search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவை உக்கடத்தில் செயல்படும் புறக்காவல் நிலையம் முழுநேரமும் திறக்கப்படுமா?
    X

    கோவை உக்கடத்தில் செயல்படும் புறக்காவல் நிலையம் முழுநேரமும் திறக்கப்படுமா?

    • 2 போலீசாரை பணியில் அமர்த்தி முழுநேரமும் திறக்க வேண்டும்.
    • வின்சென்ட் ரோட்டில் புறக் காவல் நிலையம் பெரும்பாலும் பூட்டியே கிடக்கிறது.

    குனியமுத்தூர்,

    கோவை உக்கடம் போலீஸ் சரகத்தில் உள்ள கோட்டைமேடு வின்சென்ட் ரோடு பகுதியில் பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரு புறக்காவல் திறக்கப்பட்டது. அங்கு 2 போலீசார் சுழற்சி முறையில் வேலை பார்த்து வந்தனர். இது வின்சென்ட் ரோடு, சின்ன பள்ளி வீதி, சாமியார் புதூர் வீதி , பி.கே.செட்டி வீதி ஆகிய பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு உதவியாக இருந்தது.

    ஆனால் இங்கு தற்போது புறக்காவல் நிலையம் முழுமையாக திறக்கப்படுவது இல்லை. கோட்டைமேடு பகுதியில் ஒரு நாளைக்கு சராசரியாக ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன. ஏராளமான வணிக நிறுவனங்கள் உள்ளன. எனவே அங்கு எந்த நேரமும் பொதுமக்களின் நடமாட்டம் கட்டுக்கடங்காமல் இருக்கும்.ஆனால் வின்சென்ட் ரோட்டில் புறக் காவல் நிலையம் பெரும்பாலும் பூட்டியே கிடக்கிறது. ஜனநடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் கூச்சல் குழப்பம் ஏற்படும். அப்படிப்பட்ட நேரத்தில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தால், அங்கு தகராறு செய்பவர்கள் தானாகவே ஒதுங்கி சென்று விடுவர். ஆனால் இங்கு தற்போது அதற்கு உரிய சூழ்நிலை இல்லை.

    வின்சென்ட் ரோடு புறக்காவல் நிலையத்திற்கு போலீசார் எப்போது வருவார்கள்? எப்போது போவார்கள்? என்று தெரியாது. திடீரென்று வந்து நிற்பார்கள். அடுத்த சில நிமிடங்களில் காணாமல் போய்விடுவர். இந்த நிலை மாற வேண்டும்.

    புற காவல் நிலையத்தில் 2 போலீசாரை பணியில் அமர்த்தி முழுநேரமும் திறக்க வேண்டும். அப்போது தான் பொதுமக்கள் நிம்மதியாக வாழ முடியும்.

    வீண் பிரச்சனைகள், தேவையற்ற கூச்சல் குழப்பங்களை தவிர்க்க முடியும்.

    எனவே உக்கடம் வின்சென்ட் ரோட்டில் புறக்காவல் நிலையத்தை மீண்டும் செயல்பட செய்ய வேண்டும் என்று அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.

    Next Story
    ×