search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாராளுமன்ற தேர்தல் முடிவுகள்"

    ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் கடும் பின்னடைவை சந்தித்துள்ளது. 7 தொகுதிகளில் பாஜக வேட்பாளர்கள் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளனர்.
    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள 25 பாராளுமன்றத் தொகுதிகளில் பாஜக 24 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. ஒரு தொகுதியில் ராஷ்டிரிய லோக்தாந்திரிக் கட்சி முன்னிலையில் உள்ளது. அனைத்து தொகுதிகளிலும் காங்கிரஸ் பின்தங்கி உள்ளது.

    7 தொகுதிகளில் பாஜக வேட்பாளர்கள் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளனர். இதில் சந்திர பிரகாஷ் ஜோஷி (சித்தோர்கர்), நிகல் சந்த் (கங்காநகர்), தேவ்ஜி பட்டேல் (ஜலூர்), துஷ்யந்த் சிங் (ஜல்வாரா பரன்), பிபி சவுத்ரி (பாலி) மற்றும் தியா குமாரி (ராஜ்சமந்த்) ஆகிய 6 பேர் ஒரு லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளனர். பில்வாரா தொகுதி பாஜக வேட்பாளர் சுபாஸ் பகேரியா 214184 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றார்.



    ஜோத்பூரில் முதலமைச்சர் அசோக் கெலாட்டின் மகன் வைபவ் கெலாட், பாஜக வேட்பாளர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை விட 64341 வாக்குகள் வித்தியாசத்தில் பின்தங்கி உள்ளார். பாஜகவில் இருந்து விலகி காங்கிரசில் இணைந்த மன்வேந்திர சிங், ராஜ்புத் தொகுதியில் 87145 வாக்குகள் வித்தியாசத்தில் பின்தங்கியிருந்தார். அந்த தொகுதியில் பாஜக வேட்பாளர் கைலாஷ் சவுத்ரி முன்னிலையில் உள்ளார்.

    ஜெய்ப்பூர் (ஊரகபகுதி) தொகுதியில் மத்திய மந்திரி ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் 91493 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். இதேபோல் மத்திய மந்திரி அர்ஜூன் ராம் மேக்வால் (பிகானர்) 86919 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
    தேனி பாராளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளரும், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் மகனுமான ரவீந்திரநாத்குமார் முதல் சுற்றில் முன்னிலை பெற்றுள்ளார்.
    தேனி :

    தேனி பாராளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்குமார், தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், அ.ம.மு.க. சார்பில் அக்கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்செல்வன், மக்கள் நீதி மய்யம் சார்பில் ராதா கிருஷ்ணன், நாம் தமிழர் கட்சி சார்பில் சாகுல் அமீது உள்ளிட்ட 30 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

    இநத தொகுதியில் மொத்தம் 15 லட்சத்து 54 ஆயிரத்து 51 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 11 லட்சத்து 55 ஆயிரத்து 565 வாக்காளர்கள் வாக்களித்தனர். பதிவான வாக்குகள் கொடுவிலார்பட்டியில் உள்ள கம்மவார் சங்க கல்லூரியில் எண்ணப்பட்டு வருகிறது. முதல் சுற்று முடிவில் அ.தி.மு.க. வேட்பாளர் ரவீந்திரநாத்குமார் முன்னிலையில் உள்ளார்.

    ம.நீ.ம - 29

    நாம் தமிழர் - 198
    சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க. கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் முதல் சுற்று முடிவின்படி 200 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
    அரியலூர் :

    சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் 7,36,655 ஆண்கள், 7,42,394 பெண்கள் மற்றும் 59 மூன்றாம் பாலி னத்தவர்கள் என மொத்தம் 14,79,108 வாக்காளர்கள் உள்ளனர். இங்கு சிதம்பரம், அரியலூர், குன்னம், ஜெயங்கொண்டம், புவனகிரி, காட்டுமன்னார்கோவில் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.

    அ.தி.மு.க. வேட்பாளர் சந்திரசேகர், தி.மு.க. கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், அ.ம.மு.க. வேட்பாளர் இளவரசன், மக்கள் நீதி மய்யம் சார்பில் ரவி, நாம் தமிழர் கட்சியில் சிவஜோதி உள்பட மொத்தம் 13 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

    வாக்குப்பதிவு முடிந்ததும் பதிவான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் விவிபேட் எந்திரங்கள் அனைத்தும் வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையமான அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள தத்தனூர் மீனாட்சி ராமசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டன.

    இன்று காலை வாக்கு எண்ணும் பணி தொடங்கியது. காலை 8 மணிக்கு முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன.

    அடுத்ததாக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. மொத்தம் 23 சுற்றுக்களாக வாக்குகள் எண்ணப்படுகிறது. இதற்காக ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் தனித்தனி அறைகள் ஒதுக்கப்பட்டிருந்தன. வாக்கு எண்ணும் பணியில் மத்திய அரசில் பணியாற்றும் நுண் பார்வையாளர் ஒருவர், மாநில அரசில் பணியாற்றும் கண்காணிப்பாளர் ஒருவர், ஒரு மேஜைக்கு 3 பணியாளர்கள் ஈடுபட்டனர்.

    முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவு வருமாறு:-

    திருமாவளவன் (விடுதலை சிறுத்தைகள்)-20,867

    சந்திரசேகர் (அ.தி. மு.க.)-20,686

    முதல் சுற்று முடிவின்படி 200 வாக்குகள் வித்தியாசத்தில் திருமாவளவன் முன்னிலையில் இருந்தார்.
    நடிகை ஹேமமாலினி, ஜெயபிரதா உள்ளிட்ட 724 பெண் வேட்பாளர்களின் அரசியல் எதிர்காலம் இன்று (வியாழக்கிழமை) தெரிய வரும்.
    புதுடெல்லி :

    பாராளுமன்றத்துக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இன்று (வியாழக்கிழமை) ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகிறது.

    542 தொகுதிகளில் நடந்த தேர்தலில் மொத்தம் 7 ஆயிரத்து 928 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இவர்களில் பெண் வேட்பாளர்கள் எண்ணிக்கை 724 வேட்பாளர்கள்தான். அதாவது பெண் வேட்பாளர்களின் எண்ணிக்கை 10 சதவீதத்தை விட குறைவு.

    தேசிய கட்சிகளில் காங்கிரஸ் கட்சிதான் அதிகபட்சமாக 54 பெண் வேட்பாளர்களை நிறுத்தியது. இரண்டாம் இடத்தில் பா.ஜனதா கட்சி உள்ளது. அந்தக் கட்சி 53 வேட்பாளர்களை களம் இறக்கியது.

    பிற தேசிய கட்சிகளில் பகுஜன் சமாஜ் கட்சி 24, திரிணாமுல் காங்கிரஸ் 23, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி 10, இந்திய கம்யூனிஸ்டு கட்சி 4 வேட்பாளர்களையும் நிறுத்தியது. தேசியவாத காங்கிரஸ் கட்சி ஒரே ஒரு பெண் வேட்பாளரை போட்டியிட செய்தது.

    அரசியல் பிரபலங்கள் என்று பார்த்தால் காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் சோனியா காந்தி (ரேபரேலி), நடிகை ஹேமமாலினி (பா.ஜனதா- மதுரா), நடிகை ஜெயபிரதா (பா.ஜனதா-ராம்பூர்), தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் சுப்ரியா சுலே (பாராமதி), தெலுங்கானா ரா‌‌ஷ்டிர சமிதி மூத்த தலைவர் கவிதா (நிஜாமாபாத்) உள்ளிட்டோர் அடங்குவர்.

    இந்த தேர்தலில் 222 பெண்கள் சுயேச்சையாக போட்டியிட்டது கவனிக்கத்தக்கது.

    100 பெண் வேட்பாளர்கள் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன. அவர்களில் 78 பேர் மீது தீவிர குற்ற வழக்குகள் உள்ளன.

    தேசிய கட்சிகளில் பாரதீய ஜனதாவில் 13, காங்கிரசில் 10 பெண் வேட்பாளர்கள் மீது கிரிமினல் வழக்குகள் இருக்கின்றன.

    பாரதீய ஜனதா கட்சி பெண் வேட்பாளர்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ.22 கோடியே 9 லட்சம். காங்கிரஸ் கட்சி பெண் வேட்பாளர்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ.18 கோடியே 84 லட்சம்.

    பெண் வேட்பாளர்களில் பணக்கார வேட்பாளர் நடிகை ஹேமமாலினி. இவரது சொத்து மதிப்பு ரூ.250 கோடி. இவருக்கு அடுத்த நிலையில் தெலுங்கு தேசம் கட்சியின் ராஜம்பேட்டை தொகுதி வேட்பாளர் சத்யபிரபா உள்ளார். இவரது சொத்து மதிப்பு ரூ.220 கோடி. 3-வது இடத்தில் சிரோமணி அகாலிதளம் கட்சி வேட்பாளர் ஹர்சிம்ரத் கவுர் பாதல் உள்ளார். இவரது சொத்து மதிப்பு ரூ.217 கோடி.

    531 வேட்பாளர்களின் வயது 25-50 என்ற அளவில் உள்ளது.

    ஒரே ஒரு வேட்பாளர் வயது 80-ஐ கடந்து விட்டது.

    இந்த வேட்பாளர்களின் அரசியல் எதிர்காலம், இன்று அவரவர் தொகுதிகளில் ஓட்டு எண்ணிக்கை முடியும்போது தெரிய வரும்.
    ×