search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மண்சரிவு"

    • குடியிருப்புகளும் சரியும் நிலையில் இருப்பதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
    • தாசில்தார் மற்றும் பேரூராட்சி நிர்வாகத்தினர் விரைந்து வந்து, மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அரவேணு,

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே அம்மன் நகரில் சாலையோரத்தில் கட்டுமான பணி நடந்து வந்தது. அவர்கள் அங்கேயே தகர சீட்டு அமைத்து இந்த பணியை மேற்கொண்டு வந்தனர். இதற்கு முறையான அனுமதி பெறவில்லை எனவும் தெரிகிறது.

    நேற்று கோத்தகிரி பகுதியில் மழை பெய்தது. அப்போது இந்த பகுதியில் திடீரென மண்சரிவு ஏற்பட்டது. மண் சரிந்து அந்த பகுதிக்கு செல்லக்கூடிய சாைல முழுவதுமாக மறைந்து விட்டது. இதனால் மக்கள் அவ்வழியாக செல்ல முடியாமல் தவித்தனர். மேலும் அங்குள்ள குடியிருப்புகளும் சரியும் நிலையில் இருப்பதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

    இதையடுத்து பொதுமக்கள் அங்கு திரண்டனர். தகவல் அறிந்த தாசில்தார் மற்றும் பேரூராட்சி நிர்வாகத்தினர் விரைந்து வந்து, மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது மக்களிடம் உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர்.

    மரங்கள், பாறை உள்ளிட்ட இடிபாடுகளை அகற்றினா்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம், கூடலூரில் இருந்து ஊட்டி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் நடுவட்டம், டி.ஆா்.பஜாருக்கு இடையே உள்ள சாலையில் செவ்வாய்க்கிழமை மண் சரிவு ஏற்பட்டது.

    இதனால், அந்த சாலையில் போக்குவரத்து தடைபட்டு கொட்டும் மழை மற்றும் கடும் குளிரில் சாலையின் இருபுறமும் வாகனங்கள் காத்து நின்றன. தகவலறிந்து வந்த நெடுஞ்சாலை மற்றும் வருவாய்த் துறையினா் பொக்லைன் இயந்திரம் மூலம் மரங்கள், பாறை உள்ளிட்ட இடிபாடுகளை அகற்றினா். பின்னா் ஒரு மணி நேரத்துக்குப் பிறகு போக்குவரத்து சீரானது.

    • மூணாறு மற்றும் சுற்று வட்டார பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் சாரல்மழையால் கடந்த 7ம் தேதி மீண்டும் மண்சரிவு ஏற்பட்டது.
    • மண்சரிவு ஏற்பட்ட பகுதியில் பாறை, மண் அகற்றப்பட்டு போக்குவரத்திற்கு தயார்படுத்தும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    மேலசொக்கநாதபுரம்:

    கொச்சி-தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் மூணாறு-போடிமெட்டு இடையே 42 கி.மீ. தூரம் உள்ள சாலை ரூ.381 கோடி செலவில் இருவழிச்சாலையாக அகலப்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கான பணிகள் கடந்த 2017ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கி முடிவடைந்த நிலையில் அதிகாரப்பூர்வ திறப்பு விழாவிற்கு தயார் நிலையில் இருந்தது.

    இந்நிலையில் மூணாறு அருகே உள்ள கேப் ரோட்டில் விதிமுறைகளை மீறி பாறைகள் உடைக்கப்பட்டன. அவ்வாறு 6,28,00 மெட்ரிக் டன் பாறைகள் உடைக்கப்பட்டதாக வருவாய்த்துறையினர் அரசுக்கு தாக்கல் செய்தனர். இதற்காக ரூ.6 கோடியே 28 லட்சத்தி 22 ஆயிரத்தி 480 செலுத்துமாறு ஒப்பந்தகாரருக்கு அரசு உத்தரவிட்டது.

    இதற்கு எதிராக ஒப்பந்தகாரர் கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில் 2017ல் பணிகள் ஆரம்பிக்கப்பட்டது முதல் கேப் ரோட்டில் 5 முறை மண்சரிவுகள் ஏற்பட்டன. 2019ம் ஆண்டு ஏற்பட்ட மண்சரிவில் 2 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் தற்போது மூணாறு மற்றும் சுற்று வட்டார பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் சாரல்மழையால் கடந்த 7ம் தேதி மீண்டும் மண்சரிவு ஏற்பட்டது. இதனால் அந்த சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

    எனவே இந்த சாலை மண் சரிவுக்கு வாய்ப்புள்ள பகுதியாக கருதி தேசிய நெடுஞ்சாலை துறையினர் ஆய்வு நடத்த பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்தனர். மூணாறிலிருந்து பள்ளிவாசல், ராஜாகாடு, ராஜகுமாரி, பூப்பாறை வழியாக மாற்றுப்பாதையில் பஸ் உள்ளிட்ட வாகனங்கள் தேனிக்கு வந்து செல்கின்றன. மண்சரிவு ஏற்பட்ட பகுதியில் பாறை, மண் அகற்றப்பட்டு போக்குவரத்திற்கு தயார்படுத்தும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    • திடீரென தார்சாலை உள் வாங்கியதால் சுமார் 20 மீட்டர் தூரம் சாலையில் மண் சரிவு ஏற்பட்டது.
    • தஞ்சைக்கு செல்வதற்கு வேறு வழியாக 10 கிலோ மீட்டர் வரை சுத்தி செல்ல வேண்டி நிலை உள்ளது.

    மெலட்டூர்:

    தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, கொத்தங்குடி அருகே களஞ்சேரி - பள்ளியக்ரகாரம் நெடுசாலையில் வெண்ணாற்றின் கரையோரம் தடுப்பு சுவர் கட்டும் பணிக்காக சாலையோரம் பள்ளம் தோண்டினர்.

    அப்போது திடீரென தார்சாலை உள் வாங்கியதால் சுமார் 20 மீட்டர் தூரம் சாலையில் மண் சரிவு ஏற்பட்டது.

    இதனால் சாலையின் பெரும்பகுதி துண்டிக்கப்ட்டு வாகன போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    தற்போது வெண்ணாற்றில் பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதால் சாவையோரம் தடுப்பு சுவர் அமைக்கும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது அதனால் இந்த சாலையை பயன்படுத்தும் தென்னஞ்சோலை.

    காந்தாவனம், நிம்மேலி, கோவத்தகுடி, கொத்தங்குடி,உள்பட பல கிராமமக்கள் தஞ்சைக்கு செல்வதற்கு வேறு வழியாக 10 கிலோ மீட்டர் வரை சுத்தி செல்ல வேண்டி நிலை உள்ளது.

    எனவே கிராமமக்கள் சிர மத்தை உணர்ந்து விரைவில் களஞ்சேரி பள்ளியக்ரகாரம் சாலையை சரிசெய்ய விரைந்து நடவ டிக்கை எடுக்க வேண்டும் என கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பலத்த மழையால் சாலையில் மண் திட்டுகள் சரிந்தது.
    • வாகனங்கள் மரம் மண் திட்டுக்கள் சாலையில் விழுந்ததால், அணிவகுத்து நின்றது.

    மஞ்சூர்,

    நீலகிரி மாவட்டம் மஞ்சூர், முள்ளி, வெள்ளியங்காடு மார்க்கமான கோவை மூன்றாவது மாற்று பாதை உள்ளது.

    இவ்வழித்தடத்தில் கெத்தை ஏழாவது கொண்டை ஊசி வளைவில் நேற்று பெய்த பலத்த மழையால் சாலையில் மண் திட்டுகள் சரிந்தது. மேலும் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    இதனால் மஞ்சூரில் இருந்து கோவை சென்ற பேருந்தும் கோவையிலிருந்து மஞ்சூர் நோக்கி வந்த பேருந்துகளும் பள்ளி பேருந்து தனியார் வாகனங்கள் சுற்றுலா வாகனங்கள் என பல வாகனங்கள் மரம் மண் திட்டுக்கள் சாலையில் விழுந்ததால், அணிவகுத்து நின்றது.

    நெடுஞ்சாலை துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விரைந்து வந்த நெடுஞ்சாலை துறையினர் மண் திட்டுகளையும் மரத்தையும் அப்புறப்படுத்தினார்கள் பின்பு போக்குவரத்து சீர் செய்யப்பட்டது.

    • குன்னூர் சுற்றுப்புற பகுதிகளில் சில தினங்களாக பகலில் வெயிலும், இரவில் பலத்த மழையும் பெய்து வருகிறது.
    • பல இடங்களில் மண்சரிவு ஏற்படுவதுடன், வீடுகள் இடிந்து விழும் அபாயமும் உள்ளது.

    குன்னூர்,

    நீலகிரி மாவடத்தில் கடந்த சில வாரங்களாக கடும் உறைபனி மற்றும் பனிப்பொழிவு காணப்ப டுகிறது. அவ்வப்போது சில நேரங்களில் கனமழையும் பெய்து வருகிறது.

    குன்னூர் சுற்றுப்புற பகுதிகளில் சில தினங்களாக பகலில் வெயிலும், இரவில் பலத்த மழையும் பெய்து வருகிறது. நேற்று காலை கடும் வெயில் நிலவியது. அதனை தொடர்ந்து கடும் பனி கொட்டி தீர்த்தது.

    மாலையில் சாரல் மழை பெய்தது. தொடர்ந்து இரவில் கனமழை கொட்டி தீர்த்தது. இரவு ஆரம்பித்த மழை அதிகாலை வரை நீடித்தது. இந்த மழையால் சாலையோரங்கள் மற்றும் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது.

    சாலைகளில் தண்ணீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. இரவு நேரம் என்பதால் சாலைகளில் வாகன போக்குவரத்து குறைவாக இருந்ததால் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. தொடர் மழைக்கு ஒட்டுப்பட்டறை, உழவர்சந்தை, ரேலி காம்பவுண்ட், வண்ணா ரபேட்டை உள்பட 5 இடங்களில் மண்சரிவு ஏற்ப ட்டது. தகவல் அறிந்ததும், அதிகாரிகள் விரைந்து வந்து மண்சரிவை அகற்றினர். தொடர்ந்து இதேபோன்று மழை பெய்தால் மேலும் பல இடங்களில் மண்சரிவு ஏற்படுவதுடன், வீடுகள் இடிந்து விழும் அபாயமும் உள்ளது.

    கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. இதனால் பல இடங்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதை காண முடிந்தது.

    • ஜூன், ஜூலை மாதங்களில் தென்மேற்குப் பருவ மழை இடைவிடாமல் மிகத் தீவிரமாக பெய்தது.
    • அவலாஞ்சி ஆகிய பகுதிக்கு செல்லும் மாநில நெடுஞ்சாலைகளில் பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டது.

     ஊட்டி

    நீலகிரி மாவட்டத்தில் மாநில நெடுஞ்சாலைத் துறை சாா்பில் தென்மேற்கு பருவ மழையால் பாலாடா, எமரால்டு ஆகிய பகுதிகளில் சரி செய்யப்பட்ட சேதம் அடைந்த சாலைகளை நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் எ.வ. வேலு, வனத் துறை அமைச்சா் கா.ராமசந்திரன் ஆகியோா் ஆய்வு செய்தனா்.

    தொடர்ந்து அமைச்சர் எ.வ. வேலு நிருபர்களிடம் கூறியதாவது:-

    நீலகிரி மாவட்டத்தில் ஜூன், ஜூலை மாதங்களில் தென்மேற்குப் பருவ மழை இடைவிடாமல் மிகத் தீவிரமாக பெய்தது. குறிப்பாக அவலாஞ்சி பகுதியில் ஒரே இரவில் 300 மி.மீ. மழை பெய்ததால் ஊட்டியில் இருந்து எமரால்டு, அவலாஞ்சி ஆகிய பகுதிக்கு செல்லும் மாநில நெடுஞ்சாலைகளில் பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டது. மண்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் தமிழக அரசு போா்க்கால அடிப்படையில் சாலைகளில் தடுப்புச் சுவா்கள் அமைத்து, சீரமைத்தனா்.

    பருவ மழையால் ஏற்பட்ட பாதிப்புகளை தற்போது தற்காலிகமாக சரி செய்துள்ளதாகவும், விரைவில் முதல்-அமைச்சரின் ஒப்புதலுடன் தரமான சாலைகள் அமைக்கப்படும். மண்சரிவை தடுப்பது குறித்த மாதிரி திட்டத்தின் கீழ் நீலகிரி மாவட்டம் கோடப்பமந்து மற்றும் மரப்பாலம் ஆகிய பகுதிகளில் சோதனை முறையில் நெய்லிங் திட்டம் அமல்படுத்தப்பட்டது.

    அப்பகுதியில், தற்போது மண்சரிவு ஏற்படவில்லை. நீலகிரியில் உள்ள 53 சாலைகள் மண்சரிவு ஏற்படும் பகுதியாக கண்டறியப்பட்டுள்ளது. அப்பகுதிகளில் மாநில நெடுஞ்சாலைத் துறை சாா்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தமிழக முதல்வரின் கனவு திட்டமான 23 சதவீத வனப் பகுதியை 33 சதவீத வனப் பகுதியாக விரிவாக்கும் திட்டமான பசுமை தமிழகம் திட்டத்தின் கீழ் அமைச்சா்கள் எ.வ.வேலு, கா.ராமச்சந்திரன், நீலகிரி மாவட்ட தி.மு.க. செயலாளா் பா.மு.முபாரக் ஆகியோா் மரக்கன்றுகளை நடவு செய்தனா். 

    • ஏற்காடு உள்ளிட்ட மலைப்பாதையில் போக்குவரத்து நிறுத்தம்.
    • ஜேசிபி, பொக்லைன் இயந்திரம் மூலம் பாறைகளை அகற்றும் பணி தீவிரம்.

    தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால், ஆங்காங்கே வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு ஏற்பட்டு மக்களுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இந்நிலையில், சேலம் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால், ஏற்காடு உள்ளிட்ட மலைப்பாதையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

    ஏற்காடு மலைப்பாதையில் சுமார் 50க்கும் மேற்பட்ட இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, ஜேசிபி, பொக்லைன் இயந்திரம் மூலம் பாறைகளை அகற்றும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பாதையை சீரமைக்க ஒரு வாரம் வரை ஆகலாம் என்றும் அதுவரை போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

    • கடந்த 2 வாரங்களுக்கு முன்பு தொடர் கனமழை பெய்தது.
    • மழை பெய்ததால் நடைபாதையில் விழுந்த மண் குவியல்களை அகற்ற முடியவில்லை.

    கூடலூர்

    கூடலூர் பகுதியில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு தொடர் கனமழை பெய்தது. இதனால் பல இடங்களில் பாலம் உடைந்தது. தொடர்ந்து மண் சரிவுகள் ஏற்பட்டு வீடுகள் சேதம் அடைந்தன. கூடலூர் நகரின் மையப்பகுதியில் கிளை நூலகம் உள்ளது. இதன் முன்பு நகராட்சி நடைபாதை செல்கிறது.

    தொடர் மழையால் கிளை நூலகத்தின் வளாகத்தில் உள்ள மேடான இடத்தில் இருந்து மண் சரிவு ஏற்பட்டு நடைபாதையில் விழுந்தது. தொடர்ந்து மழை பெய்ததால் நடைபாதையில் விழுந்த மண் குவியல்களை அகற்ற முடியவில்லை.

    மேலும் மக்களின் நடமாட்டமும் குறைவாக காணப்பட்டது.  தற்போது மழையும் குறைந்து விட்டதால் இயல்பு நிலை திரும்பி உள்ளது. ஆனால், இதுவரை நடைபாதையில் விழுந்து கிடக்கும் மண்குவியல்கள் அகற்றப்படவில்லை. இதனால் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாமல் சிரமத்துக்கு ஆளாகினர். தொடர்ந்து மண் குவியல்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அப்பகுதியில் அனைத்து வங்கிகளும் செயல்படுகிறது. மேலும் காலை, மாலை நேரத்தில் நூற்றுக்கணக்கான மாணவ-மாணவிகள், பொதுமக்கள் நடைபாதையில் நடந்து முடியாமல் அவதி அடைந்து வருகின்றனர்.

    சில சமயங்களில் பெண்கள், வயதானவர்கள் தடுமாறி கீழே விழும் அவல நிலையும் காணப்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடைபாதையில் கிடக்கும் மண் குவியல்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    ×