என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  பல்லடத்தில் மக்கள் நீதிமன்றம் நடத்துவது குறித்து ஆலோசனை கூட்டம்
  X

  பல்லடம் நீதிமன்றத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்ற போது எடுத்த படம்.

  பல்லடத்தில் மக்கள் நீதிமன்றம் நடத்துவது குறித்து ஆலோசனை கூட்டம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • விபத்து, மோசடி வழக்குகள் விரைந்து முடிக்க ஆலோசனை நடைபெற்றது.
  • ஆகஸ்ட் 13ல் நடைபெறவுள்ள தேசிய மக்கள் நீதிமன்ற நிகழ்ச்சியை நடத்துவது குறித்து ஆலோசனை நடைபெற்றது.

  பல்லடம் :

  பல்லடம் வட்ட சட்டப்பணிகள் குழு சார்பாக வரும் ஆகஸ்ட் 13ல் நடைபெறவுள்ள தேசிய மக்கள் நீதிமன்ற நிகழ்ச்சியை சிறப்பாக நடத்துவது குறித்து ஆலோசனை கூட்டம் பல்லடம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது.

  பல்லடம் சார்பு நீதிமன்ற நீதிபதி சந்தான கிருஷ்ணசாமி, குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சித்ரா ஆகியோர் தலைமை வகித்தனர். ஆலோசனைக் கூட்டத்தில் மோட்டார் வாகன விபத்து வழக்குகள், பண மோசடி வழக்குகள், வங்கி மோசடி வழக்குகள் ஆகியவற்றை விரைந்து முடிக்க ஆலோசனை நடைபெற்றது. இதற்கான முன் அமர்வுகள் ஏற்பாடு செய்து வழக்குகளை விரைவாக முடிக்கலாம் என ஆலோசனை நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், வழக்கறிஞர்கள், போலீசார், இன்சூரன்ஸ் நிறுவன அதிகாரிகள், வங்கி அதிகாரிகள், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

  Next Story
  ×