search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Cauvery River issue"

    பாராளுமன்ற மாநிலங்களவையில் முத்தலாக் மசோதா இன்று தாக்கல் செய்யப்படவிருந்த நிலையில் காவிரி விவகாரம் தொடர்பாக அ.தி.மு.க. உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் 2 மணிவரை அவை ஒத்திவைக்கப்பட்டது. #RajyaSabhaadjourned #AIADMKmembers #Cauveryissue
    புதுடெல்லி:

    கிறிஸ்துமஸ் பண்டிகை விடுமுறைக்கு பின்னர் பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 27-ம் தேதி கூடியபோது, மக்களவையில் முத்தலாக் மசோதா வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டது.
     
    மக்களவையில் நிறைவேற்றப்பட்ட முத்தலாக் மசோதா  31-ம் தேதி மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்படும் என மத்திய சட்டத்துறை மந்திரி ரவிசங்கர் பிரசாத் தெரிவித்திருந்தார்.

    இன்று நடைபெறவுள்ள பாராளுமன்ற கூட்டத்தில் அனைத்து எம்.பிக்களும் தவறாமல் கலந்து கொள்ளவேண்டும் என பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சி கொறடாக்கள் உத்தரவு பிறப்பித்தனர். இந்த மசோதாவை ஆதரிக்க மாட்டோம் என அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. எம்.பி.க்கள் திட்டவட்டமாக தெரிவித்திருந்தனர்.

    இன்று காலை பாராளுமன்றம் கூடுவதற்கு முன்னதாக மாநிலங்களவை எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அனைவரும் காங்கிரஸ் எம்.பி. குலாம் நபி ஆசாத் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று முத்தலாக் மசோதாவை தடுப்பது தொடர்பாக விவாதித்தனர்.



    இதேபோல், இந்த மசோதாவை நிறைவேற்றுவதற்காக பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற ஆளும்கட்சி ஆலோசனை கூட்டத்தில் பா.ஜ.க. தலைவர் அமித் ஷா, மந்திரிகள் அருண் ஜெட்லி, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    இந்நிலையில், இன்று மாநிலங்களவை கூடியதும் காவிரி விவகாரத்தை முன்வைத்து அ.தி.மு.க. எம்.பி.க்கள் பிரச்சனை எழுப்பினர். ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து, ரபேல் விவகாரம், விவசாயிகள் கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளுக்காக எம்.பி.க்கள் ஒரே நேரத்தில் கூச்சலிட்டனர்.

    இதனால் அவையில் முத்தலாக் மசோதாவை தாக்கல் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. தொடர்ந்து கூச்சலும், குழப்பமும் நீடித்ததால் பிற்பகல் 2 மணிவரை மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டது. #RajyaSabhaadjourned  #AIADMKmembers #Cauveryissue 
    ×