search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மின்சார வாரியம்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பிளக் சுவிட்சை அணைத்தபிறகே மின் விசிறி, அயர்ன்பாக்ஸ், செல்போன் சார்ஜர் போன்றவற்றை பிளக்கில் இணைக்க வேண்டும்.
    • மின்சார மேல்நிலை கம்பிகளுக்கு அருகில் உள்ள மரக்கிளைகளை அகற்ற மின்துறை அலுவலர்களை அணுக வேண்டும்.

    சென்னை:

    மழைக்காலங்களில் பின்பற்ற வேண்டிய மின் பாதுகாப்பு வழிமுறைகள் குறித்த விளக்கத்தை அரசு தலைமை மின் ஆய்வாளர் வெளியிட்டுள்ளார்.

    வடகிழக்கு பருவமழை தற்போது தீவிரம் அடைந்துள்ளது. இந்த நிலையில் மழைக்காலங்களில் பின்பற்ற வேண்டிய மின் பாதுகாப்பு வழிமுறைகளை அரசு தலைமை மின் ஆய்வாளர் ஞா.ஜோசப் ஆரோக்கியதாஸ் வெளியிட்டுள்ளார். அதன் விவரம் வருமாறு:-

    * மின்கம்பங்களில் ஆடு, மாடு போன்ற வீட்டு விலங்குகளை கட்டக்கூடாது. மின் கம்பங்களில் பந்தல், கொடிக்கம்பி மற்றும் கயிறு போன்றவற்றை கட்டக்கூடாது. எக்சாஸ்ட் மின்விசிறிகள் மற்றும் வீட்டு உபயோக மின் சாதனங்களை தவறாமல் சுத்தம் செய்வது தீ மற்றும் மின் அதிர்ச்சி அபாயங்களை தடுக்க உதவும்.

    * மின்சார மேல்நிலை கம்பிகளின் அருகில் பட்டங்கள் பறக்கவிடவேண்டாம். பவர் பிளக்குகளுக்குள் குச்சி, கம்பி போன்றவற்றை நுழைக்க வேண்டாம். எந்த திரவத்தையும் பயன்படுத்தி சுவிட்சுகளை சுத்தம் செய்யவேண்டாம். ஈரமான நிலையில் மின்சாதனங்களை இயக்க வேண்டாம்.

    * பிளக் சுவிட்சை அணைத்தபிறகே மின் விசிறி, அயர்ன்பாக்ஸ், செல்போன் சார்ஜர் போன்றவற்றை பிளக்கில் இணைக்க வேண்டும். மின்சார சார்ஜரில் இணைப்பில் இருக்கும்போது செல்போனை பயன்படுத்தக்கூடாது. சுவிட்ச் போர்டு, மின்மோட்டார், தண்ணீர் பம்பு மோட்டார் போன்றவற்றின் மீது தண்ணீர், மழைநீர் படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

    * இடி அல்லது மின்னலின்போது கான்கிரீட் கூரையிலான பெரிய கட்டிடம், வீடு போன்ற பெரிய கட்டிடங்களிலோ, உலோகத்தால் மேலே மூடப்பட்ட பஸ், கார், வேன் போன்ற வாகனங்களிலோ தஞ்சம் அடையுங்கள். திறந்த வெளியிலோ, மரத்தின் அடியிலோ, பஸ் நிறுத்தங்களின் கீழோ, நீச்சல் குளத்தின் அருகிலோ தஞ்சம் அடையவேண்டாம். டி.வி., மிக்சி, கிரைண்டர், கணினி, செல்போன், மின், மின்னணு சாதனங்கள் போன்றவற்றை பயன்படுத்த வேண்டாம்.

    * மின் மாற்றிகள், மின்பெட்டிகள், மின் கம்பிகள் ஆகியவற்றை தொடவும், அதற்கு அருகில் செல்லவும் கூடாது. மின்கம்பிகள் அறுந்து கிடந்தால் தொட முயற்சிக்க வேண்டாம். கீழே விழுந்த மின்கம்பியில் இருந்து குறைந்தபட்சம் 30 அடி தூரத்தில் நிற்கவும், மின்கம்பத்தின் அருகில் அல்லது லைனை தொடும் எதனையும் நெருங்க வேண்டாம். மின்சார மேல்நிலை கம்பிகளுக்கு அருகில் உள்ள மரக்கிளைகளை அகற்ற மின்துறை அலுவலர்களை அணுக வேண்டும்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • மழையால் பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களை நிவாரண முகாம்களில் தங்க வைக்க வேண்டும்.
    • அனைத்து உதவிகளும் செய்ய தமிழக அரசு தயாராக உள்ளது.

    சென்னை:

    வங்கக்கடலில் அந்தமான் அருகில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை மறுநாள் புயலாக மாறுகிறது.

    'மிச்சாங் புயல்' என பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் இந்த முறை சென்னைக்கும் மசூலிப்பட்டினத்துக்கும் இடையே கரையை கடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதனால் வடகடலோர மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்பட 12-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் மிக வேகமாக சூறாவளி காற்றுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

    இந்த நிலையில் புயல் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொண்டார்.

    இதில் வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ். ஆர்.ராமச்சந்திரன், வருவாய் நிர்வாக ஆணையர் எஸ்.கே.பிரபாகர், வருவாய்த் துறை செயலாளர் ராஜா ராமன், வருவாய் பேரிடர் துறை இயக்குனர் ராமன், நகராட்சி நிர்வாக ஆணையர் கார்த்திகேயன்,

    சென்னை மாநகராட்சி ஆணையர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், டி.ஜி.பி. சங்கர் ஜிவால், தீயணைப்பு இயக்குனர் ஆபாஷ் குமார், சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் மற்றும் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, வேலூர், ராணிப்பேட்டை ஆகிய 12 மாவட்ட கலெக்டர்களும் காணொளி வாயிலாக கலந்து கொண்டனர்.

    இந்த கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புயல் சம்பந்தமாக எடுக்கப்பட்டுள்ள முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை கேட்டறிந்தார். 

    அப்போது அதிகாரிகள் இதுவரை எடுத்துள்ள நடவடிக்கைகளை எடுத்துக் கூறினார்கள். இதை கேட்டுக்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-

    27.11.2023 அன்று உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவுகிறது. இதனால் 3 மற்றும் 4 தேதிகளில் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    புயலின் தாக்கத்தை எதிர்கொள்ள முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட துறை செயலாளர்கள், துறை தலைவர்கள், மாவட்ட கலெக்டர்கள் மேற்கொள்ள வேண்டும்.

    புயல் பாதிப்புக்கு உள்ளாக கூடிய மக்களுக்கு முன்கூட்டியே எச்சரிக்கை வழங்கி அவர்களை நிவாரண மையங்களில் தங்க வைக்க வேண்டும்.

    நிவாரண முகாம்களில் உணவு, பாதுகாப்பான குடிநீர், மின்சாரம் வசதி உள்பட தேவையான அனைத்து அடிப்படை வசதிகள் உள்ளதை மாவட்ட கலெக்டர்கள் உறுதி செய்ய வேண்டும்.

    மழை வெள்ள காலங்களில் மின் கசிவினால் ஏற்படும் விபத்துக்களை தடுக்க மின்சார வாரியம் கட்டாயம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    புயலின் சீற்றம் காரணமாக மரங்கள் விழும் காரணத்தால் புயலின்போது, விழக்கூடிய மரங்களை உடனடியாக அகற்றுவதற்கு குழுக்கள் போதிய உபகரணங்களுடன் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

    அரசு மருத்துவமனைகளில் 24 மணி நேரமும் அவசர சிகிச்சை பிரிவு செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

    மாவட்ட கலெக்டர்கள் பாதிப்புக்கு உள்ளாகும் பகுதிகளில் பல்துறை மண்டலக்குழுக்களை முன் கூட்டியே நிலைநிறுத்த வேண்டும்.

    பாதிப்புக்கு உள்ளாகும் மக்களுக்கு உணவு வழங்கிட உணவு தயாரிக்கும் சமையல் கூடங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

    கனமழையின்போது போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை நாம் காண்கிறோம். காவல்துறை இதில் சிறப்பு கவனம் செலுத்தி, அதிக அளவில் போக்குவரத்து போலீசாரை ஈடுபடுத்தி போக்குவரத்து நெரிசலை விரைந்து சரி செய்வதை உறுதி செய்ய வேண்டும்.

    இந்த மழை காலத்தில் மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி மற்றும் உள்ளாட்சி குழுக்கள், போலீஸ், தீயணைப்பு துறை ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என அறிவுறுத்திட விரும்புகிறேன்.

    கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்பு மழைநீர் அதிகம் தேங்கிய பகுதிகளில், கூடுதல் கவனம் செலுத்தி, அங்கு தேங்கும் மழைநீரை அகற்ற அதிக அளவில் மோட்டார் பம்புகளை பயன்படுத்தி உடனே நீரை அகற்ற வேண்டும்.

    வங்கக்கடலில் உருவாகி உள்ள புயல் சின்னத்தின் தாக்கத்தை திறம்பட எதிர்கொள்ளவும், பொதுமக்களின் சிரமத்தை குறைத்திடவும், தேவையான அனைத்து முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை அனைத்து அதிகாரிகளும் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டும்.

    மழைக்கால நிவாரண பணிகளை மேற்கொள்ள உங்களுக்கு குறிப்பான தேவைகளை உடனடியாக உங்கள் மாவட்டத்தின் அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் மற்றும் துறை செயலாளர்களுக்கு தெரிவித்து பெற்றுக்கொள்ள கேட்டுக் கொள்கிறேன். அதை அரசு உங்களுக்கு செய்து தர தயாராக உள்ளது.

    இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

    • சென்னையில் நாளை தாம்பரம், அண்ணாநகர் பகுதிகளில் மின்வாரிய பராமரிப்பு பணி நடைபெறுகிறது.
    • அண்ணாநகர் பகுதியில் எம்.ஜி.சக்கரபாணி நகர், ஓம் சக்தி நகர், அஷ்டலட்சுமி நகர் மற்றும் தாசரி பத்மா நகர் பகுதியில் மின்சாரம் இருக்காது.

    சென்னை:

    தமிழ்நாடு மின்வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    சென்னையில் நாளை (30-ந் தேதி) தாம்பரம், அண்ணாநகர் பகுதிகளில் மின்வாரிய பராமரிப்பு பணி நடைபெறுகிறது.

    எனவே நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை தாம்பரம் பகுதியில் ராஜகீழ்ப்பாக்கம், வேளச்சேரி மெயின் ரோடு, சிட்லப்பாக்கம் மெயின் ரோடு, செல்லி நகர், சுந்தரம் காலனி, எழில் நகர், கம்பர் தெரு, 100 அடி ரோடு, அண்ணா தெரு, ராஜேஸ்வரி நகர், தனலட்சுமி நகர், சந்தான லட்சுமி தெரு, ஆதி லட்சுமி தெரு, விஜயலட்சுமி தெரு, அன்னை நகர் மற்றும் சவுபாக்கிய லட்சுமி தெரு, ராதாநகர், ஓம் சக்தி நகர், முத்துசாமி நகர், பாத்திமா நகர் மற்றும் கண்ணம்மாள் நகர்.

    அண்ணாநகர் பகுதியில் மதுரவாயல், கிருஷ்ணாநகர், ருக்மணி நகர், பாரதி நகர், எம்.ஜி.சக்கரபாணி நகர், ஓம் சக்தி நகர், அஷ்டலட்சுமி நகர் மற்றும் தாசரி பத்மா நகர் பகுதியில் மின்சாரம் இருக்காது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பொதுமக்களில் பலர் பதட்டமாகி சம்பந்தப்பட்ட லிங்க்கில் சென்று பாதிக்கப்படுவது தொடர்கதையாகி வருகிறது.
    • உங்கள் உறவினர் மற்றும் நண்பர்களுக்கு தகவலை பகிரவும்.

    சென்னை:

    பொது மக்களின் செல்போன் எண்களுக்கு மின் வாரியத்தில் இருந்து அனுப்புவது போல போலியான குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டு வருகிறது.

    இதைபார்த்து குறுஞ்செய்தியின் லிங்க்கில் சென்று பார்த்தால் வங்கி கணக்கில் இருந்து பணத்தை பறிக்கும் வகையில் மர்மநபர்கள் இந்த குறுஞ்செய்திகளை அனுப்பி வருகிறார்கள். இதனால் பொதுமக்களில் பலர் பதட்டமாகி சம்பந்தப்பட்ட லிங்க்கில் சென்று பாதிக்கப்படுவது தொடர்கதையாகி வருகிறது.

    இதையடுத்து தமிழ்நாடு மின் வாரியம் சார்பில் மின்வாரிய இணையதளத்தில் இன்று முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர். மின் கட்டணம் கட்டாததால் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என குறுஞ்செய்தி வந்தால் செய்ய வேண்டியது என்ன? என்கிற தலைப்புடன் 6 அறிவுரைகள் அதில் இடம்பெற்றுள்ளன.

    மின் கட்டணம் கட்டவில்லை என்று குறுஞ்செய்தி வந்தால் பதட்டம் அடைய வேண்டாம்.

    உங்கள் மின் கட்டண ரசீதின் தற்போதைய நிலை என்ன என்பது பற்றி இணைய தளத்தில் சென்று சரிபாருங்கள். குறுஞ்செய்தியில் உள்ள எண்ணை தொடர்பு கொள்ள வேண்டாம். அதில் இடம்பெற்றுள்ள லிங்க்கை கிளிக் செய்ய வேண்டாம்.

    உடனடியாக கட்டணமில்லா தொலைபேசி எண்ணான 1930- ஐ அழைத்து புகார் அளிக்கவும்.

    உங்கள் உறவினர் மற்றும் நண்பர்களுக்கு இந்த தகவலை பகிரவும்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அனைத்து பணியாளர்களும் விதிமுறைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்.
    • பணியாளர்கள் பணியின்போது எர்த்ரோட் பயன்படுத்துவதை பதிவு செய்து கொள்ள வேண்டும்.

    சென்னை:

    மின்வாரிய முதன்மை என்ஜினீயர் அனைத்து மின்வாரிய அலுவலகங்களுக்கும் அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    மின்சார வாரியத்தில் பாதுகாப்பு விதிகளை பின்பற்றாதது, தேவையான பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்தாமல் பணிகளை மேற்கொள்வது, முறையான கண்காணிப்பு இல்லாமல் வேலை செய்வது, ஏபி சுவிட்சுகளில் திறந்திருக்கும் பிளேடுகளை சரிபார்க்காமல் இருப்பது உள்ளிட்டவற்றால் விபத்துகள் ஏற்படுகிறது.

    இதனால் அனைத்து பணியாளர்களும் விதிமுறைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். பணியாளர்களால் பணிகளை மேற்கொள்வதற்கு முன்பு, தளத்தில் உள்ள மேற்பார்வை ஊழியர்கள் பாதுகாப்பு உபகரணங்களின் பயன்பாட்டை சரி பார்த்து, பணியாற்ற வேண்டும்.

    பணியாளர்கள் பணியின்போது எர்த்ரோட் பயன்படுத்துவதை பதிவு செய்து கொள்ள வேண்டும். பணியாளர்கள் பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடிக்காமல் பணியாற்றும்போது விபத்து ஏற்பட்டால் பணியாளர்களே பொறுப்பு என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சிறப்பு பெயர் மாற்றம் முகாம் பொதுமக்களிடையே அதிகப்படியான வரவேற்பினை பெற்றுள்ளது.
    • இதுவரை மொத்தம் 2 லட்சத்து 68 ஆயிரத்து 995 வீட்டு மின் இணைப்பு மற்றும் பொது மின் இணைப்பு மின் நுகர்வோர்கள் தங்களது மின் இணைப்புகளில் பெயர் மாற்றம் செய்துள்ளனர்.

    சென்னை:

    தமிழ்நாட்டு மக்களின் நலனை கருத்தில்கொண்டு, மின் இணைப்புகளில் பெயர் மாற்றம் செய்யும்போது பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்களை நீக்கிட, கட்டணம் செலுத்திய அன்றே பெயர் மாற்றம் வழங்கவேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

    அதன்பேரில், தமிழ்நாடு முழுவதும் உள்ள வீட்டு மின் இணைப்பு மற்றும் பொது மின் இணைப்புதாரர்களுக்கென "சிறப்பு பெயர் மாற்றம் முகாம்", கடந்த ஜூலை மாதம் 24-ந் தேதி முதல் ஒரு மாதகாலம் வரை தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் அனைத்து பிரிவு அலுவலகங்களிலும் நடைபெற்று வந்தது.

    இந்த "சிறப்பு பெயர் மாற்றம் முகாம்" தொடங்கி வைக்கப்பட்ட நாள் முதல் இதுவரை மொத்தம் 2 லட்சத்து 68 ஆயிரத்து 995 வீட்டு மின் இணைப்பு மற்றும் பொது மின் இணைப்பு மின் நுகர்வோர்கள் தங்களது மின் இணைப்புகளில் பெயர் மாற்றம் செய்துள்ளனர்.

    இந்த சிறப்பு பெயர் மாற்றம் முகாம் குறித்து பொதுமக்களிடையே கிடைக்கப்பெற்ற அதிகப்படியான வரவேற்பினை கருத்திற்கொண்டும், ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட காலஅவகாசம் 24-ந் தேதி (நேற்று முன்தினம்) முடிவடைவதாலும், இந்த "சிறப்பு பெயர் மாற்றம் முகாம்" மேலும் ஒரு மாதகாலம் அதாவது அடுத்த மாதம் (செப்டம்பர்) 25-ந் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது.

    வீட்டு மின் இணைப்பு மற்றும் பொது மின் இணைப்புக்கான பெயர் மாற்றம் தேவைப்படும் பொதுமக்கள் அனைவரும் இந்த கால நீட்டிப்பு அவகாசத்தை உரிய முறையில் பயன்படுத்தி, சிறப்பு பெயர் மாற்றம் முகாம் மூலம் தங்களது வீட்டு மின் இணைப்புகள் மற்றும் பொது மின் இணைப்புகளில் பெயர் மாற்றம் செய்து கொள்ளுமாறு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக்கழகம் கேட்டுக்கொள்கிறது.

    மேற்கண்ட தகவல் தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 

    • தமிழகம் முழுவதும் ஸ்மார்ட் மின் மீட்டர் பொருத்த டெண்டர் கோரப்பட்டது.
    • நிறுவனங்களின் தரப்பில் 265 சந்தேகங்கள் எழுப்பப்பட்டன.

    சென்னை:

    வீடுகளில் மின் பயன்பாட்டை கணக்கிடுவதில் முறைகேடுகள் நடப்பதை தடுக்க 'ஸ்மார்ட் மீட்டர்' திட்டத்தை செயல்படுத்துமாறு ஏற்கனவே அனைத்து மாநில மின்வாரியங்களுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தி இருந்தது.

    அதன்படி, வீடுகளுக்கு 'ஸ்மார்ட்' மின் மீட்டர்கள் பொருத்தும் பணியை தமிழ்நாடு மின்சார வாரியம் தொடங்கியது. ஸ்மார்ட் மீட்டர் திட்டத்திற்கான டெண்டர் செயல்முறை கடந்த ஜூன் மாதம் தொடங்கியது.

    இந்த திட்டத்தை மாநிலம் முழுவதும் 3 தொகுப்புகளாக மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. முதற்கட்டமாக மேற்கு மாவட்டங்களில் சுமார் ஒரு கோடி ஸ்மார்ட் மீட்டர்களும், தென் மாவட்டங்களில் 80 லட்சம் மீட்டர்களும் பொருத்துவதற்கான டெண்டர் கோரப்பட்டது.

    இந்த நிலையில், ஸ்மார்ட் மின் மீட்டருக்கான டெண்டரை மின் வாரியம் திடீரென ரத்து செய்துள்ளது.

    இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது:-

    வீடுகளில் மின் பயன்பாட்டை கணக்கீடு செய்வதில் இருந்து வரும் முறைகேட்டை தடுக்கவே ஸ்மார்ட் மீட்டர் பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    ரூ.10 ஆயிரத்து 790 கோடியில் இந்த திட்டத்தை 2025-ம் ஆண்டுக்குள் முடிக்க காலநிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கடந்த அ.தி.மு.க. ஆட்சியின் போது பரீட்சார்த்த அடிப்படையில் சென்னை தியாகராயநகர் பகுதியில் 1 லட்சத்து 10 ஆயிரம் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்டது.

    இதில் உள்ள பல்வேறு குறைபாடுகளை சரி செய்து தமிழகம் முழுவதும் ஸ்மார்ட் மின் மீட்டர் பொருத்த டெண்டர் கோரப்பட்டது.

    இந்த டெண்டர் அறிவிப்பில் எதிர்காலத்தில் 5ஜி தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் வகையில் ஸ்மார்ட் மீட்டர் இருக்க வேண்டும் என்பது போன்ற பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டு உள்ளது.

    மின்வாரியத்தின் பல நிபந்தனைகள் நிறைவேற்ற முடியாத வகையில் இருப்பதால் டெண்டர் கோர நிறுவனங்கள் முன்வரவில்லை. இதைத்தொடர்ந்து 40-க்கும் மேற்பட்ட நிறுவனங்களை அழைத்து டெண்டர் கோருவதில் இருந்து வரும் சிக்கல்கள் என்னென்ன என்பதை மின்வாரியம் கேட்டறிந்தது.

    அப்போது இந்த நிறுவனங்களின் தரப்பில் 265 சந்தேகங்கள் எழுப்பப்பட்டன. இந்த சந்தேகங்களுக்கு தீர்வு காணவும் நிறுவனங்கள் கோரிக்கை விடுத்தன. இந்த சந்தேகங்களை சரி செய்து அவற்றில் பலவற்றை ஏற்றுக்கொள்ள மின்வாரியம் முடிவு செய்தது.

    இதற்காக திருத்தப்பட்ட டெண்டரை வெளியிடுவதற்கு பதிலாக அத்தனை சந்தேகங்களுக்கான தீர்வுகளுடன் புதிய டெண்டரை வெளியிடும் வகையில் ஏற்கனவே விடப்பட்ட டெண்டர் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    அதேபோன்று 3 தொகுப்புகளாக நடைபெற இருந்த பணியை ஒரே தொகுப்பாக சேர்த்து முடிக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது. இதன் அடிப்படையில் புதிய டெண்டர் விரைவில் வெளியாகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழ்நாட்டில் சுமார் 30-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மின்மாற்றிகளை விற்பனை செய்து வருகின்றன.
    • மின்மாற்றி தயாரிக்கும் நிறுவனங்கள் ஒரே மாதிரி விலைப்புள்ளி கோருவது கடந்த 2 ஆண்டுகளில் நிகழும் நிகழ்வுகள் அல்ல.

    சென்னை:

    தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு மின்சார வாரியத்தில் அனைத்து ஒப்பந்த புள்ளிதாரர்களும் ஒரே விலைப்புள்ளியை குறிப்பிட்டு உள்ளதால், மின்மாற்றிகள் கொள்முதல் செய்ததில் முறைகேடுகள் நடைபெற்றதாக புகார் கூறப்பட்டு உள்ளது.

    தமிழ்நாட்டில் சுமார் 30-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மின்மாற்றிகளை விற்பனை செய்து வருகின்றன. கடந்த 2011-ம் ஆண்டு முதல் மின்மாற்றிகள் கொள்முதல் செய்யப்பட்ட கோப்புகளை பரிசீலனை செய்ததில் பெரும்பாலான நேரங்களில் நிறுவனங்கள் ஒரே விலைப்புள்ளியை சமர்ப்பித்துள்ளது தெரிய வருகிறது.

    மின்மாற்றிகள் தயாரிக்கும் அனைத்து நிறுவனங்களும், சென்னையில் இருந்து நாகர்கோவில் வரை உள்ள 44 மின் பகிர்மான வட்டங்களுக்கு மின்மாற்றிகளை எடுத்து சென்று வழங்குவதால், அவை சரக்கு வாகன கட்டணம் செலுத்த வேண்டி உள்ளது. மின்மாற்றி தயாரிக்கும் நிறுவனங்கள் ஒரே மாதிரி விலைப்புள்ளி கோருவது கடந்த 2 ஆண்டுகளில் நிகழும் நிகழ்வுகள் அல்ல. இந்த நடைமுறை, கடந்த 10 வருடங்களுக்கும் மேலாகவே பின்பற்றப்பட்டு வருகிறது. 'ஜெம் போர்டல்' விலையை எடுத்துஒப்பீடு செய்துள்ளது சரியான நடைமுறையாகாது.

    புகாரில் மற்ற மாநிலங்களோடு மின்மாற்றிகளின் கொள்முதலை ஒப்பீடு செய்து ரூ.397.37 கோடி இழப்பு ஏற்பட்டதாக கூறியுள்ளது. புகாரில் மின்மாற்றிகளின் வேறுபட்ட விவரக் குறியீடுகளின் அடிப்படையிலும், வேறுபட்ட மூலப்பொருட்களின் அடிப்படையிலும் உதாரணமாக செம்பு மின்சுருள் கொண்ட மின்மாற்றிகளோடு ஒப்பீடு செய்யாமல் அலுமினியம் மின்சுருள் கொண்ட மின்மாற்றிகளோடு ஒப்பீடு செய்துள்ளது. தி.மு.க. அரசு, எந்த நிலையிலும், முறைகேடு நடைபெறுவதை அனுமதிக்காது.

    ஆகவே, மின்மாற்றிகள் கொள்முதலில் புகாரில் கூறியவாறு எவ்வித முறைகேடுகளும், தமிழ்நாடு மின்சார வாரியத்தில் நடைபெறவில்லை.

    புகாரில் அனைத்து ஒப்பந்த புள்ளிதாரர்களும் ஒரே விலைப்புள்ளியை குறிப்பிட்டு உள்ளதால், மின்மாற்றிகள் கொள்முதல் செய்ததில் முறைகேடு நடைபெற்றதாக கூறியுள்ளது. தமிழ்நாட்டில் ஏறக்குறைய 30-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மின்மாற்றிகளை விற்பனை செய்து வருகின்றன. கடந்த 2011-ம் ஆண்டு முதல் மின்மாற்றிகள் கொள்முதல் செய்யப்பட்ட கோப்புகளை பரிசீலனை செய்ததில் பெரும்பாலான நேரங்களில் நிறுவனங்கள் ஒரே விலைப்புள்ளியை சமர்ப்பித்துள்ளது தெரிய வருகிறது.

    மின்மாற்றி தயாரிக்கும் நிறுவனங்கள் ஒரே மாதிரி விலைப்புள்ளி கோருவது கடந்த 2 ஆண்டுகளில் நிகழும் நிகழ்வுகள் அல்ல. இந்த நடைமுறை, கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாகவே பின்பற்றப்பட்டு வருகிறது. கேரளாவில் கொள்முதல் செய்யும் மின்மாற்றிகளோடு ஒப்பீடு செய்ய இயலாது.

    ராஜஸ்தானில் கொள்முதல் செய்யப்படும் மின்மாற்றிகளுக்கான உத்தரவாத காலம் 3 வருடங்கள் ஆகும். எனவே, சமநிலையில் உள்ள விவர குறியீடுகளோடுதான் ஒப்பீடு செய்வது பொருத்தமானதாக இருக்கும்.

    தமிழ்நாடு மின்சார வாரியம் கொள்முதல் செய்யும் விலை எந்தவிதத்திலும் அதிகப்படியானதாக இல்லை என்பது தெரிகிறது.

    தமிழ்நாடு மின்சார வாரியத்தின் விவரக் குறியீடுகள் மற்ற மாநிலத்தில் பயன்படுத்தப்படும் மின்மாற்றிகளின் விவரக் குறியீடுகளோடு ஒப்பீடு செய்ய இயலாத அளவில் உயர்ந்ததாக உள்ளது.

    மின்மாற்றியின் விலையை ஒப்பிடும்போது அதற்கு இணையான திறன் உள்ள மின்மாற்றிக்கான விலையுடன் மட்டுமே ஒப்பீடு செய்ய இயலும்.

    ஆகவே, புகாரில் ஒப்பீடு செய்துள்ளது தவறானதாகும். கொள்முதலிலும் எவ்வித முறைகேடுகளும் நடைபெறவில்லை.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • மின்வாரிய ஊழியர்கள் நாளை போராட்டம் நடத்த முடிவு செய்து உள்ளனர்.
    • எந்த இடத்திலும் மின்தடை ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு மின்வாரியம் அறிவுறுத்தி உள்ளது.

    சென்னை:

    ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மின்வாரிய ஊழியர்கள் நாளை போராட்டம் நடத்த முடிவு செய்து உள்ளனர்.

    மின்வாரிய ஊழியர்களின் போராட்டத்தினால் பொதுமக்களுக்கு, பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க அந்தந்த செயற்பொறியாளர்களுக்கு மின்வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

    எந்த இடத்திலும் மின்தடை ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு மின்வாரியம் அறிவுறுத்தி உள்ளது.

    அதே சமயம் பணிக்கு வராமல் போராட்டத்தில் ஈடுபடும் மின்வாரிய ஊழியர்களுக்கு அந்த நாளுக்கான ஊதியம் கிடைக்காது என்றும் மின்வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    நாளை பணிக்கு வராதோர் விவரங்களை காலை 10.45 மணிக்குள் தலைமையிடத்திற்கு அனுப்புமாறு மண்டல பொறியாளர்களுக்கு மின்வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

    • குடிநீர் உள்ளிட்ட அடிப் படைத் தேவைகள் இன்றி கிராம மக்கள் அவதி அடைந்தனர்.
    • தினசரி 2 மணி நேரம் முதல் அதிகபட்சம் 6 மணி நேரம் வரை அறிவிக்கப்படாத மின்வெட்டு நிலவுகிறது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே கொடிக் களம், திருவட்டத்துறை பகுதியில் நேற்று வீசிய சூறாவளி காற்றுடன் கூடிய மழை பெய்தது. இதனால் பல்வேறு இடங்களில் மரம் விழுந்தது, மின் கம்பங்கள், மின்பாதை சேதம் அடைந்தது. மேலும் குடிநீர் உள்ளிட்ட அடிப் படைத் தேவைகள் இன்றி கிராம மக்கள் அவதி அடைந்தனர். பொதுமக்கள் 24 மணி நேரத்துக்கு மேல் மின்சாரம் இல்லாமல் தவித்து வந்தனர். இதனால் மின்சாரம் வழங்காத மின்சார வாரியத்தை கண்டித்து நேற்று இரவு திருவட்டத்துறை, கொடிக்க ளம் கிராமமக்கள் விருத்தா சலம்- திட்டக்குடி சாலை யில் கொடிக்களம் பஸ் நிலையத்தில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த திட்டக்குடி போலீ சார் சம்பவ இடத்துக்கு சென்று சாலை மறியலில் ஈடு பட்டிருந்த பொது மக்களி டம் உடனடியாக இதற்கு நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பெரில் பொதுமக்கள் சாலை மறி யலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. திருக்கோவிலூர் அடுத்த அரகண்டநல்லூர் மற்றும் அதன் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளிலும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதிகளிலும் கடந்த ஒரு வார காலமாக தினசரி 2 மணி நேரம் முதல் அதிகபட்சம் 6 மணி நேரம் வரை அறிவிக்கப்படாத மின்வெட்டு நிலவுகிறது. இதனால் பொதுமக்களும், வியாபாரிகளும் மிகுந்து சிரமத்திற்கு உள்ளாகி உள்ள னர். விழுப்புரம் மாவட் டத்தில் அரிசி உற்பத்தியில் 2-வது இடத்தில் இருக்கும் அரகண்ட நல்லூரில் இது போன்ற அறிவிக்கப்படாத மின்வெட்டு காரணமாக அரிசி உற்பத்தி பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் வியாபார பிரமுகர்களும் தொடர் மின்வெட்டால் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர்.

    இதுகுறித்து சம்பந்தப் பட்ட மின்வாரிய அதிகாரி களிடம் பொதுமக்கள் தரப்பில் காரணம் கேட்கும் பொழுது ஏன் மின்வெட்டு ஏற்படுகின்றது என்கிற காரணம் எங்களுக்கே தெரியவில்லை என அதிகாரிகள் தரப்பில் பதில் கூறுவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். அறி விக்கப்படாத மின்வெட்டுக் கான காரணம் என்னதான் என புரியாமல் பொதுமக்கள் குழம்பி உள்ளனர்.

    • பணிக்கான அட்டவணை தயார் செய்து அதனை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
    • அனைத்து நாட்களிலும் சென்னைக்கு சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.

    சென்னை:

    அமைச்சர்கள் மற்றும் மிக முக்கிய பிரமுகர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் தடையற்ற வகையில் மின்சாரம் விநியோகிக்கப்பட வேண்டும் என மின்வாரியம் கண்டிப்பான உத்தரவை பிறப்பித்துள்ளது.

    இதுகுறித்து அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    தமிழகத்தில் அமைச்சர்கள் மற்றும் மிக முக்கிய பிரமுகர்கள் (வி.வி.ஐ.பி.) வருகை தரும் இடங்களில் பராமரிப்புக்காக மின்தடை செய்யக் கூடாது என்றும், தடையற்ற வகையில் மின்சாரம் விநியோகிக்கப்பட வேண்டும் என்றும் பலமுறை தலைமையகத்தில் இருந்து அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது.

    எனினும், இதனை சில மின் பகிர்மான வட்டங்களில் பின்பற்றுவதில்லை.

    இதுபோன்ற நிகழ்வுகளைத் தடுக்கும் வகையில் மீண்டும் சில அறிவுறுத்தல்கள் வழங்கப்படுவதாகவும், அதன்படி, அமைச்சர்கள் மற்றும் மிக முக்கிய பிரமுகர்கள் பங்குபெறும் நிகழ்ச்சிகள் நடைபெறும் பகுதிகளில் (அவசர காலங்களைத் தவிர) பராமரிப்பு மின்தடை செய்யக் கூடாது, நிகழ்ச்சி முடியும் வரை உதவி பொறியாளர் நிலைக்கு குறையாத அதிகாரி மின் விநியோகத்தை கண்காணிக்க வேண்டும்.

    மேலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு, அமைச்சர்கள் நிகழ்வு குறித்த விவரங்களை சம்பந்தப்பட்ட மேற்பார்வை பொறியாளர்கள் அறிந்து கொள்ள வேண்டும், துணை மின் நிலையங்களில் போதிய பணியாளர்கள் இருப்பதையும், அவசர கால மின் தடையை சரி செய்வதற்கான நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டு இருப்பதையும் உதவி பொறியாளர் மற்றும் உதவி செயற்பொறியாளர் ஆகியோருடன் ஒருங்கிணைந்து செயற் பொறியாளர்கள் உறுதி செய்ய வேண்டும்.

    அதுமட்டுமின்றி, பணிக்கான அட்டவணை தயார் செய்து அதனை கட்டாயம் பின்பற்ற வேண்டும், அனைத்து நாட்களிலும் சென்னைக்கு சிறப்பு கவனம் செலுத்த வேண்டும், இதனை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அனைத்துத் தலைமைப் பொறியாளர்களுக்கு, மின்பகிர்மானப் பிரிவு இயக்குநர் சுற்றறிக்கை மூலம் வலியுறுத்தியுள்ளார்.

    • டிஜிட்டல் பணபரிமாற்றம் (மொபைல் டிரேன்ஸ்லேசன்) செய்யுமாறு கூறப்படும் போலியான தகவல்கள் சமூக வலைத்தளத்தில் பரவுவதை கண்டு மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்–டும்.
    • தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் இணையதளம் www.tnebltd.gov.in வழியாக மின்கட்டணம் செலுத்தி மக்கள் பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    திருப்பூர்:

    திருப்பூர் மின்சார வாரிய மேற்பார்வை பொறியாளர் சா.முத்துவேல் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    திருப்பூர் மின் பகிர்மான வட்டத்தில் மின் கட்டணம் செலுத்தாததால் மின் துண்டிப்பு செய்யப்படும் என குறுஞ்செய்தி மூலம் தகவல் கொடுத்து அதன் மூலம் டிஜிட்டல் பணபரிமாற்றம் (மொபைல் டிரேன்ஸ்லேசன்) செய்யுமாறு கூறப்படும் போலியான தகவல்கள் சமூக வலைத்தளத்தில் பரவுவதை கண்டு மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.

    அவ்வாறான போலியான தகவல்கள் தங்களது செல்போனுக்கு கிடைக்கப்பெற்றால் தங்களது 10 இலக்க மின் இணைப்பு எண் மற்றும் நிலுவையில் உள்ள மின் கட்டணம் போன்ற தகவல்கள் அருகில் உள்ள மின்சார வாரிய அலுவலகத்தை தொடர்பு கொண்டு உறுதி செய்துகொள்ள வேண்டும்.

    மேலும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் இணையதளம் www.tnebltd.gov.in வழியாக மின்கட்டணம் செலுத்தி மக்கள் பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×