செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட 2 டன் மாம்பழங்கள் பறிமுதல்- அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை

நடவடிக்கை எடுக்க கலெக்டர் வினீத் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.மாம்பழங்களின் மொத்த மதிப்பு சுமார் ரூ.1.50 லட்சம் ஆகும்.
அதிகாரிகள் சோதனை நடத்திய காட்சி.
அதிகாரிகள் சோதனை நடத்திய காட்சி.
Published on

திருப்பூர்:

திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்டத்தில் உள்ள பழக்கடைகளில் கார்பைடு கல் மூலம் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இது குறித்து நடவடிக்கை எடுக்க கலெக்டர் வினீத் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி களுக்கு உத்தரவிட்டார்.

இதையடுத்து உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் 3 குழுக்களாக பிரிந்து திருப்பூர் மாநகர் பகுதியில் உள்ள மாம்பழ மொத்த மற்றும் சில்லரை விற்பனை நிலையங்களில் இன்று காலை திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

ஆய்வின்போது 4 குடோன்களில் இருந்து சுமார் 2 டன் அளவிலான வேதிப்பொருட்களை வைத்து செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட மற்றும் கெட்டுப்போன மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டு மாநகராட்சி மூலம் அழிக்கப்பட்டது. மாம்பழங்களின் மொத்த மதிப்பு சுமார் ரூ.1.50 லட்சம் ஆகும். இது தொடர்பாக 12 மொத்த விற்பனை நிலையங்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com