search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. முயற்சியால்  ராஜபாளையத்தில் மாம்பழம் பதப்படுத்தும் தொழிற்சாலை
    X

    தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. முயற்சியால் ராஜபாளையத்தில் மாம்பழம் பதப்படுத்தும் தொழிற்சாலை

    • தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. முயற்சியால் ராஜபாளையத்தில் மாம்பழம் பதப்படுத்தும் தொழிற்சாலை அமைக்கப்படுகிறது.
    • ராஜபாளையம் தொகுதி விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் மகிழ்ச்சியடைவார்கள்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் தொகுதி எம்.எல்.ஏ. தங்கபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடரில் குறு-சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் மானியக்கோரிக்கை விவாதம் நடந்தது. ராஜபாளையம் தொகுதியில் விவசாயிகளின் 50 வருட கோரிக்கையான மாம்பழம் பதப்படுத்துதல் மற்றும் மாழ்பழக்கூழ் தொழிற்பேட்டை, தேங்காய் கொள்முதல் நிலையம் மற்றும் சிறு-குறு நடுத்தர தொழிற்பேட்டை அமைக்க கோரிக்கை விடுத்திருந்தேன்.

    இதையடுத்து முதல்-அமைச்சரின் அறிவுறுத்தலின்படி அமைச்சர் அன்பரசனால் ராஜபாளையம் பி.ஏ.சி.ஆர். அரசு மருத்துவமனை எதிர்ப்புறம் சின்மயா பள்ளி செல்லும் சாலையில் தென்காசி மெயின்ரோட்டில் இருந்து சுமார் 1.5 கிலோமீட்டர் தொலைவில் புதிய தொழிற்பேட்டை அமைய உள்ளது என்ற அறிவிப்பு சட்டபேரவையில் வெளியிடப்பட்டுள்ளது.

    இதை ராஜபாளையம் தொகுதி விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். ராஜபா ளையம் பகுதியை சுற்றியுள்ள விவசாயிகளின் நீண்டகால கோரிக்கையை நிறைவேற்ற காரணமாக இருந்து தொடர்ந்து வலியுறுத்திய வருவாய்த்துறை அமைச்சர் , தொழில்துறை அமைச்ச ருக்கு எனது சார்பிலும், விவசாயிகளின் சார்பிலும் ராஜபாளையம் தொகுதி பொதுமக்களின் சார்பிலும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.மானிய கோரிக்கையில் அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து குறு-சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் அமைச்சர் அன்பரசன், அந்த துறையின் நிர்வாக இயக்குநர் மதுமதி ஆகியோரை ராஜபாளையம் சட்ட மன்ற உறுப்பினர் என்ற முறையில் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தேன்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×