search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மக்கள் நீதிமன்றம்"

    • 749 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
    • 86 வழக்குகளுக்கு தீர்வு

    செங்கம்:

    செங்கம் வட்ட சட்டப்பணிகள் குழு சார்பாக தேசிய மக்கள் நீதிமன்றம் செங்கம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது.

    இதில் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள பல்வேறு வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

    செங்கம் சார்பு நீதிமன்ற நீதிபதி மற்றும் வட்ட சட்டப்பணிகள் குழு தலைவர் ஜி.ராதாகிருஷ்ணன், மாவட்ட உரிமையியல் நீதிபதி ஜி.தாமரை இளங்கோ, குற்றவியல் நீதித்துறை நடுவர் பி.வித்யா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக 749 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

    அதில் 86 வழக்குகளில் ரூ.66லட்சத்து 89 ஆயிரத்து 397 மதிப்பிலான தாவாக்கள் சமரசம் செய்து முடித்துவைக்கப்பட்டது.

    • ஆலங்குடியில் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது
    • 15 பேருக்கு தீர்வு காணப்பட்டது

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் இயங்கி வரும் பொதுவுடமைக்கப்பட்ட ஸ்டேட் பேங்க் ஆப் வங்கியில் நீண்ட கால தவணை களாக கடன் பெற்ற விவசாயிகளுக்கு கடன் கட்ட முடியாத நபர்கள் ஆலங்குடி நீதிமன்ற லோக்கல் அதாலத் சமரச கூட்ட தீர்வு மூலமாக 15 பேருக்கு தீர்வு காணப்பட்டது. சமரச கூட்டத்திற்கு ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி ரவி தலைமை வகித்தார் வழக்கறிஞர் விஜய, சமூக ஆர்வலர் அழகுசுந்தரம் வங்கி கிளை மேலாளர் அசோக்குமார், அரசு வழக்கறிஞர் கண்ணதாசன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.நீண்டகால கடன்களான விவசாயம் கல்விக்கடன் சுய உதவிக் குழு சிறு தொழில் வியாபாரம் மற்றும் ஏனைய கடன்கள் பெற்றவர்களு க்கு சமரச கூட்டத்தில் தீர்வு காணப்பட்டது. இதில் கடன் பெற்றவர்களுக்கு நீண்ட கால நிலுவையில் இருந்த 15 பேருக்கு 39, லட்சத்து,40, ஆயிரத்து,360 கொடுத்து சமரச கூட்டதீர்வு காணப்பட்டது..

    நிகழ்ச்சியில் வட்ட சட்டப்பணி குழு நிர்வாக உதவியாளர் அருண்கு மார் தன்னார்வ சட்ட பணியாளர் செந்தில்ராஜா மற்றும் வழக்கறிஞ ர்கள் 100க்கும் அதிகமான பொதுமக்கள் ஏராளமான கலந்துகொண் டனர். 

    • விபத்து, மோசடி வழக்குகள் விரைந்து முடிக்க ஆலோசனை நடைபெற்றது.
    • ஆகஸ்ட் 13ல் நடைபெறவுள்ள தேசிய மக்கள் நீதிமன்ற நிகழ்ச்சியை நடத்துவது குறித்து ஆலோசனை நடைபெற்றது.

    பல்லடம் :

    பல்லடம் வட்ட சட்டப்பணிகள் குழு சார்பாக வரும் ஆகஸ்ட் 13ல் நடைபெறவுள்ள தேசிய மக்கள் நீதிமன்ற நிகழ்ச்சியை சிறப்பாக நடத்துவது குறித்து ஆலோசனை கூட்டம் பல்லடம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது.

    பல்லடம் சார்பு நீதிமன்ற நீதிபதி சந்தான கிருஷ்ணசாமி, குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சித்ரா ஆகியோர் தலைமை வகித்தனர். ஆலோசனைக் கூட்டத்தில் மோட்டார் வாகன விபத்து வழக்குகள், பண மோசடி வழக்குகள், வங்கி மோசடி வழக்குகள் ஆகியவற்றை விரைந்து முடிக்க ஆலோசனை நடைபெற்றது. இதற்கான முன் அமர்வுகள் ஏற்பாடு செய்து வழக்குகளை விரைவாக முடிக்கலாம் என ஆலோசனை நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், வழக்கறிஞர்கள், போலீசார், இன்சூரன்ஸ் நிறுவன அதிகாரிகள், வங்கி அதிகாரிகள், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • 159 வழக்குகள் எடுக்கப்பட்டு அதில் 76 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
    • தம்பதியினர் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக பிரிந்து வாழ்ந்து வந்தனர்.

    பல்லடம் :

    பல்லடம் வட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு சார்பில் பல்லடத்தில் மக்கள் நீதிமன்றம் பல்லடம் சார்பு நீதிமன்ற நீதிபதி சந்தான கிருஷ்ணசாமி, குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சித்ரா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

    இதில் மோட்டார் வாகன விபத்து வழக்கு, காசோலை வழக்கு, சொத்து வழக்கு, குடும்ப வழக்கு, உள்ளிட்ட 159 வழக்குகள் எடுக்கப்பட்டு அதில் 76 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது .தீர்வு தொகையாக ரூ.70,88,492 வழங்கப்பட்டது. இதில் பல்லடத்தை சேர்ந்த இளம் தம்பதியினர் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக பிரிந்து வாழ்ந்து வந்தனர். குடும்ப வன்முறை குறித்த வழக்கில் தம்பதியினரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

    இதில் இருவரும் சேர்ந்து வாழ சம்மதம் தெரிவித்ததையடுத்து வழக்கு முடித்து வைக்கப்பட்டு நீதிபதிகள் முன்னிலையில் கருத்து வேறுபாடால் பிரிந்த இளம் தம்பதிகள் மீண்டும் குடும்ப வாழ்வில் இணைந்தனர்.

    • 500-க்கும் மேற்பட்ட வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு 205 வழக்குகளில் தீர்வு காணப்பட்டது.
    • வங்கி வாராக் கடன்கள் உள்ளிட்ட வழக்குகளில் 2 கோடியே 35 லட்சத்து 31ஆயிரத்து 950 ரூபாய் சமரசத் தொகையாக நிர்ணயம் செய்யப்பட்டது.

    திருச்சி:

    உச்சநீதிமன்ற உத்தரவின் படியும், மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு ஆலோசனையின்படியும் துறையூர் நீதிமன்றத்தில் நேற்று தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சிக்கு துறையூர் வட்ட சட்டப்பணிகள் குழுவின் தலைவரும், சார்பு நீதிமன்ற நீதிபதியுமான ஜெய்சங்கர் தலைமை வகித்தார். மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதியும், குற்றவியல் நீதித்துறை நடுவருமான (பொறுப்பு) சத்தியமூர்த்தி தலைமை வகித்தார்.

    இந்நிகழ்ச்சியில் 500ற்றிக்கும் மேற்பட்ட வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு 205 வழக்குகளில் தீர்வு காணப்பட்டது. மேலும் வங்கி வாராக் கடன்கள் உள்ளிட்ட வழக்குகளில் 2 கோடியே 35 லட்சத்து 31ஆயிரத்து 950 ரூபாய் சமரசத் தொகையாக நிர்ணயம் செய்யப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் அரசு வழக்கறிஞர்கள் சந்திரமோகன், சபாபதி, ஜெயராஜ், துறையூர் வழக்கறிஞர் சங்க தலைவர் மனோகரன், செயலாளர் தனசேகரன் உள்ளிட்ட ஏராளமான வழக்கறிஞர்கள், வழக்காடிகள், சட்ட தன்னார்வலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • விழுப்புரத்தில் நடந்த மக்கள் நீதிமன்றத்தில் 2,000 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
    • வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு ரூ. 12 கோடி இழப்பீடு தொகை வழங்கப்பட்டன.

    விழுப்புரம்

    விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிபதியும், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் தலைவருமான பூரணி அம்மாள் வழிகாட்டுதலின்பேரில் மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் மக்கள் நீதிமன்றம் விழுப்புரம்ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நடைபெற்றது.

    மக்கள் நீதிமன்றத்தில்மோட்டார் வாகன இழப்பு காசோலை வழக்கு குடும்ப வழக்கு உள்ளிட்ட2000 வழக்குகள் விசாரிக்கப்பட்டுதீர்வு காணப்பட்டு ரூ. 12 கோடி இழப்பீடு தொகை வழங்கப்பட்டன.

    மாவட்டதலைமை குற்றவியல் நீதிபதி புஷ்பராணி மற்றும் பல்வேறு நீதிமன்றங்களில் சார்ந்த நீதிபதிகள் மூத்த வழக்கறிஞர்கள் வழக்கறிஞர் சங்கம் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.

    • சிவில், காசோலை மோசடி, குடும்ப நல வழக்குகள் என மொத்தம் 4,865 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.
    • தீா்வுத் தொகை ரூ. 32 கோடியே 27 லட்சமாகும்.

    திருப்பூர் :

    தேசிய சட்டப் பணிகள் ஆணைக் குழு, தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவின்பேரில் திருப்பூா் முதன்மை மாவட்ட அமா்வு நீதிமன்ற நீதிபதி ஸ்வா்ணம் ஜெ.நடராஜன் வழிகாட்டுதலின்பேரில் திருப்பூா் மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் 20 அமா்வுகளாக மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.

    இதில் சிவில் வழக்குகள், காசோலை மோசடி வழக்குகள், குடும்ப நல வழக்குகள், சமரசத்துக்கு உரிய சிறிய குற்ற வழக்குகள், வங்கி வாராக்கடன் வழக்குகள் என மொத்தம் 4,865 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.இதில் 2,679 வழக்குகளுக்கு சமரசத் தீா்வு காணப்பட்டன. தீா்வுத் தொகை ரூ. 32 கோடியே 27 லட்சமாகும்.

    திருப்பூரில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் நிரந்தர மக்கள் நீதிமன்ற தலைவா்வி.பி.சுகந்தி, மோட்டாா் வாகன விபத்து தீா்ப்பாய நீதிபதி பி.ஸ்ரீகுமாா், மகளிா் நீதிமன்றநீதிபதி எஸ்.நாகராஜன், தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவா் வி.புகழேந்தி மற்றும் வக்கீல்கள் பலா் கலந்துகொண்டனா்.

    • திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம் மற்றும் அனைத்து தாலுகா நீதிமன்றங்களிலும் தேசிய மக்கள் நீதிமன்றம் என்ற லோக் அதாலத் இன்று நடைபெற்றது.
    • இதில் பல்வேறு வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம் மற்றும் அனைத்து தாலுகா நீதிமன்றங்களிலும் தேசிய மக்கள் நீதிமன்றம் என்ற லோக் அதாலத் இன்று நடைபெற்றது.

    நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவாக முடித்து சமரச முறையில் வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. இருதரப்பினர் இடையே பேச்சுவார்த்தை நடத்தி சுமூகமாக செல்ல அறிவுறுத்தப்பட்டனர்.

    காசோலை தொடர்பான வழக்குகள், மோட்டார் வாகன விபத்து, சமரசம் செய்ய கூடிய குற்றவியல் வழக்கு, விவாகரத்து தவிர்த்த குடும்ப பிரச்சினைகள், தொழிலாளர் நலம், விற்பனை வரி, வருமானவரி, சொத்து வரி உள்ளிட்ட வழக்குகள் எடுத்துக்கொள்ளப்பட்டது.

    இதில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு தீர்வு வழங்கப்பட்டது. திண்டுக்கல்லில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்துக்கு முதன்மை மாவட்ட நீதிபதியும், சட்ட பணிகள் ஆணைக்குழு தலைவருமான லதா தலைமை தாங்கினார். இதில் பல்வேறு வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

    • 26-ந் தேதி கோவை மாவட்டத்தில் உள்ள நீதிமன்ற வளாகங்களில் மக்கள் நீதிமன்றம் நடைபெற உள்ளது.
    • வழக்காடிகள், பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தங்களது வழக்குகளுக்கு உடனடி தீர்வு பெறலாம்.

    கோவை:

    தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம் 3 மாதங்களுக்கு ஒருமுறை நடைபெறுகிறது. இதில், கோர்ட்டுகளில் நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு சமரச பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்படுகிறது.

    இந்நிலையில், வரும் 26-ந் தேதி கோவை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திலும், மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, வால்பாறை, சூலூர், மதுக்கரை நீதிமன்ற வளாகங்களிலும் மக்கள் நீதிமன்றம் நடைபெற உள்ளது.இதுகுறித்து மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான கே.ராஜசேகர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நிலுவையில் உள்ள சமரசம் செய்யக்கூடிய சிறுகுற்றவழக்குகள், காசோலை வழக்குகள், வாகன விபத்து வழக்குகள், சிவில் வழக்குகள், நில ஆர்ஜித வழக்குகள், தொழிலாளர் சம்மந்தப்பட்ட வழக்குகள் போன்றவற்றுக்கு உடனடி தீர்வு பெறலாம்.

    எனவே மேற்கண்ட வழக்குகளுக்கு தீர்வு காண்பதற்காக, மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள சட்டப்பணிகள் ஆணைக் குழுவில் வரும் 24-ந் தேதி வரை சிறப்பு அமர்வுகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. எனவே, வழக்காடிகள், பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தங்களது வழக்குகளுக்கு உடனடி தீர்வு பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஊட்டி நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் உறுப்பினராக சேர விண்ணப்பிக்கலாம் என அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.
    • ஒரு அமர்வுக்கு ரூ.1500 மதிப்பூதியம் வழங்கப்படும்.

    ஊட்டி, ஜூன்.11-

    நீலகிரி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவர் மற்றும் மாவட்ட நீதிபதி முருகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

    ஊட்டி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் உறுப்பினராக சேர ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

    இதற்கான விண்ணப்பத்தை ஊட்டி நீதிமன்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் உறுப்பினராக சேர விரும்புபவர்கள் போக்குவரத்துத்துறை, தபால், சுகாதாரத்துறை, கல்வி நிறுவனங்கள் ஏதேனும் ஒன்றில் பணிபுரிந்த அனுபவம் இருக்க வேண்டும்.

    மேலும் 62 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை தலைவர் மற்றும் மாவட்ட நீதிபதி, மாவட்ட சட்டப்பணி ஆணைக்குழு, ஊட்டி-643001 என்ற முகவரிக்கு தபால் மூலம் வருகிற 20-ந் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

    தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஒரு அமர்வுக்கு ரூ.1500 மதிப்பூதியம் வழங்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

    ×