search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெட்ரோல் குண்டு வீச்சு"

    • கோவை குண்டுவெடிப்பு வழக்கில் கைதானவர்களை கருணை அடிப்படையில் விடுதலை செய்ய தி.மு.க. அரசு, கவர்னருக்கு பரிந்துரை செய்துள்ளது.
    • தமிழ்நாட்டில் ஆளுநர் மாளிகையிலேயே பெட்ரோல் குண்டு வீசத் துணியும் அளவுக்கு சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளது.

    கோவை:

    பாரதிய ஜனதா தேசிய மகளிர் அணி தலைவியும், கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.வுமான வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று சென்னை வருகை தர உள்ள நிலையில், சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகை வாயிலில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது.

    பெட்ரோல் வீசியதாக காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள ரவுடி கருக்கா வினோத், கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி 10-ந்தேதி சென்னையில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகமான கமலாலயத்தில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் கைது செய்யப்பட்டவர் என்று காவல்துறை தெரிவித்துள்ளது. அந்த ரவுடியிடம் மேலும் 4 பெட்ரோல் குண்டுகள் இருந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

    கோவை குண்டுவெடிப்பு வழக்கில் கைதானவர்களை கருணை அடிப்படையில் விடுதலை செய்ய தி.மு.க. அரசு, கவர்னருக்கு பரிந்துரை செய்துள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் ஆளுநர் மாளிகையிலேயே பெட்ரோல் குண்டு வீசத் துணியும் அளவுக்கு சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளது.

    இந்தச் சூழலில் கோவை குண்டுவெடிப்பு கைதிகளை விடுதலை செய்வதை ஏற்க முடியாது. அவர்களை விடுவித்தால் ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் வாக்குகள் கிடைக்கும் என அரசியல் லாபக் கணக்கு பார்க்கக் கூடாது.

    கவர்னர் மாளிகையிலேயே ஒருவர் குண்டு வீச துணிகிறார் என்றால், அது ஒரு தனி நபரின் முயற்சியாக மட்டும் இருக்க வாய்ப்பில்லை. எனவே, ரவுடி கருக்கா வினோத்தின் பின்னணி குறித்து முழுமையாக விசாரிக்கப்பட வேண்டும்.

    தமிழ்நாடு காவல்துறை தி.மு.க.வினரின் உத்தரவுக்கு ஏற்ப இயங்கும் துறையாக இருப்பதால் இந்த வழக்கு விசாரணையை, தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அல்லது சி.பி.ஐ. வசம் ஒப்படைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் உருவான தீயானது மளமளவென்று பரவி வீட்டின் உள்பகுதியில் நிறுத்தியிருந்த இருசக்கர வாகனங்கள் மீதும் பற்றியது.
    • அக்கம் பக்கத்தினர் கொடுத்த தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீ மேலும் பரவாமல் தடுத்து அணைத்தனர்.

    சோழவந்தான்:

    மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே உள்ள கீழப்பட்டி பகுதியில் வசித்து வருபவர் சுமதி (வயது 37). கணவர் இறந்துவிட்ட நிலையில் சுமதி அப்பகுதியில் சொந்தமாக பால்பண்ண வைத்து நடத்தி வருகிறார். அதே பகுதியில் மேலும் சிலர் பால்பண்ணை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

    இந்த நிலையில் இன்று அதிகாலை சுமதியின் வீட்டு முன்பு மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் திடீரென்று சுமதியின் வீட்டின் முன்பு பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு தப்பிச்சென்றனர். இந்த சத்தம் கேட்டு ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த சுமதி பதறியடித்துக்கொண்டு வெளியில் ஓடிவந்தார்.

    அப்போது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் உருவான தீயானது மளமளவென்று பரவி வீட்டின் உள்பகுதியில் நிறுத்தியிருந்த இருசக்கர வாகனங்கள் மீதும் பற்றியது. இதில் அந்த வாகனங்கள் முற்றிலும் எரிந்து சேதம் அடைந்தது. 2 மோட்டார் சைக்கிள்களும் எலும்பு கூடாக காட்சியளித்தது. இதைபார்த்த சுமதி மயங்கி விழுந்தார்.

    இதுதொடர்பாக அக்கம் பக்கத்தினர் கொடுத்த தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீ மேலும் பரவாமல் தடுத்து அணைத்தனர். மேலும் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில் வீட்டிற்குள் மயங்கி கிடந்த சுமதியை தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டு சிகிச்சைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

    மேலும் இது தொடர்பாக விக்கிரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொழில் போட்டியில் யாராவது மர்மநபர்கள் பெட்ரோல் குண்டு வீசினார்களா? அல்லது வேறு காரணமா? என்று தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • டாஸ்மாக் கடையில் பெட்ரோல் குண்டு வீச்சு நடந்தது.
    • அருப்புக் கோட்டை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து வசந்தகுமாரை கைது செய்தனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள பாலவனத்தம் கிராமத்தில் அரசு டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. நேற்று மதியம் மேற்பார்வையாளர் மாரீஸ்வரின், விற்ப னையாளர் செந்தில்குமார் ஆகியோர் பணியில் இருந்தனர். அப்போது அங்கு வந்த கடம்பன் குளத்தை சேர்ந்த வசந்த குமார்(20) என்பவர் பணம் கொடுக்காமல் மது பாட்டில் களை கேட்டுள்ளார்.

    ஆனால் ஊழியர்கள் அவரை கண்டித்து இங்கிருந்து செல்லுமாறு கூறினர். இதனால் ஆத்திர மடைந்த வசந்தகுமார், ஊழியர்களை தரக்குறைவாக பேசி விட்டு அங்கிருந்து சென்றார். சிறிது நேரத்தில் அங்கு வந்த வசந்தகுமார் பெட்ரோல் குண்டை கடை மீது வீசினார். ஆனால் அதிர்ஷ்ட வசமாக பெட்ரோல் குண்டு வெடிக்கவில்லை.

    இதனால் ஊழியர்கள் உயிர் தப்பினர். இந்த சம்பவத்தால் அதிர்ச்சி யடைந்த டாஸ்மாக் ஊழி யர்கள் வசந்தகுமாரை பிடிக்க முயன்றனர். அப் போது அவர் கீழே கிடந்த பாட்டிலை எடுத்து உடைத்து குத்தி விடுவேன் என கொலை மிரட்டல் விடுத்து அங்கிருந்து தப்பி சென்றார். இதுகுறித்த புகாரின்பேரில் அருப்புக் கோட்டை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து வசந்தகுமாரை கைது செய்தனர்.

    • ரெயில்வே கேட் அருகே பிரகாஷ் தனது ஆதரவாளர்களுடன் அமர்ந்திருந்தார்.
    • வல்லரசு தரப்பினர் கும்பலாக அமர்ந்திருந்த பிரகாஷ் தரப்பினர் மீது பெட்ரோல் குண்டுகளை வீசினர்.

    சோழவந்தான்:

    மதுரை மாவட்டம் சோழவந்தான், காடுபட்டி, விக்கிரமங்கலம் ஆகிய பகுதிகளில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சமூக விரோத செயல்களால் அதற்கேற்றவாறு குற்ற சம்பவங்களும் பெருகி வருகிறது. ஒவ்வொரு நாளும் மக்கள் அச்சத்துடனேயே கடந்து செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். குறிப்பாக கஞ்சா விற்பனை செய்யும் கும்பலின் அட்டகாசம் தலைதூக்கியுள்ளது.

    இதில் சோழவந்தான் அருகேயுள்ள நாச்சிகுளம் பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 27). திண்டுக்கல் மாவட்டம் பள்ளப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் வல்லரசு (28). இவர்கள் இருவரும் கஞ்சா விற்பனையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை கூட்டாளிகளாக இருந்துள்ளனர்.

    பின்னர் அவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலால் பிரிந்தனர். இதனிடையே வெளியூர் நபர்களும் அந்த பகுதிக்கு வந்து கஞ்சா விற்பனையை தொடங்கினர். குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவர்களை குறிவைத்து இந்த கும்பல் கஞ்சா, போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்தது. அவர்களுக்கு பிரகாசின் பழைய கூட்டாளி வல்லரசு ஆதரவாக இருந்துள்ளார்.

    இதனால் பாதிக்கப்பட்ட நாச்சிகுளத்தை சேர்ந்த பிரகாஷ் அவர்களிடம் சென்று தகராறில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது. இதைப்பார்த்த அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் தகராறை விலக்கிவிட்டு கலைந்து போக செய்தனர். இருந்தபோதிலும் அந்த பகுதி பதட்டமாகவே காணப்பட்டது.

    இதற்கிடையே நாச்சிகுளத்தை அடுத்த சாலாட்சிபுரம் ரெயில்வே கேட் அருகே பிரகாஷ் தனது ஆதரவாளர்களுடன் அமர்ந்திருந்தார். அப்போது அங்கு வந்த வல்லரசு தரப்பினர் கும்பலாக அமர்ந்திருந்த பிரகாஷ் தரப்பினர் மீது பெட்ரோல் குண்டுகளை வீசினர்.

    இதில் பிரகாஷ் உள்ளிட்ட சிலர் தப்பித்து விட்டனர். மாட்டிக் கொண்ட மதுரையைச் சேர்ந்த மார்க்கண்டேயனை வல்லரசு தரப்பை சேர்ந்தவர்கள் ஆயுதங்களால் சரமாரியாக வெட்டி விட்டு சென்றனர். இது தொடர்பாக சோழவந்தான் போலீசார் வழக்குப்பதிவு செய்து பெட்ரோல் குண்டு வீச்சு, அரிவாள் வெட்டில் ஈடுபட்ட 12, 13, 14 வயதுள்ள சிறுவர்கள் மற்றும் நாச்சிகுளம் பிரதாப் (25), டேவிட் (27) உள்பட 8 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    இதே போன்று விக்கிரமங்கலம் பகுதிகளிலும் கஞ்சா, மது போதைக்கு அடிமையாகி குற்றச்செயலில் ஈடுபடும் சிறுவர்களால் பொதுமக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர். தொடர்ச்சியாக இந்த பகுதிகளில் கஞ்சா விற்பனை அதிகரித்து வருவதும், பள்ளி மாணவர்களுக்கு கஞ்சாசப்ளை செய்வதும் தொடர்ந்து நடைபெற்று வருவதால் பொது மக்கள் மற்றும் பெற்றோர்கள் கவலையில் உள்ளனர்.

    இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கஞ்சா விற்பனை மற்றும் அதனால் ஏற்படும் மோதல்கள் தொடர்பான பிரச்சினையில் தலையிட்டு குற்ற சம்பவங்களில் ஈடுபடும் நபர்களை கைது செய்ய வேண்டும் என்றும் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கஞ்சா, மது போதையில் விக்கிரமங்கலம் பகுதியில் வீட்டில் தனியாக இருந்த பெண்களை கம்பு, கட்டைகளால் சிறுவர்கள் தாக்கிய சம்பவம் சமூக வலை தளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

    • பாட்டிலுக்குள் பெட்ரோலை நிரப்பி அதில் தீ வைத்து வீட்டின் மீது மர்ம நபர்கள் வீசிச் சென்றது தெரிய வந்தது.
    • ஜோதி வேலுக்கு யாரேனும் விரோதிகள் உள்ளார்களா? என்றும் விசாரித்து வருகின்றனர்.

    வேடசந்தூர்:

    திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள அய்யம்பாளையத்தைச் சேர்ந்தவர் ஜோதி வேல் (வயது 65). மில் தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 மகள்கள் உள்ளனர். அவர்களுக்கு திருமணமாகி தனியாக வசித்து வரும் நிலையில் கணவன்-மனைவி மட்டும் தனியாக வசித்து வருகின்றனர். நேற்று இரவு வேலை முடித்து ஜோதிவேல் வீட்டில் தூங்கிக் கொண்டு இருந்தார்.

    நள்ளிரவில் இவரது வீட்டின் முன்பு பயங்கர சத்தம் கேட்டது. இதனால் ஜோதிவேல் மற்றும் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் திடுக்கிட்டு எழுந்து பார்த்தனர். அப்போது அவரது வீட்டு முன்பு தீப்பிடித்து எரிந்து கொண்டு இருந்தது. அதன் அருகே கண்ணாடி பாட்டில்கள் சிதறிக்கிடந்தன.

    பாட்டிலுக்குள் பெட்ரோலை நிரப்பி அதில் தீ வைத்து வீட்டின் மீது மர்ம நபர்கள் வீசிச் சென்றது தெரிய வந்தது. இது குறித்து வேடசந்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். வீட்டின் முன்பு சிதறிக்கிடந்த பாட்டில் துகள்களை சேகரித்து எடுத்துச் சென்றனர்.

    மேலும் அப்பகுதியில் ஏதேனும் சி.சி.டி.வி. கேமராக்கள் உள்ளதா? என்றும் அதில் மர்ம நபர்கள் உருவம் பதிவாகியுள்ளதா? என்றும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் ஜோதி வேலுக்கு யாரேனும் விரோதிகள் உள்ளார்களா? என்றும் விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • பீட்டர்,பாஸ்கர் ஆகிய இருவரது வீட்டு வாசல்களிலும் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசி உள்ளனர்.
    • தீ பற்றி எரிந்ததில் மீன்பிடி வலைகள் சேதம் அடைந்தன.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி இனிகோ நகரை சேர்ந்தவர் பாஸ்கர் என்ற சுறா பாஸ்கர் (வயது 38). மீனவர். இவர் இனிகோநகர் பகுதி விஜய் ரசிகர் மன்ற நிர்வாகியாக உள்ளார். இவரது அண்ணன் பீட்டர் (48) மீனவர். இருவரது வீடும் அடுத்தடுத்து உள்ளது.

    நேற்று முன்தினம் நள்ளிரவில் பீட்டர்,பாஸ்கர் ஆகிய இருவரது வீட்டு வாசல்களிலும் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசி உள்ளனர். சத்தம் கேட்டு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து எழுந்து வந்து பார்க்கும் போது வாசல் அருகே இருந்த மீன் பிடிக்கும் வலைகள் தீப்பற்றி எரிந்தது.

    உடனடியாக தண்ணீர் எடுத்து வந்து ஊற்றி வலையில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். எனினும் தீ பற்றி எரிந்ததில் மீன்பிடி வலைகள் சேதம் அடைந்தன.

    சம்பவ இடத்திற்கு தென்பாகம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் விரைந்து சென்று பார்வையிட்டனர். தொடர்ந்து வழக்கு பதிவு செய்து வீட்டின் முன்பு பெட்ரோல் குண்டை வீசி சென்றது யார் ? எதற்காக வீசினர்? என்பது குறித்து விசாரணை நடத்தினர்.தடயவியல் நிபுணர்களும் ஆய்வு நடத்தினர்.

    இந்நிலையில் பெட்ரோல் குண்டுகளை வீசியது அதே பகுதியைச் சேர்ந்த ஜெரிஸ், நரேஸ், ஜெய்சன் என்ற வாலிபர்கள் என்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. உடனடியாக 3 வாலிபர்களையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • நள்ளிரவில் மீனவர் வீட்டின முன்பு பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி இனிகோ நகரை சேர்ந்தவர் பாஸ்கர் என்ற சுறா பாஸ்கர் (வயது 38). மீனவர். இவர் இனிகோநகர் பகுதி விஜய் ரசிகர் மன்ற நிர்வாகியாக இருந்து வருகிறார். இவரது அண்ணன் பீட்டர் (48) மீனவர். இருவரது வீடும் அடுத்தடுத்து உள்ளது.

    நேற்று மாலை அவர்களது வீட்டு அருகே விளையாடிய சிறுவர்களுக்கு இடையே தகராறு நடைபெற்றுள்ளது. இந்நிலையில் நள்ளிரவு 12.30 மணிக்கு சகோதரர்களான பீட்டர், பாஸ்கர் ஆகிய இருவரது வீட்டு வாசல்களிலும் மர்மநபர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசி உள்ளனர்.

    குண்டு வெடித்த சத்தம் கேட்டு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்து எழுந்து வந்து பார்த்தனர். அப்போது வீட்டின் வாசல் அருகே இருந்த மீன் பிடிக்கும் வலைகள் தீப்பற்றி எரிந்தது.

    உடனடியாக தண்ணீர் எடுத்து தீயை அணைத்தனர். எனினும் தீ பற்றி எரிந்ததில் மீன்பிடி வலைகள் முழுவதும் சேதம் அடைந்தன. இது குறித்து தகவலறிந்ததும் சம்பவ இடத்திற்கு தென்பாகம் போலீசார் விரைந்து சென்று பார்வையிட்டனர்.

    தொடர்ந்து சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து மீனவர் வீட்டின் முன்பு பெட்ரோல் குண்டை வீசி சென்றது யார்? எதற்காக வீசினார்கள்? நேற்று மாலை சாலையில் நடைபெற்ற தகராறு காரணமாக நடந்ததா? அல்லது வேறு ஏதேனும் முன்விரோதம் காரணமாக நடைபெற்றதா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நள்ளிரவில் மீனவர் வீட்டின முன்பு பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • வானுமாமலையின் இட்லி கடைக்கும் அந்த கும்பல் தீ வைத்து விட்டு தப்பி சென்றது.
    • வானுமாமலையின் மாமனாரான ராமையா வீட்டின் மீதும் பெட்ரோல் குண்டை வீசியது.

    களக்காடு:

    நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள தம்புபுரத்தை சேர்ந்தவர் சின்னத்துரை. இவரது மகன் வானுமாமலை(வயது 27). இவர் அப்பகுதியில் இட்லி கடை வைத்துள்ளார்.

    இவருக்கும், அதே ஊரை சேர்ந்த கபாலி கண்ணன் என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வருகிறது. நேற்று இரவு கபாலி கண்ணனின் மகன் நவீன், அவரது நண்பர்கள் சுடலைக்கண்ணு, முருகேசன், ராஜா மற்றும் அடையாளம் தெரியாத 5 பேர் உள்பட 9 பேர் கையில் அரிவாள்களுடன் மோட்டார் சைக்கிள்களில் வானுமாமலை வீட்டுக்கு சென்றுள்ளனர்.

    அங்கு பேசிக்கொண்டிருந்த வானுமாமலையின் தம்பி செல்வம், மைத்துனர் சுடலைமுத்து ஆகியோர் கும்பலை கண்டதும் தப்பி ஓடி விட்டனர். பின்னர் வீட்டுக்குள் நுழைந்த கும்பல் வானுமாமலையின் தாயார் ஆறுமுகம், சித்தி விஜயா ஆகியோரை அரிவாளை காட்டி மிரட்டி அவதூறாக பேசினர். இதைப்பார்த்த வானுமாமலையின் மனைவி முத்துலெட்சுமி வீட்டின் படுக்கை அறைக்குள் புகுந்து கதவை பூட்டிக்கொண்டார்.

    அதனை தொடர்ந்து நவீன் உள்ளிட்ட 9 பேரும் வீட்டுக்குள் பெட்ரோல் வெடிகுண்டை வீசினர். இதனால் வீட்டில் இருந்த சோபா, டேபிள் உள்ளிட்ட பொருட்கள் தீ பற்றி எரிந்தன. வீட்டு கதவு, ஜன்னல்களையும் அடித்து நொறுக்கினர். மேலும் அங்கிருந்த 2 மோட்டார் சைக்கிள்களையும் உடைத்தனர். டேபிளில் இருந்த ரூ.84 ஆயிரத்தையும் அந்த கும்பல் திருடிச்சென்றதாக கூறப்படு கிறது.

    அத்துடன் வானுமாமலையின் இட்லி கடைக்கும் அந்த கும்பல் தீ வைத்து விட்டு தப்பி சென்றது. தொடர்ந்து வானுமாமலையின் மாமனாரான ராமையா வீட்டின் மீதும் பெட்ரோல் குண்டை வீசியது. இதில் அந்த வீடுகளின் முன்புள்ள ஜன்னல் கண்ணாடிகள் நொறுங்கின.

    இதுபற்றி வானுமாமலை நாங்குநேரி போலீசில் புகார் செய்தார். நாங்குநேரி துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜூ, இன்ஸ்பெக்டர் ஆதம் அலி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக நவீன் உள்பட 9 பேர் மீது வெடிகுண்டு தடுப்பு சட்டம், கொலை மிரட்டல் உள்ளிட்ட 8 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து போலீசார் அவர்களை தேடி வருகின்றனர்.

    MDU03280723: சிவகங்கை மாவட்டம் கட்டம்மன் கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் சப்பாணி. இவருக்கும் மருமகள் தேவிக் கும் எற்கனவே இடப்பிரச் சினை இருந்து வந்தது. இதில் இருதரப்பை சேர்ந்தவர்களும் அடிக்கடி மோதலிலும், கைகலப்பிலும் ஈடுபட்டு வந்தனர். அவ்வப்போது ஏற்படும் தகராறை அவர்களது உ

    மதுரை:

    சிவகங்கை மாவட்டம் கட்டம்மன் கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் சப்பாணி. இவருக்கும் மருமகள் தேவிக்கும் எற்கனவே இடப்பிரச்சினை இருந்து வந்தது. இதில் இருதரப்பை சேர்ந்தவர்களும் அடிக்கடி மோதலிலும், கைகலப்பிலும் ஈடுபட்டு வந்தனர்.

    அவ்வப்போது ஏற்படும் தகராறை அவர்களது உறவினர்கள் சமரசம் பேசி தீர்த்து வைப்பதை வாடிக்கையாக கொண்டிருந்தனர். ஆனால் பிரச்சினைக்கு தீர்வு ஏற்படாததால் இருதரப்பினரும் திருப்புவனம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்து அதுதொடர்பாக வழக்குப் பதிவும் செய்யப்பட்டுள்ளது.

    இந்தநிலையில் நேற்று இரவு மீண்டும் மாமியார், மருமகளுக்கிடையே ஏற்பட்ட தகராறு முற்றியது. அப்போது ஏற்பட்ட சண்டையை வழக்கம்போல் உறவினர்கள் விலக்கிவிட வந்தனர். இதில் மதுரை அருகே இரண்டு இடங்களில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இடப்பிரச்சினையில் ஒரு தரப்பினருக்கு ஆதரவாக செயல்பட்டதாக மதுரை சிந்தாமணி ரிங்ரோடு அருகேயுள்ள மகாமுனி என்பவருக்கு சொந்தமான வணிக வளாக கட்டிடத்தில் நள்ளிரவில் ஒரு கும்பலை சேர்ந்தவர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசினர். இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. பெட்ரோல் குண்டு வீசப்பட்ட இடத்தில் கிடந்த பொருட்கள் மட்டும் சேதமடைந்தன.

    இதேபோல் கட்டம்மன் கோட்டை பகுதியைச் சேர்ந்த ஒரு வீட்டிலும், அதே பகுதியில் அமைந்துள்ள ஒரு டீக்கடையிலும் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. இதுபற்றிய தகவலின் பேரில் மதுரை சிலைமான் மற்றும் சிவகங்கை திருப்புவனம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.

    முதல்கட்ட விசாரணையில், சம்பவத்தில் ஈடுபட்டது சிவகங்கை மாவட்டம் கட்டம்மன் கோட்டை பகுதியைச் சேர்ந்த மாதவன் மற்றும் பிரசன்னா என்பது தெரியவந்தது. இருவரும் பெட்ரோல் குண்டுகளை தயாரித்து நள்ளிரவில் வந்து வீசியது அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகி உள்ளது.

    இடப்பிரச்சினை மற்றும் டீக்கடையில் ஓசிக்கு சிகரெட் கேட்டு அதனால் ஏற்பட்ட தகராறிலும் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுதொடர்பாக தலைமறைவான இருவரையும் போலீசார் தேடி வருகிறார்கள்.

    மதுரை மாவட்டம் மற்றும் சிவகங்கை மாவட்ட எல்லையில் அடுத்தடுத்து மூன்று இடங்களில் பெட்ரோல் குண்டு வீசி சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • காங்கிரஸ் நிர்வாகி வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பட்டுக்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    • போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பட்டுக்கோட்டை:

    தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை ஆணை விழுந்தான் குளத்தெருவை சேர்ந்தவர் ஸ்ரீகாந்த் (வயது 26). இவர் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் மாநில மாணவரணி இளைஞர் காங்கிரஸ் பொது செயலாளராக பொறுப்பில் இருந்து வருகிறார்.

    இந்த நிலையில் நேற்று இரவு 1:30 மணி அளவில் மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் ஸ்ரீகாந்தின் வீட்டை நோக்கி பெட்ரோல் நிரப்பப்பட்ட பாட்டிலை வீசிவிட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

    இதில் வீட்டு கதவில் இருந்த திரைச்சீலை மட்டும் எரிந்தது.

    இது குறித்து அக்கம் பக்கத்தினர் ஸ்ரீகாந்திற்கு தகவல் கொடுத்தனர். அவர் உடனே வெளியே வந்து பார்த்து தீ பிடித்து எரிந்த திரைச்சீலை அணைத்தார். இந்த பெட்ரோல் குண்டு வீச்சில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

    பின்னர் இது குறித்து ஸ்ரீகாந்த் பட்டுக்கோட்டை நகர போலீசுக்கு தகவல் அளித்தார். அவர்கள் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

    காங்கிரஸ் நிர்வாகி வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பட்டுக்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பெட்ரோல் குண்டு வீச்சுக்கான காரணம் தெரியவில்லை. ஸ்ரீகாந்திற்கு வேறு யாருக்கும் இடையே முன்விரோதம் இருந்ததா? அல்லது வேறு காரணமா என போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சத்யநாராயணனின் வீட்டுக்கு வந்த மர்ம கும்பல் அவரது வீட்டு வாசலில் பெட்ரோல் குண்டை வீசினர்.
    • பா.ம.க. மாவட்ட செயலாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ராயபுரம்:

    பழைய வண்ணாரப்பேட்டை சோலையப்பன் தெருவை சேர்ந்தவர் சத்யநாராயணன்.பா.ம.க. வடசென்னை மாவட்ட செயலாளராக உள்ளார். இவரது மகன் நிஷால். தனியார் கல்லூரியில் பி.சி.ஏ. 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.

    நேற்று இரவு நிஷால் காசிமேடு பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். அப்போது 3 மோட்டார் சைக்கிளில் வந்த 6 பேர் கும்பல் திடீரென நிஷாலை வழிமறித்து கத்தி, அரிவாளால் வெட்டி கொல்ல முயன்றனர்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த நிஷால் மோட்டார் சைக்கிளை கீழே போட்டு விட்டு அங்கிருந்து தப்பினார். இதையடுத்து மர்ம கும்பல் அங்கிருந்து சென்று விட்டனர். இதுகுறித்து நிஷால் தனது தந்தை சத்யநாராயணனிடம் தெரிவித்தார். அவர் மர்ம கும்பல் குறித்து காசிமேடு போலீசில் புகார் அளித்தார்.

    அந்த நேரத்தில் சத்யநாராயணனின் வீட்டுக்கு வந்த மர்ம கும்பல் அவரது வீட்டு வாசலில் பெட்ரோல் குண்டை வீசினர். இதில் பெட்ரோல் குண்டு பயங்கர சத்தத்துடன் வெடித்து தீப்பற்றியது. சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்ததும் மர்ம கும்பல் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டனர். பெட்ரோல் குண்டு வீச்சில் அதிர்ஷ்டவசமாக சத்யநாராயணனின் வீட்டில் இருந்த யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதுபற்றி அறிந்ததும் காசிமேடு போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். சத்யநாராயணனின் வீட்டு முன்பு பாதுகாப்புக்காக போலீசார் நிறுத்தப்பட்டு உள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கடந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி அன்று அப்பகுதியில் விநாயகர் சிலை வைப்பது தொடர்பாக நிஷாலுக்கும் அதே பகுதியை சேர்ந்த சிலருக்கும் மோதல் ஏற்பட்டு உள்ளது.

    இது பற்றி சத்யநாராயணன் போலீசில் புகார் அளித்து பின்னர் சமாதானம் செய்து முடித்து உள்ளனர். இந்த தகராறில் கொலை முயற்சி மற்றும் பெட்ரோல் குண்டு வீசப்பட்டு இருப்பது போலீசார் விசாரணையில் தெரியவந்து உள்ளது. அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சியை ஆய்வு செய்து போலீசார் மேலும் விசாரித்து வருகிறார்கள்.

    பா.ம.க. மாவட்ட செயலாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இதற்கிடையே இதே கும்பல் ராயபுரம் மஸ்தான் கோவில் தெருவில் வந்த போது அவ்வழியே மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்கள் நவீன், தினேஷ் ஆகியோரிடமும் மோதலில் ஈடுபட்டு அவரிவாளால் வெட்டி உள்ளனர். இதில் பலத்த காயம் அடைந்த அவர்கள் இருவரும் ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

    • வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசியது அதே பகுதியை சேர்ந்த தாமரைசெல்வன் என தெரியவந்தது.
    • வீட்டின் மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    அருப்புக்கோட்டை:

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள பந்தல்குடியை சேர்ந்தவர் ஜெய்சங்கர் (வயது48). இவரது மனைவி விஜயலட்சுமி. இவர் கொப்புசித்தம்பட்டியில் ஊராட்சி மன்றத்தலைவராக உள்ளார்.

    விஜயலட்சுமி பந்தல்குடியில் வசித்து வருவதால் கொப்புசித்தம்பட்டியில் உள்ள அவர்களுக்கு சொந்தமான வீட்டில் உறவினர் பஞ்சவர்ணம் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

    சம்பவத்தன்று பஞ்சவர்ணம் வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்று விட்டார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் 3 காலி மது பாட்டில்களில் பெட்ரோலை நிரப்பி தீ வைத்து வீட்டின் மீது சரமாரியாக வீசிவிட்டு தப்பினார். இதில் பெட்ரோல் வெடிகுண்டுகள் வீட்டின் கதவு முன்பு மோதி பயங்கர சத்தத்துடன் வெடித்தது. கதவு, ஜன்னல் போன்றவை எரிந்து சேதமாயின.

    பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் தொடர்பாக ஜெய்சங்கர், அருப்புக்கோட்டை போலீசில் புகார் செய்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை நடத்தி அங்கு சிதறிக்கிடந்த வெடி குண்டுக்கு பயன்படுத்தப்பட்ட பொருட்களை சேகரித்து ஆய்வுக்கு அனுப்பினர்.

    இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர். இதில் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசியது அதே பகுதியை சேர்ந்த தாமரைசெல்வன் என தெரியவந்தது.

    கடந்த ஊராட்சி மன்ற தேர்தலின்போது இவரது மனைவி தோல்வியடைந்தார். இது தொடர்பாக விஜயலட்சுமி தரப்புக்கும், தாமரைசெல்வன் தரப்புக்கும் தகராறு இருந்ததாக கூறப்படுகிறது.

    இதன் காரணமாக விஜய லட்சுமிக்கு சொந்தமான வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. மேற்கண்டவை போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. இந்த சம்பவம் தொடர்பாக தாமரை செல்வனை போலீசார் தேடி வருகின்றனர்.

    வீட்டின் மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    ×