search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிரச்சினை"

    • வீட்டின் எதிரில் தனது மனைவியுடன் குடும்ப பிரச்சினை காரணமாக சண்டையிட்டுக் கொண்டிருந்தனர்.
    • மணிவாசகத்தை, மருமகன் சுசீந்திரன் கம்பியால் தலையில் கடுமையாக தாக்கியுள்ளார்.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம், வேதாரண்யம் வட்டம், தலைஞாயிறு அழகு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மணிவாசகம் (வயது 65). கோவில்அர்ச்சகர். இவர் நேற்றிரவு கோவிலுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது மணிவாசகத்தின் மகள் தமிழ்மாலா, மருமகன் சுசீந்தரன் இருவரும் வீட்டின் எதிரில் தனது மனைவியுடன் குடும்ப பிரச்சினை காரணமாக சண்டையிட்டுக் கொண்டிருந்தனர்.

    அப்பொழுது திடீரென நடந்து சென்று கொண்டிருந்த மணிவாசகத்தை, மருமகன் சுசீந்திரன் கம்பியால் தலையில் கடுமையாக தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த மணிவாசகத்தை அருகில் இருந்தவர்கள் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இது குறித்து தலைஞாயிறு போலீசார் வழக்குபதிவு செய்து சுசீந்தரனை கைது செய்தனர்.

    • கோவிலில் வழிபாடு நடத்துவதில் பிரச்சினை ஏற்பட்டு இரு தரப்பினர் மோதலில் ஈடுபட்டனர்.
    • போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள அன்னலட்சுமி புரத்தில் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பூஜை நடத்துவது தொடர்பாக இருதரப்பினருக்கும் இடையே பிரச்சினை நிலவி வருகிறது.

    நேற்று முன்தினம் நடந்த இருதரப்பினர் மோதலில் 10-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தநிலையில் அன்னலட்சுமிபுரத்தை சேர்ந்த ஜெயராமன் மற்றும் அவரது ஆதரவாளர்களை மற்றொரு தரப்பினர் சரமாரியாக தாக்கினர்.

    இதை அறிந்து ஜெயராமனின் மகன் ராமர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதில் இந்த தாக்குதலில் அந்த கிராமத்தை சேர்ந்த இருளாயி, குமுதம், பவித்ரா, பானுமதி, முருகேசன், மலைசாமி, பூமிநாதன், சந்திரன், அழகர்சாமி உள்பட 10-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து கமுதி, சிவகங்கை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    வழக்குப்பதிவு

    இதுகுறித்து ராமர் கொடுத்த புகாரின்பேரில் 18-ம் படியான் , சிவகுமார்,வடிவேல், விக்னேஷ்வரன், அஜித்குமார், பூரணம் உள்பட 8 பேர் மீது வீரசோழன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஏதேனும் அசம்பாவிகள் நடக்கும் முன் போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

    • மனைவியை தாக்கிய கணவர் கைது செய்யப்பட்டார்.
    • கடந்த 2 வருடங்களாக கணவர் வேலைக்கு செல்லாததால் குடும்ப பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் காமராஜர் வடபகுதியை சேர்ந்தவர் அருண்(வயது37).இவர் தனியார் கல்லூரியில் பேராசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 2 வருடங்களாக வேலைக்கு செல்லவில்லை இவருடைய மனைவி வித்யா(34). இவர்களுக்கு 2013-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்று ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

    கடந்த 2 வருடங்களாக கணவர் வேலைக்கு செல்லாததால் குடும்ப பிரச்சினை ஏற்பட்டுள்ளது. சம்பவத்தன்று அருண் மனைவி வித்யாவை தாக்கியுள்ளார். இதனால் திருமங்கலம் நகர் காவல் நிலையத்தில் வித்யா கொடுத்த புகாரின் பேரில் திருமங்கலம் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அருணை கைது செய்தனர்.

    • எம்.பி., சுப்பராயன் இன்றைய அரசியல் நிலவரம் மற்றும் கட்சியின் 25வது மாநில மாநாடு திருப்பூரில் நடத்துவது குறித்தும் பேசினார்.
    • பஞ்சு பதுக்கல் பிரச்னைக்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    திருப்பூர்,

    திருப்பூர் மாவட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் 5வது மாவட்ட மாநாடு தொடங்கியது. முதல் நாள் நிகழ்ச்சி துவக்கமாக காளியப்பன் கொடியேற்றினார்.பழனிசாமி, செந்தில்குமார், சசிகலா தலைமை வகித்தனர். முன்னாள் எம்.எல்.ஏ., பெரியசாமி, மாநாட்டை துவக்கி வைத்து பேசினார். நிர்வாகிகள் ரவி, இசாக், ராமசாமி உள்ளிட்டோர் பேசினர்.இதில், மாநகர் மாவட்ட செயலாளராக ரவிச்சந்திரன், புறநகர் மாவட்ட செயலாளராக இசாக் மற்றும் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.எம்.பி., சுப்பராயன் இன்றைய அரசியல் நிலவரம் மற்றும் கட்சியின் 25வது மாநில மாநாடு திருப்பூரில் நடத்துவது குறித்தும் பேசினார்.

    திருப்பூரில் நிலவும் போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில், பாலம் கட்டுமான பணிகள் விரைந்து முடிக்க வேண்டும். சேதமான ரோடுகள் சீரமைக்க வேண்டும். குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையிலும், தினமும் குடிநீர் வழங்கும் வகையிலும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.கோவில்வழியில் உரிய வசதிகளுடன் நவீன பஸ் நிலையம் அமைக்க வேண்டும்.தொழில்துறையை பாதுகாக்கும் வகையில்,நூல் விலை உயர்வு, பஞ்சு பதுக்கல் பிரச்னைக்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    ×