search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புறக்காவல் நிலையம்"

    • 2 போலீசாரை பணியில் அமர்த்தி முழுநேரமும் திறக்க வேண்டும்.
    • வின்சென்ட் ரோட்டில் புறக் காவல் நிலையம் பெரும்பாலும் பூட்டியே கிடக்கிறது.

    குனியமுத்தூர்,

    கோவை உக்கடம் போலீஸ் சரகத்தில் உள்ள கோட்டைமேடு வின்சென்ட் ரோடு பகுதியில் பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரு புறக்காவல் திறக்கப்பட்டது. அங்கு 2 போலீசார் சுழற்சி முறையில் வேலை பார்த்து வந்தனர். இது வின்சென்ட் ரோடு, சின்ன பள்ளி வீதி, சாமியார் புதூர் வீதி , பி.கே.செட்டி வீதி ஆகிய பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு உதவியாக இருந்தது.

    ஆனால் இங்கு தற்போது புறக்காவல் நிலையம் முழுமையாக திறக்கப்படுவது இல்லை. கோட்டைமேடு பகுதியில் ஒரு நாளைக்கு சராசரியாக ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன. ஏராளமான வணிக நிறுவனங்கள் உள்ளன. எனவே அங்கு எந்த நேரமும் பொதுமக்களின் நடமாட்டம் கட்டுக்கடங்காமல் இருக்கும்.ஆனால் வின்சென்ட் ரோட்டில் புறக் காவல் நிலையம் பெரும்பாலும் பூட்டியே கிடக்கிறது. ஜனநடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் கூச்சல் குழப்பம் ஏற்படும். அப்படிப்பட்ட நேரத்தில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தால், அங்கு தகராறு செய்பவர்கள் தானாகவே ஒதுங்கி சென்று விடுவர். ஆனால் இங்கு தற்போது அதற்கு உரிய சூழ்நிலை இல்லை.

    வின்சென்ட் ரோடு புறக்காவல் நிலையத்திற்கு போலீசார் எப்போது வருவார்கள்? எப்போது போவார்கள்? என்று தெரியாது. திடீரென்று வந்து நிற்பார்கள். அடுத்த சில நிமிடங்களில் காணாமல் போய்விடுவர். இந்த நிலை மாற வேண்டும்.

    புற காவல் நிலையத்தில் 2 போலீசாரை பணியில் அமர்த்தி முழுநேரமும் திறக்க வேண்டும். அப்போது தான் பொதுமக்கள் நிம்மதியாக வாழ முடியும்.

    வீண் பிரச்சனைகள், தேவையற்ற கூச்சல் குழப்பங்களை தவிர்க்க முடியும்.

    எனவே உக்கடம் வின்சென்ட் ரோட்டில் புறக்காவல் நிலையத்தை மீண்டும் செயல்பட செய்ய வேண்டும் என்று அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.

    • சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.
    • மாலைமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது

    பல்லடம் : 

    பல்லடம் பஸ் நிலையத்தில் தினமும் 500க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன. கல்வி, வேலை, உள்ளிட்ட பணிகளுக்காக தினமும் சுமார் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பஸ் நிலையத்திற்கு வந்து செல்கின்றனர். இந்த நிலையில் பல்லடம் பஸ் நிலையத்தில், திருட்டு, உள்ளிட்ட சமூக விரோத செயல்கள் தொடர்ந்து நடைபெறுவதால், இங்கு புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள்,சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.இதையடுத்து பல்லடம் பஸ் நிலையத்தில் புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டது. ஆனால் திறப்பு விழா தாமதமாகி வந்தது.

    இதுகுறித்து மாலைமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து பல்லடம் பஸ் நிலையத்தில் அமைக்கப்பட்ட புறக் காவல் நிலையத்தை திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் சாமிநாதன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.இதனைத் தொடர்ந்து நமக்கு நாமே திட்டத்தில் பல்லடம் தாலுகா வியாபாரிகள் சங்கத்தின் ரூ.3.5 லட்சம் பங்களிப்புடன், ரூ.12 லட்சம் மதிப்பில் 40 கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டு இருந்தது. அதன் செயல்பாட்டை போலீஸ் சூப்பிரண்ட் சாமிநாதன் பொத்தானை அமுக்கி துவக்கி வைத்தார்.பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:-

    நகரப் பகுதிகளில் தன்னார்வலர்கள் மற்றும் தொழில் துறையினர் உதவியுடன் கண்காணிப்பு கேமராக்கள் மாட்டப்பட்டு உள்ளது. இதற்கிடையே கிராமப்புறங்களில் பொதுமக்கள் வீடுகளில் கண்காணிப்பு கேமராக்கள் மாட்டும்போது, வீடுகளுக்கு முன்பு உள்ள தெருக்களை கண்காணிக்கும்படி ஒரு கேமராவை அமைத்தால் அது பயனுள்ளதாக இருக்கும். மேலும் பல்லடம் போலீஸ் நிலையத்திற்கு அதிக வழக்குகள் வருவதால், அருகேயுள்ள சில கிராமங்களை பிரித்து புதிய போலீஸ் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் நடைபெறும் குற்ற சம்பவங்கள் குறித்து போலீசாருக்கு தகவல் அளித்து உதவ வேண்டும். இதனால் குற்றச்செயல்களை போலீசாரால் தடுக்க முடியும். இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் பல்லடம் துணை போலீஸ் சூப்பிரண்ட் சவுமியா, நகராட்சி தலைவர் கவிதாமணி, நகராட்சி பொறியாளர் சுகுமார், பணி மேற்பார்வையாளர் ராசுகுட்டி, நகர திமுக செயலாளர் ராஜேந்திர குமார், தமிழ் சங்க தலைவர் ராம் கண்ணையன், தங்கலட்சுமி நடராஜன், இன்ஸ்பெக்டர்கள் மணிகண்டன்,குற்றப்பிரிவு சரஸ்வதி, மகளிர் இன்ஸ்பெக்டர் பர்வீன் பானு, சப்-இன்ஸ்பெக்டர்கள் விஜயகுமார், ராஜா, சுந்தரமூர்த்தி, மற்றும் போலீசார், ஆட்டோ ஓட்டுநர்கள், பொதுமக்கள், உள்பட பலர் கலந்து கொண்டனர். 

    • செயின் பறிப்பு உள்பட பல்வேறு குற்ற சம்பவங்கள் அதிகரித்தன.
    • விரைவில் புறக்காவல் நிலையம் திறக்கப்பட்டு வழக்கமான பணிகள் நடக்கும்.

    குனியமுத்தூர்,

    கோவை குனியமுத்தூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட கோவைபுதூரில் புற காவல் நிலையம் செயல்பட்டு வந்தது. ஆனால் கடந்த பல வருடங்களாக இந்த புறக்காவல் நிலையமானது செயல்படாமல் பூட்டியே கிடந்தது.

    இதன் காரணமாக இங்கு செயின் பறிப்பு உள்பட பல்வேறு குற்ற சம்பவங்கள் அதிகரித்தன. இதனால் பொதுமக்கள் வெளியில் நடமாடவே அச்சப்படுகின்றனர்.

    குறிப்பாக இரவு நேரங்களில் செயின் பறிப்பு, வழிப்பறி போன்ற சம்பவங்கள் அதிகமாக நடைபெற்றதால் மக்கள் அச்சம் அடைந்தனர்.

    இதனால் புறக்காவல் நிலையத்தை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இந்த நிலையில் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் மாவட்டத்தில் செயல்பாடு இல்லாமல் பூட்டிய நிலையில் இருக்கும் புறக்காவல் நிலையங்களை திறந்து அங்கு போலீசார் பணியில் ஈடுபட உத்தரவிட்டார்.

    இதனை தொடர்ந்து கோவையில் உள்ள புறக்கவல் நிலையங்கள் செயல்பட துவங்கியுள்ளது.

    அதன் ஒரு பகுதியாக குனியமுத்தூர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட கோவைபுதூரில் பூட்டிய நிலையில் இருந்த புறக்காவல் நிலையத்தை மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. மீண்டும் புறக்காவல் நிலையம் செயல்பாட்டிற்கு வர உள்ளதாலும் குற்ற சம்பவங்கள் குறைய வாய்ப்புள்ளதாலும் பொதுமக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.

    இது குறித்து தெற்கு கோட்ட போலீஸ் உதவி கமிஷனர் ரகுபதிராஜா கூறியதாவது:-

    கோவை மாநகர கமிஷனர் உத்தரவின்படி குனியமுத்தூர் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட கோவை புதூரில் உள்ள புறக்காவல் நிலையம் மீண்டும் செயல்பாட்டிற்கு வர உள்ளது. பணிகள் முடிந்து விரைவில் புறக்காவல் நிலையம் திறக்கப்பட்டு வழக்கமான பணிகள் நடக்கும்.

    இதற்கான ஆயத்த வேலைகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    இந்த புறக்காவல் நிலையத்தில் 2 போலீஸ்காரர்கள் 24 மணி நேரமும் பணியில் இருப்பார்கள். இன்ஸ்பெக்டர் மற்றும் சப்- இன்ஸ்பெக்டர்கள் அவ்வப்போது இங்கு வருகை தந்து பணிகள் குறித்து கேட்டறிந்து செல்வார்கள்.

    24 மணி நேரமும் ரோந்து பணியும் தீவிரப்படுத்தப்படும். அப்பகுதியில் வாழும் பொதுமக்கள் எந்த நேரமும் புறக்காவல் நிலையத்தை அணுகலாம். அவர்களது தேவைகள் உடனுக்குடன் பூர்த்தி செய்யப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.                        

    • சபரிமலை சீசன் வருகிற 17-ந்தேதி தொடங்குகிறது.
    • பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்த போலீஸ் நடவடிக்கை

    கன்னியாகுமரி:

    இந்தியாவின் தென் கோடி முனையில் அமைந்துள்ளது கன்னியாகுமரி. இது ஒரு உலகப் புகழ்பெற்ற சர்வதேச சுற்றுலா தலமாகும். இங்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளி நாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கி றார்கள்.

    குறிப்பாக ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம்17-ந்தேதி முதல் ஜனவரி மாதம் 20-ந்தேதி வரை இங்கு சபரிமலை செல்லும் அய்யப்ப பக்தர்கள் அதிக அளவில் வந்து செல்வார்கள். இதனால் இந்த3மாத காலமும் இங்கு சபரிமலை சீசன் காலமாக கருதப்படுகிறது. மேலும் சபரிமலையில் நடைபெறும் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு தரிசன காலங்களில் இங்கு வழக்கத்தை விட அதிக அளவில் அய்யப்ப பக்தர்கள் வந்து குவிந்த வண்ணமாக இருப்பார்கள்.

    அதுமட்டுமின்றி பள்ளி அரையாண்டு தேர்வு விடுமுறை மற்றும் கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் ஆகிய தொடர் விடுமுறை காலங்களிலும் கன்னியாகுமரிக்கு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருவார்கள்.

    இதனால் இந்த சீசனை யொட்டி கன்னியாகுமரிக்கு வரும் அய்யப்ப பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு பல்வேறு பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டு உள்ளது. சீசனையொட்டி கன்னியாகுமரியில் ஷிப்ட் முறையில் போலீசார் பாதுகாப்புக் காக நியமிக்கப்பட்ட உள்ளனர்.

    இதற்காக வெளியூரில் இருந்தும் போலீசார் பாதுகாப்புக்காக வரவழைக்கப்பட்ட உள்ளனர். மேலும் பாதுகாப்பு வசதியை மேம்படுத்த கன்னியாகுமரியில் உள்ள புறக்காவல்நிலையங்களும் சீரமைக்கப்பட்டுவருகிறது. அந்த அடிப்படையில் கன்னியாகுமரி காந்தி மண்டப பஜார், கன்னியாகுமரியில் நான்கு வழி சாலை முடியும் சீரோ பாயிண்ட், கடற்கரை சாலையில் உள்ள இலவச கார் பார்க்கிங் அருகில் மற்றும் சன்செட் பாயிண்டுக்கு செல்லும் வழியில் உள்ள சேதமான 4 புறக்காவல் நிலையங்களும் சீரமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

    மேலும் கன்னியாகுமரி பழைய பஸ் நிலைய ரவுண்டானா சந்திப்பு பகுதியில் உள்ள போக்குவரத்து போலீஸ் நிழற்குடை புதுப்பிக்கும் பணியும் நடந்து வருகிறது.

    • 2 ஷிப்டுகளாக கண்காணிக்க ஏற்பாடு
    • 'மாலைமலர்' செய்தி எதிரொலி

    நாகர்கோவில்:

    தீபாவளி பண்டிகை நெருங்குவதையடுத்து கடைவீதிகளில் கூட்டம் அலைமோதி வருகிறது.

    நாகர்கோவில் செம்மங் குடி ரோடு, மீனாட்சி புரம், வடசேரி, கலெக்டர் அலுவலக சந்திப்பு பகுதி களில் உள்ள கடைகளில் கூட்டம் அதிகமாக உள்ளது. வடசேரி பஸ் நிலையம், அண்ணா பஸ் நிலையத்திலும் பஸ்கள் ஏறுவதற்கு கூட்டம் அதிக மாக காணப்படுகிறது.பஸ்களில் பொதுமக்கள் முண்டியடித்துக் கொண்டு ஏறி வருகிறார்கள்.

    கூட்ட நெரிசலை பயன்ப டுத்தி பெண்களிடம் நகை பறிக்கும் சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க போலீசார் தீவிர கண் காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்தில் உள்ள புறக்காவல் நிலையம் கடந்த சில நாட்களாக மூடி கிடந்தது.

    தற்பொழுது கூட்ட நெரிசல் அதிகமாக உள்ள தால் பாதுகாப்பை ஏற்படுத்த வேண்டும் என்று மாலைமலரில் நேற்று செய்தி வெளியானது. இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ஹரிகிரண் பிரசாத் புறக்காவல் நிலை யத்தை திறக்க உத்தரவிட்டார்.

    மேலும் புற காவல் நிலையத்தில் இரண்டு ஷிப்டுகளாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவும் அவர் உத்தர விட்டுள்ளார். ஒரு ஷிப்ட்டுக்கு 2 பெண் போலீசார், 2 ஆண் போலீசாரும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்படு கிறார்கள். தீபாவளி பண்டிகைைய யொட்டி கூட்ட நெரிசல் அதிகமாக உள்ளதால் ஆயுதப்படை போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.இன்று காலை முதல் புறக்காவல் நிலையம் திறந்து செயல்பட்டது. புறக்காவல் நிலையத்தில் இருந்த போலீசார் பஸ் நிலையங்களில் உள்ள பிளாட்பாரங்களில் ரோந்து சுற்றி வந்தனர்.

    பஸ் நிலையத்தில் உள்ள ஒரு சில சி.சி.டி.வி. கேமிராக்கள் மட்டுமே தற்பொழுது செயல் பட்டு வருகிறது. செயல்படா மல் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களையும் சரி செய்து கண்காணிப்பை தீவிர படுத்த வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாகும்.

    • பண்டிகை காலத்தை யொட்டி அங்கு கூடுதல் போலீசார் நியமனம் செய்து இரவு ரோந்து பணியை தீவிரப் படுத்துவதுடன் காலை, மாலை நேரங்களில் கண்காணிப்பு பணியையும் அதிகரிக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது. மேலும் கடைவீதிகளில் கூட்டம் அதிகமாக காணப் படும். எனவே அந்த பகுதி களிலும் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும்.
    • பழைய கொள்ளையர்கள் பிக்பாக்கெட் திருடர்கள் குறித்த படங்களை அறி விப்பு பலகையாக பொது இடங்களில் வைத்து கண்காணிப்பு பணியை மேற்கொள்ள வேண்டும். பொதுமக்கள் அனைவரும் உஷாராக இருக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை போலீசார் மேற்கொள்ள வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கை யாக உள்ளது.

    நாகர்கோவில், அக்.13-

    தீபாவளி பண்டிகை நெருங்குவதையடுத்து நாகர்கோவில் நகரப் பகுதி களில் காலை, மாலை நேரங் களில் கடைவீதிகளில் கூட்டம் அலைமோதி வரு கிறது.

    மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராள மான பொதுமக்கள் குடும்பத்தோடு கடை வீதிகளுக்கு வந்து செல் கிறார்கள். இதனால் வடசேரி பஸ்நிலையம், மற்றும் அண்ணா பஸ் நிலையங்களில் கூட்டம் அதிகமாக உள்ளது. கூட்ட நெரிசலை பயன்படுத்தி கொள்ளையர்கள் செயின் பறிப்பு சம்பவங்களிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இதை கட்டுப்படுத்தும் வகையில் போலீசார் மப்டி உடைகளில் கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள். அண்ணா பஸ் நிலையத்தில் புறக்காவல் நிலையம் நீண்ட நாட்களாக பூட்டி கிடக்கிறது. பண்டிகை காலமான தற்பொழுது கூட்டம் அலைமோதி வரும் நிலையில் அங்கு போலீசாரை நியமனம் செய்து கண்காணிப்பு பணியை தீவிரபடுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கை யாக உள்ளது.

    எனவே மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உடனடி நடவடிக்கையாக அண்ணா பஸ்நிலையத்தில் உள்ள புறக்காவல் நிலையத்தை திறந்து அங்கு கூடுதல் போலீசார் நியமனம் செய்து பாதுகாப்பு பணியை மேற்கொள்ள வேண்டும். மேலும் பஸ் நிலையத்தில் சி.சி.டி.வி. கேமிராக்கள் அமைக்கப்பட்டுள்ளது. தற்பொழுது சுமார் 8 கேமிராக்கள் பஸ் நிலை யத்தில் உள்ளது. இதில் ஒரு சில கேமராக்கள் செயல் படாமல் பழுதடைந்து உள் ளது.

    எனவே பழுதடைந்துள்ள சி.சி.டி.வி. கேமிராக்களை சரி செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். புற காவல் நிலையம் திறப்பதுடன் சி.சி.டி.வி. கேமிராக்கள் சரி செய்யும் பட்சத்தில் குற்ற சம்பவங்கள் குறைவதற்கு வாய்ப்பு உள்ளது. இதே போல் வடசேரி பஸ் நிலையத்தில் தற்போது புறக்காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது.

    பண்டிகை காலத்தை யொட்டி அங்கு கூடுதல் போலீசார் நியமனம் செய்து இரவு ரோந்து பணியை தீவிரப் படுத்துவதுடன் காலை, மாலை நேரங்களில் கண்காணிப்பு பணியையும் அதிகரிக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது. மேலும் கடைவீதிகளில் கூட்டம் அதிகமாக காணப் படும். எனவே அந்த பகுதி களிலும் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும்.

    பழைய கொள்ளையர்கள் பிக்பாக்கெட் திருடர்கள் குறித்த படங்களை அறி விப்பு பலகையாக பொது இடங்களில் வைத்து கண்காணிப்பு பணியை மேற்கொள்ள வேண்டும். பொதுமக்கள் அனைவரும் உஷாராக இருக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை போலீசார் மேற்கொள்ள வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கை யாக உள்ளது.

    • ஆனந்தூரில் புறக்காவல் நிலையத்தை டி.எஸ்.பி. திறந்து வைத்தார்.
    • ஊராட்சி மன்ற தலைவர் துரத்தும்நிஷா அபுதாஹீர் தலைமை தாங்கினார்.

    ஆர்.எஸ்.மங்கலம்

    ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா ஆனந்தூர், சிறு நாகுடி, இராதானூர், சாத்தனூர், திருத்தேர்வளை ஆகிய ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 50-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த பகுதிகளில் சமீப காலமாக திருட்டு, கொள்ளை சம்பவங்கள் அதிக அளவில் நடந்தன.

    குற்ற நடவடிக்கையில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு 25 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஆர்.எஸ்.மங்கலம் காவல் நிலையத்தில் இருந்து போலீசார் வரவேண்டி இருப்பதாலும், இந்த காலதாமதத்தால் குற்றவாளிகள் தப்பித்து செல்ல வாய்ப்புள்ளதாகவும் இதன் காரணமாக ஆனந்தூரில் புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    இதையடுத்து ஆனந்தூர் பஸ் நிலையம் அருகே புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டு திறப்பு விழா நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் துரத்தும்நிஷா அபுதாஹீர் தலைமை தாங்கினார். ஆர்.எஸ்.மங்கலம் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன், தெற்கு பள்ளிவாசல் ஜமாஅத் தலைவர் அப்துல்சலாம், செயலாளர் முகமது இஸ்மாயில், வடக்கு பள்ளிவாசல் ஜமாஅத் தலைவர் மவுதார் சாகுல்ஹமீது, செயலாளர் சீனிஉமர், ஆர்.எஸ்.மங்கலம் யூனியன் தலைவர் ராதிகாபிரபு, துணைத்தலைவர் சேகர், ஆணையாளர் முத்துகிருஷ்ணன், வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) மலைராஜன், மாவட்ட கவுன்சிலர் உஷாராணி நாகராஜன், ஒன்றிய கவுன்சிலர்கள் பாண்டி, முசிரியாபேகம் புரோஸ்கான் முன்னிலை வகித்தனர்.

    திருவாடனை துணை கண்காணிப்பாளர் நிரேஷ் ரிப்பன் வெட்டி புறக்காவல் நிலையத்தை திறந்து வைத்தார். நாசீர் உசேன் வரவேற்றார்.

    ஆனந்தூரைச்சேர்ந்த ஓய்வு பெற்ற துணை கண்காணிப்பாளர் முகமது பலுலுல்லா பேசினார். இதில் அ.தி.மு.க. ஒன்றியச் செயலாளர் நந்திவர்மன், தி.மு.க. முன்னாள் ஒன்றிய செயலாளர் காந்தி, இலக்குவன், ஆர்.எஸ்.மங்கலம் தெற்கு ஒன்றிய செயலாளர் மோகன், வடக்கு ஒன்றிய செயலாளர் கண்ணன்.

    பா.ஜ.க. ஒன்றிய தலைவர் நரசிங்கம், துணைத் தலைவர் தமிழரசன், ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட த.மு.மு.க. தலைவர் பட்டாணி மீரான், இஸ்லாமிய இளைஞர் சங்கத் தலைவர் உமர்அலி, ஊராட்சி மன்றத் தலைவர்கள் ஹரிகி ருஷ்ணன், செ ந்தாமரை, ஜெகவீரபாண்டியன், கிருஷ்ணவேணி சுமன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராஜாமணி, தி.மு.க. முன்னாள் நகர செயலாளர் முகமதுரபீக் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×