search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாம்பழம்"

    • ஐதராபாத், கர்நாடகா மற்றும் மகாராஷ்டிராவைச் சேர்ந்த மாம்பழப் பிரியர்கள் 77 வகை மாம்பழங்களை வாங்கிச் சுவைக்க இங்கு வருகிறார்கள்.
    • மாம்பழ ரகங்களை கண்காட்சி மூலம் பிரபலபடுத்த திட்டமிட்டுள்ளனர்.

    திருப்பதி:

    இந்த சீசனில் எத்தனை வகையான மாம்பழங்களை சுவைத்திருக்கிறீர்கள்? எண்ணிக்கை ஒன்று அல்லது 2 அல்லது 5 என இருக்கலாம்

    பலவித ருசியான மாம்பழங்களை சுவைக்க நீங்கள் தெலுங்கானா மாநிலம் சங்கரெட்டி நகரத்தில் உள்ள ஸ்ரீ கோண்டா லக்ஷ்மன் தெலுங்கானா மாநில தோட்டக்கலை பல்கலைக்கழகத்தின் பழ ஆராய்ச்சி நிலையத்திற்குச் செல்ல வேண்டும்.

    அங்கு சுமார் 4,000 மா மரங்கள் உள்ளன. இந்த பருவத்தில் 77 வகை மாம்பழங்கள் பழுத்து மனம் ருசிக்க ஈர்க்கிறது.

    ஐதராபாத், கர்நாடகா மற்றும் மகாராஷ்டிராவைச் சேர்ந்த மாம்பழப் பிரியர்கள் 77 வகை மாம்பழங்களை வாங்கிச் சுவைக்க இங்கு வருகிறார்கள்.

    இந்த மாம்பழ ரகங்களை கண்காட்சி மூலம் பிரபலபடுத்த திட்டமிட்டுள்ளனர்.

    மேலும் ஒவ்வொரு ரகத்தின் சாகுபடி முறைகள், லாபம் மற்றும் சவால்கள் குறித்தும் விவசாயிகளுக்கு விளக்கி வருகின்றனர்.

    அஸாம்-உஸ்-சமர் ரக மாம்பழம் விலை உயர்ந்தது, ஒரு கிலோ ரூ.600-க்கும், ஹிமாயத் ரகம் ஒரு கிலோ ரூ.250-க்கும் விற்கப்படுகிறது

    வழக்கமான ரகங்களான பெனிஷான், பெட்டா ரசலு, தாஷேரி, கேசரி, தோதாபுரி, மல்லிகா மற்றும் செருகு ரசலு தவிர, பாம்பே பேடா, கஜூ, தில்பசந்த் மற்றும் ஆசம்-உஸ்-சமார் போன்ற அரிய வகை ரகங்கள் கண்காட்சிகளில் வைத்து வருகின்றனர்.

    • மதுரையில் சீசனையொட்டி மாம்பழம் வாங்க பொதுமக்கள் ஆர்வம் காட்டினர்.
    • கிலோ ரூ. 50-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    மதுரை

    முக்கனிகளில் ஒன்று மாம்பழம். தற்போது மாம்பழ சீசன் தொடங்கி யுள்ள நிலையில் மதுரையில் மாம்பழ வியாபாரம் களை கட்டியுள்ளது.

    மாம்பழ உற்பத்தியில் புகழ் பெற்றது சேலம். தற்போது தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் மாம்பழங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதையொட்டி மதுரைக்கு மாம்பழ வரத்து அதிக ரித்துள்ளது.

    பெரிய பழக்கடைகள் முதல் சாலையோர கடைகளிலும் மாம்பழம் விற்பனை செய்யப்படுகிறது. இதுமட்டுமின்றி வாகனங்க ளில் கொண்டு சென்று மக்கள் கூறும் பகுதிகளில் விற்பனை செய்து வருகின்றனர்.

    ஒரு கிலோ ரூ.40-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனை அனைத்து தரப்பு மக்களும் ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர். நடமாடும் வாகனங்களில் 3 கிலோ மாம்பழம் ரூ. 100க்கு விற்பனை செய்யப்படு கிறது. சாலையோர கடை களிலும் கிலோ ரூ. 50-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    பல ரக மாம்பழங்கள் கிடைப்பதால் அதிக சுவையான மாம்பழம் எது என்பதை அறிந்து அதனை பொதுமக்கள் வாங்கி செல்கின்றனர். சிறுவர் முதல் பெரியவர்கள் வரை மாம்பழங்களை வாங்கி வருகின்றனர்.

    சிலர் ரசாயன கற்கள் வைத்து பழுக்க வைக்கின்ற னர். இதனால் உடல் நல பாதிப்பு ஏற்படும் என்பதால் சிலர் மாம்பழங்களை வாங்கு வதை தவிர்க்கின்றனர்.

    • கடந்த மாதம் சீசன் தொடங்கியபோது தினசரி 100 டன் அளவுக்கு மட்டுமே மாம்பழங்கள் விற்பனைக்கு வந்தது.
    • வரத்து அதிகரித்து வந்த நிலையில் தற்போது 200-க்கும் மேற்பட்ட வாகனங்களில் தினசரி 500 டன் வரை மாம்பழங்கள் விற்பனைக்கு குவிந்து வருகிறது.

    போரூர்:

    மாம்பழம் சீசன் காரணமாக தற்போது சென்னையில் உள்ள பல்வேறு முக்கிய சாலையோரங்களில் ஏராளமான பழக்கடைகள் முளைத்து உள்ளது.

    மேலும் வீடு தேடி தெருக்களில் மூன்று சக்கர தள்ளுவண்டிகளில் மாம்பழங்களை வியாபாரிகள் கூவி கூவி விற்பனை செய்து வருகின்றனர்.

    கோயம்பேடு பழ மார்க்கெட்டுக்கு திருவள்ளூர், சேலம் மற்றும் ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து மாம்பழங்கள் தினசரி விற்பனைக்கு வருகிறது.

    கடந்த மாதம் சீசன் தொடங்கியபோது தினசரி 100 டன் அளவுக்கு மட்டுமே மாம்பழங்கள் விற்பனைக்கு வந்தது. பின்னர் படிப்படியாக வரத்து அதிகரித்து வந்த நிலையில் தற்போது 200-க்கும் மேற்பட்ட வாகனங்களில் தினசரி 500 டன் வரை மாம்பழங்கள் விற்பனைக்கு குவிந்து வருகிறது. இதனால் மாம்பழம் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. பங்கனப்பள்ளி ரூ.35-க்கும், ஜவாரி ரூ.50-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. விலை குறைவால் பொதுமக்கள் அதிக அளவு மாம்பழங்களை வாங்கி செல்கிறார்கள்.

    கோயம்பேடு மார்க்கெட்டில் மாம்பழம் விற்பனை விலை (கிலோவில்) வருமாறு:- பங்கனப்பள்ளி-ரூ.25 முதல் ரூ.35 வரை, இமாம்பசந்த்-ரூ.80 முதல் ரூ.100 வரை, செந்தூரா-ரூ.20 முதல் ரூ.30 வரை, மல்கோவா-ரூ.60 முதல் ரூ.70 வரை, அல்போன்சா-ரூ.40 முதல் ரூ.60 வரை, ஜவாரி-ரூ.40 முதல் ரூ.50-வரையும் விற்கப்படுகிறது.

    • மாம்பழங்கள் வரத்து பின்னர் படிப்படியாக அதிகரித்து இன்று 300டன்னாக உயர்ந்து உள்ளது. வரத்து அதிகரிப்பால் மாம்பழங்கள் விலை கணிசமாக குறைந்து உள்ளது.
    • கோயம்பேடு மார்கெட்டுக்கு கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் இருந்து பலாப்பழங்கள் அதிகளவில் விற்பனைக்கு குவிந்து வருகிறது.

    போரூர்:

    மாம்பழம், பலாப்பழம் சீசன் காரணமாக சென்னையில் தற்போது சாலையோரங்களில் ஏராளமான பழக்கடைகள் முளைத்து உள்ளன. மாம்பழங்களை குவித்து வைத்து விற்பனை நடக்கிறது. இதேபோல் தள்ளுவண்டிகளில் பலாப்பழம் விற்பனையும் ஜோராக நடந்து வருகிறது. சீசன் காரணமாக கோயம்பேடு பழ மார்க்கெட்டுக்கு மாம்பழம், பலாப்பழம் வரத்து அதிகரித்து உள்ளது. வழக்கமாக திருவள்ளூர், சேலம் மற்றும் ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து மாம்பழங்கள் அதிகளவில் மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு வரும். கடந்த மாத தொடக்கத்தில் 100டன்னாக இருந்த மாம்பழங்கள் வரத்து பின்னர் படிப்படியாக அதிகரித்து இன்று 300டன்னாக உயர்ந்து உள்ளது. வரத்து அதிகரிப்பால் மாம்பழங்கள் விலை கணிசமாக குறைந்து உள்ளது. இதனால் மாம்பழம் விற்பனை விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

    கோயம்பேடு மார்க்கெட்டில் மாம்பழம்(கிலோவில்)விலை விபரம் வருமாறு:-இமாம்பசந்த்-ரூ.100, பங்கனப்பள்ளி-ரூ.50, அல்போன்சா-ரூ.90, ஜவாரி-ரூ.70, மல்கோவா-ரூ.90, செந்தூரா-ரூ.40.

    இதேபோல் கோயம்பேடு மார்கெட்டுக்கு கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் இருந்து பலாப்பழங்கள் அதிகளவில் விற்பனைக்கு குவிந்து வருகிறது. மொத்த விற்பனையில் ஒரு கிலோ பலாப்பழம் ரூ.15முதல் ரூ.35வரை விற்பனை செய்யப்படுகிறது. இதுகுறித்து பலாப்பழ மொத்த வியாபாரி அனிபா கூறியதாவது:-

    இப்போது பலாப்பழம் சீசன் தொடங்கி விற்பனை களை கட்டி உள்ளது. கடந்த மாதம் வரை தினசரி 2,500 பலாப்பழங்கள் மட்டுமே விற்பனைக்கு வந்து கொண்டிருந்த நிலையில் தற்போது தினசரி 4ஆயிரம் பலாப்பழங்கள் விற்பனைக்கு குவிந்து வருகிறது. தேக்கம் ஏதும் ஏற்படாமல் அனைத்து பழங்களும் விற்று தீர்ந்துவிடுகிறது. இன்னும் ஒரு மாதத்துக்கு பலாப்பழம் விற்பனை சூடு பிடிக்கும்.பின்னர் அதன் வரத்து படிப்படியாக குறையும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வியாபாரிகள் அதிக லாபம் பார்க்கும் நோக்கில் மாங்காய்களை குறைந்த விலையில் கொள்முதல் செய்து வருவதாக கூறப்படுகிறது.
    • கடை மற்றும் குடோன்களில் குவியலாக வைத்து அதனை கார்பைட் கல் மூலம் பழுக்க வைப்பதாக புகார்கள் எழுந்து வருகிறது.

    செங்கோட்டை:

    தென்காசி மாவட்டம் செங்கோட்டை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் 10 ஆயிரம் ஏக்கருக்கு மேல் மாம்பழம் விவசாயம் நடைபெறுகிறது. கோடைகால சீசனாக மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் விளையும் மாம்பழங்கள் தற்போது கடைகளில் விற்பனைக்கு வரத் தொடங்கி உள்ளது. இங்கு சப்போட்டா, கிளி மூக்கு, பஞ்சவர்ணம், அல்போன்சா போன்ற ரக மாங்காய்கள் காய்க்கின்றன.

    செங்கோட்டை மற்றும் சுற்று கிராமங்களில் விளையும் இந்த வகை மாங்காய்கள் வெளிமார்க்கெட் மற்றும் பழக்கடைகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள், கேரளா ஆந்திரா, புதுச்சேரி உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் அனுப்பப்படுகின்றன.

    ஆனால் சீசன் தொடங்கும் முன்னே சில வியாபாரிகள் அதிக லாபம் பார்க்கும் நோக்கில் மாங்காய்களை குறைந்த விலையில் கொள்முதல் செய்து வருவதாக கூறப்படுகிறது. கடை மற்றும் குடோன்களில் குவியலாக வைத்து அதனை கார்பைட் கல் மூலம் பழுக்க வைப்பதாக புகார்கள் எழுந்து வருகிறது.

    இவ்வாறு பழுக்கும் பழங்களின் தோல் பகுதி பளபளப்பாக இருக்கும். இது பார்ப்பவர்களை வாங்க தூண்டும். இதேபோல் குவியலாக மாங்காய்களை போட்டு, ஸ்பிரே மூலம் ரசாயன மருந்து அடிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. கல், ரசாயனம் மூலம் காய்கள் சில நாள்களில் பழுக்கின்றன. இந்த பழங்களை சாப்பிட்டால் வயிற்று வலி, வயிற்றுப்போக்கு ஏற்படும். செயற்கை முறையில் மாம்பழங்களை பழுக்க வைப்பதால் குழந்தைகள் முதல் பெரியவர் வரை பாதிக்கின்றனர். இதை அதிகாரிகள் தடுக்க வேண்டும் என பலதரப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதையடுத்து செங்கோட்டையில் பல கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். வல்லம் அருகே உள்ள சிலுவைமுக்கு பகுதியில் செயற்கை முறையில் பழுக்க வைத்துள்ளதாக தகவல் அறிந்து தென்காசி ஊராட்சி ஒன்றிய உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி நாகசுப்பிரமணியன் சம்பவ இடத்தை ஆய்வு செய்தபோது, அவர் யார் என்று தெரியாமல் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி கண் முன்னே மாம்பழங்கள் கெடாமல் இருப்பதற்காகவும், விரைவாக பழுக்கவும் அமிலம் கலந்த ஸ்பிரேவை வியாபாரி மாம்பழங்களில் அடித்துக் கொண்டிருந்துள்ளார்.

    அதை பார்த்த உணவு பாதுகாப்பு துறை அதிகாரி குடோனில் வைத்திருந்த மாம்பழங்களை ஆய்வு செய்தார். அப்போது, குடோனில் இருந்த மாம்பழங்கள் முழுவதும் செயற்கையான முறையில் பழுக்க வைக்கப் பட்ட மாம்பழங்களாக இருந்துள்ளது. அதனைத் தொடர்ந்து, அந்த குடோனில் இருந்த சுமார் 600 கிலோ மதிப்பிலான மாம்பழங்களை பறிமுதல் செய்து அதை போலீஸ் பாதுகாப்புடன் அருகே உள்ள குப்பை கிடங்கில் கொட்டி அழித்தார்.

    • ரசாயன கல் மூலம் பழுக்க வைத்த 679 கிலோ பழங்கள் பறிமுதல் செய்தனர்.
    • மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி ஜெயராம பாண்டியன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    மதுரை

    மதுரை மாவட்டத்தில் கோடை காலம் தொடங்கி விட்டது. எனவே உடலுக்கு குளிர்ச்சி தரும் பழங்களின் விற்பனை அதிகரித்து வரு கிறது. பொதுமக்கள் மாட்டுத்தாவணி மார்க்கெட்டில் மாம்பழம், திராட்சை, வாழைப்பழம், கிர்ணி பழம் ஆகியவற்றை ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.

    இந்த நிலையில் மாட்டுத் தாவணி பழ மார்க்கெட்டில் பழங்கள் ரசாயன கல் வைத்து செயற்கை முறை யில் பழுக்க வைக்கப்படுவ தாக மாவட்ட உணவு பாது காப்பு துறைக்கு தொடர்ச்சி யாக புகார் வந்தது. எனவே அங்கு அதிரடியாக சோதனை நடத்துவது என்று அதிகாரிகள் முடிவு செய்த னர்.

    அதன்படி மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி ஜெயராம பாண்டியன் தலைமையில் ஊழியர்கள் நேற்று இரவு மாட்டுத்தாவணி பழ மார்க்கெட்டில் அதிரடி சோதனை நடத்தினர். அதிகாரிகள் ஒவ்வொரு கடைகளாக சென்று ஆய்வு செய்தனர். அங்கு உள்ள சுமார் 140 கடைகளும் தணிக்கை செய்யப்பட்டது.

    அப்போது சில கடை களில் மாம்பழம், திராட்சை, கிர்ணி பழம், வாழைப்பழம் ஆகி யவை செயற்கை ரசாயனம் மூலம் பழுக்க வைக்கப்பட்டது கண்டறி யப்பட்டது. இதனை தொடர்ந்து உணவு பாது காப்பு துறை அதி காரிகள் மாட்டுத்தாவணி பழ மார்க்கெட்டில் ரசாயன கல் வைத்து பழுக்க வைக்கப் பட்ட 154 கிலோ மாம்பழம், 45 கிலோ திராட்சை, 60 கிலோ தண்ணீர்பழம், 18 தார் (420 கிலோ) வாழைப் பழங்கள் என மொத்தம் 679 கிலோ பழங்கள் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.28 ஆயிரம் ஆகும்.

    மாட்டுத்தாவணி வியாபாரிகள் கடந்த சில மாதங்களாகவே பழங்களை செயற்கை முறையில் பழுக்க வைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது கிலோ கணக்கில் பழங்கள் அழுகி உள்ளன. அவற்றை யும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதனை தொடர்ந்து செயற்கை முறையில் பழுக்க தடை செய்யப்பட்ட பாலித்தீன் பைகளும் பறிமுதல் செய்யப்பட்டது. சம்பந்தப்பட்ட கடைக ளுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.

    உடலுக்கு தீமை விளைவிக்கும் செயற்கை முறையில் பழங்களை பழுக்க வைத்து விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி ஜெயராம பாண்டியன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    • நடவடிக்கை எடுக்க கலெக்டர் வினீத் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
    • மாம்பழங்களின் மொத்த மதிப்பு சுமார் ரூ.1.50 லட்சம் ஆகும்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்டத்தில் உள்ள பழக்கடைகளில் கார்பைடு கல் மூலம் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இது குறித்து நடவடிக்கை எடுக்க கலெக்டர் வினீத் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி களுக்கு உத்தரவிட்டார்.

    இதையடுத்து உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் 3 குழுக்களாக பிரிந்து திருப்பூர் மாநகர் பகுதியில் உள்ள மாம்பழ மொத்த மற்றும் சில்லரை விற்பனை நிலையங்களில் இன்று காலை திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

    ஆய்வின்போது 4 குடோன்களில் இருந்து சுமார் 2 டன் அளவிலான வேதிப்பொருட்களை வைத்து செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட மற்றும் கெட்டுப்போன மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டு மாநகராட்சி மூலம் அழிக்கப்பட்டது. மாம்பழங்களின் மொத்த மதிப்பு சுமார் ரூ.1.50 லட்சம் ஆகும். இது தொடர்பாக 12 மொத்த விற்பனை நிலையங்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.

    • 30 கடைகளில் ரசாயனம் மூலம் மாம்பழங்கள், வாழைப்பழங்கள் செயற்கையான முறையில் பழுக்க வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
    • வியாபாரிகள் சிலர் ரசாயனம் மூலம் மாம்பழங்களை பழுக்க வைத்து விற்பனை செய்து வருகின்றனர்.

    போரூர்:

    மாம்பழம் சீசன் தற்போது தொடங்கி உள்ளது. இதனால் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு மாம்பழம் வரத்து அதிகரிக்கத் தொடங்கி விற்பனையும் சூடுபிடித்து உள்ளது.

    இந்த நிலையில் கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள பழ கடைகளில் ரசாயனம் மூலம் வாழைப்பழம் மற்றும் மாம்பழங்களை பழுக்க வைத்து விற்பனை செய்து வருவதாக உணவு பாதுகாப்பு துறையினருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தது.

    இதையடுத்து சென்னை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரி டாக்டர் சதிஷ்குமார் தலைமையில் அதிகாரிகள் சுந்தரமூர்த்தி, ராமராஜ், ஏழுமலை மற்றும் அங்காடி நிர்வாக குழு ஊழியர்கள் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்டோர் இன்று அதிகாலை 4 மணி முதல் கோயம்பேடு பழ மார்க்கெட்டில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

    சுமார் 50-க்கும் மேற்பட்ட கடைகளில் இந்த சோதனை நடத்தப்பட்டது. இதில் 30 கடைகளில் ரசாயனம் மூலம் மாம்பழங்கள், வாழைப்பழங்கள் செயற்கையான முறையில் பழுக்க வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து ரசாயனம் மூலம் பழுக்க வைத்த சுமார் 5 டன் மாம்பழங்கள் மற்றும் 2 டன் வாழைப்பழங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    இதுகுறித்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரி சதிஷ் குமார் கூறியதாவது:-

    வியாபாரிகள் சிலர் ரசாயனம் மூலம் மாம்பழங்களை பழுக்க வைத்து விற்பனை செய்து வருகின்றனர். தொடர்ந்து விதிமுறைகளை மீறும் வியாபாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

    இதுபோன்ற பழங்கள் உடல் நலத்துக்கு கேடு விளைவிக்கும். மாம்பழங்களை எப்படி பழுக்க வைக்க வேண்டும் என்பது குறித்து கோயம்பேடு பழ மார்க்கெட் வியாபாரிகள் இடையே உணவு பாதுகாப்பு துறை சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • செயற்கையாக பழுக்க வைத்த மாம்பழம், பிளாஸ்டிக் கவர்களை பறிமுதல் செய்தனர்.
    • இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், சாலையோரம் இருந்த 48 கடைகள் ஆய்வு செய்யப்பட்டது.

    சேலம்:

    சேலம் அஸ்தம்பட்டி ரவுண்டானாவில் இருந்து ஏற்காடு செல்லும் வழியில் சாலையோரங்களில் பழக்கடைகள் உள்ளன. அங்கு மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் கதிரவன் தலைமையில் அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர்.

    அப்போது செயற்கையாக பழுக்க வைத்த மாம்பழம், பிளாஸ்டிக் கவர்களை பறிமுதல் செய்தனர். இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், சாலையோரம் இருந்த 48 கடைகள் ஆய்வு செய்யப்பட்டது. 2 கடைகளில் செயற்கையாக பழுக்க வைத்த மாம்பழம் 260 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது.

    தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர் 25 கிலோ பறிமுதல் செய்து, அழிக்கப்பட்டன. பிளாஸ்டிக் கவர் பயன்படுத்திய 2 கடைகளுக்கு 4000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

    கடை உரிமையாளர்களிடம் பழங்களை பழுக்க வைப்பது தொடர்பாக அறிவுரை வழங்கி, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    • செந்தூரம், கிளி மூக்கு போன்ற ரக மாம்பழங்கள் கடந்த ஆண்டு விலை குறைந்து விற்பனை செய்யப்பட்டது.
    • பெங்களுரா, மல்கோவா, இமாம் சந்த், குண்டு நடுச்சாலை போன்ற ரக மாம்பழங்களும் விற்பனைக்கு வர தொடங்கியுள்ளன.

    ஈரோடு:

    கோடை காலத்தில் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் கனிகளில் முதலிடத்தில் இருப்பது மாம்பழம் தான். ஈரோடு மாவட்டத்தில் மாம்பழங்கள் குறைந்த அளவிலேயே விளைவிக்கப்படுகிறது. இதனால் ஈரோடு மாவட்டத்திற்கு அருகே உள்ள சேலம், கிருஷ்ணகிரி, சங்ககிரி, மேச்சேரி, ஆத்தூர், வனவாசி, நங்கவள்ளி, தலைவாசல் போன்ற பகுதியில் இருந்து மாம்பழங்கள் அதிக அளவில் விளைச்சலாகி வருகிறது.

    ஈரோட்டில் ஏப்ரல் மாதம் தொடக்கத்தில் இருந்தே வ.உ.சி. நேதாஜி காய்கறி மார்க்கெட், சம்பத் நகர், பெரியார் நகர் உழவர் சந்தைகள் உட்பட அனைத்து கடைகளிலும் பல்வேறு வகை மாம்பழங்கள் விற்பனைக்கு வந்துள்ளன. குறிப்பாக பங்கனப்பள்ளி, செந்தூரம், மல்கோவா, கிளி மூக்கு போன்ற வகை மாம்பழங்கள் அதிக அளவில் விற்பனைக்கு வந்துள்ளன. வ.உ.சி. மார்க்கெட்டிற்கு இன்று 10 டன் மாம்பழம் விற்பனைக்கு வந்துள்ளது.

    சேலம், கிருஷ்ணகிரி போன்ற பகுதிகளில் அதிகம் விளைச்சல் ஆகும். செந்தூரம், கிளி மூக்கு போன்ற ரக மாம்பழங்கள் கடந்த ஆண்டு விலை குறைந்து விற்பனை செய்யப்பட்டது. கடந்த ஆண்டு ஒரு கிலோ ரூ.35-க்கு விற்கப்பட்ட செந்தூரம் இந்த ஆண்டு ரூ.80 முதல் ரூ. 110 வரை விற்கப்படுகிறது. இதேபோல் ரூ.30-க்கு விற்கப்பட்ட கிளி மூக்கு மாம்பழம் இந்த ஆண்டு ரூ.60-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் மாம்பழம் வரத்து குறைந்து இருப்பது தான்.

    இதேபோல் பெங்களுரா, மல்கோவா, இமாம் சந்த், குண்டு நடுச்சாலை போன்ற ரக மாம்பழங்களும் விற்பனைக்கு வர தொடங்கியுள்ளன. இவற்றின் விலையும் கடந்த ஆண்டை விட 2 மடங்கு அதிகரித்துள்ளது.

    இதுகுறித்து மாம்பழம் மொத்த வியாபாரிகள் கூறியதாவது:-

    ஈரோட்டிற்கு சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி போன்ற பகுதியில் இருந்து அதிக அளவில் மாம்பழங்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. தற்போது மாம்பழம் சீசன் தொடங்கி விட்டாலும் வரத்து மிகவும் குறைவாகவே உள்ளது. இதனால் மாம்பழங்கள் விலை அதிகரித்துள்ளது.

    ஓசூர், பெங்களூர், ஆந்திரா, கர்நாடகா போன்ற பல்வேறு பகுதிகளில் இருந்து பல்வேறு வகை மாம்பழங்கள் விற்பனைக்கு வர தொடங்கியுள்ளன. இந்த மாம்பழங்கள் வரத்து அதிகரித்தால் விலை குறைய வாய்ப்பு உள்ளது.

    ஈரோட்டில் கடந்த சில மாதங்களாகவே கடும் வெயில் வாட்டி வருவதால் மா மரத்தில் காய் பிடிக்கும் சீசனில் பூக்களிலேயே உதிர்ந்து விடுகிறது. மேலும் மாங்காய் முழு வளர்ச்சி பிடிக்காமல் வெம்பி விழுந்து விடுவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இதனால் தான் தற்போது சீசன் தொடங்கியும் மாம்பழம் வரத்து குறைவாக உள்ளது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. முயற்சியால் ராஜபாளையத்தில் மாம்பழம் பதப்படுத்தும் தொழிற்சாலை அமைக்கப்படுகிறது.
    • ராஜபாளையம் தொகுதி விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் மகிழ்ச்சியடைவார்கள்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் தொகுதி எம்.எல்.ஏ. தங்கபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடரில் குறு-சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் மானியக்கோரிக்கை விவாதம் நடந்தது. ராஜபாளையம் தொகுதியில் விவசாயிகளின் 50 வருட கோரிக்கையான மாம்பழம் பதப்படுத்துதல் மற்றும் மாழ்பழக்கூழ் தொழிற்பேட்டை, தேங்காய் கொள்முதல் நிலையம் மற்றும் சிறு-குறு நடுத்தர தொழிற்பேட்டை அமைக்க கோரிக்கை விடுத்திருந்தேன்.

    இதையடுத்து முதல்-அமைச்சரின் அறிவுறுத்தலின்படி அமைச்சர் அன்பரசனால் ராஜபாளையம் பி.ஏ.சி.ஆர். அரசு மருத்துவமனை எதிர்ப்புறம் சின்மயா பள்ளி செல்லும் சாலையில் தென்காசி மெயின்ரோட்டில் இருந்து சுமார் 1.5 கிலோமீட்டர் தொலைவில் புதிய தொழிற்பேட்டை அமைய உள்ளது என்ற அறிவிப்பு சட்டபேரவையில் வெளியிடப்பட்டுள்ளது.

    இதை ராஜபாளையம் தொகுதி விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். ராஜபா ளையம் பகுதியை சுற்றியுள்ள விவசாயிகளின் நீண்டகால கோரிக்கையை நிறைவேற்ற காரணமாக இருந்து தொடர்ந்து வலியுறுத்திய வருவாய்த்துறை அமைச்சர் , தொழில்துறை அமைச்ச ருக்கு எனது சார்பிலும், விவசாயிகளின் சார்பிலும் ராஜபாளையம் தொகுதி பொதுமக்களின் சார்பிலும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.மானிய கோரிக்கையில் அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து குறு-சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் அமைச்சர் அன்பரசன், அந்த துறையின் நிர்வாக இயக்குநர் மதுமதி ஆகியோரை ராஜபாளையம் சட்ட மன்ற உறுப்பினர் என்ற முறையில் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தேன்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வாரந்தோறும் 6 டன் எடையிலான மாம்பழங்கள் கோவையில் இருந்து ஷார்ஜாவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
    • கோவை விமான நிலையத்தில் ஒரே நேரத்தில் 250 டன் சரக்குகள் கையாளும் உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளது.

    கோவை:

    கோவை சர்வதேச விமான நிலைய வளாகத்தில் அமைந்துள்ளது ஒருங்கிணைந்த சரக்கக வளாகம்.

    இங்கிருந்து உள்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும், ஷார்ஜா, சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளுக்கும் கோவையில் இருந்து சரக்குகள் விமானங்களில் அனுப்பி வைக்கப்படுகிறது.

    நேரடி விமான சேவை இல்லாத ஐரோப்பா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளுக்கும் பாண்டட் டிரக் சேவை மூலம் சாலை வழியாக கொச்சி, பெங்களூரு உள்ளிட்ட விமான நிலையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து ஏற்றுமதியாகின்றன.

    மாதந்தோறும் உள்நாட்டு பிரிவில் 700 டன், வெளிநாட்டு பிரிவில் 150 டன் சரக்குகள் கையாளப்படுகின்றன.

    தற்போது மாம்பழ சீசன் தொடங்கியுள்ளதால் கோவையில் இருந்து ஷார்ஜாவுக்கு வாரந்தோறும் 6 டன் மாம்பழம் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    இதுகுறித்து விமான நிலைய அதிகாரிகள் கூறியதாவது:-

    வழக்கமாக பொறியியல் உற்பத்தி பொருட்கள், வார்ப்படம், காய்கறிகள், பழங்கள் மற்றும் சிப்ஸ் உள்ளிட்ட பல்வேறு உணவு வகைகள் புக்கிங் செய்யப்பட்டு கொண்டு செல்லப்படும்.

    சிங்கப்பூர் விமானத்தில் சரக்குகள் புக்கிங் மிகவும் குறைவாக உள்ளதால் அரை டன் அல்லது ஒரு டன் மட்டுமே சரக்குகள் கையாளப்படுகின்றன.

    ஷார்ஜாவுக்கு வாரத்தில் 5 நாட்கள் விமான சேவை வழங்கப்படும் நிலையில், ஒவ்வொரு முறையும் 3 டன் எடையிலான சரக்குகள் கொண்டு செல்லப்படுகிறது.

    கோடை காலத்தில் மாம்பழம் அதிகளவு ஏற்றுமதி செய்யப்படும். தற்போது சீசன் தொடங்கி உள்ளதால் கேரளா மற்றும் பொள்ளாச்சியில் இருந்து மாம்பழங்கள் அதிகளவு ஷார்ஜா விமானத்தில் கொண்டு செல்லப்படுகின்றன.

    வாரந்தோறும் 6 டன் எடையிலான மாம்பழங்கள் கோவையில் இருந்து ஷார்ஜாவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. கோவை விமான நிலையத்தில் ஒரே நேரத்தில் 250 டன் சரக்குகள் கையாளும் உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளது.

    சர்வதேச நாடுகளுக்கு விமான சேவை அதிகரித்தால் சரக்குகள் கையாளப்படும் அளவும் கணிசமாக அதிகரிக்கும்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    ×