search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிவி சிந்து"

    • பி.வி.சிந்து முதல் சுற்றில் சுவிட்சர்லாந்து வீராங்கனையை வீழ்த்தினார்.
    • இந்தியாவின் ஸ்ரீகாந்த் சீன வீரரை வீழ்த்தி 2-வது சுற்றுக்குள் கால்பதித்தார்.

    பாசெல்:

    சுவிஸ் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி பாசெல் நகரில் நேற்று தொடங்கியது.

    இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, சுவிட்சர்லாந்தின் ஸ்டாடில்மென்னை சந்தித்தார்.

    இதில் பி.வி.சிந்து 21-9, 21-16 என்ற செட்கணக்கில் வென்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.

    இதேபோல், ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் முன்னாள் நம்பர் ஒன் வீரர் இந்தியாவின் ஸ்ரீகாந்த் 21-16, 15-21, 21-18 என்ற செட் கணக்கில் சீனாவின் வெங் ஹாங் யாங்கை வீழ்த்தி 2-வது சுற்றுக்குள் கால்பதித்தார்.

    இளம் வீரர் லக்ஷயா சென் 18-21, 11-21 என்ற நேர் செட்டில் லீக் சேக் லியிடம் (ஹாங்காங்) தோல்வியடைந்தார்.

    • பி.வி.சிந்து சமீபத்திய போட்டிகளில் ஏமாற்றமளிக்கும் வகையில் விளையாடி உள்ளார்.
    • அடுத்த ஒலிம்பிக் வரை அவருடன் இருக்க முடியாது என்பது வருத்தம் என பயிற்சியாளர் கூறி உள்ளார்

    இந்தியாவின் நட்சத்திர பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து, தனது பயிற்சியாளர் பார்க் டே சாங்வை பிரிந்துள்ளார். இதை பயிற்சியாளர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உறுதி செய்துள்ளார்.

    2019ம் ஆண்டு சிந்துவுடன் பயிற்சியாளராக இணைந்த பார்க், தொடர்ந்து சிந்துவின் வெற்றிக்கு வழிகாட்டியாக இருந்துள்ளார். அவரது பயிற்சிக் காலத்தில் சிந்து மூன்று முறை சர்வதேச பட்டங்களை வென்றுள்ளார். 2022ல் நடந்த காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்றுள்ளார். 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்தார்.

    இந்நிலையில் சமீபகாலமாக பி.வி.சிந்துவின் ஆட்டத்திறன் சிறப்பாக இல்லை. அவரது மோசமான பார்மிற்கு பயிற்சியாளர் பார்க் பொறுப்பேற்றதுடன், பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து விலகி உள்ளார்.

    'பி.வி.சிந்து சமீபத்திய போட்டிகளில் ஏமாற்றமளிக்கும் வகையில் விளையாடி உள்ளார். இதற்கு பயிற்சியாளராக நான் பொறுப்பாக உணர்கிறேன். எனவே அவர் ஒரு மாற்றத்தை விரும்பினார். மேலும் ஒரு புதிய பயிற்சியாளரை தேடுவதாகவும் கூறினார். அவளுடைய இந்த முடிவை மதிக்க முடிவு செய்தேன். அடுத்த ஒலிம்பிக் வரை அவருடன் இருக்க முடியாது என்பது வருத்தம் அளிக்கிறது. இதுவரை எனக்கு ஆதரவு அளித்து ஊக்குவித்த அனைவருக்கும் நன்றி' என பார்க் கூறி உள்ளார்.

    • இந்திய ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி டெல்லியில் நடைபெறுகிறது.
    • நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவால் முதல் சுற்றில் வென்றார்.

    புதுடெல்லி:

    இந்திய ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி டெல்லியில் நேற்று தொடங்கியது. இந்தப் போட்டி வரும் 22-ம் தேதி வரை நடக்கிறது.

    நேற்று நடைபெற்ற முதல் சுற்று ஆட்டத்தில் இந்திய நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து, தாய்லாந்து நாட்டை சேர்ந்த சுபநிடா கேட்டோங் ஆகியயோர் மோதினர்.

    இந்த ஆட்டத்தில் 14-21, 20-22 என்ற கணக்கில் சுபநிடா கேட்டோங் வெற்றி பெற்றார். இதனால் பி.வி.சிந்து இந்திய ஓபன் தொடரிலிருந்து வெளியேறினார்.

    மற்றொரு ஆட்டத்தில் இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவால், டென்மார்க் வீராங்கனை மியா பிளிச்பில்ட்டை எதிர்கொண்டார்.

    விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் 21-17, 12-21, 21-19 என்ற செட் கணக்கில் சாய்னா நேவால் வெற்றி பெற்று, அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    • இந்தியாவின் பி.வி.சிந்து பேட்மிண்டன் தரவரிசையில் முதல் 5 இடங்களுக்குள் நுழைந்துள்ளார்.
    • இந்தியாவின் பி.வி.சிந்து. ஒலிம்பிக்கில் 2 முறை பதக்கம் வென்றவர்.

    புதுடெல்லி:

    இந்தியாவின் நட்சத்திர பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து. ஒலிம்பிக்கில் 2 முறை பதக்கம் வென்றவர்.

    இந்நிலையில், பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு உலக பேட்மிண்டன் தரவரிசை இன்று வெளியிடப்பட்டது. அதில் 3 ஆண்டுகளுக்கு பின்னர், மீண்டும் டாப்-5 இடங்களுக்குள் நுழைந்துள்ளார் பி.வி.சிந்து.

    கரோலினா மரினை பின்னுக்குத் தள்ளி பி.வி.சிந்து 5-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

    • உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி வரும் 22-ம் தேதி டோக்கியோவில் நடக்கிறது.
    • கணுக்காலில் ஏற்பட்ட காயத்தால் பி.வி.சிந்து போட்டியிலிருந்து விலகியுள்ளார்.

    புதுடெல்லி:

    27-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி வரும் 22-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடக்கிறது. இந்த போட்டிக்கான வீரர், வீராங்கனைகளின் மோதல் அட்டவணை சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதில் முன்னாள் உலக சாம்பியனான இந்தியாவின் பி.வி.சிந்து கடினமான பிரிவில் இடம் பெற்றிருந்தார்.

    இந்நிலையில், பி.ஏ.ஐ. எனப்படும் இந்திய பேட்மிண்டன் சங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பி.வி.சிந்துவுக்கு கணுக்காலில் காயம் ஏற்பட்டதால் அவர் போட்டியிலிருந்து விலகியுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • நேரடியாக 2-வது சுற்றில் களம் காணும் பிவி சிந்து ஆசிய விளையாட்டு சாம்பியனான வாங் ஸி யியை (சீனா) எதிர்கொள்கிறார்.
    • மற்றொரு இந்திய வீராங்கனை சாய்னா நேவால், முதல் சுற்றில் செங் நிகனுடன் (ஹாங்காங்) மோதுகிறார்.

    டோக்கியோ:

    27-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி வருகிற 22-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடக்கிறது. இந்த போட்டிக்கான வீரர், வீராங்கனைகளின் மோதல் அட்டவணை நேற்று வெளியிடப்பட்டது. இதன்படி முன்னாள் உலக சாம்பியனான இந்தியாவின் பி.வி.சிந்து கடினமான பிரிவில் இடம் பெற்றுள்ளார்.

    நேரடியாக 2-வது சுற்றில் களம் காணும் அவர் ஆசிய விளையாட்டு சாம்பியனான வாங் ஸி யியை (சீனா) எதிர்கொள்கிறார். இந்த தடையை சிந்து கடந்தால் 3-வது சுற்றில் சூப்பர் பார்மில் உள்ள அன் சி- யங்குடன் (தென்கொரியா) மோத வேண்டி வரலாம். அன் சி- யங்குக்கு எதிராக இதுவரை ஆடியுள்ள 5 ஆட்டங்களிலும் சிந்து தோல்வி கண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

    மற்றொரு இந்திய வீராங்கனை சாய்னா நேவால், முதல் சுற்றில் செங் நிகனுடன் (ஹாங்காங்) மோதுகிறார். ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர்கள் ஸ்ரீகாந்த். நிகாத் நிகயேனையும் (அயர்லாந்து) லக்‌ஷயா சென், டென்மார்க்கின் விட்டிங்ஹசையும் , எச்.எஸ்.பிரனாய், ஆஸ்திரியாவின் லுகா விராபெர்ரையும், சாய் பிரனீத், சோவ் டைன் சென்னையும் (சீனதைபே) முதல் சுற்றில் சந்திக்கிறார்கள்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பேட்மிண்டன் பெண்களுக்கான இறுதி போட்டியில் இந்தியாவின் பிவி சிந்து கனடாவின் மிச்செல் லி விளையாடினர்.
    • முதல் செட்டில் பிவி சிந்து 21-15 எனவும் இரண்டாவது செட்டில் 21-13 என்ற கணக்கில் கனடா வீராங்கனையை வீழ்த்தி தங்கம் வென்றார்.

    பர்மிங்காம்:

    இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெறும் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் இன்றுடன் முடிவடையவுள்ளது. கடைசி நாளில் பேட்மின்டன், ஹாக்கி , டேபிள் டென்னிஸ் , ஸ்குவாஷ் , டைவிங் ஆகிய 5 விளையாட்டுகளில் 12 தங்கப்பதக்கம் வழங்கப்படுகிறது.

    பேட்மிண்டன் பெண்களுக்கான இறுதி போட்டியில் இந்தியாவின் பிவி சிந்து கனடாவின் மிச்செல் லி விளையாடினர். முதல் செட்டில் பிவி சிந்து 21-15 எனவும் இரண்டாவது செட்டில் 21-13 என்ற கணக்கில் கனடா வீராங்கனையை வீழ்த்தி தங்கம் வென்றார். 

    • 72 நாடுகளை சேர்ந்த 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    • இந்தியா சார்பில் 15 விளையாட்டுகளில் 200-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் களம் காணுகிறார்கள்.

    புதுடெல்லி:

    22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் இன்று முதல் ஆகஸ்டு 8-ந் தேதி வரை நடக்கிறது. இதில் நீச்சல், தடகளம், பேட்மிண்டன், கூடைப்பந்து, கைப்பந்து, குத்துச்சண்டை, ஆக்கி, மல்யுத்தம், ஸ்குவாஷ் உள்பட 20 விளையாட்டுகளில் மொத்தம் 280 பந்தயங்கள் அரங்கேறுகிறது.

    இந்த போட்டியில் 72 நாடுகளை சேர்ந்த 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா சார்பில் 15 விளையாட்டுகளில் 200-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் களம் காணுகிறார்கள்.

    இந்தநிலையில், காமன்வெல்த் விளையாட்டு போட்டியின் தொடக்க விழா நடைபெற உள்ளது. இந்த விழாவில் இந்திய தேசிய கொடியை ஏந்திச்செல்லும் வீரராக பி.வி.சிந்து தேர்வு செய்யப்பட்டுள்ளார். பர்மிங்காம் 2022 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியின் தொடக்க விழாவில், இரண்டு முறை ஒலிம்பிக் பதக்கம் வென்ற பி.வி.சிந்து, இந்திய அணியின் கொடியை ஏந்திச்செல்வார் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம் என இந்திய ஒலிம்பிக் சங்கம் தெரிவித்துள்ளது.

    கடந்த 2018-ம் ஆண்டு கோல்ட் கோஸ்டில் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டு போட்டியின் தொடக்க விழாவில் பி.வி.சிந்து இந்திய தேசிய கொடியை ஏந்திச்சென்றது குறிப்பிடத்தக்கது.

    • சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் போட்டியில் பி.வி.சிந்து சாம்பியன் பட்டம் வென்றார்.
    • திறமையை வெளிப்படுத்தி வெற்றி பெற்று நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார்.

    சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் இறுதி போட்டியில், சீன வீராங்கனை வாங் ஷியை வீழ்த்தி பி.வி.சிந்து சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். இதனையடுத்து பி.வி.சிந்துவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக பிரதமர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளதாவது: பி.வி.சிந்து தனது முதல் சிங்கப்பூர் ஓபன் பட்டத்தை வென்றுள்ளார். இதற்காக எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். மீண்டும் அவர் தனது விளையாட்டுத் திறமையை வெளிப்படுத்தி வெற்றியை பெற்று நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார். அவரது வெற்றி, மற்ற விளையாட்டு, வீரர்களுக்கு ஊக்கத்தை அளிக்கும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியுள்ளதாவது: தனது முதல் சிங்கப்பூர் ஓப்பன் வெற்றியைப் பதிவுசெய்துள்ள நமது ஊக்கமிகு இறகுப்பந்து வீராங்கனை பி.வி. சிந்து அவர்களுக்கு எனது பாராட்டுகள். இதே ஆற்றலோடும் உத்வேகத்தோடும் பிர்மிங்காம் காமன்வெல்த் போட்டிகளிலும் விளையாட வாழ்த்துகிறேன்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • இறுதிப்போட்டியில் சீனாவின் வாங் ஜி யி- பி.வி.சிந்து மோதினர்
    • பதிலடி கொடுத்த சீன வீராங்கனை 2ம் செட்டை வசமாக்கினார்.

    சிங்கப்பூர்:

    சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இன்று நடந்த மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிச் சுற்றில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, சீனாவின் வாங் ஜி யி ஆகியோர் பலப்பரீட்சை நடத்தினர்.

    போட்டியின் துவக்கத்தில் முதல் இரண்டு புள்ளிகளை இழந்த பி.வி.சிந்து, அதன்பின்னர் சிறப்பான சில ஷாட்களை அடித்து ஆட்டத்தை தன் வசமாக்கினார். அடுத்தடுத்து 11 புள்ளிகள் பெற்ற அவர் 11-2 என முன்னிலை பெற்றார். அதன்பின்னரும் தனது நிலையை தக்க வைத்த சிந்து, முதல் செட்டை எளிதில் வென்றார். இரண்டாம் செட் ஆட்டத்தில் பதிலடி கொடுத்த சீன வீராங்கனை அந்த செட்டை வசமாக்கினார்.

    அதன்பின் சுதாரித்து ஆடிய சிந்து, கடுமையான போராட்டத்திற்கு பிறகு 3ம் செட்டை வென்றார். இப்போட்டியில் 21-9, 11-21, 21-15 என்ற செட்கணக்கில் சிந்து வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

    ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கங்கள் வென்றுள்ள பி.வி.சிந்து, இந்த ஆண்டு மூன்றாவது கோப்பையை வென்றிருக்கிறார். இதற்கு முன்பு சையத் மோடி இன்டர்நேஷனல் மற்றும் சுவிஸ் ஓபன் என இரண்டு சூப்பர் 300 பட்டங்களை வென்றிருந்தார்.

    • அரையிறுதி சுற்றில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, ஜப்பானின் சயனா கவாகாமி ஆகியோர் மோதினர்.
    • பி.வி.சிந்து 21-15, 21-7 என்ற செட் கணக்கில் சயனா கவாகாமியை வீழ்த்தினார்.

    சிங்கப்பூர்:

    சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் போட்டி சிங்கப்பூரில் நடந்து வருகிறது. இதில் இன்று நடந்த மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதி சுற்றில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, ஜப்பானின் சயனா கவாகாமி ஆகியோர் மோதினர். இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய பி.வி.சிந்து 21-15, 21-7 என்ற செட் கணக்கில் சயனா கவாகமியை வீழ்த்தி இறுதிபோட்டிக்கு முன்னேறினார்.

    இன்று நடைபெற்ற மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் சீனாவின் வாங் ஜி யி, 21-14, 21-14 என்ற செட்கணக்கில் ஜப்பானின் அயா ஒஹோரியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். சாம்பியன் பட்டத்துக்கான இறுதிப் போட்டியில் வாங் ஜி யி- பி.வி.சிந்து பலப்பரீட்சை நடத்த உள்ளனர்.

    ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கங்கள் வென்றுள்ள பி.வி.சிந்து, இந்த ஆண்டு சையத் மோடி இன்டர்நேஷனல் மற்றும் சுவிஸ் ஓபன் என இரண்டு சூப்பர் 300 பட்டங்களை வென்றுள்ளார். சிங்கப்பூர் ஓபனில் இன்னும் ஒரு போட்டியில் (இறுதிப்போட்டி) வெற்றி பெற்றால் இந்த சீசனில் முதல் சூப்பர் 500 பட்டத்தை வெல்வார்.

    • சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் காலிறுதி ஆட்டத்தில் முதல் சுற்றை துய் ஹான் யூ கைப்பற்றினார்.
    • காலிறுதி சுற்றில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, சீனாவின் ஹான் யூ ஆகியோர் மோதினர்.

    சிங்கப்பூர்:

    சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் போட்டி சிங்கப்பூரில் நடந்து வருகிறது. இதில் இன்று நடந்த காலிறுதி சுற்றில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, சீனாவின் ஹான் யூ ஆகியோர் மோதினர்.

    இந்த ஆட்டத்தில் முதல் சுற்றை துய் ஹான் யூ கைப்பற்றினார்.பின்னர் சிறப்பாக விளையாடிய சிந்து அடுத்த இரண்டு சுற்றுகளை கைப்பற்றினார் .இதனால் 17-21, 21-11, 21-19. என்ற செட் கணக்கில் சிந்து வெற்றி பெற்று அரையிறுதி போட்டிக்கு முன்னேறினார்.

    ×