என் மலர்

  நீங்கள் தேடியது "assam nrc"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அசாம் தேசிய குடிமக்கள் பதிவேட்டில் பெயர்களை சேர்ப்பது தொடர்பாக விண்ணப்பிக்கும் கால அவகாசத்தை உச்ச நீதிமன்றம் மேலும் நீட்டித்துள்ளது. #AssamNRC #SupremeCourt
  புதுடெல்லி:

  அசாம் மாநிலத்தில் சட்டவிரோதமாக குடியேறிய வங்கதேசத்தவர்களை கண்டறியும் வகையில் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி) தயாரிக்கப்பட்டது. இதன் இறுதி வரைவு பட்டியல் கடந்த ஜூலை மாதம் வெளியிடப்பட்டது. இதில் 40 லட்சத்துக்கும் மேற்பட்டோரின் பெயர்கள் விடுபட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுபற்றி விளக்கம் அளித்த அசாம் அரசு, இந்த பட்டியலில் விடுபட்டவர்கள் பெயர்களை சேர்க்க அவகாசம் அளிப்பதாக கூறியது.

  இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், அசாம் தேசிய குடிமக்கள் பதிவேட்டில் விடுபட்ட மக்கள் தங்கள் பெயர்களை சேர்த்துகொள்ள செப்டம்பர் 25-ம் தேதி முதல் 60 நாட்கள் வரை அவகாசம் வழங்கினர்.

  இந்த அவகாசம் முடிவடைந்த நிலையில் இவ்வழக்கு இன்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தேசிய குடிமக்கள் பதிவேட்டில் பெயர்களை சேர்க்க வழங்கப்பட்டுள்ள கால அவகாசத்தை டிசம்பர் 15-ம் தேதி வரை நீட்டித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

  பட்டியலில் விடுபட்டவர்கள் தங்கள் பெயர்களை சேர்ப்பதற்கான கோரிக்கைகளையும், தவறுகள் இருந்தால் அதற்கு ஆட்சேபனைகளையும் உரிய ஆவணங்களுடன் தெரிவிக்கலாம். 

  மேலும், மாநில ஒருங்கிணைப்பாளரால் நிராகரிக்கப்பட்ட, 1951ம் ஆண்டின் என்ஆர்சி சான்று, 1966 மற்றும் 1971ல் வழங்கப்பட்ட வாக்காளர் அடையாள அட்டைகள், 1971 வரையிலான அகதிகள் பதிவு சான்றிதழ் மற்றும் 1971 வரையிலான ரேசன் கார்டு ஆகிய 5 ஆவணங்களை என்ஆர்சி பதிவுக்கான ஆவணங்களாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

  மேலும், புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு ஜனவரி 15-ம் தேதிக்குள் நோட்டீஸ் அனுப்பி, பிப்ரவரி 1-ம் தேதிக்குள் ஆவணங்களை சரிபார்க்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. #AssamNRC #SupremeCourt 
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  உத்தரபிரதேசத்தை பூர்வீகமாக கொண்ட மகனுக்கு அசாம் குடியுரிமை கிடைக்காததால் அதிர்ச்சியில் தாய் மரணம் அடைந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #AssamNRC

  கவுகாத்தி:

  அசாம் மாநிலத்தில் அண்டை நாடான வங்காள தேசத்தில் இருந்து லட்சக்கணக்கானோர் குடியேறி இருக்கிறார்கள். இதனால் யார் உண்மையான இந்தியர்கள், யார் வங்காள தேசத்தினர் என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை.

  எனவே இதை உறுதி செய்வதற்காக தேசிய குடியுரிமை பட்டியல் தயாரிக்கப்பட்டது. இதன் இறுதி பட்டியல் சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதில் 40 லட்சம் பேருடைய பெயர் இடம்பெறவில்லை. அதாவது அந்த 40 லட்சம் பேரும் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் என்று அடையாளம் காணப்பட்டு உள்ளது.

  ஆனால் இதில் உண்மையான இந்தியர்கள் பலருடைய பெயரும் உள்ளது. கணக்கெடுப்பில் நடந்த குளறுபடி காரணமாக அவர்களும் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் என்று அடையாளம் கண்டுள்ளனர்.

  அவர்களை தற்போது தடுப்பு முகாமில் தங்க வைத்துள்ளனர். இவ்வாறு தின்சுகியா மாவட்டத்தில் தினேஷ் என்பவரையும், அவரது மனைவியையும் இந்தியர்கள் அல்ல எனக்கூறி தடுப்பு முகாமில் தங்க வைத்துள்ளனர்.

  ஆனால் இவர்களுடைய பூர்வீகம் உத்தரபிரதேச மாநிலம் ஆகும். 1945-ம் ஆண்டு உத்தரபிரதேச மாநிலம் பாலியா மாவட்டத்தில் இருந்து தினேசின் தந்தை பரசுராமன், அவரது தாயார் ஜோத்கிதேவி ஆகியோர் அசாமுக்கு குடிபெயர்ந்துள்ளனர். அங்கு தும்சிகா மாவட்டத்தில் விவசாய தொழில் செய்து பிழைத்து வந்தனர். அவர்களுக்கு தினேஷ், ராஜேஷ் என்ற 2 மகன்களும், 3 பெண் குழந்தைகளும் பிறந்தன.

  தற்போது கணக்கெடுப்பு நடந்தபோது தினேசும், அவரது மனைவியும் இதற்கான தீர்ப்பாயத்தில் பங்கேற்று தங்களை பதிவு செய்யவில்லை. இதனால் அவர்களை வெளிநாட்டவராக கருதி தடுப்பு முகாமில் தங்க வைத்தனர்.

  மகனை தடுப்பு முகாமில் தங்க வைத்ததால் தாயார் ஜோத்கிதேவி அதிர்ச்சி அடைந்தார். தினேசுக்கு 5 குழந்தைகள் உள்ளனர். அவர்களை இவர் தான் கவனித்து வந்தார். மகனும், மருமகளும் தடுப்பு முகாமுக்கு சென்றதால் மன வேதனையில் அவருக்கு நோய் ஏற்பட்டது. இதனால் அவர் உயிரிழந்தார்.

  இந்த சம்பவம் அசாமில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கணக்கெடுப்பு குளறுபடியால் உண்மையான இந்திய குடும்பத்தினர் பாதிக்கப்பட்டிருப்பதாக பலரும் குற்றம்சாட்டியிருக்கின்றனர்.

  அசாமை சேர்ந்த போஜ்பூரி மாணவர் இயக்கமும் ஜோத்கிதேவி மரணத்தை மேற்கோள் காட்டி அரசுக்கு கண்டனத்தை தெரிவித்து உள்ளது. #AssamNRC

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அசாம் சென்றிருந்த திரிணாமுல் காங்கிரஸ் குழு மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக அம்மாநில முதல்-மந்திரி மீது மம்தா பானர்ஜி அரசு வழக்குப்பதிவு செய்துள்ளது. #AssamNRC
  கொல்கத்தா:

  அசாம் மாநிலத்தில் தேசிய குடியுரிமை பட்டியலில் இருந்து 40 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளனர். அது குறித்து விசாரணை நடத்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 8 பேர் கொண்ட குழுவினர் மேற்கு வங்காளத்தில் இருந்து அசாம் சென்றனர்.

  அங்கு சில்கார் விமான நிலையத்தில் அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினார்கள். தாக்கியதாகவும் தெரிகிறது. அவர்கள் மீதும், மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

  அதற்கு பதிலடியாக மேற்கு வங்காள மாநிலத்தில் அசாம் மாநில முதல்- மந்திரி சர்பானந்தா சோனோவால் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் குழுவில் இடம் பெற்றிருந்த 2 பெண் எம்.பி.க்கள், ஒரு பெண் எம்.எல்.ஏ. உள்ளிட்டவர்களை தாக்குதல் நடத்த உத்தரவிட்டதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.


  இ.பி.கோ. 354 (பெண்கள் மீது தாக்குதல் நடத்தி மானபங்கம் செய்தல்), இ.பி.கோ 341 (தவறான முறையில் தண்டித்தல்), இ.பி.கோ. 12பி (குற்ற நோக்கத்தில் தண்டித்தல்), ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இவை ஜாமீனில் வெளியே வர முடியாத சட்டப்பிரிவுகளாகும்.

  அலிப்பூர் போலீஸ் நிலையத்தில் திரிணாமுல் காங்கிரஸ் செய்தி தொடர்பாளரும், கரிம்பூர் எம்.எல்.ஏ.வுமான மகுயா மொய்த்ரா சார்பிலும், எம்.பி.க்கள் ககோலி சோஸ் தஸ்திதார் மற்றும் மம்தா தாகூர் சார்பில் சுபாங் சந்திரபோஸ் சர்வதேச விமான நிலைய போலீசிலும் புகார் செய்யப்பட்டுள்ளன. அதில் அசாம் முதல்-மந்திரி சர்பானந்தா சோனோவால் உத்தரவின் பேரில் பெண் எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ. மீது போலீசார் தாக்குதல் நடத்தியதாக கூறப்பட்டுள்ளது.

  இதற்கிடையே அசாமில் திரிணாமுல் காங்கிரஸ் குழுவினர் தாக்கப்பட்டதை கண்டித்து நேற்று மேற்கு வங்காளம் முழுவதும் கருப்பு நாள் கடை பிடிக்கப்பட்டது. அதில் ஈடுபட்ட திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் பேரணிகள், ஆர்ப்பாட்டங்கள், தர்ணாக்கள், ரெயில் மறியல், சாலை மறியல், கருப்பு உடை அணிதல், உருவ பொம்மை எரிப்பு உள்ளிட்ட பலவி தமான போராட்டங்களை நடத்தினர். #AssamNRC #MamataBanerjee  #SarbanandaSonowal
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அசாம் மாநிலத்தில் குடிமக்கள் பதிவேட்டில் 40 லட்சம் பேர் விடுபட்டது தொடர்பாக டெல்லியில் இன்று தொடங்கிய காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. #Congress #RahulGandhi
  புதுடெல்லி:

  டெல்லியில் காங்கிரஸ் காரியகமிட்டி கூட்டம் இன்று காலை நடந்தது. காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் மூத்த தலைவர்கள் மன்மோகன்சிங், குலாம்நபி ஆசாத், அசோக்கெலாட் மற்றும் காரிய கமிட்டி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

  காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்திக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால் அவர் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.


  அசாம் மாநிலத்தில் சமீபத்தில் தேசிய குடிமக்கள் பதிவேடு இறுதி வரைவு பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் 40 லட்சம் பேரின் பெயர்கள் விடுபட்டுள்ளன. இவர்கள் நீண்டகாலமாக அசாமில் குடியிருந்து வருகிறார்கள். எனவே அவர்கள் அசாம் மாநிலத்தவர்கள் தான். வெளியில் இருந்து வந்தவர்கள் அல்ல என காங்கிரஸ் கூறிவருகிறது. இந்தப் பிரச்சனை குறித்து இன்றைய கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

  தொடர்ந்து பாராளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்தும் ராஜஸ்தன், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மாநில சட்டசபை தேர்தல்கள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது. #Congress #RahulGandhi #SoniaGandhi
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி பச்சோந்தி போன்று நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு வருவதாக காங்கிரஸ் எம்.பி. விமர்சித்துள்ளார். #NRCAssam #Mamata
  புதுடெல்லி:

  வங்காளதேசத்தில் இருந்து வந்து இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக குடியேறியவர்களை அடையாளம் காணும் வகையில் அசாம் மாநிலத்தில் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி) தயாரிக்கப்பட்டுள்ளது. அதன் இறுதி வரைவு அறிக்கை சமீபத்தில் வெளியிடப்பட்டது. 40 லட்சம் பேர் இந்த பதிவேட்டில் விடுபட்டது கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்த தேசிய குடிமக்கள் பதிவேடு, உள்நாட்டு போருக்கு வழிவகுக்கும் என திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர் மம்தா பானர்ஜி கடுமையாக ஆட்சேபம் தெரிவித்திருந்தார்.

  இந்நிலையில் என்ஆர்சி விவகாரத்தில் மம்தா பானர்ஜியின் நிலைப்பாட்டை மேற்கு வங்கத்தைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சி எம்பி ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கடுமையாக விமர்சித்துள்ளார்.  “40 லட்சம் மக்கள் விடுபட்டதை மம்தா பானர்ஜி எதிர்க்கிறார். 2005ல் சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கு எதிராக அவர் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வந்தார். சட்டவிரோத குடியேறிகள் வெளியேற்றப்பட்டால் கடுமையான விளைவுகள் ஏற்படும் என அப்போது எச்சரித்தார். இப்போது தனது நிலையை பச்சோந்தி போன்று மாற்றிக்கொண்டுள்ளார்.

  அசாமை விட்டு வெளியேற்றப்படுவோருக்கு தங்குவதற்கு இடம் அளிக்கப்படும் என மம்தா உறுதி அளித்துள்ளார். ஆனால், அவர் அசாம்-மேற்கு வங்க எல்லையை மூடிவிட்டார். அதனால் யாரும் மேற்கு வங்கத்திற்குள் நுழைய முடியாது. இத்தகைய இரட்டை நிலைப்பாடு, 40 லட்சம் மக்களுக்கு மேலும் சிரமத்தை ஏற்படுத்தும்” என தெரிவித்தார் சவுத்ரி.

  என்ஆர்சி பட்டியல் வெளியான பிறகு உள்ள நிலைமையை ஆய்வு செய்வதற்காக திரிணாமுல் காங்கிரசை சேர்ந்த எம்.பி மற்றும் எம்.எல்.ஏக்கள் உள்ளிட்ட 8 பேர் அசாம் மாநிலம் வந்தபோது அவர்களை சில்சார் விமான நிலையத்தில் போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனைக் கண்டித்து திரிணாமுல் காங்கிரஸ் எம்பிக்கள் இன்று அமளியில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது. #NRCAssam #Mamata
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அசாம் மாநில குடிமக்கள் பட்டியலில் 40 லட்சம் பேர் நீக்கப்பட்டதை எதிர்த்து பாராளுமன்றத்தில் காங்கிரஸ், திரிணாமுல் எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவை இன்றும் முடங்கியது. #RajyaSabhaadjourned #AssamNRC
  புதுடெல்லி:

  அசாம் மாநிலத்தில் அசாமியர்களுடன், வங்காளதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக குடியேறியவர்களும் பெரும் அளவில் வசிப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் யார் அசாமியர், யார் வங்காளதேசத்தை சேர்ந்தவர்கள் என்பதை அடையாளம் காண்பதில் குழப்பம் ஏற்பட்டது. இதையடுத்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி அசாமில் தேசிய குடிமக்கள் வரைவு பதிவேடு தயாரிக்கப்பட்டு இறுதிப் பட்டியல் வெளியிடப்பட்டது.

  இதில் 40 லட்சம் பேரின் பெயர்கள் நீக்கப்பட்டு இருந்தன. இதில் இந்தியர்களின் பெயரும் நீக்கப்பட்டுள்ளது என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இவ்விவகாரம் நேற்றும் இன்றும் பாராளுமன்றத்தில் எதிரொலித்தது.


  நேற்றைய கூட்டத்தொடரின்போது தடைபட்ட பா.ஜ.க. தலைவர் அமித் ஷாவின் உரையை இன்றும் தொடருமாறு மாநிலங்களவை சபாநாயகர் வெங்கயா நாயுடு கேட்டு கொண்டார். இதற்கு காங்கிரஸ் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

  கோஷமிட்டவாறு சபாநாயகர் இருக்கையை நோக்கி சென்ற அவர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால், இன்று 12 மணி வரையிலும், பின்னர் 2 மணி வரையிலும் அவை ஒத்திவைக்கப்பட்டது.

  பிற்பகல் 2 மணிக்கு பின்னர் அவை கூடியபோது, இவ்விவகாரம் தொடர்பாக முழுமையான விளக்கம் அளிக்க அனுமதிக்குமாறு உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் கேட்டு கொண்டார். இந்த பிரச்சனை தொடர்பாக விளக்கம் அளிப்பதற்காக தொடர்ந்து மூன்று நாட்களாக மாநிலங்களவைக்கு வருகை தந்தமைக்காக ராஜ்நாத் சிங்குக்கு நன்றி தெரிவித்த சபாநாயகர் வெங்கையா நாயுடு அவரை பேச அனுமதித்தார்.


  இருப்பினும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ராஜ்நாத் சிங் பேச எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டு மீண்டும் அமளியில் ஈடுபட்டனர். இதனால், ராஜ்நாத் சிங் பேச்சு தடைபட்டது. சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்ட உறுப்பினர்களை வெங்கையா நாயுடு கடுமையாக எச்சரித்தபோதும் கூச்சலும், குழப்பநிலையும் அவையில் நீடித்தது.

  இதைதொடர்ந்து, தனது முழு உரையை குறிப்புகளாக அவையில் ராஜ்நத் சிங் சமர்ப்பித்தார். தொடர்ந்து காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பிற கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. #RajyaSabhaadjourned  #AssamNRC
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அசாம் தேசிய குடிமக்கள் பட்டியல் விவகாரம் உள்நாட்டு போருக்கு வழிவகுக்கும் என்று மம்தா பானர்ஜி கூறியிருப்பது கலவரத்தை தூண்டும் விதமாக இருப்பதாக மம்தா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. #AssamNRC #MamtaBanerjee
  கவுகாத்தி:

  வங்க தேசம் நாட்டை சேர்ந்தவர்கள் லட்சக்கணக்கில் இந்தியாவுக்குள் சட்ட விரோதமாக குடியேறி உள்ளனர். அவர்களில் பெரும்பாலனவர்கள் அசாம் மாநிலத்தில் குடியேறியுள்ளனர். அத்தகைய சட்டவிரோத ஆக்கிரமிப்பாளர்களை கண்டறிய தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிக்கப்பட்டது.

  அசாம் மாநிலத்தில் நேற்று முன்தினம் தேசிய குடிமக்கள் வரைவு பதிவேடு பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் தற்போது அசாமில் உள்ள சுமார் 40 லட்சம் பேரின் பெயர்கள் இடம் பெறவில்லை. அவர்கள் அனைவரும் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் என்று கருதப்படுகிறது.

  அந்த 40 லட்சம் பேரில் முஸ்லிம்கள், இந்துக்கள் என அனைத்து தரப்பு மக்களும் உள்ளனர். இது சர்ச்சையை ஏற்படுத்தி இருப்பதால் அசாம் மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முக்கிய இடங்களில் அதிரடிப்படை போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.


  அசாமில் சுமார் 40 லட்சம் பேர் தேசிய குடிமக்கள் இல்லை என்று மத்திய அரசு அறிவித்து இருப்பதற்கு மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தாபானர்ஜி கடும் கண்டனமும், எதிர்ப்பும் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் செயல்பாடு உள்நாட்டு போருக்கு வழி வகுக்கும் என்று அவர் கூறியுள்ளார். மக்களை மத்திய அரசு பிரித்தாள்கிறது என்றும் குற்றம் சாட்டினார்.
  நேற்று டெல்லி சென்ற அவர் இது தொடர்பாக மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கை சந்தித்து பேசினார். ஆனால் மத்திய அரசு தனது முடிவில் இருந்து ஒருபோதும் பின் வாங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

  இந்த நிலையில் தேசிய குடிமக்கள் பதிவு வரைவு பட்டியல் பற்றி விமர்சனம் செய்து பேசியதற்காக மம்தா பானர்ஜி மீது அசாம் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. அசாமில் உள்ள பாரதிய ஜனதா யுவமோர்ச் சாணும் அமைப்பு இந்த வழக்கை பதிவு செய்துள்ளது.

  அதன் பேரில் மம்தா பானர்ஜி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளது. மக்கள் மத்தியில் கலவரத்தை தூண்டி விடுவதாக மம்தா மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.  #AssamNRC #MamtaBanerjee
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சமீபத்தில் வெளியிடப்பட்ட அசாம் தேசிய குடிமக்கள் வரைவு பட்டியலில் முன்னாள் ஜனாதிபதி பக்ருதீன் அலி அகமதுவின் குடும்பத்தினர் பெயர்கள் இல்லாதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. #AssamNRC
  புதுடெல்லி:

  இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அசாமில் வங்காளதேசத்தில் இருந்து பலர் சட்டவிரோதமாக குடியேறியுள்ளதாக நீண்ட காலமாக குற்றச்சாட்டு இருந்தது. இதற்காக கணக்கெடுப்பு நடத்தப்பட்டு நேற்று தேசிய குடிமக்கள் வரைவு பட்டியல் வெளியிடப்பட்டது.

  இந்த வரைவு பட்டியலில் சுமார் 40 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டிருந்தன. இந்த விவகாரம் தேசிய அளவில் பரபரப்பை கிளப்பியது. மேலும், இன்று கூடிய மாநிலங்களவையிலும் இவ்விவகாரம் தொடர்பாக அமளி ஏற்பட்டது. இந்நிலையில், இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதியின் குடும்பத்தினர் பலரது பெயர்கள் பட்டியலில் இல்லை என்ற புகார் எழுந்துள்ளது.

  1974 முதல் 1977 வரை இந்தியாவின் ஜனாதிபதியாக இருந்த பக்ருதீன் அலி அகமதுவின் சகோதர் எக்ராமுதீன் அலி அகமதுவின் மகன் ஸியாவுதீன் தனது பெயர் பட்டியலில் இல்லை என புகார் தெரிவித்துள்ளார். 

  1971-ம் ஆண்டுக்கு முன் அசாமுக்குள் வந்தவர்கள் தாங்கள் இந்தியாவை சேர்ந்தவர்கள் தான் என்பதற்கான ஆவணத்தை சமர்பிக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் அவர்கள் வெளிநாட்டவராக கருதப்படுவார்கள் என்பதன் அடிப்படையிலே இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டது.

  ஆனால், முன்னாள் ஜனாதிபதியின் குடும்பத்தினரின் பெயரே பட்டியலில் இல்லாதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கணக்கெடுப்பு பணியின் போதே, ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களின் சிலர் தாங்கள் இந்தியாவை சேர்ந்தவர்கள் என்பதற்காக சமர்பிக்கப்பட்ட ஆவணங்கள் நிராகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.  மேற்கண்ட விவகாரத்தை குறிப்பிட்டு டெல்லியில் இன்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மேற்கு வங்காள முதல்வர் மம்தா பாணர்ஜி, “முன்னாள் ஜனாதிபதியின் குடும்பத்தினர் பெயரே பட்டியலில் இல்லாமல் போயுள்ளது. இதற்கு மேல் என்ன கூற இருக்கிறது?. 

  பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் தங்கள் அடையாளத்தை இழக்க நேரிடும் என்பதை நினைத்து பார்த்தீர்களா?. இந்தியா - பாகிஸ்தான் - வங்காளதேசம் எல்லாமே ஒன்றாக இருந்தது தான் என்பதை மறந்து விடாதீர்கள். 1971-க்கு முன்னர் வங்காளதேசத்தில் இருந்து வந்து குடியேறிய அனைவரும் இந்தியர்கள்தான்” என அவர் கூறினார்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அசாம் மாநிலத்துக்கான தேசிய குடிமக்கள் பட்டியலில் 40 லட்சம் இந்தியர்களின் பெயர் விடுவிக்கப்பட்டிருப்பதால் அங்கு பாதுகாப்பற்ற நிலையை உருவாக்கி இருப்பதாக ராகுல்காந்தி குற்றம்சாட்டி உள்ளார். #AssamNRC
  புதுடெல்லி:

  அசாம் மாநிலத்தில் வங்காளதேசத்தை சேர்ந்த மக்கள் ஏராளமானோர் ஊடுருவி குடியிருந்து வருகிறார்கள். அவர்களில் பலர் இந்திய குடியுரிமை பெற்றவர்களாகவும் உள்ளனர். ஆனால் சட்டவிரோதமாக குடியேறிய அவர்கள் மோசடி செய்து இவ்வாறு குடியுரிமை பெற்றதாக புகார் கூறப்படுகிறது.

  இந்த நிலையில் உண்மையான அசாம் மக்கள் யார், வங்காளதேசத்தில் இருந்து வந்தவர்கள் யார்? என்பதை கண்டறிவதற்காக தேசிய குடிமக்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டது. அதன் இறுதி வரைவு பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.

  அதில் 40 லட்சம் பேர் இந்தியர் அல்லாதவர் என்று காட்டப்பட்டுள்ளது. அவர்களின் பெயர் இறுதி பட்டியலில் இடம்பெறவில்லை. இதனால் அவர்கள் வெளிநாட்டினராக கருதப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

  நேற்று வெளியிடப்பட்ட பட்டியலில் இடம் பெறாதவர்கள் பலர் காலம் காலமாய் அசாமை சேர்ந்தவர்களாவார். ஆனாலும் அவர்கள் பெயரும் இடம்பெறவில்லை. 2 எம்.எல்.ஏ.க்கள் பெயரும் விடுபட்டுள்ளது.

  இந்த பட்டியல் தயாரிப்பில் ஏற்பட்ட குளறுபடிதான் இதற்கு காரணம் என்று புகார் கூறப்படுகிறது. 40 லட்சம் பெயர் பட்டியலில் இல்லை என்பதால் அங்கு வன்முறை வெடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.


  இதுசம்பந்தமாக காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் குலாம்நபி ஆசாத் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.

  இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இந்த பட்டியல் சம்பந்தமாக இணையதளத்தில் கருத்து வெளியிட்டுள்ளார். அவர் கூறியிருப்பதாவது:-

  தேசிய குடியுரிமை பட்டியல் வெளியீடு தொடர்பாக அசாமில் இருந்து வரும் தகவல்கள் கவலை அளிக்கும் வகையில் உள்ளன. உண்மையான இந்திய குடிமகன்கள் பலருடைய பெயர்கள் விடுபட்டுள்ளது. இதன்மூலம் அங்கு ஒரு அபாயகரமான சூழ்நிலை உருவாகி உள்ளது. பாதுகாப்பாற்ற நிலையை உருவாக்கி இருக்கிறார்கள். இந்த பட்டியல் தயாரிப்பதற்காக ரூ.1200 கோடி செலவிட்டுள்ள நிலையில் அது சரியாக செய்யப்படவில்லை.

  மெத்தன போக்கில் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. ஒரு மிக முக்கியமான விவகாரத்தில் அலட்சியமாக நடந்து கொண்டுள்ளனர். இந்த பிரச்சினைக்கு அமைதியான முறையில் தீர்வுகாண அரசு முயற்சிக்க வேண்டும்.

  எங்கள் ஆட்சியில் மன்மோகன்சிங் ஏற்படுத்திய ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த பட்டியல் தயாரிக்கும் பணிகள் தொடங்கப்பட்டது. ஆனால் அதில் உள்ள அம்சங்கள் பலவும் நீக்கப்பட்டு தவறான நோக்கத்தோடு பட்டியல் தயாரிக்கப்பட்டிருக்கிறது.

  இவ்வாறு அவர் கூறினார். #AssamNRC #RahulGandhi #Congress
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அசாம் குடிமக்கள் பதிவேட்டில் 40 லட்சம் மக்கள் விடுபட்டது தொடர்பாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டு வருவதால் மாநிலங்களவை இரண்டாவது நாளாக இன்றும் முடங்கியது. #AssamNRC #RajyaSabhaAdjourned
  புதுடெல்லி:

  வங்கதேசத்தில் இருந்து வந்து சட்டவிரோதமாக குடியேறியவர்களை அடையாளம் காணும் வகையில் அசாம் மாநிலத்தில் தேசிய குடிமக்கள் பதிவு பட்டியல் (என்ஆர்சி) தயாரிக்கப்பட்டுள்ளது. அதன் இறுதி வரைவு அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது. இதில் 40 லட்சம் பேர் விடுபட்டதால் சர்ச்சை எழுந்துள்ளது. இந்த  விவகாரம் பாராளுமன்றத்தில் இரண்டாவது நாளாக இன்றும் எதிரொலித்தது.  மாநிலங்களவை இன்று துவங்கியதும் திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர்கள் என்ஆர்சி விவகாரத்தை முன்வைத்து அமளியில் ஈடுபட்டனர். அவர்களுடன் சில எதிர்க்கட்சி உறுப்பினர்களும் இணைந்துகொண்டதால் அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. அவை அலுவல்கள் அனைத்தையும் ஒத்திவைத்துவிட்டு என்ஆர்சி விவகாரம் குறித்து பேச வேண்டும் என தலைவர் டெரிக் ஓ பிரையன் வலியுறுத்தினார்.

  உறுப்பினர்களின் அமளியால் அவையை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து அவையை மதியம் வரை ஒத்திவைப்பதாக அவைத்தலைவர் வெங்கையா நாயுடு அறிவித்தார். அத்துடன், இந்த விவகாரம் குறித்து மக்களவையில் உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் பதிலளித்துவிட்டு, பின்னர் மாநிலங்களவையில் பேசுவார் என்றும் வெங்கையா நாயுடு சமாதானம் செய்தார்.

  ஆனால், மதியம் அவை கூடியபோதும் உறுப்பினர்களின் அமளி நீடித்தது. இதனால் சிறிது நேரம் அவை ஒத்திவைக்கப்பட்டது. அதன்பிறகும் உறுப்பினர்களின் அமளி ஓயவில்லை. எனவே, அவையை நாள் முழுவதும் ஒத்திவைப்பதாக அவைத்தலைவர் வெங்கையா நாயுடு அறிவித்தார்.

  இதேபோல் நேற்றும் என்ஆர்சி விவகாரத்தை முன்வைத்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவை முடங்கியது. #AssamNRC #RajyaSabhaAdjourned
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அசாம் குடிமக்கள் பதிவேடு தொடர்பான விவகாரத்தை முன்வைத்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. #AssamNRC
  புதுடெல்லி:

  வங்கதேசத்தில் இருந்து வந்து சட்டவிரோதமாக குடியேறியவர்களை அடையாளம் காணும் வகையில் அசாம் மாநிலத்தில் தேசிய குடிமக்கள் பதிவு பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. அதன் இறுதி வரைவு அறிக்கை இன்று வெளியிடப்பட்டது. மொத்தம் உள்ள 3,29,91,384 விண்ணப்பதாரர்களில் 2,89,83,677 பேர் குடிமக்களின் தேசிய பதிவேட்டில் சேர்க்கப்பட்டுள்ளனர். 40 லட்சம் பேர் பதிவேட்டில்  சேர்க்கப்படவில்லை. தற்போதைய நிலையில் இவர்கள் சட்டவிரோத குடிமக்களாக கருதப்படுவார்கள். எனினும், விடுபட்டவர்கள் தங்கள் பெயர்களை சேர்க்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

  ஆனால், 40 லட்சம் பேர் விடுபட்டது தொடர்பாக சர்ச்சை எழுந்ததால், மாநிலம் முழுவதும் பாதுகாப்பு படைகள் உஷார்படுத்தப்பட்டுள்ளன. 7 மாவட்டங்களில் 144 தடை உத்தரவு போடப்பட்டு உள்ளது. இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளது.

  இந்த விவகாரம் இன்று பாராளுமன்ற இரு அவைகளிலும் எதிரொலித்தது. மாநிலங்களவை துவங்கியதும் திரிணாமூல் காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாடி கட்சி எம்.பி.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். காங்கிரஸ் எம்.பிக்களும் அவர்களுக்கு ஆதரவாக அமளியில் ஈடுபட்டனர். இதனால் முதலில் 12 மணி வரையிலும், அதன்பின்னர் 2 மணி வரையிலும் அவை ஒத்திவைக்கப்பட்டது.

  2 மணிக்கு மீண்டும் அவை கூடியபோதும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அசாம் குடிமக்கள் பதிவேடு தொடர்பான பிரச்சனையை எழுப்பி முழக்கமிட்டனர். இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி பதில் அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். இதனால் அவையில் கூச்சல் குழப்பம் நிலவியது. தொடர்ந்து அவையை நடத்த முடியாத நிலை ஏற்பட்டதால், அவையை நாள் முழுவதும் ஒத்திவைப்பதாக அவைத்தலைவர் வெங்கையா நாயுடு அறிவித்தார். #AssamNRC #NRCReleased

  ×