search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாநிலங்களவை ஒத்திவைப்பு"

    பாராளுமன்ற மாநிலங்களவையில் முத்தலாக் மசோதா இன்று தாக்கல் செய்யப்படவிருந்த நிலையில் காவிரி விவகாரம் தொடர்பாக அ.தி.மு.க. உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் 2 மணிவரை அவை ஒத்திவைக்கப்பட்டது. #RajyaSabhaadjourned #AIADMKmembers #Cauveryissue
    புதுடெல்லி:

    கிறிஸ்துமஸ் பண்டிகை விடுமுறைக்கு பின்னர் பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 27-ம் தேதி கூடியபோது, மக்களவையில் முத்தலாக் மசோதா வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டது.
     
    மக்களவையில் நிறைவேற்றப்பட்ட முத்தலாக் மசோதா  31-ம் தேதி மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்படும் என மத்திய சட்டத்துறை மந்திரி ரவிசங்கர் பிரசாத் தெரிவித்திருந்தார்.

    இன்று நடைபெறவுள்ள பாராளுமன்ற கூட்டத்தில் அனைத்து எம்.பிக்களும் தவறாமல் கலந்து கொள்ளவேண்டும் என பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சி கொறடாக்கள் உத்தரவு பிறப்பித்தனர். இந்த மசோதாவை ஆதரிக்க மாட்டோம் என அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. எம்.பி.க்கள் திட்டவட்டமாக தெரிவித்திருந்தனர்.

    இன்று காலை பாராளுமன்றம் கூடுவதற்கு முன்னதாக மாநிலங்களவை எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அனைவரும் காங்கிரஸ் எம்.பி. குலாம் நபி ஆசாத் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று முத்தலாக் மசோதாவை தடுப்பது தொடர்பாக விவாதித்தனர்.



    இதேபோல், இந்த மசோதாவை நிறைவேற்றுவதற்காக பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற ஆளும்கட்சி ஆலோசனை கூட்டத்தில் பா.ஜ.க. தலைவர் அமித் ஷா, மந்திரிகள் அருண் ஜெட்லி, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    இந்நிலையில், இன்று மாநிலங்களவை கூடியதும் காவிரி விவகாரத்தை முன்வைத்து அ.தி.மு.க. எம்.பி.க்கள் பிரச்சனை எழுப்பினர். ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து, ரபேல் விவகாரம், விவசாயிகள் கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளுக்காக எம்.பி.க்கள் ஒரே நேரத்தில் கூச்சலிட்டனர்.

    இதனால் அவையில் முத்தலாக் மசோதாவை தாக்கல் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. தொடர்ந்து கூச்சலும், குழப்பமும் நீடித்ததால் பிற்பகல் 2 மணிவரை மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டது. #RajyaSabhaadjourned  #AIADMKmembers #Cauveryissue 
    அசாம் மாநில குடிமக்கள் பட்டியல் தொடர்பாக பாராளுமன்றத்தில் காங்கிரஸ், திரிணாமுல் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவை இன்றும் ஒத்திவைக்கப்பட்டது. #RajyaSabhaadjourned #AssamNRC
    புதுடெல்லி:

    அசாம் மாநிலத்தில் அசாமியர்களுடன், வங்காளதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக குடியேறியவர்களும் பெரும் அளவில் வசிப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் யார் அசாமியர், யார் வங்காளதேசத்தை சேர்ந்தவர்கள் என்பதை அடையாளம் காண்பதில் குழப்பம் ஏற்பட்டது. 

    இதைத்தொடர்ந்து, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி அசாமில் தேசிய குடிமக்கள் வரைவு பதிவேடு தயாரிக்கப்பட்டு இறுதிப் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் 40 லட்சம் பேரின் பெயர்கள் நீக்கப்பட்டு இருந்தன. இதில் இந்தியர்களின் பெயரும் நீக்கப்பட்டுள்ளது என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
     
    இந்த விவகாரம் தொடர்பாக கடந்த இரு தினங்களாக பாராளுமன்றத்தில் கடும் அமளி ஏற்பட்டது.



    நேற்றைய கூட்டத்தொடரின்போது மாநிலங்களவையில் அசாம் தேசிய மக்கள் பதிவேடு தொடர்பாக உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் விளக்கம் அளித்தார். இருப்பினும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ராஜ்நாத் சிங் பேச எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டு மீண்டும் அமளியில் ஈடுபட்டனர். இதனால், மாநிலங்களவை நாள் முழுவதும் முடங்கியது.

    இந்நிலையில், அசாம் மாநில குடிமக்கள் பட்டியல் விவகாரம் தொடர்பாக பாராளுமன்றத்தில் திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவை இன்றும் ஒத்திவைக்கப்பட்டது.

    அசாம் தேசிய மக்கள் பதிவேடு தொடர்பாக மாநிலங்களவையில் திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர்கள் கோஷம் எழுப்பினர். இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி பதிலளிக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர். #RajyaSabhaadjourned  #AssamNRC
    அசாம் மாநில குடிமக்கள் பட்டியலில் 40 லட்சம் பேர் நீக்கப்பட்டதை எதிர்த்து பாராளுமன்றத்தில் காங்கிரஸ், திரிணாமுல் எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவை இன்றும் முடங்கியது. #RajyaSabhaadjourned #AssamNRC
    புதுடெல்லி:

    அசாம் மாநிலத்தில் அசாமியர்களுடன், வங்காளதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக குடியேறியவர்களும் பெரும் அளவில் வசிப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் யார் அசாமியர், யார் வங்காளதேசத்தை சேர்ந்தவர்கள் என்பதை அடையாளம் காண்பதில் குழப்பம் ஏற்பட்டது. இதையடுத்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி அசாமில் தேசிய குடிமக்கள் வரைவு பதிவேடு தயாரிக்கப்பட்டு இறுதிப் பட்டியல் வெளியிடப்பட்டது.

    இதில் 40 லட்சம் பேரின் பெயர்கள் நீக்கப்பட்டு இருந்தன. இதில் இந்தியர்களின் பெயரும் நீக்கப்பட்டுள்ளது என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இவ்விவகாரம் நேற்றும் இன்றும் பாராளுமன்றத்தில் எதிரொலித்தது.


    நேற்றைய கூட்டத்தொடரின்போது தடைபட்ட பா.ஜ.க. தலைவர் அமித் ஷாவின் உரையை இன்றும் தொடருமாறு மாநிலங்களவை சபாநாயகர் வெங்கயா நாயுடு கேட்டு கொண்டார். இதற்கு காங்கிரஸ் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    கோஷமிட்டவாறு சபாநாயகர் இருக்கையை நோக்கி சென்ற அவர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால், இன்று 12 மணி வரையிலும், பின்னர் 2 மணி வரையிலும் அவை ஒத்திவைக்கப்பட்டது.

    பிற்பகல் 2 மணிக்கு பின்னர் அவை கூடியபோது, இவ்விவகாரம் தொடர்பாக முழுமையான விளக்கம் அளிக்க அனுமதிக்குமாறு உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் கேட்டு கொண்டார். இந்த பிரச்சனை தொடர்பாக விளக்கம் அளிப்பதற்காக தொடர்ந்து மூன்று நாட்களாக மாநிலங்களவைக்கு வருகை தந்தமைக்காக ராஜ்நாத் சிங்குக்கு நன்றி தெரிவித்த சபாநாயகர் வெங்கையா நாயுடு அவரை பேச அனுமதித்தார்.


    இருப்பினும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ராஜ்நாத் சிங் பேச எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டு மீண்டும் அமளியில் ஈடுபட்டனர். இதனால், ராஜ்நாத் சிங் பேச்சு தடைபட்டது. சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்ட உறுப்பினர்களை வெங்கையா நாயுடு கடுமையாக எச்சரித்தபோதும் கூச்சலும், குழப்பநிலையும் அவையில் நீடித்தது.

    இதைதொடர்ந்து, தனது முழு உரையை குறிப்புகளாக அவையில் ராஜ்நத் சிங் சமர்ப்பித்தார். தொடர்ந்து காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பிற கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. #RajyaSabhaadjourned  #AssamNRC
    என்ஆர்சி விவகாரத்தை முன்வைத்து திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவை இன்று மதியம் வரை ஒத்திவைக்கப்பட்டது. #AssamNRC #RajyaSabhaAdjourned
    புதுடெல்லி:

    வங்கதேசத்தில் இருந்து வந்து சட்டவிரோதமாக குடியேறியவர்களை அடையாளம் காணும் வகையில் அசாம் மாநிலத்தில் தேசிய குடிமக்கள் பதிவு பட்டியல் (என்ஆர்சி) தயாரிக்கப்பட்டுள்ளது. அதன் இறுதி வரைவு அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது. இதில் 40 லட்சம் பேர் விடுபட்டதால் சர்ச்சை எழுந்துள்ளது. இந்த விவகாரத்தை முன்வைத்து நேற்று பாராளுமன்றத்தில் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் மாநிலங்களவையில் நேற்று எந்த அலுவலும் நடைபெறவில்லை. மக்களவையில் இது தொடர்பாக விவாதம் நடைபெற்றது.



    இந்நிலையில், தேசிய குடிமக்கள் பதிவு விவகாரம் பாராளுமன்றத்தில் இரண்டாவது நாளாக இன்றும் எதிரொலித்தது. மாநிலங்களவை இன்று துவங்கியதும் திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர்கள் என்ஆர்சி விவகாரத்தை முன்வைத்து அமளியில் ஈடுபட்டனர். அவை அலுவல்கள் அனைத்தையும் ஒத்திவைத்துவிட்டு என்ஆர்சி விவகாரம் குறித்து பேச வேண்டும் என தலைவர் டெரிக் ஓ பிரையன் வலியுறுத்தினார்.

    எதிர்க்கட்சி உறுப்பினர்களின் அமளியால் அவையை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து அவையை மதியம் வரை ஒத்திவைப்பதாக அவைத்தலைவர் வெங்கையா நாயுடு அறிவித்தார்.

    மேலும், இந்த விவகாரம் குறித்து மக்களவையில் உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் பதிலளித்துவிட்டு, பின்னர் மாநிலங்களவையில் பேசுவார் என்றும் வெங்கையா நாயுடு  தெரிவித்தார். #AssamNRC #RajyaSabhaAdjourned
    ×