்கலாம். ஆனால் அப்படி கொடுக்கவில்லை. கிடப்பில் போடப்பட்டது.

    இந்த நிலையில் நாளை மற்றும் மறுநாள் சில அரசியல் கட்சியினர் மின்சார கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர். இவர்கள் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்துவார்களா?.

    மேலும் மின் கட்டண உயர்வால் ஏழை, எளிய மக்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை. தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு கடன் கொடுக்க கூடாது என ரிசர்வ் வங்கிக்கே மத்திய அரசு தரப்பில் இருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டது.

    தி.மு.க. தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்டது போல் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கி உள்ளோம். அடுத்த கட்டமாக 50 ஆயிரம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கும் பணி நடந்து வருகிறது.

    தற்போது மின் கட்டணம் மாற்றத்தின் மூலமாக 2 கோடியே 28 லட்சம் பேருக்கு நிலை கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    மாதந்தோறும் மின்கட்டணம் செலுத்தும் வகையில் வீடுகளில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. டிரான்ஸ்பார்மரில் மீட்டர் பொருத்தும் அறிவிப்புகள் வெளியிடப்பட்டு டெண்டர் வரை சென்று உள்ளது.

    எனவே மாதாந்திர மின் கட்டணம் செலுத்தும் முறை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் நிச்சயமாக நிறைவேற்றப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×