என் மலர்
நீங்கள் தேடியது "மின்துறை ஊழியர்"
- மின்துறையை தனியார் மயமாக்குவதற்கான ஏற்பாடுகள் அரசு தரப்பில் தொடர்ந்து வந்தன.
- அரசின் பேச்சுவார்த்தைக்கு பிறகு ஊழியர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
புதுச்சேரி:
மத்திய அரசு கடந்த 2020-ம் ஆண்டு யூனியன் பிரதேசங்களில் மின் வினியோகம் தனியார் மயமாக்கப்படும் என்று அறிவித்தது. புதுச்சேரியில் இதை அமல்படுத்த அப்போதைய முதல்-அமைச்சர் நாராயணசாமி கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
இந்த நிலையில் என்.ஆர். காங்கிரஸ்- பா.ஜ.க. கூட்டணி ஆட்சி அமைந்த பிறகு மின்துறையை தனியார் மயமாக்குவது தொடர்பாக விவாதிக்கப்பட்டது. தனியார் மயத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மின்துறை ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் முதல்-அமைச்சர் ரங்கசாமி, மின்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
இருப்பினும் மின்துறையை தனியார் மயமாக்குவதற்கான ஏற்பாடுகள் அரசு தரப்பில் தொடர்ந்து வந்தன. 2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் மின்துறை தனியார் மயமாக்குவதை உறுதி செய்யும் வகையில் புதுச்சேரி மின்சார பகிர்மான கம்பெனி என்ற பெயரில் 100 சதவீத பங்குகளை தனியாருக்கு வழங்குவதற்கான டெண்டர் வெளியிடப்பட்டது. அரசின் இந்த நடவடிக்கை மின்துறை ஊழியர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதையடுத்து காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஊழியர்கள் குதித்தனர்.
இதனால் மின் பழுது நீக்குதல், புதிய இணைப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகள் முடங்கின. பல இடங்களில் நாள் முழுவதும் மின்சாரம் தடைப்பட்டது. இதனால் பொதுமக்கள் வீதிக்கு வந்து போராட்டம் நடத்தினர். பின்னர் அரசின் பேச்சுவார்த்தைக்கு பிறகு ஊழியர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
இந்தநிலையில் மின்துறை தனியார் மயத்துக்கான 100 சதவீத பங்குகளை விற்பனை செய்வதற்கான டெண்டர் தொடர்ந்து பலமுறை கால நீட்டிப்பு செய்யப்பட்டு வந்தது. மின்துறையின் 100 சதவீத பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்வதற்கான டெண்டர் ரத்து செய்யப்பட்டுள்ளது.
நிர்வாக காரணங்களுக்காக டெண்டர் ரத்து செய்யப்பட்டுள்ளதாக மின்துறை தெரிவித்துள்ளது. இதனால் புதுச்சேரி மின்துறை தனியார் மயமாக்கப்படாது என்பது உறுதியாகியுள்ளது.
- தாண்டவன் மதுவுக்கு அடிமையானதால் அடிக்கடி மது குடித்துவிட்டு சரிவர வேலைக்கு செல்லாமல் இருந்து வந்துள்ளார்
- தாண்டவன், பேனில் கயிறால் தூக்கிட்ட நிலையில் தொங்கியுள்ளார்
ஈரோடு,
ஈரோடு மாவட்டம், குதிரை க்கல்மேடு, கோனேரி ப்பட்டி பிரிவு, சாயபு தோட்டம் பகுதி யைச் சேர்ந்தவர் தாண்டவன் (47). குதிரைக்கல் மேடு கதவணை மின் நிலையத்தில், மின்சா ர்த்துறையில் ஒயர்மே னாக பணியாற்றி வந்தார்.
இவரது மனைவி சர ஸ்வதி (38). இவர், அப்பகு தியில் உள்ள தோட்டங்களில் விவசாய கூலி வேலைகளுக்கு சென்று வருவாராம். இவர்க ளுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இருவரும் கல்லூரி யில் படித்து வருகின்றனர். தாண்டவன் மதுவுக்கு அடிமையானதால் அடிக்கடி மது குடித்துவிட்டு சரிவர வேலைக்கு செல்லாமல் இருந்து வந்துள்ளார்.
இதனால், கணவன், மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில், நேற்று காலை வழக்கம் போல சரஸ்வதி தோட்ட வேலை க்கு சென்று விட்டாராம். சுமார் 10.30 மணியளவில் தாண்டவ னின் தாய் பழனியம்மாள் மட்டும் வீட்டில் இருந்துள்ளார். அப்போது, வெளியில் சென்று விட்டு வந்த தாண்டவன் வீட்டுக்குள் சென்று கதவை தாழிட்டுக் கொண்டாராம்.
உடனடியாக பழனி யம்மாள் தனது மருமகள் சரஸ்வதி வேலை செய்யும் இடத்துக்குச் சென்று அதுகுறித்து கூறியுள்ளார்.
இருவரும் வீட்டுக்கு வந்து ஜன்னல் வழியாக பார்த்த போது தாண்டவன், பேனில் கயிறால் தூக்கிட்ட நிலையில் தொங்கியுள்ளார். உடனடியாக அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று தாண்டவனை மீட்டு, பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோ தித்த மருத்துவர், ஏற்கனவே தாண்டவன் இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து, அம்மா பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.






